Vizhiyinil Mozhiyinil
அத்தியாயம் 3:
அவளின் அலறல் சத்தத்தில் திரும்பினான் ரிஷி.அவள் மயங்கி கீழே சரிந்திருக்க...அதைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டான்.
"ஹேய்....இங்க பார்...இங்க பார்...." என்று சொல்லியபடி...ஜக்கில் இருந்த தண்ணீரை எடுத்துத் தெளித்தான்.
மான் விழிகள் உருள.....மெல்ல கண்களைத் திறந்தாள் அபிராமி.கண் விழித்தவள்....சுவற்றில் இருந்த அந்த உருவத்தைக் கண்டு மருண்டு விழிக்க...அவள் பார்வை போகும் திசையைக் கொண்டு..நடந்ததை ஊகித்தான் ரிஷி.
"சுவற்றில்...
அத்தியாயம் 21:
நேராக சங்கர் இறந்த சிறைச்சாலைக்கு சென்றான் ரிஷி.மனதில் கொஞ்சம் தெளிவு இருந்தாலும்...இன்றுடன் இந்த பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று எண்ணினான்.
“கான்ஸ்டபிள்...அந்த ஜெயிலரை வர சொல்லுங்க...!” என்றான்.
நாற்காலியில் அமர்ந்து இரு கைகளையும் தன் முகத்தில் தாங்கியிருந்தவன்....அந்த ஜெயிலரின் வரவுக்காய் காத்திருந்தான்.
“சார் வணக்கம் சார்...!” என்றபடி வந்தார்.
அவரையே ஒரு நிமிடம் உற்றுப் பார்த்தான்...
அத்தியாயம் 19:
அன்று விடிந்த பிறகும் வழக்கத்திற்கு மாறாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான் ரிஷி.ஆனால் அபியோ தூக்கத்தை தொலைத்தவளாய் சீக்கிரமே எழுந்து விட்டிருந்தாள்.
‘இன்னைக்கு காலேஜ் போகணும்...!இங்க இருந்து போகவே ஒரு ஒன்றரை மணி நேரத்துக்கு மேல ஆகும்...’ என்று மனதிற்குள் நினைத்தவள்.... வேகமாய் சமையலை கவனித்தாள்.
சமையலை முடித்து...அவள் குளித்து வரவும்....வீட்டின் அழைப்பு மணி அழைத்தது.அபி சென்று...
அத்தியாயம் 18:
கால நிலைகள் எதற்காகவும்,யாருக்காகவும் காத்திருப்பதில்லை.அதன் போக்கில் அது செல்ல...அதன் ஓட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல்...மனிதர்கள் தான் அதன் பின்னே ஓட வேண்டியிருந்தது.
அபியின் வாழ்க்கையும் அப்படித்தான் ஆகிப் போனது.ரிஷி சென்று பத்து நாட்கள் ஆகிப் போனது.
போனவன் ஒரு போனும் பண்ணவில்லை...வீட்டிற்கும் வரவில்லை. ஒவ்வொரு நாளும் அவனுக்காக காத்திருந்து அபிக்கு கண்கள் பூத்தது தான் மிச்சம்.
அந்த...
அத்தியாயம் 16:
நினைவுகளின் பிடியில் இருந்து மீண்டாள் அபி.நடந்த அனைத்தும் ஒரு கனவு போல் விரிய....பழைய நினைவுகளின் தாக்கத்தால் அவள் கண்கள் கலங்கிக் காணப்பட்டது.
அப்பொழுது தான் கவனித்தாள் தான் காரில் சென்று கொண்டிருப்பதை. இல்லையே நான் வீட்டில் தானே இருந்தேன்...? என்று தனக்குள் எண்ணியவள்....வேகமாய் அருகில் பார்க்க ரிஷி தான் காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.
“என்னாச்சு நாம...
அத்தியாயம் 14:
நடப்பது கனவா...? இல்லை நனவா...? என்ற ரீதியில் பிரம்மை பிடித்தவள் போல் இருந்தாள் அபி.
“ரிஷி தான் மாப்பிள்ளையா...? ஆனா நான் ஒரு தடவை கூட பார்த்ததில்லையே...?” என்று தனது மனதை சமாதானப் படுத்த...அவள் தனக்குத் தானே கேட்டுக் கொண்ட கேள்விகள் அனைத்தும்...இறுதியில் கண்ணீரை மட்டுமே பரிசளித்தன.
“என்ன தான் கவனத்துல இருப்பியோ தெரியல...இப்ப எதுக்கு...
அத்தியாயம் 4:
ரிஷியை ரசித்துக் கொண்டே சென்ற அபிக்கு...ஏனோ தைலா அவனிடம் உரிமையாய் பழகுவது ஒரு வித பொறாமையைத் தூண்டியது.
"உனக்கு ஏன் இப்ப இப்படி ஒரு எண்ணம் தோணுது...! இந்த தைலா மட்டும் இல்லைன்னா இவன் இந்நேரம் உன்னைத் துரத்தி விட்டிருப்பான்...! நீ என்னடான்னா அவள் மேலேயே பொறாமைப் படுற...?" என்று மனசாட்சி சொல்ல....
"அதுவும் உண்மைதான்..."...
அத்தியாயம் 17:
ரிஷியும்,கோவிந்தனும் ஒருவருக்கு ஒருவர் சளைக்காது முறைத்துக் கொண்டிருக்க.....அதைப் பார்த்த அபிராமியின் மனதிற்குள் குளிர் பிறந்தது.
ரிஷியின் உக்கிரமான பார்வைக்கு காரணம் அவர்களுக்கு பின்னால் சரண்யா நின்றிருந்ததே.ஆம் அவளும் விடாமல் பிடிவாதம் பிடித்து அவர்களுடனேயே வந்திருந்தாள்.
“எங்கே தான் இல்லை என்றால் அபிராமி உண்மையை சொல்லி விடுவாளோ என்ற பயம் அவளையும் வர வைத்திருந்தது.தான் உடன் இருந்தால்...
அத்தியாயம் 10:
அபியின் வார்த்தைகளைக் கேட்ட ரிஷிக்கு மனதிற்குள் ஏனோ உற்சாகமாய் இருந்தது.அதுவரை இருந்த களைப்பு நீங்கி....வந்த தூக்கம் எங்கோ பறந்து சென்றிருந்தது.தனது செல்போனை எடுக்க சென்றது எவ்வளவு நல்லது என்று எண்ணியவனுக்கு...இதழோரத்தில் விரிந்த சிரிப்பு மட்டும் மாறவேயில்லை.
அன்றைய நாள்.... பத்திரிக்கையில் இவர்களின் திருமணப் புகைப்படங்கள் வெளியாகியிருக்க.....ரிஷிக்கு தன் தந்தையை எண்ணி மனதில் வியப்பு கூடிக்...
அத்தியாயம் 9:
அபி வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்ட ரிஷிக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.கைகள் லாவகமாய் காரை செலுத்த....அபியின் ஓரப் பார்வை ரிஷியின் மீது இருந்தது.
வெளிர் நீல நிற ஜீன்சும்....ரெட் கலர் டீசர்ட்டும் அவனுக்கு பாந்தமாய் பொருந்தியிருக்க....எப்பொழுதும் இறுக்கம் குடி கொண்டிருக்கும் முகம் சற்று தளர்ந்திருக்க....அவனைப் பார்க்க பார்க்கத் தெவிட்டவில்லை அவளுக்கு.
“இப்ப எதுக்கு...
அத்தியாயம் 7:
சுவற்றை வெறித்தபடி சென்ற அபிராமியைப் பார்க்கும் போது மனதிற்குள் ஏதோ பிசைந்தது ரிஷிக்கு.
“உனக்கு கொஞ்சம் கூட பொறுமையே இல்லைடா...!” என்று மனசாட்சி சொல்ல....
“அவ செய்தது மட்டும் சரியா...?” என்று தனக்குத் தானே சமாதானம் செய்து கொண்டான்.
அங்கே அபியின் நிலைமையும் அது தான்....தனக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறையில் தன்னையே நினைத்து.....வெறுத்துக் கொண்டாள்.
அவன் அடித்தது கூட வலிக்கவில்லை...
அத்தியாயம் 6:
ஒரு நிமிடம் தான்....ஒரே ஒரு நிமிடம் தான்.....வழி தெரியாமல் சென்றவள்.... அணையின் பாலத்தின் வழியாக செல்லாமல்....மாற்றுப் பாதையில் சென்றதால்....தடுப்புகள் இன்றி...கால் இடறி நீரில் விழுந்திருந்தாள்.
அது ஓரமான பகுதி தான் என்றாலும்.....அணையின் நீர் சாதாரண நீரைப் போல் இருக்காது.ஐஸ் கட்டி தண்ணீர் போல்...நீர் மிக குளுமையாய் இருக்கும்.
விழுந்த வேகத்தில்...தண்ணீரின் குளிர்ச்சி...அவளது உடலை எலும்புக் கூடாய்...
அத்தியாயம் 13:
“என்ன அபி ரிஷி சார் வருகைக்காக வெயிட்டிங்கா...?” என்றாள் லட்சுமி.
அவளுக்கு தன் புன்னகையை பரிசளித்த அபியின் மனதில் ஆயிரம் கேள்விகள்.தனக்குத் தானே உரமிட்டு வளர்க்கும் காதல் எந்த தூரம் வரை செல்லும் என்று அவளுக்குத் தெரியவில்லை.
தான் காதலை சொன்னால் ரிஷி ஏற்றுக் கொள்வானா... என்றும் அவள் யோசிக்கத் தவறவில்லை.எது எப்படி இருந்தாலும் காதல்...
அத்தியாயம் 8:
நடந்த எதையும் நம்ப முடியாமல் பார்த்திருந்தாள் அபி.ரிஷியின் முகம் பார்க்கவே அவளுக்கு பயமாய் இருந்தது.இந்த திடீர் திருமணத்திற்கான அவசியம் என்ன வந்தது...? காலையில் ஏன் என்னிடம் அவ்வாறு நடந்து கொண்டான்...? என்று யோசித்து யோசித்து அவளுக்கு தலைவலி வந்தது தான் மிச்சம்.எதுவும் புரியவில்லை.
அவளின் மனதில் ஓடும் எண்ணங்கள் புரிந்தாலும்....எதுவும் தெரியாத மாதிரி காட்டிக்...
அத்தியாயம் 5:
அங்கு நடந்து கொண்டிருந்த அவ்வளவு பரப்பரப்பான சூழ்நிலையிலும்.... தன்னை மறந்து நின்று கொண்டிருந்தாள் அபிராமி.
ஆசிட் பாதிப்புக்குள்ளான பெண் மிகவும் கவலைக்கிடமான நிலைமையில் மருத்துவமனையில் இருக்க....கேஸ் தீவிரமான விசாரனையை நோக்கி சென்று கொண்டிருந்தது.
ஆசிட் ஊற்றியவன் இவர்கள் டிப்பார்மென்ட் பையன் என்பதால்.... விசாரனை நேரடியாக இவர்கள் பகுதியில் இருந்து தொடங்கியது.
“அந்த பையனோட குளோஸ் பிரண்ட்ஸ் யாரு...?”...
அத்தியாயம் 11:
இளம் மஞ்சள் நிற சுடிதாரும்....ஒற்றைப் பின்னலில் மஞ்சள் ரோஜாவும் சூடியிருந்த அபிராமியை....பின்னால் இருந்து அணைத்தான் ரிஷி.
திடீரென்ற அவனின் அணைப்பில் அவள் திகைத்து விழிக்கும் முன்னர்....அவளின் கன்னத்தில் நச்சென்று இதழ் பதித்தான் ரிஷி.
“உங்களை.....” என்று நாணப் புன்னகையுடன் அபி அவனை விரட்ட...அவளிடம் சிக்காமல் போக்குக் காட்டியவன்....சில நிமிடங்களில் அவளின் கைகளை சுண்டி....தன் மேல் இழுத்துப்...
அத்தியாயம் 12:
“முடியாது...முடியாது...நீங்க என்ன சொன்னாலும்....பத்து நாள்... பொம்பளைப் புள்ளையை வெளியே அனுப்ப முடியாது...நெனவோட தான் பேசுறிங்களா..?” என்று அமிர்தவள்ளி பாட்டி கோவிந்தன் தாத்தாவிடம் கத்திக் கொண்டிருந்தார்.
அபி ஓரமாய் அப்பாவியாய் நின்றிருக்க....”என்ன நினைச்சுகிட்டு இருக்க உன் மனசுல....இங்க வீட்ல உங்க அக்காவுக்கு நிச்சயம் பண்ண பேசிட்டு இருக்கோம்..! நீ என்னடான்னா....கேம்ப்க்கு போறேன் அங்க போறேன்.. இங்க...