Venpani Malarae
மலர் 20:
செல்வாவின் திருமணம் நின்றதற்கு வெற்றியே காரணம் என்று முழுதாக நம்பினார் சத்யா.
ஏனோ அன்றிலிருந்து வெற்றியை அவருக்கு பிடிக்காமல் போனது.அதற்கு பின் நடந்த நிகழ்வுகள்....அவரை அப்படி மாற்றியிருந்தது.
நினைவுகளில் இருந்து மீண்டான் வெற்றி.
கிடைக்கவே மாட்டாள் என்று எண்ணிய மலர்...இன்று அவனின் மனைவியாக இருந்தும் ஒரு பிரயோஜனமும் இல்லை.
“நீ எனக்கு முக்கியமில்லை..” என்பதைப் போல் சென்றுவிட்டாள்.
உணர்வுகள் கொந்தளிக்க....கோபமும்...
மலர் 19:
புது எண்ணிலிருந்து தன்னுடைய மொபைலுக்கு வந்து கொண்டிருந்த போன் காலை எடுப்பதா..? வேண்டாமா..? என்ற யோசனையுடன் நீண்ட நேரம் மொபைலின் திரையையே வெறித்துக் கொண்டிருந்தாள் மலர்.
யோசனையுடன் அட்டென் செய்து காதில் வைக்க....
“நான் வெற்றி பேசுறேன்..!” என்ற குரல்....ஏனோ அவளைத் தாக்கியது என்றாள் மிகையாகாது.
“சொ..சொல்லுங்க சார்..!” என்றாள்.
“நான் என்ன சொன்னேன்...நீ என்ன பண்ணி வச்சிருக்க..?”...
மலர் 18:
நடந்த குழப்பத்திற்கு தானும் ஒரு காரணமாய் அமைந்து விட்டோமோ.....? என்று மலர் யோசித்துக் கொண்டே இருந்தாள்.அதை சரி செய்ய அவள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் கானல் நீராகவே போனது.
செல்வாவோ தனக்கென்று ஒரு உலகை உருவாக்கி.... அந்த உலகிலேயே சஞ்சரித்துக் கொண்டிருந்தான்.
கவியோ....”தானத்திற்கு கொடுத்த மாட்டை பல்லைப் பிடித்து பதம் பார்ப்பது போல...” மலரையே சந்தேகப்பட்டாள்.மனதில்...
மலர் 17:
விஷயத்தை கேள்விப்பட்ட விஜயனால் அதை இன்னமும் நம்ப முடியவில்லை.சத்யாவைப் பற்றி அவருக்கு நன்றாக தெரியும் என்பதும் ஒரு காரணம்.
“என்ன சொல்ற தனம்..? நிஜமாவா..?” என்றார் நம்ப முடியாமல்.
“ஆமாங்க...! சத்யா அண்ணியே தான் போன் பண்ணி பேசுனாங்க...! நானும் யோசிக்காம சரின்னு சொல்லிட்டேன்...!” என்றார் தனம்.
விஜயனின் முகம் யோசனையில் சுருங்க...
“என்னங்க யோசிக்கிறிங்க...?” என்றார் தனம்.
“இல்லை...கவியை...
மலர் 16:
மலர் சொன்னதைக் கேட்ட செல்வாவால் இன்னமும் அவள் சொன்ன செய்தியை நம்ப முடியவில்லை.
ஏற்கனவே கவி அவனைப் பார்த்து சிரித்ததை வைத்து அவனாகவே ஒரு முடிவுக்கு வந்திருந்தான்.இப்பொழுது மலர் சொன்ன செய்தி அதை மேலும் உண்மையாக்க.... மகிழ்ச்சியில் திளைத்தான்.
“நிஜமாவே கவி சம்மதம் சொல்லிட்டாளா..?” என்றான்.
“நிஜம்..நிஜம்..நிஜம்..” என்றாள் மலரும்.
“என்னால நம்பவே முடியலை மலர்...”என்று தன்னைத் தானே...
மலர் 15:
வீட்டில் மலரின் வார்த்தைகளைக் கேட்ட சத்யாவோ... வானத்திற்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டிருந்தார்.என்ன நினைத்தும் அவர் கோபமும்,ஆதங்கமும் அடங்கவே இல்லை.இது எப்படி சாத்தியம்.அவர் நினைத்தது என்ன..? இப்பொழுது நடந்து கொண்டிருப்பது என்ன..? என்று உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தார்.
“இதற்கு நான் கண்டிப்பாக சம்மதிக்க மாட்டேன் மலர்..!” என்றார் முகம் இறுக.
“சத்யாம்மா பிளீஸ்...செல்வா அந்த பெண்ணை ரொம்ப...
மலர் 14:
மொட்டை மாடியில் இருளை வெறித்துக் கொண்டு நின்றிருந்தான் செல்வா.நடப்பது எதுவும் அவன் கையில் இல்லாததது போன்ற ஒரு பிரம்மை அவனுள்.அடுத்து என்ன செய்வது..? எப்படி செய்வது என்று எதுவும் புரியாமல் இலக்கின்றி வெறித்துக் கொண்டிருந்தான்.
“என்ன சார்....ரொம்ப யோசனையில் இருக்கீங்க....? எந்த கோட்டை மீது போர் தொடுக்க போறிங்க...?” என்ற மலரின் குரலில்...கலைந்தான் செல்வா.
“ஒண்ணுமில்லை...
மலர் 13:
வெற்றி தன்னையும்,தன் மனதையும் அடக்க மிகவும் சிரமப்பட்டான். ஒரு சில நேரங்களில் இந்த வேலையை விட்டு விடலாமா..? என்று கூட எண்ணினான்.கற்பிக்கும் இடத்தில் இருந்து கொண்டு....ஒருத்தியை மனதில் நினைத்து காதல்,கீதல் என்ற வார்த்தை பேசுவதில் அவனுக்கு துளியும் விருப்பமில்லை.
தன்னையே மற்றவர்களும் முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டால் என்ன செய்வது என்ற பயம் தான் அதற்கு...
மலர் 12:
அன்று மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பதற்காக சென்றிருந்தான் வெற்றி.அவர்கள் வகுப்பிற்கு செல்லும் ஆசிரியர் விடுமுறையில் சென்றிருந்ததால், வெற்றியை அந்த வகுப்பை எடுக்க சொல்லி...முதல்வர் பணித்திருந்தார்.
“இன்னைக்கு அந்த வெற்றி சார் தான் நமக்கு கிளாஸ் எடுக்க போறாராம்...?” என்றாள் சங்கரி.
“ஏன் நம்ம சார்க்கு என்னாச்சு..?” என்றாள் கவி பாரதி.
“சார் விடுமுறையில் போயிருப்பதால்...அவரை எடுக்க...
மலர் 11:
தேனி விவசாயக் கல்லூரி....ஆண்டிப்பட்டி அருகே.. குள்ளப்புரம் என்ற கிராமத்தில் அமைந்திருந்தது.சுமார் நூற்றி இருபது ஏக்கர் பரப்பளவில்... கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசுமையாய் காட்சியளித்தது.கல்லூரி வளாகமும்,அழகான கட்டிடங்களும்,சுற்றிலும் வயல் வெளிகளும்.... மாணவர்களுக்கு..செயல் முறை விளக்கத்திற்கு வயல்களும்... நாற்றங்கால்...விதைகள்.... உழுதல்,விதைத்தல் என தனி தனியான பகுதிகள் காணப்பட்டது.
கேட் கல்லூரியாக ஆரம்பிக்கப்பட்ட அந்த கல்லூரியில்...இளநிலை விவாசய...
மலர் 10:
வெற்றி இப்படி செய்வான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.அனைவரை விடவும் அதிர்ந்தது சாரதி தான்.இப்படி ஒரு திருப்பத்தை அவன் நிச்சயம் எதிர்பார்த்திருக்கவில்லை.
கவி பாரதியின் கண்களோ...கோபத்தைக் கக்கிக் கொண்டிருந்தது. வெற்றியோ சிறிதும் அசராமல் அவளை எதிர்கொண்டான்.உனக்கு நான் சளைத்தவனில்லை என்பதைப் போல் இருந்தது வெற்றியின் பார்வை.
“வெற்றி என்ன பண்ணி வச்சிருக்க..?” என்று துர்கா கோபமாக கத்தத்...
மலர் 9:
கல்யாணத்திற்கு போக வேண்டும் என்று சொல்லிவிட்டாளே தவிர..மலருக்கும் கொஞ்சம் யோசனையாகவே இருந்தது. அவளுக்கும் செல்வதில் விருப்பம் இல்லைதான்.ஆனால் சென்றே ஆக வேண்டிய கட்டாயம் அவளுக்கு.வாக்கு கொடுத்திருக்கிறாளே...! அதை காப்பாற்ற அங்கு செல்ல வேண்டிய கட்டாயம் அவளுக்கு.
“அவங்க வந்து பத்திரிக்கை வைக்கவில்லை என்றால்...உனக்கு எப்படி தெரிந்திருக்கும்...?” என்றது அவளின் மனம்.
‘தெரிந்திருக்காது தான்...ஆனால் தெரிந்து எப்படி...
மலர் 8:
அதன் பிறகு நடந்த வேலைகள் அனைத்தும் அசுர வேகத்தில் நடைபெற்றது.கவி பாரதிக்கு சற்றும் நம்பிக்கை வரவில்லை. வெற்றி திருமணத்திற்கு சரி சொல்லிவிட்டான்..என்ற செய்தியைக் கேட்டதில் இருந்து அவளுக்கு மனம் ஒரு நிலையில்லாமல் தவித்தது.
தான் கேட்ட விஷயம் உண்மைதானா..? என்று பலமுறை அவளுக்கு அவளாகவே கேட்டுக் கொண்டாள்.
வெற்றியின் வீட்டில் சொல்லவே வேண்டாம்.எல்லாம் தடபுடலாய் நடந்து...
மலர் 7:
வெற்றியின் மனம் நிம்மதியில்லாமல் தவித்துக் கொண்டிருந்தது. ’தேவையில்லாமல் திட்டிவிட்டோமோ..?’ என்று பலமுறை நினைத்து விட்டான்.
‘திட்டுறதை எல்லாம் திட்டிவிட்டு இப்ப வந்து புலம்பு..’ என்று மனம் எள்ளி நகையாட....
‘வர வர நான் என்ன செய்யிறேன்..ஏன் இப்படி இருக்கிறேன்..ஏன் இப்படி யோசிக்கிறேன் என்று எதுவும் புரியவில்லை.எல்லார் மீதும் கோபம் காட்டி...யாரிடமும் முகம் கொடுக்காமல்...இன்னும் எத்தனை நாளைக்கு...
மலர் 6:
திருமணத்திற்கு முதல் நாள் இரவே வந்து சேர்ந்து விட்டிருந்தனர் பனிமலர் குடும்பத்தினர்.
திருமண வீட்டில் பலரின் கண்கள் தன் மேல் விழுவதை தடுக்க முடியாமல் இருந்தாள் மலர்.
சாரதியும் முதல் நாள் இரவே வந்து விட்டிருந்தான்.ஏனோ அவனுக்கு இருந்த மனநிலையில்...மற்றவர்களுடன் ஒன்ற முடியாமல் தனித்து அமர்ந்திருந்தான்.
என்ன தான் மாப்பிள்ளை தோழனாக இருந்தாலும்...ஏனோ அந்த மகிழ்ச்சியில் கலந்து...
மலர் 5:
“என்னாச்சு துர்கா..?ஏன் ஒரு மாதிரி இருக்க..?” என்றார் ரத்தினம்.
“அது ஒன்னுமில்லைங்க...! மதுரைக்கு போயிட்டு வந்ததில் இருந்து எனக்கு அந்த பொண்ணு நியாபகமாவே இருக்கு..!” என்றார் துர்கா.
“நீ மனதில் என்ன நினைக்கிறேன்னு தெரியுது துர்கா.ஆனா நாம ஆசைப்பட்டா போதுமா...? இதில் வெற்றிக்கு பிடித்தமில்லையே...! என்னைக்கு அவன் பிடி கொடுத்து..என்னைக்கு கல்யாணம் பண்ணி...” என்று அவர்...
மலர் 4:
சென்னையின் பரபரப்பிற்கு கொஞ்சமும் குறையாமல் இருந்தது அந்த வங்கி.பணம் போட வருபவர்களும்...எடுக்க வருபவர்களும்...தத்தமது வேலையை செவ்வனே செய்து கொண்டிருக்க....கல்விக் கடன் பெறுவதற்காக சில மாணவர்கள் வங்கி மேலாளரை சந்திப்பதற்காக காத்திருந்தனர்.
சிறிது நேரத்தில் வங்கியின் உள்ளே நுழைந்தாள் பனி மலர். கட்டியிருந்த இளம் மஞ்சள் வண்ண சேலை...அவளை மஞ்சள் நிலவாய் ஜொலிக்க வைக்க...இடது கையில்...
மலர் 3:
கவியின் வார்த்தைகளைக் கேட்டு என்ன சொல்வதென்று தெரியாமல் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்க்க.....அவர்களின் முகத்தில் குழப்பத்தைக் கண்ட கவிபாரதி நிம்மதியாக உணர்ந்தாள்.
“இதென்ன புதுசா ஒரு குண்டைத் தூக்கிப் போடுறிங்க...? இதைப் பத்தியெல்லாம் எங்ககிட்ட முன்னாடியே சொல்லலையே...” என்றார் சாரதியின் அம்மா சந்திரா.
விஜயனுக்கும்,தனத்திற்கும் என்ன சொல்வதென்று தெரியவில்லை. கவி இப்படி போட்டு உடைப்பாள் என்று...
மலர் 2:
பாடலைக் கேட்ட வெற்றியின் முகத்தில் தெரிந்த உணர்வுகளை யாராலும் வரையறுக்க முடியாது.நினைவுகள் என்ற ஒன்றையே அவன் நினைப்பதில்லை.இருந்தாலும் அவை அவனையே சுற்றி கழுகாய் வட்டமிட்டுக் கொண்டிருந்தது.
நடந்து முடிந்த எந்த செயலுக்கும் அவன் பொறுப்பாக மாட்டான்.ஆனால் பொறுப்பாளியாக ஆக்கப்பட்டிருந்தான்.அதை விபத்து என்று ஒதுக்கி விடவும் முடியாது....நினைவு என்று வைத்துக் கொள்ளவும் முடியாது. ரணப்பட்டு இருந்த...
மலர் 1:
வருண பகவானின் வருகைக்காக அனைவரும் காத்திருக்க...தனது கருணையை....தேனி மாவட்டம்...கம்பம் அருகில் உள்ள புதுப்பட்டிக் கிராமத்தில்....வஞ்சனையின்றி வழங்கிக் கொண்டிருந்தார்.
இரண்டு மணி நேரமாக தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக.....எல்லா இடங்களிலும் தண்ணீர் சூழ்ந்திருக்க....பல நாட்களாக வெயிலில் வாடிய சாலையோர மரங்கள்....புத்துணர்ச்சியுடன் தன்னை மீட்டெடுக்க....விவசாய நிலங்கள்..மகிழ்ச்சியுடன் மழைநீரை உள்வாங்கிக் கொள்ள....மழை நின்ற பின்பும் சாரல் விழுந்து கொண்டிருந்தது.
மழைநீர்...