Sillendru Oru Kaathal
அத்தியாயம் –23
ஆதி பெரும் குழப்பத்தில் இருக்க மொத்தமாக அவன் நிலை குலைந்து போயிருந்தான். யாரிடமும் எதுவும் பேசாமல் தனிமையை மொத்தமாக குத்தகைக்கு எடுத்திருந்தான் போல் வானத்தையே வெறித்து பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான். ஆதிரா மீண்டும் வந்து அவனை சாப்பிட அழைக்க “நீ போ எனக்கு சாப்பாடு வேண்டாம் பசிக்கலை” என்று சொல்லி அவளை அனுப்பிவிட்டான்....
அத்தியாயம் –21
அன்று காலை விடியும் முன்பாகவே ராஜீவிடம் இருந்து ஆதிக்கு போன் வந்தது. அரைவிழிப்பு நிலையிலேயே எழுந்து போனை தடவியவனிடம் போனை எடுத்துக் கையில் கொடுத்தாள் ஆதிரா. “தேங்க்ஸ் ஆரா” என்றவாறே போனை எடுத்தான் ஆதி. “சொல்லுடா என்ன காலையிலேயே போன் பண்ணி இருக்கே” என்றான். “வெற்றி வந்திருக்கான் அதை சொல்ல தான் கூப்பிட்டேன்”...
அத்தியாயம் –19
“வாம்மா என்னை மறந்துட்டேன்னு நினைச்சேன்” என்றான் ராஜீவ். “என்ன அண்ணா நீங்க, நீங்க தான் என்னை மறந்துட்டீங்கன்னு நான் நினைச்சேன். வீட்டுக்கு வர்றேன்னு சொல்லிட்டு இப்பவரைக்கும் நீங்க வரவே இல்லையே, நான் உங்க மேல கோவமா இருக்கேன் அண்ணா” என்றாள் அவள். “அப்பா நான் தப்பிச்சேன்” என்றான் ஆதித்தியன்.
“உன் தங்கச்சி கேக்குற...
அத்தியாயம் –17
“ஏன்லா லட்சுமி நீ இதெல்லாம் கவனிக்க மாட்டியா” என்றார் காந்திமதி. “என்னம்மா சொல்றீங்க, எனக்கு ஒண்ணும் புரியலை” என்றார் அவர். “உன் மகனும் மருமகளும் ஒன்னா சந்தோசமா இருக்க மாதிரி தெரியலைல. நீ இதை கூடவா பார்க்க மாட்டா” என்றார் அவர்.
“என்னம்மா சொல்றீங்க, எனக்கு அப்படி எதுவும் தெரியலையே, அவங்க சந்தோசமா...
அத்தியாயம் –15
“வண்டியை நிறுத்துங்க” என்றாள் அவள். “எதுக்கு” என்றான் அவன். “சரி நிறுத்த வேண்டாம் நீங்க நம்ம ஆபீஸ்க்கு போங்க ஆது” என்றாள். “ஏன்” என்றான் அவன். “சொன்னா கேளுங்க ப்ளீஸ்” என்றாள். அவளின் நம் அலுவலகம் என்றதிலும் அவளின் ஆது என்ற அழைப்பிலும் குளிர்ந்தவன் வேறு பேசாமல் அவன் அலுவலகத்திற்கு வண்டியை செலுத்தினான்....
அத்தியாயம் –13
டெல்லிக்கு செல்லவேண்டும் என்று முடிவெடுத்து விட்டானே தவிர அவனுக்குள் குழப்பமே மேலிட்டது. எதைக் கண்டு பயந்து ஓடி ஒளிகிறோம் என்ற எண்ணம் தோன்றி அவனை அலைகழித்தது. பல யோசனைகளுக்கு பின் டெல்லி போவதில் எந்த தவறுமில்லை என்று முடிவு செய்து அவளிடம் விபரம் உரைக்க எண்ணினான். “ஆதிரா” என்ற அவன் அழைப்பில், “என்னங்க”...
அத்தியாயம் –11
ஒருவழியாக மடிகணினியை வாங்கிக் கொண்டு வீடு வந்தடைந்தனர். ஆதித்தியன் பலத்த யோசைனையுடனே இருந்தான். அவள் அவனை சாப்பிட அழைக்க எழுந்து வந்து உணவருந்தினான். பின் சென்று படுக்கையில் விழுந்தவன் உடனே உறங்கிப் போனான். இரண்டு மூன்று நாட்களாக உறங்காமல் இருந்ததில் அவனையறியாமலேயே உறங்கிப்போனான்.
அவன் தூங்காமல் இருந்ததை பார்த்திருந்தவள் அன்று அவனிடம் பேசிவிடவேண்டும்...
அத்தியாயம் – 9
“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றாள். ‘என்ன’ என்பது போல் அவன் பார்க்க, “குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும்” என்றாள் அவள். “சரி, நாளைக்கு நான் போய் விண்ணப்பபடிவம் வாங்கிட்டு வர்றேன்” என்றான். “இல்லை அது வந்து நானே வாங்கி வைச்சுட்டேன்” என்று கூறி படிவத்தை அவன் முன் நீட்டினாள். “அதான் நீயே...
அத்தியாயம் – 7
சென்னை எழும்பூர் ரயில் நிலையம்
“சரிங்க நாங்க இப்படியே கிளம்புறோம், வீட்டுக்கு போய்ட்டு அப்புறம் வர்றோம்” என்று சங்கரன் அருணாசலத்திடம் விடைபெற்றுக் கொண்டிருக்க, அதுவரை எந்த எண்ணமும் இல்லாமல் இருந்த ஆதிராவுக்கு சட்டென்று கண்கள் நிறைந்தது. தாயை பிரிந்த கன்றாக அவள் மனம் வாடியது. பெட்டிகளை அப்போது தான் இறக்கி வைத்துவிட்டு ஆதிராவை...
அத்தியாயம் –5
சலிப்புடன் வந்து கதவை திறந்தவனுக்கு மெலிதான ஆச்சரியம் தோன்ற பின்னால் நின்றிருந்த அவளையும் அவன் அன்னையையும் மாறி மாறி நோக்கினான். ‘என்னம்மா நான் வந்து கூப்பிடும் போது குழந்தைகளை அனுப்பவில்லை, இப்போது தூக்கி வந்து இருக்கிறீர்கள்’ என்பது போல் இருந்தது அவன் பார்வை. அவன் பார்வையை புரிந்தவராக அவர் அவனுக்கு வாய்விட்டு பதிலளித்தார்....
அத்தியாயம் –3
ஆதித்தியன் ஹரிணி திருமணம் வெகு விமரிசையாக நடந்தேறியது. மனதிற்கு பிடித்தவனையே மணந்த சந்தோசம் அவள் முகத்தில் வெகுவாக தெரிந்தது. ஆதிக்கும் பெற்றவர்களின் விருப்பப்படியும் அவன் விரும்பியவாறும் பெண் அமைந்ததில் அவனும் களித்திருந்தான்.
அவனின் நண்பர்கள் கூட்டம் மொத்தமும் வந்திருந்தது வெற்றி வெளிநாட்டில் வேலையில் இருப்பதால் அவனால் மட்டும் ஆதியின் திருமணத்திற்கு வரமுடியவில்லை. நண்பர்கள் ஒருவரை...
அத்தியாயம் – 1
திருநெல்வேலி மாவட்டம் பிரசித்தி பெற்ற பாபநாசம் சிவன் கோவில் அறியாதோர் இருக்க முடியாது. வெள்ளிக்கிழமை காலை சுபமுகூர்த்த வேளை....... இருவீட்டு பெரியவர்கள் மற்றும் முக்கிய சில உறவுகள் மட்டும் கூடியிருக்க அய்யர் மந்திரம் ஓத கடவுளின் சந்நிதானத்தில்தாலியைவைத்துஎடுத்துக்கொடுக்கஆதிராவின்கழுத்தில்மங்கலநாண் பூட்டினான் ஆதித்தியன்.
அவன்கைகள்கூடபடாதவாறுதாலியைகட்டியது மனதிற்கு சங்கடம் கொடுத்தாலும் கண்களில்கண்ணீருடன்அவன்கட்டியதாலியைபிறர்அறியாதவாறுதொட்டுபார்த்துக்கொண்டாள்ஆதிரா. நெற்றியில் குங்குமம் வைக்கும்...