Thursday, March 28, 2024

    Saththamindri Muththamidu

    “பாட்டி கிட்ட சண்டை போடுவியா? எதிர்த்து பேசுவியா? அவங்க எவ்வளவு வருத்தப்பட்டாங்க தெரியுமா? வந்ததும் சாரி கேட்கற! என்ன பண்ணிட்டு இருக்க நீ?” என்று ஆரம்பித்து மீனாக்ஷியை ஒரு வழியாக்கி, திரும்பி துளசியை பார்க்க “எனக்கு ஒன்னும் ஆகலை” என்று அவள் அவசரமாய் சொல்ல, “எதாவது ஆகியிருந்தா என்னடி செஞ்சிருப்ப?” என்று அவன் கத்திய கத்தலுக்கு துளசியை...
    அத்தியாயம் இருபத்தி மூன்று : இரவு எட்டு மணியாகிவிட துளசி வாசலில் ஒரு பார்வை பார்ப்பதும், பின்பு உள்ளே செல்வதுமாக சமையலைறைக்கும் கூடத்திற்கும் நடந்து கொண்டிருந்தாள். ஒரு இடத்தில் தடுமாறி பின் தன்னை ஸ்திரமாக்கி கொள்ள, அப்போது பார்த்து அகிலாண்டேஸ்வரி அவளை பார்த்து விட்டார். அவருக்கு அப்படியே ரத்த கொதிப்பு எகிறி விட்டது. சிறிது நேரம் தன்னை...
    இவ்வளவு பேசும் போதும் நாகேதிரனும் தருணும் அங்கேயே தான் இருந்தனர். “அச்சோ, இந்த பெண் பேரிலா? வராமல் இருந்திருக்கலாமோ!” என்று தோன்றிய போதும் வராமல் இருந்திருக்க முடியாது என்று தெரியும். திரு இருவரின் தொழிலையே முடக்கி இருந்தான். “நீங்கள் என் பணத்தை திரும்ப கொடுக்காமல் செயல் பட முடியாது” என்பது போல, சத்தம் மட்டும் தான் போடுவான்...
    அத்தியாயம் இருபத்தி இரண்டு : அன்று கட்டடம் ஆரம்பிப்பதற்கான பூமி பூஜை, மேகநாதனின் குடும்பத்தில் எல்லோரும் ஆஜர்! துளசியின் வீட்டிலும் எல்லோரும் ஆஜர். ஒரு மாதத்திற்கு முன்பு துளசி பேரில் நிலம் பதிவாகியிருக்க, லோன் சேங்க்ஷன் ஆகியிருக்க, இதோ வேலை ஆரம்பிப்பதற்கான பூமி பூஜை. துளசிக்கு இப்போது ஏழாம் மாதம், வயிறு நன்றாகவே தெரிய ஆரம்பித்து இருந்தது. வேலவன், ரத்னா,...
    “ம்ம், ஒட்டிக்கிட்டு படுத்து என்ன பண்ண? கட்டிக்கிட்டு படுத்தா கூட பரவாயில்லை!” என்று மெல்ல அவனுக்கு அவனே பேசிக் கொள்வது போல முனகினான். “ஒட்டிக்காம எப்படி கட்டிக்கறதாம்?” என்று மெல்லிய குரலில் துளசியும் முனக, “இப்படி!” என்று திரு திரும்பி அவளை அணைக்க, “ஒட்டிக்கிட்டு தானே கட்டிட்கிடீங்க!” என்று இன்னும் கிசு கிசுப்பாய் துளசி ரகசியம் பேசினாள். “நான் எங்க...
    அத்தியாயம் இருபத்தி ஒன்று:   திரு துளசியை கண்ணுக்குள் வைத்து தாங்கினான் என்று சொல்லவே முடியாது. ஏனென்றால் அவர்கள் முந்தைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி இருந்தனர். அதாகப்பட்டது முன்பு போல காலையில் எழுந்து திரு ஷட்டில் ப்ராக்டிஸ் சென்றான். ஆனால் நேரமாக வந்து மீனாக்ஷியை அவனே பள்ளிக்கு கொண்டு விட்டு வந்து குளித்து உண்டு மில்லுக்கு...
    அத்தியாயம் இருபது : அடுத்த நாளும் மீனாட்சியை திரு தான் பள்ளிக்கு கொண்டு போய் விட்டான். துளசியின் முகம் பார்த்தே அவளை எதுவும் பேசவில்லை, எதுவும் தொந்தரவு செய்யவில்லை. ஆம், இரவு சரியாக உறக்கம் இல்லாமல் முகம் ஒரு மாதிரி இருக்க கண்கள் சற்று வீங்கி இருக்க, பார்த்தவுடனேயே “உடம்பு சரியில்லையா துளசி” என்றான். “இல்லை” என்பது போல...
    ஃபிரிட்ஜில் இருந்து துளசி பால் எடுத்து காய்ச்சும் வரை கதவில் சாய்ந்து அவளை பார்த்து நின்றிருந்தான். இதற்கு பால் எடுக்கும் போதே “நான் பால் காய்ச்சட்டுமா?” என்று கேட்டும் இருந்தான். சமையலறையும் திருவும் எதிர் எதிர் துருவங்கள்! கேட்டது அவனா என்ற சிந்தனை இருந்த போதும் அமைதியாய் அவனை தலையசைத்து மறுத்தவள், அவளே செய்தாள். அவளுக்கு மட்டுமல்ல, அவனுக்கும்...
    அவன் அமர்ந்த ஓரிரு நிமிடங்களுக்கு எல்லாம் அவனின் சித்தப்பாக்கள் வந்து விட, கூட அவனின் அப்பா, வெங்கடேஷ், அம்மாவும் இருந்தனர். அவர்களிடம் இடம் வாங்குவதை பற்றி கூறினான்.    ஊரின் மிக முக்கிய இடத்தில இருப்பதால் அதுவும் தொகையும் மிக அதிகம் என்பதால் “வாங்கி என்ன செய்ய போற திரு அங்கே” என்ற கேள்வி எழ, சமைத்துக்...
    அத்தியாயம் பத்தொன்பது :    துளசியின் பிறந்த வீட்டினர் அன்று மாலை கிளம்பிவிட, இப்போது யாருமில்லை எப்போதும் போல வீட்டினர் மட்டுமே! திரு அவர்கள் கிளம்பியதும் மில்லுக்கு சென்று விட்டான். புது உத்வேகமே அவனிடம்! அங்கு சென்று வேலைகளை பார்த்து அவன் வீடு வந்த போது, இரவு வெகு நேரமாகிவிட்டது. துளசியை தவிர ஹாலில் யாருமில்லை. திரு வந்ததும் உணவு எடுத்து...
    அத்தியாயம் பதினெட்டு : அருகில் வந்தவன் “என்ன” என்றான். துளசி என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் “ஒன்னுமில்லையே” என்றாள் அவசரமாக. சில நொடிகள் அவளை உற்று பார்க்க, துளசியின் தலை தானாகக் கவிழ்ந்தது. பின்பு மீனாவின் புறம் திரும்பியவன் “சாப்பிட போகலாமா” என்றான். “மா வா” என்று துளசியின் கைபிடித்தாள் மீனா. துளசி திருவின் முகம் பார்க்க, “போ” என்பது போல...
    அத்தியாயம் பதினேழு : சீரும் சிறப்புமாய், யாரும் சீர் செய்யாமலேயே மீனாக்ஷியின் விஷேஷம் எந்த வித பிரச்சனைகளுமின்றி சௌக்கியமாய் நடந்து முடிந்தது. கணவனும் மனைவியும் அகத்தின் அழகை முகத்தினில் காண்பிக்காமல் இருப்பதில் கை தேர்ந்தவர்கள் என்பதால் விஷேஷம் நன்றாகவே நடந்தது. விருந்தினர்களை உபசரிப்பதிலேயே நேரம் சென்று விட்டது. வேறு எதுவும் ஞாபகத்திலேயே இல்லை. அதுவும் ஏன் சீர்...
    அத்தியாயம் பதினாறு : திரு அவளின் கை பிடித்து சில அடிகள் நடக்க வைக்க, தெளிந்தவள் அவனிடமிருந்து கைகளை விலக்கிக் கொண்டு அவளாக நடக்க ஆரம்பிக்க, பார்வை மகளின் புறம் தானாத் திரும்பியது. அடுத்த நிமிடம் உணர்வுக்கு வந்து விட்டாள். ஆம்! மகள் தான் அப்படி அழுது கொண்டிருந்தாளே, மகளை நோக்கி அப்படி வேகமாகச் செல்ல, எதற்கு இப்படி...
    திரு ரூமில் கவிழ்ந்து படுத்துக் கொண்டிருந்தான் , முகம் தலையணையில் முழுதாய் புதைந்து இருந்தது. துளசி மெதுவாய் அவனை தொட அவனிடம் அசைவில்லை. விழித்து தான் இருக்கிறான் என்று தெரியும். “எழுந்துருங்க” “என்னை கொஞ்சம் தனியா விடு, தூரப் போ, தொந்தரவு பண்ணாதே!” என்ற குரல் மட்டும் கேட்டது , சிறிது தலையை உயர்த்தி அதனை சொன்னவன் அவளின்...
    பதினோரு மணிவாக்கில் திரு வீட்டிற்கு அழைத்தான். அதுவரையிலும் அவனை அவனே அவனின் அலுவலக அறையில் அமர்ந்து திட்டிக் கொண்டிருந்தான். “ஒரு பொண்ணை இவ்வளவு டார்ச்சர் பண்ணுவியா நீ, அவளா இருக்கவும் இருக்குறா! வேறா யாரா இருந்தாலும் உன்னோட குப்பை கொட்ட முடியாது!” என்று. உறங்குகிறாள் என்று சொல்லப் பட, அவனால் அங்கே இருக்க முடியவில்லை. என்னவோ...
    அத்தியாயம் பதினைந்து : துளசி உள்ளே வந்து அவனுக்கு காஃபி கொடுக்கும் வரை கிட்ட தட்ட கால் மணிநேரம் அப்படியே அமர்ந்திருந்தான். அம்மா சொன்ன “கொஞ்சுவாங்களா” என்ற வார்த்தையை மனதிற்குள் அசை போட்டபடி, பல சமயம் தோன்றியிருந்த ஏக்கம் அவனுள் அப்போது ஞாபகம் வந்து அவனை அசைத்து இருந்தது.   அவள் வந்து காஃபி கொடுக்கவும் ஒரு முறைப்புடன்...
    அத்தியாயம் பதினான்கு : காலையில் துளசி எழுந்த போது திரு ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, சில நொடிகள் பார்த்திருந்ததவள் மகளை தேடிச் சென்றாள். பின்பு மகளுக்கு தேவையானதை எல்லாம் கவனித்து அவளும் குளித்து வந்த போது நேரம் ஒன்பதை நெருங்கியிருந்தது. அகிலாண்டேஸ்வரி துளசியிடம், “நான் சொன்னதை கேட்டியா?” என்றார். விழித்தாள், அது அவளின் ஞாபகத்திலேயே இல்லை, அவளின் முகத்தை பார்த்தே...
    அத்தியாயம் பதிமூன்று : “மா மா” என்று மீனாக்ஷி எதற்கெடுத்தாலும் அம்மாவை அழைக்க, “என்ன மீனா, இத்தனை பேர் இருக்காங்க நான் அவங்களை கவனிக்க வேண்டாமா, நீ எதுன்னாலும் உன் அத்தைங்களை கூப்பிடு” என்று மகளை உறவோடு ஒட்டி வைக்க முயற்சி எடுத்தாள். திரு மில்லிற்கு சென்றவன் மதிய உணவிற்கு இன்னும் வரவில்லை. அப்படியே மாறிவிடுவான் என்று துளசிக்கு...
    அமைதியாய் அமர்ந்திருந்தாள். “அதுக்காக அவளோட பேசிட்டு இருந்தேன், தொடர்புள இருந்தேன் நினைக்காதே, அப்படி எதுவுமே இல்லை. அவங்கப்பா தம்பி மூலமா அவளுக்கு உதவி செஞ்சேன் அவ்வளவு தான்!” “நீ என்னை விட்டு போயிட்ட, அதுக்கு அப்புறம் ஒரு பத்து பதினஞ்சு நாள்ல தான் அவ இறந்து போயிட்டா. எனக்கு அதுக்கு பிறகு உன்னை வந்து கூப்பிடறதை...
    அத்தியாயம் பன்னிரண்டு : நன்கு உறங்கிவிட்டவளுக்கு அர்த்த ராத்திரியில் விழிப்பு வர, விழித்து பார்த்தவளுக்கு சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்த திரு தான் கண்களில் பட்டான். வேகமாக எழுந்து அமர, “எதுக்கு இப்படி வேகமா எழற, மெதுவா பார்த்து எழணும்” என்று அதட்டினான். “ம்ம்” என்பது போல தலையாட்டியவள், எழுந்து வெளியே சென்று மகளை பார்த்து வந்து மீண்டும் படுக்கையில்...
    error: Content is protected !!