Poovai Nenjam
அத்தியாயம் இருபத்தி ஒன்று:
வைதேகியுடனான தொலைபேசி உரையாடலுக்கு பிறகு ராம் சற்று குற்ற உணர்ச்சியில் இருந்து வெளியே வந்தான். இப்போது தான் அவனுக்கு சற்று நிம்மதியாக இருந்தது
பிரிய வேண்டும் என்று அவள் சொல்லி தன்னை விலக்கி வைத்தபிறகு மனதில் அவனுக்கு நிம்மதி என்பதே இல்லாமல் இருந்தது. அவளுடன் சேர்ந்து வாழ்வோமா இல்லையா என்று இருந்தது. இப்போது...
அத்தியாயம் பதினான்கு:
தன் செய்கையை எண்ணி ராமிற்கு கொஞ்சம் வருத்தம் தான். நடந்ததுக்கு வருத்தம் இல்லை. நடந்த விதத்திற்கு வருத்தம். இருந்தாலும் அவன் மனதில் சொல்லொணா திருப்தி இருந்தது. படுத்துக்கொண்டே திரும்பி வைதேகியை பார்த்தான்.
எப்படி நடக்க வேண்டிய நிகழ்வுகள் எப்படி நடந்துவிட்டன என்று ஒரு பெருமூச்சு அவனிடம் இருந்து வெளியேறியது.
நடந்து முடிந்தது அனைத்திற்கும் அவனே பொறுப்பாவான்....
அத்தியாயம் பதினாறு:
ராம் ஹாஸ்பிடலில் இருந்து வர இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. இருந்த இரண்டு நாட்களும் அவன் பார்வைகள் அவளையே தொடர்ந்தன. தொடர்ந்து யாசித்தன. மன்னிப்பையா அவளின் அன்பையா. அவனுக்கே தெரியவில்லை. அவளுக்கும் தெரியவில்லை.
வைதேகிக்கு அவன் பார்வைகள் புரிந்தும் புரியாமல் இருந்தது. ராமை பார்த்தால் சற்று பாவமாக தான் இருந்தது. இருந்தாலும் மனது இளகுவேனா என்றது.
வேண்டிய...
அத்தியாயம் இருபது:
ராமின் வேண்டுதல் வீண் போகவில்லை, சமையபுரம் மாரியம்மனுக்கு அவனை கைவிடும் எண்ணம் எல்லாம் இல்லை.வைதேகி பிரிய வேண்டும், அது, இது, என்று பேசினாலும் டைவர்ஸ் என்ற வார்த்தை அவளின் வாயில் இருந்து வரவில்லை.
உண்மையை சொல்லவேண்டும் வைதேகிக்கு அந்த மாதிரி ஒரு எண்ணம் தோன்றவேயில்லை. அவளுக்கு தற்போதைக்கு இருக்கும் எண்ணம் அவனை விட்டு பிரிய...
அத்தியாயம் பதினெட்டு:
“ராமை தனக்கு பிடிக்காதே. இப்போது மட்டும் என்ன”, என்று யோசிக்க தெரிந்த வைதேகிக்கு. அப்போதும் அவனை தனக்கு பிடிக்கிறதா என்று யோசிக்க முடியவில்லை. ஏதோ ஒரு வகையில் அவன் தன்னை பாதிக்கிறான் என்ற முடிவிற்கு வந்தாள்.
வைதேகி அவளின் யோசனைகளிலேயே இருக்க. அவளின் யோசனைகளின் நாயகன் அவளை பற்றி சிறிதும் கவலைப்படுபவனாக அவளுக்கு தெரியவில்லை.
ராம்...
அத்தியாயம் பதிமூன்று:
ராம் அப்போது தான் காஞ்சிபுரத்திற்கு வந்து வீட்டில் கால் வைத்தான் வைதேகி அவனுக்கு போன் அடித்தாள்.
அவள் போன் செய்ததும் பதட்டமாக எடுத்து, “என்ன? என்ன?”, என்றான். இப்போ தானே வந்தோம் என்று நினைத்துக்கொண்டே.
அவனின் பதட்டமான குரலை கேட்டவள். “பயப்படறதுக்கு ஒண்ணும் இல்லை”, என்றாள்.
“பின்ன”, என்றான் ஆசுவாசப்பெருமூச்சு விட்டு.
“அது.”, என்று இழுத்தவள். “அப்பா விஷயம்...
அத்தியாயம் பதினைந்து:
வைதேகியின் கையை பிடித்துக்கொண்டிருந்தவன் விடவேயில்லை.
எப்படியாவது தான் செய்த மாபெரும் தப்பை நியாப்படுத்தி விடவேண்டும் என்று தணியாத ஆர்வம் அவன் மனதில் கொழுந்து விட்டு எரிந்துகொண்டு இருந்தது.
நடந்து முடிந்த நிகழ்வு ஆரம்பத்தில் ஒரு பரவச நிலையை கொடுத்தாலும் இப்போது பெரும் குற்றமாக தெரிந்தது.
அதிலிருந்து விடுபடுவதற்கான வழி வைதேகி சமாதானமாகி தன்னுடன் இயல்பாக நடந்து கொள்வதே...
அத்தியாயம் நான்கு:
“நான் அந்த மாதிரி எல்லாம் நினைச்சதே இல்லை அண்ணா”, என்றார் சுவாமிநாதன்.
“இதுவரை நினைக்கலைன்னா என்ன இனிமே நினைக்கலாமே”, என்றார் சுந்தரேசன்.
அவரை ஆச்சர்யமாக பார்த்தார் சுவாமிநாதன். வாய் விட்டு கேட்க கூட செய்தார். “இத்தனை நாளா அந்த பசங்களை கவனிக்காம இருந்தீங்க. இப்போ வந்து பொண்ணு தரச் சொல்றிங்க. எனக்கு ஒண்ணும் புரியலையே அண்ணா”,...
அத்தியாயம் ஐந்து:
ராமின் வேண்டாத எண்ணங்கள் வலுப்பெற்ற போதும் அவனால் இந்த திருமணம் வேண்டாம் என்று சொல்லவே முடியவில்லை. சுவாமிநாதனின் பால் உள்ள நன்றி உணர்ச்சி தடுத்தது.
ஒருவகையில் இந்த பெண்ணே திருமணத்தை நிறுத்திவிட்டால் பரவாயில்லை என்று வைதேகியை பற்றி நினைத்தான். இல்லை அவள் இப்படி சொல்லுகிறாள் என்று சுந்தரேசனிடம் சொல்லுவோமா என்று எண்ணினான்.
பிறகு அவர் இப்போது...
அத்தியாயம் மூன்று:
தன் தாய்மாமாவின் வீட்டிற்கு சென்று வந்தவுடனே சுவாமிநாதனிடம் தொலைபேசியில் நடந்ததனைத்தும் கூறினான். அவர் சுவாமிநாதனை திட்டியதை மட்டும் கூறவில்லை. அதை விடுத்து வேறு எல்லாவற்றையும் கூறியவன் நாளை மறுநாள் பெண் பார்க்க போவதை கூறினான்.
அதுவும் ஒரு வகையில்,”சரி”, என்று சுந்தரேசனை ஒட்டியே பேசினார் சுவாமிநாதன். “நான் இதை யோசிக்காம விட்டுடேன். கல்யாணம் நடக்கணும்............
அத்தியாயம் பதினேழு:
சொன்ன மாதிரி திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே ராம் வைதேகியை அழைத்து செல்ல வந்துவிட்டான். அப்போது பார்த்து சுவாமிநாதனுக்கு சற்று உடம்பு வேறு சரியில்லாமல் இருந்தது. வைதேகிக்கு விட்டு செல்ல மனமில்லை. ராமும் கூட இந்த நிலையில் வைதேகியை கூட்டிச் செல்வதா என்று யோசித்தான்.
சுவாமிநாதன் தான் பிடிவாதம் பிடித்து, “நான் எப்படியும் கல்யாணத்துக்கு...
அத்தியாயம் பதினொன்று:
வைதேகியின் தந்தை அவளிடம் தெளிவாக சொல்லிவிட்டார். அவர்கள் வரும்போது அவர்களின் உபச்சாரத்தில் எந்த குறையும் இருக்க கூடாது என்று.
“அன்னைக்கு மாதிரி உன் ரூமுக்குள்ள போய் உட்கார்ந்துக்க கூடாது வைதேகி. ராம் மட்டும்ன்னா நான் ஏதாவது பேசி கூட சமாளிப்பேன். ஆனா மாலதியும் மனோகரும் கூட வர்றாங்க. நல்லா அவங்களை கவனிச்சு பார்த்துக்கோ”, என்றார்.
“சரிப்பா”,...
அத்தியாயம் எட்டு:
விட்டத்தை வெறித்து படுத்திருந்த ராமிற்கு தூக்கம் வருவேனா என்றது. “என்னடா முதலிரவு நம்மை போல எவனும் கொண்டாடியிருக்க மாட்டான்”, என்று தோன்றியது. திரும்பி மனைவியை பார்த்தான் அவள் அசையாமல் அவனுக்கு முதுகை காட்டி படுத்திருந்தாள்.
ஒரு பெண்ணின் அருகாமை அவனுக்கு புதிய உணர்வுகளை கொடுத்தது. இத்தனை நாட்களாக எந்த பெண்ணையும் அதிகமாக சைட் அடித்தது...
அத்தியாயம் பத்து:
வீடு வந்து சேர்ந்த பிறகும் மனதின் சோர்வு ராமை விடவில்லை. அதற்கு சற்றும் குறையாமல் இருந்தது வைதேகியின் நினைப்பு. “தான் காரில் போகவேண்டும் என்று சொன்னால் பேசாமல் விடவேண்டியது தானே. அதற்கு எதற்கு இவ்வளவு ஆர்பாட்டம் செய்யும் அளவிற்கு தன்னை கொண்டுவரவேண்டும்”, என்று.
இருவரும் காரில் வந்து இறங்க மாலதிக்கு ஆச்சர்யம். “எங்கே அண்ணா...
அத்தியாயம் பன்னிரெண்டு:
கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த உடனேயே ராமிடம் மாலதியை அழைத்துக் கொண்டு வந்தாள் வைதேகி.
“மாலதி கிட்ட டிரெஸ் எதுவுமே நல்லா இல்லை, அவளுக்கு கொஞ்சம் டிரெஸ் எடுத்தா பரவாயில்லை”, என்றாள் ஒரு முறைப்போடு.
“அதுக்கு ஏண்டா இவ நம்மளை பார்த்து முறைக்கிறா”, என்றிருந்தது ராமிற்கு. எதையும் காட்டிகொள்லாமல் , “என்ன பண்ணனும்”, என்றான்.
“கடைக்கு போயி...
அத்தியாயம் ஆறு:
அவளின் தந்தையை தனியாக விடமுடியாது என்பது மறுக்க முடியாத காரணம் தான் அதே சமயம் வைதேகிக்கு ராமின் வீட்டிற்கு போயும் இருக்க முடியாது. அவளுக்கு போக பிடிக்கவில்லை. அவன் மேல் கோபம் கனன்று நின்றது. ஒன்றுக்கொன்று முடிச்சு போட்டு தந்தையை தனியாக விட முடியாது என்று சுந்தரேசன் இருந்த இடத்தில் தைரியமாக கூறினாள்.
“என்ன...
அத்தியாயம் ஒன்பது:
வைதேகியின் வீடு வந்த போது ராமின் மனம் உல்லாசமாக இருந்தது. பின்னே அவனின் மனைவி காஞ்சிபுரத்தில் ஆரம்பித்து சென்னை வரையிலும் அவனின் இடுப்பை கட்டிக்கொண்டே வந்தாளே.
அவன் மனம் மட்டுமே உல்லாசத்தில் மிதந்தது. அதற்கு நேர் மாறாக வைதேகி ஏக கடுப்பில் இருந்தாள். அவன் இடுப்பை கட்டிக்கொண்டு வந்தது அவளுக்கு கொஞ்சமும் ரசிக்கவில்லை. மிகுந்த...
அத்தியாயம் ஏழு:
காலையில் முகூர்த்தம் களைகட்டியது. பெண்ணிடமும் மாப்பிள்ளையிடமும் உற்சாகம் கம்மியாக காணப்பட மற்ற எல்லோரும் அதிக உற்சாகத்துடன் காணப்பட்டனர். மாலதி கூட நேற்று வைதேகி நடந்து கொண்டதை மறந்து அதிக உற்சாகத்துடன் காணப்பட்டாள்.
மோகன் அவளை பார்த்தும் பார்க்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். இத்தனை நாட்களாக பக்கத்து வீட்டில் இருந்தாலும் புதிதாக முளைத்த சொந்தம் அவனை மாலதியை சைட்...