Wednesday, May 14, 2025

    Tamil Novels

    காதல் வானவில் 36 தூரத்தில் தெரிந்த பச்சை பசேல் என்று பரந்தவிரிந்த வயல் பரப்பையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள் மிருணாளினி.ஜில்லென்ற காத்தும்,அமைதியான சுற்றுபுரமும் மனதை அமைதியாக்கியது. “மிருணா.....”என்று பின்னே வேணியின் குரல் கேட்டது. “வரேன் அத்தை....”என்று கூறிவிட்டு வேகமாக அந்த இடம் விரைந்தாள்.வயல் பரப்புகளின் நடுவில் அமைந்திருந்தது அந்த கோவில்.சிறிய கோவில் தான் என்றாலும் மிகவும் நேர்த்தியாக இருந்தது.விஜயின்...
    அத்தியாயம் 12 வழமைக்கு மாறாக கதிர்வேல் இன்று நேரங்ககாலத்தோடு வீட்டுக்கு வந்தான். அதுவும் குடிக்காமல் கையில் உணவு பொட்டலங்களோடு வருபவனை ஆச்சரியமாக பார்த்தாள் சரோஜா.     வெண்ணிலா ஒன்னே ஒன்னு சூரியனும் ஒன்னே ஒன்னு வாழ்க்கையும் ஒன்னே ஒன்னு வாழ்ந்து பாரம்மா பூவென்றால் வாசம் எடு தீயென்றால் தீபம் எடு எதிலுமே நன்மை உண்டு வாழ்ந்து பாரம்மா லேலக்கு லேலக்கு லேலா இது லேட்டஸ்டு தத்துவம் தோழா நீ கேட்டுக்கோ காதுல கூலா அடி மேளா...
    அத்தியாயம் 11 பத்மினிக்கு இப்பொழுது தனிமை அவசியம். ஆனாலும் அவளை தனியாகவும் விடமுடியாது. நல்லதம்பி சமையலறையை கட்டிக் கொண்டிருப்பதால் பத்மினிக்கு துணையாக இருப்பார் என்று பத்மினியை வீட்டில் இறக்கிய சர்வேஷ் நேராக வந்தது சிறிசேன முதலாளியின் கடைக்கு. "வாங்க தம்பி என்ன இந்த பக்கம்? சவாரி கிடைக்கலையா?" செல்வா நக்கலாகவே ஆரம்பித்தான். "டேய் செல்வா அண்ணா. நீ என்ன...
    அதியன் புரியாமல் பார்க்க, " இவ உன்னோட கடமை தான் இல்லையா.. என் மகளை நீ கடமைக்காக கூட வளர்க்க வேண்டாம்.. அவளுக்கு அத்தனையுமா நான் இருக்கேன்.. நீ தேவையில்லை.." என்றாள் ஆத்திரத்துடன்..                        அதியன் "புரியாம பேசாத அலர்.. நான் ஒரு வார்த்தை சொன்னதுக்கு இவ்ளோ அர்த்தம் கண்டுபிடிப்பியா நீ.. அவ என்னோட மகள் இல்லையா.."...
    இசையின் மொழி 03                            குந்தவியின் காரியங்கள் முடிந்து ஒருவாரம் கடந்து போயிருக்க, இந்த ஒரு வாரமாக வீட்டில் தான் இருந்தாள் அலரிசை. ஏற்கனவே குந்தவையின் பிரசவம், அவளின் மரணம் என்று வரிசையாக விடுப்பு எடுத்து வைத்திருக்க, எல்லாம் சேர்ந்து ஒரு மாதத்தை தாண்டி இருந்தது. ஆனால், அதை பற்றிய கவலை சற்றும் இல்லாமல் தன் முழு...
    காதல் வானவில் 35 2 தன்னை சுற்றி அமர்ந்திருந்தவர்கள் ஏதேதோ பேசிக் கொண்டிருக்க,மிருணாளினியின் மனமோ தன்னவன் கூறியதிலேயே இருந்தது. “எனக்கு நியாபகம் வந்துடுச்சினு நான் எப்படி சொன்னேன்....”என்று பல்லைக் கடித்துக் கொண்டு அவன் கேட்டதும் மிருணாளினிக்கு உடலில் உயர் மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது. என்ன என்ன சொல்லிகிறான் இவன்....இவனுக்கு எதுவும் நியாபகம் இல்லையா....அப்புறம் எப்படி இது சாத்தியம்...
    அத்தியாயம் 10 பத்மினியை சூப்பர்மார்கட்டுக்கு அழைத்து செல்லும் பொழுது "அண்ணி உங்க கூட முக்கியமான விஷயம் பேசணும். உங்களுக்கு எப்போ லீவு" என்று கேட்டான் சர்வேஷ். இரவில் வீட்டுக்கு வரும் பத்மினி வீட்டுக்குள் சென்றால் மீண்டும் அவளை காலையில் வேலைக்கு செல்லும் பொழுதுதான் காண முடியும். சர்வேஷும் வந்த அன்றிலிருந்து பார்கின்றான் பத்மினி லீவு எடுக்கவே இல்லை....

    IAS 21 1

    0
    இவன் 'ஆதி' சிவன் 21 அப்படியே அமர்ந்திருந்தார் ஆதிசங்கர். பூரணி சொன்ன வார்த்தைகள் கேட்டு அமர்ந்தவர் தான். பேச்சு இல்லை. தலை கீழே குனிந்திருக்க, கைகள் கட்டப்பட்டு அமர்ந்திருந்தார். நிமிடங்கள் நகர, அசைவில்லை.  “நான் நீங்க சொன்னீங்கன்னு அம்பைகிட்ட பேசினேன், ஆனா அம்பை மனசுல சிவனேஷ்வரன் தான் இருக்கார். ரொம்ப உறுதியா இருக்கா, அவன்.. அவர் சிவனேஷ்வரனுக்கும்...

    IAS 19 1

    0
    இவன் 'ஆதி' சிவன் 19 விடியற்காலை போல தான் அம்பை தூங்க சென்றதே. இரவு சிவனேஷ்வரனை கண்டுபிடித்து, அவனை ஹாஸ்பிடலில் சேர்த்து சிகிச்சை அளித்து, பிரபாகரன் குடும்பம் வந்த பிறகு கிளம்பி வந்து வீடு சேரவே விடியற்காலை தான்.  மனதில் பிரபாகரன் பேச்சினால் உண்டான சஞ்சலம் இருந்தாலும், ஏற்று கொள்ளும் பக்குவத்தில் தான் இருந்தாள் பெண். ‘இல்லாததை...
    அத்தியாயம் 9 கதிர்வேல் பத்மினியை காதலிப்பது அவன் பாடும் பாடல்களிலும், பேசும் பேச்சிலும் மட்டுமல்ல அவளோடு போடும் சண்டையில் கூட சர்வேஷுக்கு நன்றாகவே புரிந்தது. "ஆம் உன்னை காதலிக்கிறேன்" என்று பத்மினியிடம் தன்னுடைய காதலை ஒத்துக்கொள்வதில் இவனுக்கு என்ன பிரச்சினை? கல்யாணத்து முந்தைய இரவு ரமேஷ் இரண்டு பேக் மட்டுமே குடித்திருப்பான் என்பதும் சந்தேகம் தானே. பாதை மாறி...
    காதல் வானவில் 35 1 வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது அந்த பெரிய திருமண மண்டபத்தின் நுழைவாயில்.மண்டபத்தின் நுழைவாயிலில் அழகான வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்ட வானவில் போல அரைவட்ட வடிவிலான டூம்கள் அமைக்கப்பட்டிருந்தது.மண்டபத்தின் அமைப்பும் வானவிலை போலவே பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.மலர்களின் நடுவே ஒரு ராஜாவை போல் அமர்ந்து மந்திரங்களை ஓதி திருமண சடங்குகளை செய்து...
    அத்தியாயம் 8 சிறிசேன முதலாளியின் கடையிலிருந்து கிளம்பிய கதிர்வேல் சென்றது கொஞ்சம் மலைப்பாங்கான பகுதிக்கு. மழை வேற தூர ஆரம்பித்திருந்தது. சர்வேஷ் அங்கு சென்றால் கதிர்வேல் ஒரு வீட்டின் முன் நின்று சின்ன சின்ன கற்களை பொறுக்கிக் கொண்டிருந்தான். அந்த வீடோ தெருவிலிருந்து பள்ளத்தாக்கில் கட்டப்பட்டிருக்க, கூரைதான் தெருவுக்கு தெரிந்தது. எதுக்கு இங்கே வந்தோம்? அண்ணன் எதற்காக கற்களை பொறுக்கிக்...
    காதல் வானவில் 34 அந்த நீளவரவேற்பறையில் குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவிற்கு நிசப்தமாக இருந்தது.தன் தலையை தாங்கியபடி அமர்ந்திருந்தவனின் முகம் சாந்தமாக இருந்தாலும் மனதிற்குள் புயல் சுழன்றடித்துக் கொண்டிருந்தது கொண்டிருந்தது.ஒரு கரையில் அன்னையும்,மறுகரையில் தன் உயிரானவளயும் நிறுத்தியிருக்க,மனது இரண்டு பேரும் ஒன்று சேர்ந்துவிடமாட்டார்களா என்றுதான் ஏங்கி தவித்துக் கொண்டிருந்தது.அதிலும் இன்று யாருமற்றவள் போல்...
         ஹர்ஷா வசுந்தராவை திரும்பியும் பார்க்காது மேலே அவன் அறைக்கு செல்வதை வலியோடு பார்த்திருந்தாள் வசுந்தரா.      தன் பிள்ளை தன்னை அம்மாவாக ஏற்றுக் கொள்வானா என அந்த தாயுள்ளம் தவித்து தான் போனது.      ஹர்ஷா அவன் அறைக்கு சென்று கிட்டதட்ட ஒரு மணி நேரம் கழித்து அனு கீழே வந்தாள். எல்லோரும் அவள் மேலே...
         "ஹர்ஷா நடந்ததை யாராலும் மாத்த முடியாது. அதனால எல்லாரும் மனசை தேத்திக்கோங்க. இதை தவிர என்ன சொல்றதுனும் எனக்கு தெரியலை. நான் வரேன்" என்றான் கதிர்.      அவனுக்கு நிஜமாகவே அதை தவிர வேறு என்ன கூற வேண்டும் என்று தோன்றவில்லை. கணபதியை அழைத்து சென்றதும் எல்லாரிடமும் சொல்லிவிட்டு கதிரும் கிளம்பிவிட்டான்.      விஸ்வநாதன் தன்...

    மகா நடிகன்-7

    0
    அத்தியாயம் 7 நல்லதம்பிக்கு கட்டிடம் கட்டும் வேலையை தவிர வேறு வேலை பிடிக்கவில்லை. அறையை கட்டி முடித்த கையேடு சர்வேஷ் சரோஜாவிடம் "அம்மா கொட்டகை இருக்குற இடத்துல ஒரு மாடன் கிட்ச்சன் கிராமத்து வாசனையோடு கட்டலாமா?" என்று கேட்டான். "கொட்டகைள கைவச்ச கொன்னுடுவேன்" என்றவாறே வந்தான் கதிர்வேல். "என்ன அண்ணா... நீங்க. நல்லதம்பி மாமாவை சிறிசேன முதலாளி கடைல...

    மகா நடிகன்-6

    0
    அத்தியாயம் 6 ஞாயிற்றுக்கிழமை காலை எட்டு மணிக்கே சர்வேஷும் செல்வாவும் சரோஜாவின் வீட்டு வாசாலில் நின்றிருந்தனர். பத்மினியும் வேலைக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தாள். இன்று ஞாயிற்றுக்கிழமை கதிர்வேல் வீட்டில் இருப்பானோ? வெளியே கிளம்பி விடுவானோ? அவன் வெளியே செல்ல முன்பாக வர வேண்டும் என்பதுதான் சர்வேஷின் ஆசையும். "அக்கா... அக்கா... இருக்கியா?" நல்லதம்பி சரோஜாவை அழைத்தவாறே உள்ளே...
    காதல் வானவில் 33 2 “ஏய்....ஓஓஓ.....நம்ம பிளான் சக்‌ஸஸ் மிஸ்டர்.வெயிட்......யாஹூ.....ஏய்....ஐ ம் ஹாப்பி.....”என்று விஜயை மிருணாளினியை தோளில் அழுந்த பற்றிக் கொண்டு கத்த, “யா யெங் மேன்.....வி வின்....வி வின்....”என்று விஸ்வநாதனும் விரல்களை மடக்கி காட்டி தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்.இவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டு நின்ற மற்ற அனைவரும் குழம்பி போய் இருவரையும் மாற்றி பார்த்தனர்.இதில் முதலில்...
         "என்ன கதிர் சொல்றீங்க?" என்ற விக்ரமிற்கே பேச்சு வரவில்லை என்றால் மற்றவர்கள் நிலையை சொல்லவும் வேண்டுமா.      "இருங்க விக்ரம். நான் இங்க சொல்ல ஒன்னுமே இல்ல. சம்மந்தப்பட்ட எல்லாரையும் எதுக்கு இங்க வரவச்சிருக்கோம். அவங்கள அவங்க வாயாலேயே சொல்ல வைக்க தானே" என்று விக்ரமிடம் பேசியவன்      "நீங்க சொல்லுங்க கணபதி சார்....
         விபத்தில் அடிபட்ட ராஜாராமையும் மயங்கி விழுந்த வசுந்தராவையும் அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்து விட்டனர். ஆனால் விதி அங்கே சதி செய்துவிட்டது.      ஆம் ராஜாராம் ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்க, வசுந்தரா வேறொரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள்.      அதில் கொடுமை என்னவென்றால் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலே ராஜாராமின் உயிர் அவர் உடலை விட்டு...
    error: Content is protected !!