Tamil Novels
அத்தியாயம் –13
எல்லோரும் கார்த்திக் என்ன சொல்லப் போகிறான் என்று அவனையே பார்த்துக் கொண்டிருக்க அவனோ மனமார நிரஞ்சனை திட்டிக் கொண்டிருந்தான்.
அவன் பதிலுக்காய் அவனை ஒவ்வொருவராய் பார்க்க “இல்லை... அது வந்து... ரெண்டு பேரும் பீல்ட் அப்படி... எப்போ அவங்க ஒண்ணா சந்திச்சாலும் அவங்களுக்குள்ள சண்டை தான் வருது...”
“அதை... அதை தான் அவன் சொல்லிட்டு...
அத்தியாயம் - 1
கௌஷல்யா சுப்ரஜா ராமா பூர்வா சந்தியா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட்ட நர ஷார்தூலா கர்த்தவ்யம் தெய்வமாநிகம்
உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த உத்திஷ்ட கருடத்வஜ
உத்திஷ்ட கமலாகாந்தா த்ரிலோக்யம் மங்களம் குரு
என்ற வெங்கடேச சுப்ரபாதம் அதிகாலை நேரத்தில் திருப்பள்ளியெழுச்சியாய் பக்தி மணம் பரப்ப பொங்கி வந்த பாலை கண்டு அடுப்பை மெல்ல அணைத்தாள் மனோ.
அவளின் குழந்தை அபராஜித் தொட்டிலில் உறங்கிக்...
அத்தியாயம் –11
நிரஞ்சன் அவளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியில் வந்தான். “சஞ்சு நீ ஏன் இப்படி இருக்க??” என்றான் குரலில் மெலிதான கோபத்துடன்.
“எப்படி இருக்கேன்னு தெரிஞ்சுதானே உங்களுக்கு என்னை பிடிச்சுது... கொஞ்சம் பூசினா போல இருந்தா இப்படி தான் என்னை கிண்டல் பண்ணுவீங்களா???” என்று அவனை முறைத்தாள்.
திரும்பி அவளை நன்றாகவே முறைத்தான் நிரஞ்சன். “எதுக்கு...
பந்தம் – 1௦
நான்கு வருடங்கள் கழித்து...
அதிகாலை நேரம். பொழுது புலர்வதை உணர்த்துவது போல் கீழ் வானம், வர்ண ஜாலங்கள் காட்ட, புல்லினங்கள் இசை பாட, மெல்ல மெல்ல சூரியன் தன் கரங்களை விரித்து உலகை அணைத்துக்கொள்ள தொடங்க,
“உம்மி.... உம்மி...” என்று உறக்கத்தில் விழித்த மகனை சமாதானம் செய்துகொண்டு இருந்தாள் உமா.
அப்படியே தந்தை...
அத்தியாயம் –9
அருகில் யாரோ அழைக்கும் சத்தம் சளசளவென்று கேட்க நல்ல தூக்கத்தில் இருந்த மயில்வாகனனின் தூக்கம் கலைய ஆரம்பித்தது. கண் விழித்து யாரென்று பார்க்க விமானப் பணிப்பெண் சீட் பெல்ட் போட சொல்லிக் கொண்டிருந்தாள்.
‘ச்சே... இவ்வளவு நேரம் கண்டது எல்லாம் கனவா...என்னமோ நிஜமாவே நடந்த மாதிரியே இருந்திச்சே... என்ன நடக்குது இங்க... இதுவரைக்கும் எனக்கு...
பந்தம் - 9
“உம்ஸ்..... என்ன தான் டி பண்ற....” என்று கண்களை திறக்காமல் கட்டிலில் இருந்தபடி கத்தியவனுக்கு, அவளிடம் இருந்து பதிலே இல்லை.
“உம்ஸ்....” என்று மீண்டும் கத்தினான். இப்பொழுது அமைதி மட்டும் தான் பதிலாய் வந்தது.
கண்களை மெல்ல கசக்கி விட்டு, திறந்து பார்த்தவனின் விழிகள் தங்களின் அறையை அலச, உமா அங்கிருப்பதற்கான எவ்வித...
அத்தியாயம் 2 :
இறுக்கமான முகத்துடன் ரிஷி முன்னால் சென்று கொண்டிருக்க.... அவனை எதிர்நோக்கும் திறன் அற்றவளாய் அவனை பின் தொடர்ந்து சென்றாள் அபிராமி.
"யாரென்று தெரியாத ஒரு இளம் பெண்....அதிலும் ஒரு அழகான பெண்....முன்னப் பின்ன பார்த்திடாத என்னை ஏன் அணைக்க வேண்டும்.....? "
"கொஞ்சமும் பயமில்லாமல் என்னுடன் ஏன் வர வேண்டும்...?இவள் இங்கு எப்படி வந்தாள்...?"...
அத்தியாயம் 1:
குளிர்ந்த காற்று தேகங்களிடையே சிலிர்ப்பை ஏற்படுத்த.....கண் பார்வை படும் இடமெல்லாம் பசுமையும் குளுமையுமாய் நிறைந்து காணப்பட...அடர்ந்த மரங்களும்,காடுகளுமாய் ....தேயிலை மரங்கள் வானுயர்ந்து நிற்க....மொத்த அழகையும் தன்னுள் அடக்கிக் கொண்டு சில்லென்று காணப்பட்டது நீலகிரி மாவட்டம்.
கொண்டை ஊசி வளைவுகள் அதிகம் காணப்படும்... உதக மண்டலம் என்று அழைக்கப்படும் ஊட்டி மலை ரோட்டில் அமைதியுடன் வளைந்து...
அத்தியாயம் –7
“என்னை மட்டுமே கொன்னியே, இதோ இங்க இன்னொருத்தி வந்திருக்கா இவளை மட்டும் சும்மா விட்டிருக்க” என்று அரூபமான அருண் கேட்க சஞ்சு ‘இதென்னடா புதிதாக, நம்மை வைத்து ஒரு விளையாட்டு’ என்று எண்ணினாள்.ஏற்கனவே மரணபீதியில் இருப்பவளை கண்டு அவன் பேசியது வேறு அவளை மொத்தமாக கலங்கச் செய்தது.
வேறு யாரும் இருக்கிறார்களா என்று...
பந்தம் - 8
“கோடி... நீ பண்றது கொஞ்சம் கூட சரியில்ல டா.. அந்த பொண்ணு ஏற்கனவே குழம்பி இருக்கா.. நீ ரொம்ப விளையாடுற.. வேற ஒரு பொண்ணா இருந்திருந்தா இந்நேரம் கல்யாணமே பண்ணிட்டு போயிருப்பா..” என்று அவனை திட்டியது அவன் அம்மா தான்.
அவருக்கு எல்லாம் தெரியும்.
உமா வந்து போன மறுநாளே அனைத்தையும் சொல்லிவிட்டான்....
அத்தியாயம் –5
“அஞ்சு நான் ஊருக்கு போறேன், எதுவும் சேதி இருக்கா??” என்று அஞ்சனாவை பார்த்து கேட்டாள்.
“என்ன சேதி சொல்லணும் உன்கிட்ட... யாருக்கு சேதி சொல்ல சொல்ற”
“மாமாவுக்கு... உன்னோட மாமாவுக்கு எதுவும் சேதி இருக்கா... இல்லை எதாச்சும் கூரியர் டெலிவர் பண்ணணுமா சொல்லும்மா... ப்ரீ சர்வீஸ் பண்ணி தரேன்” என்று வம்பிழுத்தாள் அவள்.
“வேணாம்டி என்னை வெறுப்பேத்தாம...
பந்தம் – 7
கோடீஸ்வரனுக்கு மனம் ஆனந்த கடலில் மூழ்கி திக்குமுக்காடி போயிருந்தது. உமா தன் காதலை ஏற்றுக்கொள்வாள் என்று அவனுக்கு நம்பிக்கையிருந்தாலும், அவள் மனதிலும், தனக்கு இருப்பது போல் அதே உணர்வுகள் இருக்கிறது என்று தெரியவும் இன்னும் பூரித்து போனான்.
தானாக காதலிப்பது வேறு, காதலை ஏற்றுகொள்வது வேறல்லவா??
உமா, அவனது காதலை ஏற்றுக்கொண்டாளோ இல்லையோ,...
பந்தம் – 6
ஒருசில விஷயங்கள் நாம் நல்லதற்கு செய்தாலும், அதன் விளைவுகள் நமக்கு நல்லதாய் அமையாது. பலன் சுசிக்கு பாவம் உமாவிற்கு. அதுபோல தான் ஆனது உமாவிற்கும். சுசியின் காதலுக்கு உதவப்போக அது அவளுக்கே வினையாய் வந்து முளைத்தது.
எப்பொழுதும் உமா செய்யும் அனைத்திற்கும் துணையாய் இருந்த அவள் அம்மா, இந்த விசயத்தில்...
அத்தியாயம் –3
கமிஷனர் அலுவலகத்தின் உள்ளே ஒரு பதட்டத்துடன் நுழைந்தாள் சஞ்சனா. ஏற்கனவே ஒரு போலீஸ் என்னை வறுத்தெடுத்தான். இங்க ஒரு போலீஸ் பட்டாளமே இருக்கு என்ன நடக்கப் போகுதோ என்ற பதட்டம் தான் அவளுக்கு.
இருந்தாலும் தன்னை தைரியமாக காட்டிக் கொண்டு உள்ளே சென்று புதிதாக வந்திருக்கும் அசிஸ்டெண்ட் கமிஷனரை பார்க்க வேண்டும் என்று சொல்ல...