Sunday, April 20, 2025

    Mercuriyo,,, Mennizhaiyo...

    அத்தியாயம் - 7     யாழினியுடன் சபரீஷ் அவளின் வீட்டிற்கு பயணப்பட்டான். அவனின் மாற்றம் நிகழப் போகுமிடம் அது என்பதை அறியாதவனாய் எப்போதும் போல் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டே அவளுடன் பயணப்பட்டான்.     யாழினியின் உடன்பிறந்த தமக்கை இலக்கியாவும் அவள் கணவர் அகிலும் அவர்களின் செல்ல மகள் ஆராத்யாவும் கூட அவர்களை வரவேற்கவென வந்திருந்தனர்.     யாழினி ஆராத்யாவை கண்டதும்...
    அத்தியாயம் - 6     யாழினியை ஊருக்கு கிளம்ப தேவையானவற்றை எடுத்து வைக்கச் சொல்லி விட்டு அவன் நேரே சென்றது எஸ்டி மருத்துவமனைக்கு தான். காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு அவன் உள்ளே நுழையவும் அவனை முன்னமே அறிந்திருந்தவர்கள் அவனுக்கு மரியாதை செலுத்த அவனும் தலையசைத்து அதை ஏற்றவாறே உள்ளே சென்றிருந்தான்.     அனீஷின் அறைக்கு அவன் செல்ல முனைய வரவேற்ப்பில்...
    அத்தியாயம் - 5     மாத்திரையின் உதவியால் உறங்கியிருந்த யாழினி மாலையில் கண்விழிக்க சற்றே தெம்பாய் உணர்ந்தாள். எழுந்து குளியலறை சென்றவள் ஹீட்டரை ஆன் செய்து சுடுநீரில் ஒரு குளியலை போட உடலில் மிச்சமிருந்த அலுப்பும் எங்கோ பறந்தோடியது போல் உணர்ந்தாள்.     சபரீஷ் வந்துவிடுவான் என்று எண்ணியவள் பளிச்சென்ற நிறத்தில் ஒரு சேலையை எடுத்து உடுத்தினாள். அவர்கள் அறையில்...
    அத்தியாயம் - 4     ஆராதனா அவர்கள் அறையை சுத்தப்படுத்திக் கொண்டிருக்க சட்டென்று பின்னால் இருந்து அவளை அணைத்தான் அனீஷ். ஒரு நிமிடம் பயத்தில் உறைந்தவளுக்கு அது கணவனென்று புரிய இயல்பு நிலைக்கு திரும்பினாள்.     “என்ன பண்ணுற ஆரா??” என்றவன் அவளை வேலை செய்ய விடாமல் அவள் கழுத்தில் முகம் பதித்து அவள் கன்னத்தில் முத்தம் பதித்தான்.     “வேலை...
    அத்தியாயம் - 3     எப்போதும் போல் அதிகாலையிலேயே விழிப்பு வந்துவிட்டது ஆராதனாவிற்கு.முதலில் தான் எங்கிருக்கிறோம் என்ற புரியாமல் அலங்க மலங்க விழித்தவளின் பார்வை அருகிருந்தவனை பார்த்ததுமே சகலமும் நினைவிற்கு வர ஒரு சிரிப்புடன் எழுந்து குளியலறை நோக்கிச் சென்றாள்.     குளித்து முடித்து வெளியில் வந்தவள் அவர்கள் அறையில் இருந்து வெளியே வர வெளியே இன்னமும் யாரும் விழித்திருக்கவில்லை....
    அத்தியாயம் - 2     யாழினியை பார்த்து தைரியமாக புன்னகைத்து அவளுக்கு தெம்பூட்டிய ஆராதனாவிற்கு உள்ளே செல்லவே கால்கள் வரவில்லை. தன்னை தைரியமாக காண்பித்துக் கொண்டு ஒருவழியாக அறைக்குள் நுழைந்து விட்டாள்.     அனீஷோ அலங்கரித்த கட்டிலில் அமர்ந்துக் கொண்டு கையில் இருந்த கைபேசியில் எதையோ நோண்டிக் கொண்டிருந்தான். அறைக்கதவு திறக்கும் சத்தம் கேட்டு நிமிர்ந்தவன் அவளையே வைத்த கண்...
    அத்தியாயம் - 1     கோயம்புத்தூரில் இருந்த மிகப்பெரிய திருமண மாளிகை கொடிசியா ஹால், பிரமாண்டமான அம்மண்டபம் விழாக் கோலம் பூண்டிருக்க அந்த அந்தி மாலை வேளையில் அந்த இடமே ஒளிர்ந்து கொண்டிருந்தது.     வாசலில் மணமக்களின் பெயர்களை தாங்கிய பலகை ஒன்றில் மணமகனாய் அனீஷ் மணமகளாய் ஆராதனாவின் பெயரும் மற்றொரு பலகையில் மணமகனாய் சபரீஷ் மற்றும் மணப்பெண்ணாய் யாழினியின்...
    error: Content is protected !!