Mercuriyo,,, Mennizhaiyo...
அத்தியாயம் - 27
நித்யாவிடம் தான் அங்கு வருவதாக பேசிவிட்டு போனை வைத்தவன் நடந்துக் கொண்டிருந்த கலந்துரையாடலை வேறு ஒரு மருத்துவரை கூப்பிட்டு பார்க்க சொல்லிவிட்டு டிராவல்ஸ்க்கு போன் செய்து மங்களூருக்கு டிக்கெட் பதிவு செய்தான்.
பதினொன்று இருபதுக்கு அவனுக்கு பெங்களூர் செல்ல விமானத்திற்கு பதிந்திருக்க மருத்துவமனையில் இருந்து நேராக விமான நிலையம் சென்றவன் போகும் வழியிலேயே...
அத்தியாயம் - 26
அனீஷ் எதை நினைத்து சுனீஷிடம் பேசினானோ அது அவன் எண்ணியது போலவே நடந்தது. கோபத்தில் அறிவு வேலை செய்யாது என்பது எவ்வளவு உண்மை என்பதை அக்கணம் அவன் உணர்ந்தான்.
அவள் மேல் கோபத்தில் இருந்தவனால் அடுத்து அவள் என்ன செய்வாள் என்பதை யோசிக்க முடியாமல் அவன் கவனம் முழுதும் அவள் பேசிய பேச்சிலும்...
அத்தியாயம் - 25
வீட்டிலிருந்து கிளம்பிய ராஜீவனுக்கு இன்னமும் குற்றவுணர்சியாகவே இருந்தது. அந்த பெண்ணிடம் ஒரு மன்னிப்பை கூட சொல்ல முடியவில்லையே என்று.
பேருந்தை பிடிக்க மெதுவாய் அவர்கள் வீட்டிலிருந்து எட்டி நடைப்போட்டவன் பிரேக் பிடித்தார் போன்று அந்த இடத்திலேயே நின்றான். அங்கிருந்த பார்க் ஒன்றில் நித்யா அமர்ந்திருப்பது கண்ணில் விழுந்து அவனின் நடையை தடை...
அத்தியாயம் - 24
“அண்ணா” என்று அழைத்துக்கொண்டு ராஜீவனின் தோளில் சாய்ந்து அழுதுக்கொண்டிருந்தாள் ஆராதனா. மதுவோ இருவரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஒருவாறு தன்னை சுதாரித்துக்கொண்டு “அண்ணா உள்ள வாங்க, அக்கா உள்ள வந்து பேசுங்க” என்று அழைக்கவும் இருவருமே உள்ளே வந்தனர்.
“நீங்க பேசிட்டு இருங்க நான் அண்ணாக்கு சாப்பிட ஏதாச்சும் கொண்டும் வர்றேன்” என்று...
அத்தியாயம் - 23
சபரி முகத்தை தூக்கி வைத்திருந்தான். விஷயம் பெரிதாய் ஒன்றுமில்லை யாழினி அந்த பிறந்தநாள் விழாவின் தலைவி பேபி யஷ்வினிக்கு நச்சென்று கொடுத்த இச் தான் அவனுக்கு பொறாமையை தோற்றுவித்து முகத்தை தூக்கி வைக்க வைத்தது.
விழாவிற்கு வந்த போது இருந்த கலகலப்பு போகும்போது கணவனின் முகத்தில் இல்லாதிருந்ததை அப்போது தான் யாழினி கவனித்தாள்....
அத்தியாயம் - 22
கடைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்த சபரிக்கு யாழினி எதற்காக அழுகிறாள் என்றே புரியவில்லை. ‘நான் எதுவுமே செய்யவேயில்லையே இப்போ எதுக்கு இவ அழுத்துட்டு இருக்கா??’
‘நாம பேசினது நினைச்சு நினைச்சு எதுவும் அழறாளா??ச்சே என்னடா இது’ என்று மனதிற்குள் சலித்தவன் “என்னாச்சு இப்போ எதுக்கு அழற??” என்றான் சிடுசிடுப்பாய்.
அவன் சிடுசிடுப்பு அவளுக்கு மேலும்...
அத்தியாயம் - 21
ஆராதனாவிற்கு இன்று ஸ்கேன் எடுக்கும் நாள், நேரமாகவே கிளம்ப வேண்டுமென்று மல்லிகா வந்து அவளை எழுப்பிவிட்டு சென்றார். படுக்கையில் இருந்து எழுந்தவளுக்கு இதற்கு முன் ஸ்கேன் செய்த அன்று அனீஷ் செய்த ஆர்ப்பாட்டம் கண் முன் வந்து போனது.
தான் குழந்தை உண்டானதில் இருந்து அவனுக்கு தான் எவ்வளவு சந்தோசம் எவ்வளவு ஆனந்தம்,...
அத்தியாயம் - 20
அனீஷின் பேச்சை கேட்டபின் சபரி மாறினானோ!! தன்னை மாற்றிக்கொண்டானோ!! அறியேன்!! யாழினி மாறினாள்!! தன்னை மாற்றிக் கொண்டாள்!!
இது பெண்களின் உணர்வு தன்னை புரிந்துகொள்ளாமல் மேலும் மேலும் காயப்படுத்தவோ வருத்தவோ செய்பவர்களிடம் ஒதுங்கி போவார்கள் என்பதை காட்டிலும் அவர்களை ஒதுக்கி போவார்கள் என்றே சொல்ல வேண்டும்.
யாழினி சபரியின் விஷயத்தில் அவன் பேசுவதை ஒதுக்கி...
அத்தியாயம் - 19
ராஜீவனுக்கு ஆராதனாவின் மேல் கோபம் கோபமாக வந்தது. ‘இவளுக்கு கோபம் வந்தால் இப்படி தான் போவாளா?? யாரை பற்றியும் இவளுக்கு கவலையே கிடையாதா?? என்ற கேள்வியும் ஆயாசமும் வந்தது அவனுக்கு.
ஆராதனாவின் மேல் எந்தளவுக்கு கோபமிருந்ததோ அதே அளவு கோபம் அவனுக்கு சபரீஷின் மீதும் இருந்தது. ஆராதனா செய்ததற்கு யாழினி என்ன செய்வாள்....
அத்தியாயம் - 18
அனீஷ் கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து வெளியில் வந்தவன் அப்போது தான் அவன் கைபேசியை உயிர்பித்தான். கிளம்பும் அவசரத்தில் ஆராதனாவை அவளின் தாய் வீட்டிற்கு அழைத்து செல்ல சொல்லி ராஜீவனுக்கு சொல்ல மறந்திருந்தான்.
அவன் கைபேசி உயிர்பெறவும் அவனுக்கு அழைப்பு வர ஆரம்பித்தது. அதில் தெரிந்த எண்ணை பார்த்தவன் பொத்தானை அழுத்தி இயல்பாய்...
அத்தியாயம் - 17
ஆராதனா அவள் கையில் இருந்த காசை எடுத்து பார்த்தாள், தான் செய்யப் போவது சரி தானா என்று மனதிற்குள்ளாகவே பலமுறை கேட்டுக் கொண்டாள்.
எத்தனை முறை கேட்டாலும் அவள் மனது சொன்ன பதில் ஒன்றே ஒன்று தான். முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார் என்பதிற்கேற்ப ஒரு நல்ல விஷயத்திற்காக எடுக்கப்படும் முயற்சியானது தவறானதாகாது என்பதை உறுதியாய்...
அத்தியாயம் - 16
ஆராதனாவுக்கு அந்த விஷயத்தை நினைத்து அதிக நேரம் சந்தோசப்பட முடியவில்லை. கொண்டவன் துணையிருந்தால் எதையுமே சமாளிக்கலாம் ஆனால் இப்போதோ இருவருமே இரு வேறு திசையில் அல்லவா நிற்கிறார்கள்.
இதை முதலில் யாரிடம் சொல்வது என்று யோசனை செல்ல கொஞ்சம் கூட தாமதியாது அவள் உள்ளம் சொன்னது முதலில் உன் மணாளனிடம் கூறு என்று....
அத்தியாயம் - 15
அனீஷும் அவளும் சரியாக பேசி ஒரு வாரத்திற்கும் மேல் ஆகிவிட்டது. அவளாக சென்று பேசினாலும் அவன் சரியாக முகம் கொடுத்து பேசுவதில்லை.
அவனுக்கும் அவளுடன் பேச வேண்டும் என்று தோன்றினாலும் அவனால் சபரீஷிடம் சென்று அவள் பேசியதை மட்டும் மறக்க முடியவில்லை, மன்னிக்கவும் முடியவில்லை.
‘நான் அவள் கணவன் என்னிடம் என்ன பேச...
அத்தியாயம் - 14
மருத்துவமனையில் இருந்த அனீஷுக்கு ஆராதனாவின் செயல் குறித்து பெருங்கவலை தோன்றியது. அவள் சாதாரணமான ஒரு விஷயத்தை தேவையில்லாமல் பெரிதாக்குவதாய் பட்டது அவனுக்கு.
அவனை பொறுத்தவரை அது சாதாரண விஷயமே, அது சரியென்ற எண்ணமே அவனுக்கு இருந்தது. இதுவரை இப்படி பெரிதாக அவன் எதற்கும் வருந்தியதில்லை. ஒரு வேளை ஆராதனா காரணம் என்பதாலா?? என்பதை...
அத்தியாயம் - 13
அனீஷ் மருத்துவமனை கிளம்பிச் சென்றுவிட அவன் மனைவி அவன் பேசியதை நினைவு கூர்ந்தாள். ‘ஒருவேளை நாம் தான் தேவையில்லாமல் குழப்புகிறோமோ?? எனக்கென்ன குறை நன்றாகத் தானே பார்த்துக் கொள்கிறார்’
அனீஷ் சொல்வது போல் அவளிடத்தில், அவன் அவளிடம் நடந்து கொள்ளும் முறையில் எதிலுமே அவனை குறை சொல்வதென்பது முடியாது. ஆனாலும் அவளால் இந்த...
அத்தியாயம் - 12
ஆராதனாவின் மனதில் என்ன விதமான உணர்வு தோன்றுகிறது என்று அவளாலேயே கணிக்க முடியவில்லை. அவளின் இந்த உணர்விற்கு காரணம் வேறு ஒன்றுமல்ல தொலைக்காட்சியில் ஓடிய சில நிமிட விளம்பரப்படமே.
விளம்பரங்களை வெறுப்பவளில்லை அவள், ஆனால் அதில் அதிகம் விருப்பும் கொண்டவளில்லை. தலையில் கை வைத்து அமர்ந்தவளுக்கு தலையை வலிப்பது போல் இருந்தது.
அவளின் தலைவலிக்கான...
அத்தியாயம் - 11
“நாங்க இதுல பண்றதுக்கு என்ன இருக்கு சார். அவ நல்லா படிக்கற பொண்ணு ஏன் இப்படி லவ்ன்னு எல்லாம் ஆரம்பிச்சுட்டான்னு தெரியலை. அவங்க கிளாஸ் மிஸ் அந்த ரெகார்ட் நோட் பார்க்கலைன்னா எங்களுக்கும் விஷயம் தெரிஞ்சிருக்காது”
“அவளை கூப்பிட்டு அந்த லவ் லெட்டர் பத்தி கேட்டா ஆமா லவ் பண்றேன்னு சொல்றா. சம்மந்தப்பட்ட...
அத்தியாயம் - 10
மதுமிதாவிடம் பேசிவிட்டு போனை கீழே வைத்த ஆராதனாவை இப்போது குழப்பமே சூழ்ந்தது. சுனீஷிடம் இப்போது மதுவை பற்றி பேசலாமா?? வேண்டாமா?? என்ற குழப்பம் வேறு வந்தது!!
தற்சமயம் இது குறித்து எதுவும் பேச வேண்டாம் என்று எண்ணியவள் அந்த சிந்தனையை சற்று ஒதுக்கினாள். சுனீஷுக்கும் அவன் அண்ணன்களுக்கும் எதனால் பிரச்சனை வந்திருக்கும் என்று...
அத்தியாயம் - 9
“மதுமிதா...” என்று அவன் சொன்ன பெயரை அவளும் வாய்விட்டு சொல்லிக்கொண்டு அவள் மொபைலில் இருந்த அவள் எண்ணை அந்த பெயர் கொண்டு பதிவு செய்து வைத்தாள்.
“அந்த பொண்ணு யாரு??” என்று அடுத்த கேள்வி கேட்டாள் ஆராதனா.
“அவங்க அம்மா தான் எனக்கு இப்போ சமைச்சு கொடுத்திட்டு இருக்காங்க. நான் தங்கியிருக்க வீட்டு பக்கத்துல...
அத்தியாயம் - 8
புலர்ந்தும் புலராத காலைப்பொழுதில் குளித்து முடித்து கண்ணாடி முன் நின்று தலைவாரி தன்னை லேசாய் அலங்கரித்துக் கொண்டவள் திரும்பி அருகிருந்த கட்டிலை பார்க்க அனீஷ் இன்னமும் உறங்கிக் கொண்டிருப்பது கண்ணில் பட்டது.
அவனருகில் சென்று உறங்கும் அவனின் கன்னக்குழியை ஆசை தீர தொட்டவள் அவனை எழுப்ப முனைய அனீஷோ அவளை இழுத்து தன்...