Puthiya Uthaiyam
புதிய உதயம் -9
அத்தியாயம் -9(1)
“என்ன ராஜாம்பா… காலங்காத்தால கோயிலுக்கு போயிட்டு வந்திருப்ப போலயே, நெத்தியில இவ்ளோ பெரிய பட்டைய போட்ருக்க. வா வா ஒரு செல்ஃபி எடுப்போம்” பாட்டியின் தோளில் கை போட்டு புகைப்படம் எடுத்தான் ஜனா.
“என்னடா போன் புதுசா இருக்கு, பழசுக்கு என்ன கேடு வந்துச்சுனு இப்போ இது?”...
அத்தியாயம் -8(2)
எதற்காக வந்தேன் என ஜனா சொல்லவும் மறுத்தாள் ஸ்ரீ.
ஜோதியே மகளை கண்டனமாக பார்த்தார்.
“படிக்கன்னு வேலையை விட்டுட்ட சரி, உதவின்னு கூப்பிடும் போது போகலைனா நல்லா இருக்காது ஸ்ரீ. நாம அவங்களுக்கு செஞ்சு கொடுக்க கடமை பட்டவங்க” என்றார் ஜோதி.
ஸ்ரீ யோசனையாக இருக்க, “ஹையோ அத்தை! இந்த கடமை...
புதிய உதயம் -8
அத்தியாயம் -8(1)
தன்யஸ்ரீ வேலையை விட்டு சென்று விட்டாள் என அறிந்ததுமே ஜெய்க்கு கட்டுக்கடங்காத கோவம் வந்தது. உன்னை எப்படி வரவழைக்கிறேன் பார் என அவன் கறுவ ஜம்புலிங்கம் அழைத்து விட்டார்.
அதற்குள் அவரிடம் சொல்லி விட்டாளா என்ற நினைப்போடுதான் பேசினான்.
இயல்பாக அவனை விசாரித்தவர், “ஸ்ரீக்கு மேல படிக்கணுமாம்...
புதிய உதயம் -7(2)
கொண்டு வந்து விட்டதற்காக அவளிடமிருந்து ‘தேங்க்ஸ்’ எனும் வார்த்தையை எதிர் பார்த்தவனுக்கு அவளின் மௌனம் கோவத்தை உண்டாக்கியது.
பைக்கின் உறுமல் சத்தம் கேட்டு திரும்பியவளின் கண்கள் கலங்கிப் போயிருப்பதை கண்டவன் பைக்கை அணைத்தான்.
“நம்மளோட பிறப்பை யாராலேயும் மாத்த முடியாது ஸார், நான் தன்யஸ்ரீ, நம்பிக்கை துரோகியோட பொண்ணுங்கிற அடையாளத்தோடதான்...
புதிய உதயம் -7
அத்தியாயம் -7(1)
இப்போதெல்லாம் ஜெய்யிடம்தான் ரிப்போர்ட் செய்கிறாள் தன்யஸ்ரீ. அவளது பெயரை திரையில் கண்டாலே எரிச்சலோடுதான் அழைப்பை ஏற்பான்.
வேலையில் சில தவறுகள் நடக்கத்தான் செய்கின்றன. அவையெல்லாம் அனுபவம் போதாமல் நடப்பவை, திட்டிக் கொண்டேதான் திருத்தங்கள் சொல்லித் தருவான்.
அந்த நேரமெல்லாம் எதிர்த்து எதுவும் பேசாமல் பொறுமையாகவே கேட்டுக் கொள்வாள்....
அத்தியாயம் -6(2)
ஸ்ரீயின் மீதுள்ள வன்மத்தில் வேண்டுமென்றே எதுவும் தலையிடாமல் பிரச்சனையை சரி செய்யும் பொறுப்பை அவளின் தோளில் சுமத்தி விட்டு கைகளை கட்டிக் கொண்டு நின்றான் ஜெய்.
காலையில் போடப் பட்டிருந்த படிகளின் இடையில் சிறிய அளவில் சாய்தளம் அமைக்க சொன்னாள். வேறொரு சைட் சென்றிருந்த எலக்ட்ரிஷின்களை உடனடியாக வரவழைத்து திட்டினாள்.
“நான்...
புதிய உதயம் -6
அத்தியாயம் -6(1)
தன் வேலைப் பளுவை குறைக்கதான் சில பொறியாளர்களை பணிக்கு வைத்திருக்கிறான் என்ற போதும் அவர்களையே முழுமையாக நம்பி விட மாட்டான். முன் அறிவிப்பு இல்லாமல் அவர்கள் இருக்கும் சைட்களுக்கு எப்போது வேண்டுமென்றாலும் செல்வான்.
பெரிய ஒப்பந்தம் பிடிப்பதில் மெனெக்கெட்டு கொண்டிருப்பதாலும் அவனுடைய சொந்த வீடு கட்டும் பணியினாலும்...
அத்தியாயம் -5(3)
“அப்ப சின்ன பையன்ல்லக்கா நான்? பிசாத்து சாக்லேட்க்கு ஆசை பட்டு அவன் சொன்னதை செய்ய ஒத்துக்கிட்டேன். அதை இவர் பார்த்து கோவமா வாங்கிட்டு போயிட்டாரா, உங்ககிட்ட கொடுக்கலைன்னு என் முதுகுலேயே அடிச்சிட்டான் க்கா அவன்” என்றான்.
“எதையும் சரியா சொல்ல, செய்ய தெரியாதாடா உனக்கு?” சீறினான் ஜெய்.
“உன் தம்பி அந்த...
அத்தியாயம் -5(2)
ஜெய்யை எதிர்பார்க்காத சசி “என்ன சார் ஆஃபீஸ் வரமாட்டேன்னு சொல்லி இருந்தீங்களே?” என திணறலாக கேட்டான்.
“என்ன இப்போ வேணும்னா திரும்ப போயிடவா?” எரிச்சலாக கேட்டான் ஜெய்.
சசி அசடு வழிய சிரித்து வைக்க, அந்த நேரம் உள்ளே நுழைந்தாள் ஸ்ரீ.
தனக்கு காலை வணக்கம் சொன்னவளை பொருள் செய்யாமல் சசியைப்...
புதிய உதயம் -5
அத்தியாயம் -5(1)
சைட்டில் வேலை முடித்து விட்டு வீட்டுக்கு திரும்ப இரண்டு பேருந்துகளில் பயணிக்க வேண்டும் ஸ்ரீ. முதல் பேருந்தில் பயணித்து ஒரு நிறுத்தத்தில் இறங்கியவளை வரவேற்றான் அசடு வலிய சிரித்துக் கொண்டிருந்த தீபன்.
கொஞ்ச நாட்களாகவே தன்னிடம் நெருங்கி வருகிறான் இவன் என்பதை உணர்ந்து கொண்ட ஸ்ரீ இன்றே...
அத்தியாயம் -4(2)
“என்னடா நடந்து போச்சு இப்போ? அவளுக்கு கொடுத்து வைக்கல, கொடுத்து வச்ச மகராசி வேற எவளோ, அவளை எங்கேருந்தாலும் தேடிக் கண்டுபிடிக்கிறேன்னா இல்லயா பாரு” என்றார் ராஜாம்பாள்.
“சும்மா சும்மா சவால் விடுற நீ, கம்முன்னு இரு அப்பயி” என ஜனா சொல்ல, “உன்னாலதான் அப்பயி எல்லாம், யாரு உன்னை இப்ப...
புதிய உதயம் -4
அத்தியாயம் -4(1)
ஜெய்யின் பெரிய மாமாவின் பெரிய பெண்ணுக்கு நிச்சயம் நடைபெற இருக்க அதற்காக குளித்தலை புறப்பட்டது அவனது குடும்பம்.
ஜெய்யின் இரண்டாவது மாமாவும் குடும்பத்தோடு வந்திருந்தார். அவருடைய மூத்த பெண் சுரேகா இந்த வருடம் படிப்பை முடித்து விட்டாள். பார்க்க நன்றாக இருப்பாள், நன்றாக பழகக் கூடியவளும் கூட....
அத்தியாயம் -3(2)
ஜெய் யாரென விவரித்தாள் ஸ்ரீ. மஹதிக்கு பழைய வீட்டு நினைவுகள் அவ்வளவாக இல்லை. ஜெய்யை மறந்தே போயிருந்தாள், ஜனா அவளது பள்ளி என்பதால் அவனை மட்டும் நினைவிருந்தது. அக்கா சொன்னதை சுவாரஷ்யமாக கேட்டுக் கொண்டவள் அடுத்தடுத்து நிறைய கேள்விகள் கேட்டாள்.
தங்கையை சமாளித்து பேச்சை மாற்றி படிக்க அனுப்பி வைத்தாள் ஸ்ரீ....
புதிய உதயம் -3
அத்தியாயம் -3(1)
வேலைக்கு வேறு இடம் பார்த்துக் கொள்ளலாம் என தன்யஸ்ரீ நினைக்கும் போதே ஜம்புலிங்கத்திடம் இருந்து அழைப்பு வந்தது.
ஜோதி வேறு வீடு மாறிப் போன போது ஜம்புலிங்கத்தின் மனைவி ஜோதிக்கு பழக்கமானார். நல்ல வாடிக்கையாளராக இருந்த திருமதி ஜம்புலிங்கம் நாளைடைவில் நல்ல தோழியாகவும் மாறிப் போனார்.
ஜம்புலிங்கம்...
அத்தியாயம் -2(2)
புதிய கட்டுமான நிறுவனங்களுக்கு கூட வாய்ப்பு செல்லலாம் என பேச்சு அடிபடுகிறது. அந்த வாய்ப்பை அடைந்து விட முயற்சி செய்கிறான் ஜெய். ஒரு வேளை அந்த வாய்ப்பு இவனுக்கே கிடைத்து விட்டால் அவனுடைய தொழில் வாழ்க்கையில் அது அவனுக்கு நல்ல திருப்பு முனையாக அமையும்.
ஆதலால் இப்போதைக்கு தேவையில்லை என்றாலும் சமீப...
புதிய உதயம் -2
அத்தியாயம் -2(1)
‘ஜெய் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்’ திருச்சியில் இப்போதுதான் வளர்ந்து வரும் கட்டுமான நிறுவனம். தம்பி ஜனாவையும் தன்னோடு வைத்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில்தான் அவனை சிவில் இன்ஜினியரிங் படி என சொன்னான் ஜெய்.
ஏற்கனவே அண்ணனின் கெடு பிடியில் திணறிக் கொண்டிருந்த ஜனா படிப்பு விஷயத்தில் மட்டும் அண்ணனின் பேச்சை கேட்கவில்லை....
அத்தியாயம் -1(2)
ஸ்ரீக்கு தேநீர் வைக்க கூட தெரியாது. அம்மாவிடம் சென்றவள் சின்ன குரலில், “பாப்பாக்கு பசிக்கும்ல மா, டீ போட்டுத் தர்றியாமா?” எனக் கேட்டாள்.
எதுவும் சொல்லாமல் எழுந்து கொண்ட ஜோதி அழுது கொண்டே தேநீர் போட்டு வைத்தவர், “பாப்பாக்கு கொடுத்திட்டு நீயும் எடுத்துக்க” என சொல்லி மீண்டும் படுக்கைக்கு சென்று விட்டார்....
புதிய உதயம் -1
அத்தியாயம் -1(1)
திருச்சி மாநகரத்தின் முக்கிய வீதியில் அந்த அதிகாலைப் பொழுது ஏதோ ஒரு பெண்ணின் உச்ச பட்ச அலறல் சத்தம் கேட்டு பரபரப்படைந்தது.
சத்தம் கேட்டுக் கொண்டிருந்த நீல நிற பெயிண்ட் அடித்த அந்த மாடி வீட்டின் முன்பாக அக்கம் பக்கத்து வீட்டினர் கூடி விட்டனர்.
ஆறாவது படிக்கும்...