Monday, April 21, 2025

    Pirayillaa Pournami

    பௌர்ணமி 10: செந்தில் குமரன் எதுவும் தனக்குத் தெரிந்ததாக காட்டிக் கொள்ளவே இல்லை.அவனின் மூளைக்குள் யோசனைகள் ஓடிக் கொண்டே இருக்க...அந்த யோசனையில் மீனாட்சியை மறந்தான். அவனும் வம்பு செய்வானோ..? திருமண இரவை எதிர்நோக்க வேண்டுமோ..என்ற அச்சத்துடன் இருந்தவளுக்கு...அவ்வளவு நிம்மதியாக இருந்தது.அவன் அவளிடம் எதையும் எதிர்பார்க்காதது ஒரு பக்கம் நிம்மதி தான் என்றாலும்...மனதின் ஓரத்தில் ஒரு சின்ன வருத்தம் அவளறியாமல். அதற்கு அடுத்து வந்த நாட்களிலும்...அவன் அப்படியே நடந்து...
     பிறை 5: “லல்ல லல்ல லல்லலே லா....லாஆ.... லல்ல லல்ல லல்லலே லா....” என்று தாளம் போட்டுக் கொண்டே வீட்டினுள் நுழைந்தாள் மீனாட்சி. செய்த காரியத்தின் சுக துக்கம் தெரியாமல்..தன் போக்கில் சந்தோஷமாக வீட்டினுள் வந்த மீனாட்சியைப் பார்த்த தேவகிக்கு....அவ்வளவு கடுப்பு. “அம்மா..பசிக்குது..!” என்றபடி பேக்கை தூக்கிப் போட.... “நான் என்ன இந்த வீட்டு சமையல்காரியா...?” என்று தேவகி கடுப்புடன் கேட்க.... “இல்லம்மா...அப்பாவுக்கு வீட்டுக்காரி...! ஒய் இப்போ ஆங்கிரி...நான் என்ன பண்ணேன்...!”...
    பிறை 4: சேகர் இறந்து இன்றோடு இரண்டு நாட்கள் முடிந்திருந்தது.ஆனால் அந்த வீட்டில் எந்த மாற்றமும் இன்றி...அவன் இறந்த சோகம் அப்படியே இருந்தது.யாரும் யாரையும் பார்த்து பேசக் கூட பிடிக்காமல்..அழுது கொண்டிருந்தனர். மகனின் இழப்பை மின்னல் கொடியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பாண்டியராஜன் அதற்கும் மேலாக தளர்ந்து போனவராய் அமர்ந்திருந்தார். இருக்கிற அவரது சொத்துக்களுக்கு எல்லாம் அவன் ஒருவன் தானே ஆண் வாரிசு. தனது...
    பௌர்ணமி 9: வீட்டிற்கு வந்திருந்தவர்களைப் பார்த்து மீனாட்சிக்கு கொஞ்சம் அதிர்ச்சியும் ஆச்சரியமும்.அந்த நாளில் அவர்களை அவள் எதிர்பார்க்கவில்லை என்பது அவளின் முகத்தில்  இருந்தே தெரிந்தது. கோபாலனுக்கு தான் ஒன்றும் புரியவில்லையே தவிர...தேவகிக்கு நன்றாக புரிந்தது.அவர்கள் வந்திருப்பதற்கான காரணம். ராஜ்மோகனும்,செல்லமாவும் சுற்றி வளைத்து பேசாமல் நேரடியாக மீனாட்சியைப் பெண் கேட்டனர். “என்னடா இப்படி வந்து கேட்குறோம்ன்னு நீங்க தப்பா நினைக்கக் கூடாது.எங்க பையன் மீனாட்சி மட்டும் தான் அவனுக்கு மனைவியா வரமுடியும்ன்னு தீர்மானமா...
    பௌர்ணமி 8: அவளின் பதிலில் ஓராயிரம் வலிகளும்,வேதனைகளும் அடங்கியிருக்கும் என்று அவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.சில நிகழ்வுகளின் போது அவன்... சம்பந்த பட்ட இடத்தில் இருந்திருந்தால்.. தன் காதலையே காப்பாற்றி இருப்பானே..! தன் காதலையும், காதலியையும் காப்பாற்ற முடியாமல் போன அவனுக்கு மற்ற நிகழ்வுகள் எப்படி தெரியும்...? “நீங்க என்ன சொல்ல வரீங்க..? நிம்மதியா இருக்கான்னா..?” என்ற கேள்வியுடன் நிமிர்ந்தவன்....அங்கிருந்த மகாவின் புகைப்படத்தைப் பார்த்து அதிர்ந்தான். “இது எப்ப நடந்தது..?”...
    பௌர்ணமி 6: “எனக்கு அவ்வளவு தான் சார் தெரியும்..!” என்று சொல்லி முடித்திருந்தாள் கயல்விழி.சர்வ மீனாட்சியின் தோழி. “அவங்க கல்யாணம் எப்படி நடந்தது...அதில் ஏதும் பிரச்சனை வந்ததா..?” என்றான்  குமரன். “இல்லை சார்..! அப்படி எந்த பிரச்சனையும் நடக்கலை..சொல்ல போனா சேகர் அவங்க அம்மா அப்பா பார்த்த மாப்பிள்ளை.மீனாட்சியும் சந்தோஷமாதான் சரின்னு சொன்னா..அவங்க கல்யாணமும் ரொம்ப கிராண்டா தான் நடந்தது...ஆனா இவ்வளவு சீக்கிரம் அவர் மீனாவை விட்டு போவார்ன்னு நாங்க...
    பௌர்ணமி 7: அன்றுதான் செந்தில் குமரன் அவளை இறுதியாகப் பார்த்தது.அதற்கு பிறகு ஒரு கேஸ் விஷயமாக அவன் பக்கத்து மாநிலம் சென்று வர...அதற்குள் மீனாட்சிக்கும் திருமணம் முடிந்திருந்தது. தன் மனதில் உள்ள காதலை எப்படியாவது அவளிடம் சொல்லிவிட வேண்டும் என்று எண்ணி அவளைத் தேடித் போன குமரனுக்கு கிடைத்த தகவல் அவளுக்கு திருமணம் ஆகிவிட்டது. என்னவென்று வெளியில் சொல்ல முடியாத ஒரு உணர்வு அவன் தொண்டையை...
    error: Content is protected !!