Perinba Thedalae
அத்தியாயம் 04
மகிழின் மதுரமான குரல் கலையரங்கின் நிசப்தத்தில் துல்லியமாய் எதிரொலித்துக் கொண்டிருந்தது. வரவிருக்கும் கலைவிழாவிற்கான பயிற்றிச்சியில் இருந்தனர் ஸ்ரீதர், மகிழ்நிரதி இருவரும். பாடி முடித்து கண்களை திறந்த மகிழ்நிரதி முதல் வரிசையில் மூன்றாம் இருக்கையில் அமர்ந்திருந்த ஸ்ரீதரை பார்த்தாள்.
அவனோ மென்நகையோடு கட்டிவிரலை உயர்த்திக் காட்ட, நிம்மதியாய் மூச்சு விட்டுக் கொண்டு கீழிறங்கினாள் மகிழ்....
பேரன்பின் தேடலே – மித்ரா
அத்தியாயம் 02
சிவந்து தடித்திருந்த இமைகளை மேலும் இறுக மூடினால் கண்களோ கணலாய் எரிந்தது. ‘வீண்’ என்ற தலைவலி தலையை பிளக்க, நேற்றிலிருந்து உண்ணாததால் அயர்ந்த உடல் மேலும் சோர்ந்துக் கிடந்தது. உறக்கம் கலைய அதிகாலையின் நினைவுகள் மெல்ல நெஞ்சைத் தட்டியெழுப்ப மகிழ்நிரதியும் எழுந்து அமர்ந்தாள்.
எதிரே சுவரில் இருந்த கடிகாரம் மணி...
அத்தியாயம் -05
தன் செங்கரம் வீசி நீலக்கடலிருந்து கிழக்கே நீந்தி எழுந்து பொன்மீனாய் ஒளிக்கீற்று வீசி மின்னிக்கொண்டிருந்தான் கதிரவன். ஆயிரம் கவி பாடினாலும் அதன் அழகில் பாதி கூட பாடி முடித்திட முடியாதென்ற எண்ணம் எப்போதும் மகிழ்நிரதியை நிறைக்கும்.
அதிகாலையில் எழுந்து விட்ட நாட்களில் எல்லாம் சுபிக்ஷாவை எழுப்பி விட்டாவது அந்த அலைகடலின் அழகை காண...
அத்தியாயம் 09
ரிஷி நிச்சியகார்தத்தை நிறுத்திய செய்திக்கேட்டு வருணா மேலும் கவலை கொண்டாள். தன்னிலை தான் ரிஷியின் திருமணத்திற்கு தடையாகிவிட்டதாக, தான் அவனுக்கு பாரமாகிவிட்டதாக எண்ணினாள். எதையும் வெளியில் சொல்லாது மனதிற்குள்ளே மறைத்து அழுத்திக்கொண்டிருந்தாள். அன்னை இருந்திருந்தால் இவ்வாறெல்லாம் நடந்திருக்காது என நினைத்து கண்ணீர் வடித்தாள்.
திருமணத்தை நிறுத்தியதை நினைத்து எந்தவித மனத்தாங்கலுமின்றி ரிஷி வழக்கம்...
அத்தியாயம் 07
மகிழ்நிரதி சிறுவயதிலிருந்து இருளை துளி கூட விரும்பியதில்லை, சொல்லத் தெரியாத பயம் அவளை அழுத்தும். பசி ஒருபுறம் அவளின் உடல் சக்தியை இழக்கச் செய்திருந்தது. அசதியில் துளிகூட உறக்கம் வரவில்லை பயத்தில் படபடக்கும் மனதோடு ஹால் சோஃபாவில் அமர்ந்திருந்தாள்.
ரிஷி அவன் அறைக்குள் சென்று கதவை மூடி பலமணி நேரங்கள் கடந்து விட்டது. தனிமையும்...
அத்தியாயம் 06
காலை நேரம் பாடவேளை துவங்கும் முன் மகிழின் வகுப்பு வானரப்படைகள் அனைவரும் கேண்டீனில் அமர்ந்திருந்தனர். கல்லூரி பேருந்தில் வருபவர்கள், பைக், ஸ்கூட்டியை தள்ளிக்கொண்டு வருபர்கள் என ஒவ்வொருவராய் வந்து அமர, வருணாவும் அப்போது தான் வந்தாள்.
எப்போதும் போலே மகிழின் அருகே வந்தமர்ந்தவள், “மகி இந்தா, உன்னோட ரிங்க என் ரூம்லையே விட்டுட்டு வந்துட்ட...
அத்தியாயம் 11
மகிழ்நிரதிக்கு இரண்டு மட்டும் சற்றே மனதிற்கு நெருடலாக இருந்தது. ஒன்று அவன் வீட்டில் பூஜை அன்று தன்னை குறிப்பிட்டு அவன் அன்னையிடம் குறைவாகச் சொல்லியது. அதனாலே அவனுக்கு தன் மீது பிடித்தம் இல்லை என விலகினாள். அந்த எண்ணம் இன்று எவ்வாறு மாறியிருக்கும்?
மற்றோன்று அன்று தந்தையிடம் வந்து பேசும் போதும் சரி, பின்...
அத்தியாயம் 17
ஸ்ரீதரிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பிய மகிழ்நிரதி வரும் வழியில் தான் ரிஷியின் அழைப்புகளை கவனித்தாள். ரிஷிடமிருந்து வந்திருந்த அழைப்புகள் அதுவும் இத்தனை முறை வந்திருக்க ஏதேனும் முக்கியமான விஷயமாக இருக்குமோ கவனிக்காமல் விட்டுவிட்டேனே என நொந்துகொண்டவள் படபடப்புடன் மீண்டும் அவனுக்கு அழைத்தாள். ஆனால் இம்முறை அழைப்புகள் சென்றும் ரிஷி ஏற்காமல் இருக்க கோபம் கொள்வானோ...
அத்தியாயம் 15
ரிஷிநந்தனின் வீட்டுப் பூஜையறை புதுப்பொழிவு பெற்றிருந்தது. தேவகி இருந்த போது இருந்திருந்த வீட்டின் அழகு மீண்டும் மீண்டிருந்தது. இரவு உள்ளே வரும் போதே பூஜையறையிலிருந்து வந்த இனிய நறுமணத்தை ஆழ்ந்து நுகர்ந்தான். மகிழை கண்களால் தேடியவன் கிட்சனில் அவள் குரல் கேட்கவே தன்னறை நோக்கிச் சென்றான்.
மகிழ் கிட்சனில் இருக்க வந்தவன் குளித்து முடித்து...
அத்தியாயம் 20
ரிஷி மகிழ் இருவருக்குமே இந்த ஒருநாளே மிகவும் மன அழுத்தமாக, போராட்டமாக இருந்தது. ரிஷிக்கு தவறு செய்த குற்றவுணர்வு ஒரு வலியைக் கொடுக்க, எப்போதும் மகிழின் அன்பை மட்டுமே அறிந்தவனுக்கு அவள் தன்னை தவிர்க்கின்றாள் என்பது மேலும் அதிக வலியைக் கொடுத்தது.
இரவு ரிஷி வீட்டிற்குள் வருகையில் ஹாலில் அமர்ந்திருந்த மகிழைப் பார்த்தான். தன்னை...
அத்தியாயம் 08
அத்திமாலை நேரம் தோட்டத்தில் நடந்துகொண்டிருந்தான் ரிஷி. அந்த வீட்டை அவன் சுற்றி வந்தே பல நாட்கள் ஆனது போன்றிருந்தது. தேவகி சென்ற பின், பூஜையறையும் சமையலறையும் சத்தமின்றி இருக்க, வீடே அழகிழந்து இருந்தது. இதெல்லாவற்றையும் விட அவனை பெரிதாக தாங்கியது வருணாவிடம் காணப்படும் மாறுதல் தான்.
எப்போதும் பிடிவாதம் அதிகம் தான் இப்போது அதிகரித்துக்கொண்டே...
அத்தியாயம் 12
சிவப்பும் அல்லாது அரக்கும் அல்லாது குங்குமம் நிறத்தில் தேன் கலந்தது போன்று ஜொலிக்கும் பட்டு. அதன் முந்தியில் அன்பால் இணைந்தது போன்று இரு அன்னங்கள் தத்துரூபமாக நெய்திருக்க, பார்த்ததும் மனம் கவர்ந்தது. மகிழ்நிரதிக்காவே பிரத்யேகமாக நெய்யப்பட்டது. ரிஷியின் தனித்துவமான ரசனையின் அழகை ரசித்தவள் தன்னை மறந்து சில நொடிகள் நின்று விட்டாள்.
கதவு தட்டும்...
அத்தியாயம் 23
பொன்மாலை நேரம் பல வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஹாலில் ரிஷி நந்தன், மகிழ்நிரதியின் வரவேற்பு நடைபெற்றுக்கொண்டிருந்தது. வண்ண மலர் மேடையின் நடுவே மலர்ந்த முகத்தில் நிறைந்த புன்னகையோடு ரிஷி, மகிழ் நின்றிருந்தனர். வருபவர்கள் அத்தனை பேரையும் நின்று கவனிக்க வைத்தது அவர்கள் உடுத்தியிருந்த பிரேத்தேக உடைகள் தான். ரிஷி ராயல் ப்ளூ...
அத்தியாயம் 16
பேபி பிங்க் நிறத்தில் டிசைனர் புடவை அணிந்து, கண்ணை உறுத்தாத கண்ணுக்குக் குளிர்ச்சியான, லேசான அலங்காரத்தில் தயாராகியிருந்தாள் மகிழ்நிரதி. ரிஷி இன்னும் வரவில்லை அதற்குள் தயாராகி இருந்தவள் அவன் கபோர்ட் முழுவதும் தேடி தனது புடவைக்கு பொருத்தமான நிறத்தில் சட்டையை எடுத்தவள் கட்டிலில் வைத்துவிட்டு உடன் டவலையும் எடுத்துவைத்துவிட்டு வாசல் வரை வர,...
அத்தியாயம் 22
ரிஷப்ஷனிற்கான ஏற்பாடுகளை தொடங்கியிருந்த ரிஷி அன்று மகிழை அலுவலகத்திற்கு அழைத்து வந்திருந்தான். தன் அறைக்குள் அழைத்து வந்தவன் வலதுபுற சோஃபாவில் மகிழை அமர்த்திவிட்டு அவள் கைகளைப் பற்றியபடி அருகில் அமர்ந்தான்.
வாசலிலிருந்து அவன் அறை வரையிலும் கட்டிடத்தின் பிரம்மாண்டத்தையும் அழகையும் ரசித்தபடி வந்தவள் அறைக்குள்ளும் பார்வையை சுழற்றியபடி இருந்தாள். சாக்லேட் மற்றும் வெண்மை நிறத்தில்...
அத்தியாயம் 13
கையில் தண்ணீர் டம்ளர் மாத்திரைகளுடன் அருகே வந்த மகிழ், “இந்தாங்கப்பா..” என நீட்ட அமைதியாக வாங்கி இட்டுக்கொண்டார் குணசீலன்.
தந்தையின் அருகே அமர்ந்தவள், “நாளையில இருந்து நீங்களே மாத்திரை போட்டுக்கணும், டைமுக்கு சரியா சாப்பிடணும். அதிகம் வெளிய சுத்தமா வீட்டுக்கு வந்திடணும். நான் வாங்கிக் கொண்டுத்த புக்ஸ் எல்லாம் வாசிக்கணும் நான் தினமும் போன்...
அத்தியாயம் 21
அன்று வருணாவின் பிறந்தநாள் ஆகையால் அதிகாலையிலே கோவிலுக்குச் சென்றிருந்தாள் மகிழ்நிரதி. ரிஷி அப்பொழுது தான் விழித்திருந்தான். பூ, புடவையோடு நெற்றியில் விபூதி, குங்குமம் கையில் பிரசாதக்கூடையோடு மகிழ் உள்ளே வர, ஜாக்கிங் உடையோடு ரிஷி அறையிலிருந்து எதிரே வந்தான். அவள் வழியை மறைத்தபடி அவன் நிற்க, அவளோ சிறிது குங்குமத்தை எடுத்து அவன்...
அத்தியாயம் 14
தன்னறைக்குள் அழைத்து வந்த ரிஷி மகிழை மெத்தையில் அமர்த்தி அவனும் அருகே அமர்ந்தான். “எப்படிங்க இப்படியாச்சி? எங்கிட்ட ஏன் சொல்லலை?” என அழுது கொண்டே தான் கேட்டாள்.
ரிஷி நடந்த நிகழ்வுகளை உரைக்க, அவனுக்கும் கண்கள் கலங்கியது. கேட்டுக்கொண்டிருந்த மகிழ் எப்போது அவன் தோளில் சாய்ந்தாளோ மீண்டும் ஏங்கி ஏங்கி அழுது அவன் சட்டையை...
அத்தியாயம் 18
ரிஷி நிற்பதைச் சிறிதும் எதிர்பாராத மகிழ் சிரிப்புடன் அவனருகே செல்ல, “அதென்ன விஷயன்னு சொல்லிட்டுச் சிரிச்சா நானும் கூட சேர்த்து சிரிப்பேனே!” என அவள் சிரிப்பதைக் குறிப்பிட்டுக் கேட்டான்.
“அது ஒன்னும் பெரிய காமெடியெல்லாம் இல்லைங்க, நேத்து ஷாப்பிங் போயிருந்த போது எங்க சீனியரை பார்த்தேன்னு சொன்னேனே அவர் தான் கால் பண்ணியிருந்தாரு, அவருக்கு...
அத்தியாயம் 19
மகிழின் அழுகை ரிஷியின் கோபத்தைக் குறைத்து எரிச்சலைக் கூட்டியிருந்தது. ஹாலில் நடந்து கொண்டிருந்தவன் வருணாவின் அறையில் மின்விளக்கெறியும் ஒளியைக் கண்டு அவள் அறை நோக்கிச் சென்றான்.
ரிஷி உள்ளே வர நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தவள் கையிலிருந்த அலைபேசியில் கவனத்தைத் திருப்பி விட்டாள். இந்த நேரம் என்ன செய்கிறாள் அவள் என்ற எண்ணத்தில் அருகே...