Oonjalaadum Thanimaikal
அத்தியாயம் – 1
“மூஷித வாகன மோகன ஹஸ்த
சியாமள கர்ண விளம்பர சூத்ர
வாமண ரூப மஹேஸ்வர புத்ர
விக்ந விநாயகா பாத நமஸ்தே....”
பூஜையறையில் இருந்து மலர்களின் வாசத்தோடும், ஊதுபத்தி,
சாம்பிராணி மனத்தோடும், சுந்தரியின்
குரலும் கசிந்துகொண்டு வெளியே வந்தது. கண்களை மூடி, உதடுகள் மட்டும்
ஜபித்துக்கொண்டு இருக்க, அவரின் முகத்திலோ எண்ணிலடங்கா உணர்வுகள்.
அவ்வுணர்வுகளின் அத்தனை கேள்விகளுக்கும் பதில் அனைத்து
வினைகளையும் தீர்த்து, முழு முதர்கடவுளாய் விளங்கும் விக்ன...