Kaathal Noozhilai
“மறுமகன் கூட சேட் பண்ண முடியுமா? தப்பா பேசாதீங்க மா?”
“அப்ப கண்டவன் கிட்ட மட்டும் பேசலாமா?”
பெற்ற தாயைப் பற்றி கணவன் கேவலமாக பேசும் போது கோபத்தின் உச்சத்துக்கு செல்லும் சிந்து எவ்வளவோ பொறுமையாக எடுத்து சொன்னாள். ஆனால் சித்தார்த் கேட்கவே இல்லை.
அதுவும் ஒரு நாள் “உங்க அப்பா சரி இல்லை. அதான் உங்க அம்மா...
அவன் சொன்னதைக் கேட்டு கொஞ்சம் துணுக்குற்றாலும், “சரி”, என்று சொல்லி பேச்சை முடித்தாள். அதற்கு மேல் அவளால் பேசவும் முடியவில்லை. சித்தார்த்தை நினைத்து கொஞ்சம் அவளுக்கு குழப்பம் வந்தது.
அவனும் வேலை இருக்கிறது என்று சொல்லி வைத்து விட்டான்.
அன்று மாலை அவள் முகத்தை வைத்தே ஏதோ குழப்பம் என்று கண்டு கொண்டாள் ராணி.
“என்ன ஆச்சு? எதுக்கு...
அத்தியாயம் 4
புரிந்து கொள்ள முடியாமல்
தத்தளிக்கும் போது
தான் புரிந்தது
நீ அழகிய புதிரென்று!!!
அடுத்த நாள் சித்தார்த் அழைத்த போது “நான் ஒண்ணு உங்க கிட்ட கேக்கணும்”, என்று ஆரம்பித்தாள் சிந்து.
“சொல்லு சிந்து”
“உங்க அண்ணி எதுக்கு பொண்ணு பாக்க வரலை? உங்க அம்மா அப்பா வந்தப்பவும் வரலை. நீங்க எல்லாரும் வரும் போதும் வரலை? எதுக்கு?”
“அது அவ அம்மா...
அவள் முகத்தில் இருந்தே என்ன கண்டானோ, அவளை தன்னோடு சேர்த்து அணைத்தவன் “எதையும் யோசிக்காம தூங்கு”, என்று சொல்லிக் கொண்டே அவள் தலையை வருடி விட்டான். சிறிது நேரத்தில் சிந்து உறங்கி விட்டாள்.
அவனுடைய அணைப்பில் எல்லையில்லா ஆறுதல் கிடைக்க சிறிது நேரத்திலே தூங்கி விட்டாள்.
தன் கையணைப்பில் சிறு குழந்தை போல் தூங்கும் சிந்துவை நினைத்து...
தாயம்மாவை கொன்று விடும் அளவுக்கு வெறி வந்தது. அடுத்த நொடி போனை எடுத்த சிந்து ராணியை அழைத்தாள். சிந்துவின் சந்தோஷ குரலை எதிர் பார்த்த ராணிக்கு சிந்துவின் அழும் குரல் பீதியை கிளப்பியது.
“என்ன ஆச்சு தங்கம்?”
“இவங்க என்னை நிம்மதியாவே வாழ விட மாட்டாங்க மா”
“அழுறதை விட்டுட்டு என்ன ஆச்சுன்னு சொல்லு சிந்து?”, என்று பதட்டமாக...
“இந்த ஆடி பலகாரத்தை எல்லாருக்கும் கொடுத்து காலி பண்ணலாம்ல? எல்லாம் வேஸ்டா போக போகுது. கல்யாணத்துக்கு கொடுத்த பலகாரத்தையும் ஒரு மாசம் கழிச்சு மாட்டுக்கு உங்க அம்மா போட்டாங்க. இப்பவும் வேஸ்ட் பண்ண வேண்டாமே”, என்று சிந்து சொன்னதும் அது நியாயமாக பட்டதால் தாயம்மாவை பார்க்க சென்றான்.
“அம்மா, இந்த பண்டத்தை எல்லாம் பக்கத்து வீட்ல,...
அத்தியாயம் 8
எனக்குள் நீ
உறைந்திருக்கும் காரணத்தால்
உயிர் இருக்கிறது
என் உடலில்!!!
எத்தனையோ திரைப்படங்களில் முதலிரவு காட்சிகளைப் பார்த்தாலும் தனக்கென்று வரும் போது நடுக்கம் வந்து விடுகிறது. சிந்துவின் நிலையும் அது தான்.
சிந்து உள்ளே வந்ததும் அவளைப் பார்த்து சிரித்த சித்தார்த் “கதவை பூட்டிட்டு வா சிந்து”, என்றான்.
“நான் போகலை. கூச்சமா இருக்கு”
“எனக்கு அதுக்கு மேல இருக்கு. பிளீஸ் பூட்டிட்டு...
அத்தியாயம் 5
கனவென்று எண்ணி
ஒதுங்கி போன நான்
நிஜமென்று எண்ணி
உன் கரம் பிடித்தேன்!!!
அதன் பின்னர் அனைவரும் கிளம்பி விட்டார்கள். அனைவருக்கும் சாப்பாடு ஹோட்டலில் ஆர்டர் செய்திருந்தார்கள்.
வீட்டாள்கள் மட்டும் இருக்கும் போது சிந்துவை சித்தார்த் போனில் அழைத்தான்.
அதை எடுத்தவள் “சொல்லுங்க”, என்றாள்.
“எல்லாரும் போய்ட்டாங்களா?”
“எங்க வீட்ல உள்ளவங்க மட்டும் இருக்கோம்”
“யாரெல்லாம்?”
“அத்தை மாமா இருக்காங்க, என் அண்ணன் அக்கா குடும்பம், பெரியம்மா...
சரி என்று வெளியவே குளிக்கவும் துவைக்கவும் பழகி கொண்டாள் சிந்து. அப்போதும் தாயம்மா சும்மா இருக்க வில்லை. அவள் ஒவ்வொரு முறை மாடியில் இருந்து காய்ந்த துணியை எடுத்து வரும் போதும் “எப்படி தான் பாத்ரூம்ல துவைக்கிறியோ, அந்த
வீட்ல கல்லு இருக்கு. அங்க போய் துவைக்க வேண்டியது தான? டைல்ஸ்ல எப்படி அழுக்கு போகும்?”,...
அதை புரிந்து கொண்ட சித்தார்த் “இன்னைக்கு குழம்பு நல்லா இருந்துச்சுன்னு அப்பா சொன்னாரு. எங்க பெரியம்மா போன் பண்ணி உன்னைப் பத்தி கேட்டாங்களாம்ம். அவ தான் எல்லா வேலையும் செய்றான்னு அம்மா சொல்லிருக்காங்க”,என்று சொல்லி தாயம்மா மற்றும் சுந்தரத்துக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுக்க முயன்றான்.
மனதில் இருந்த வலி அவர்கள் பேச்சை எடுத்தாலே அவளை...
கோயிலுக்கு போய் விட்டு வந்து சாப்பிட அமரும் போது “இன்னைக்கு எதுக்கு மா வீட்டுக்கு வெளிய விளக்கு வைக்கலை?”, என்று கேட்டார் சுந்தரம்.
“அத்தை தானே வைப்பாங்க”, என்றாள் சிந்து.
“ஆமாப்பா, அவ மாடில வச்சிட்டாளே”, என்றான் சித்தார்த்.
“மேல வைக்கிறது முக்கியம் இல்லை. கீழ வைக்கணும். உங்க அம்மா இன்னைக்கு சோம்பேறியா இருக்குன்னு குளிக்கலைல. இவ வச்சிருக்க...
“இப்ப வாங்க வேண்டாம். கொஞ்ச நாள் போகட்டும். பிரிட்ஜ் இருந்தா நாமளும் உள்ள வச்சு வச்சு கெட்டு போனதை திம்போம். இப்ப நிறைய செலவு இருக்கு. அடுப்பு, பெருக்குமாறு, குப்பை கூடை இன்னும் நிறைய இருக்கு வாங்க வேண்டியது. கேஸ் சிலிண்டர்க்கு என்ன செய்ய போறீங்க?”
“எங்க பாட்டி வீட்ல உள்ளது சும்மா தானே இருக்குது....
பின் தாயம்மாவுக்கு சரியாகி அவள் வெளியே உள்ள பாத்ரூம் பயன்படுத்திய பிறகு தான் இரவு இவர்கள் கதவு அடைக்க பட்டது. ஆனால் சின்ன சின்ன விஷயங்கள் தாயம்மா மேல் சிந்துவுக்கு வெறுப்பை உருவாக்கியது.
சித்தார்த் கூட சண்டை வருவது, அவனை பிரிந்து இருப்பது அனைத்துமே தாயம்மாவால் தான் என்று அவள் மீது கொலை வெறியே வந்தது...
ஒரு வழியாக முடித்தும் விட்டாள். அப்போது குளித்து முடித்து வந்த சித்தார்த்திடம் “நாங்க இன்னைக்கு பையனை பாக்க போறோம். வண்டி எங்களுக்கு வேணும் டா. நீ பஸ்ல போ”, என்று சொன்னார் சுந்தரம்.
எதுவும் சொல்லாமல் சரி என்று சொல்லி விட்டு வந்தான் சித்தார்த். இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த சிந்துவுக்கு தான் எரிச்சலாக வந்தது...
இருவரும் குளித்து ஹாசினியையும் குளிக்க வைத்து முடித்தார்கள். இரவு ஏழு மணி ஆகி இருந்தது. “சரி வா சிந்து பாட்டி வீட்டுக்கு போவோம். இன்னும் கொஞ்ச நேரத்துல சாமி கும்பிடுவாங்க”, என்று அழைத்தாள் மாரி.
“அக்கா, எனக்கு மனசே ஆறலைக்கா, சொந்த வீட்ல சாவுன்னா கூட இப்படி தானா க்கா?”
“இவங்க இப்படி தான் சிந்து. தாத்தா...
அத்தியாயம் 7
இரு துருவமாய் இருந்தாலும்
நாம் இருவரையும்
ஒரே புள்ளியில்
இணைக்கிறது காதல்!!!
நான்கு மணிக்கே சிந்துவை எழுப்பி விட்டாள் ராணி. எழுந்ததும் குளித்து முடித்தாள். முந்தின நாள் இரவே அனைவருக்கும் சொல்லி விட்டதால் ஒருவர் ஒருவராக வீட்டுக்கு வர ஆரம்பித்தார்கள்.
குளித்து முடித்து வந்தவளுக்கு சேலையை கட்டி விட்டாள் அவளின் அண்ணி சௌமியா. சிந்துவுக்கு தலை சீவி பூவை வைத்து...
அத்தியாயம் 6
உயிர் பிரியும்
தருணத்தில் கூட
உன் ஒற்றைப் புன்னகையை
காண ஆசை அன்பே!!!
திருமணத்துக்கு ஐம்பது நாட்கள் இருந்தது. சிந்து சித்தார்த் இருவருக்கும் நாட்கள் மெதுவாக நகர்ந்தது போல் இருந்தது. ராணிக்கோ நாள் நெருங்க நெருங்க பணத்துக்கு என்ன செய்வது என்று எண்ணி பய பந்து உருண்டது.
அடுத்து என்ன செய்ய என்று தெரியாமல் மண்டையைப் போட்டு உருட்டினாள். சுந்தரத்திடம்...
அத்தியாயம் 10
உன்னுடனான பயணம்
நீண்டு கொண்டே
இருக்க ஆசை
உடலுக்கும் மனதுக்கும்
ஓய்வில்லை என்றால் கூட!!!
அதைப் பற்றிய பேச்சு முடிந்தாலும் சின்ன சின்ன விஷயங்களில் சிந்துவை குறை சொல்லிக் கொண்டே இருந்தார்கள். “பிரிட்ஜ்ல பிளாஸ்டி டப்பா மட்டும் வை. சில்வர் டப்பா வைக்காத. அதுக்கு கரண்ட் ரொம்ப இழுக்கும்”, என்று தாயம்மா சொன்னதும் உண்மையோ பொய்யோ அவள் சொன்னதை அப்படியே...
காதல் நூலிழை
அத்தியாயம் 14
அழகிய வர்ணங்களை
என்னுள் உருவாக்கி
சென்ற வானவில்லே
இப்போது கருமையை
மட்டும் பூசிவிட்டு
சென்றது ஏனோ?!!!
பன்னிரெண்டு மணிக்கு சித்தார்த் வந்ததும் பாட்டியைப் பார்க்க இருவரும் சென்றார்கள். போகும் போதே பொறுமையாக சொல்லிக் கொண்டே வந்தாள் சிந்து.
“இனிமே யாருக்கும் பட்ட பேர் வச்சி கூப்பிடாதீங்க சரியா?
“சரி”
“சரி சரின்னு சொல்லிட்டு நீங்க மறுபடியும் அதை தான் செய்றீங்க?”
“சொல்ல மாட்டேன்னு சொல்றேன்ல?”
“உங்க அண்ணன்...
சிந்து கிளம்பலாம் என்று சொல்ல, “இரு சிந்து என் அத்தை பிள்ளைங்க கூட போட்டோ எடுக்கல?”, என்று சொல்லி இருக்க வைத்தான்.
“அப்ப அவங்களை கூப்பிடுங்க”
“இப்ப வருவாங்க”, என்று சொன்னவன் அவளை தனியே விட்டு விட்டு சென்றும் விட்டான். பின் கால் மணி நேரத்துக்கும் மேலே அவள் அவளுடைய தோழிகளுடன் தான் இருந்தாள்.
பின் அவனுடைய ஐந்து...