Kaathal Mozhi Pesidavaa
சில வருடங்களுக்குப் பின்...
“ஏய் மாடசாமி அந்த ஆட்டுக்குட்டிய பிடிச்சிட்டு வா” என்ற குரலில்
“அதிகாரம் பண்ணுறதுல அப்படியே அன்னம் ஆத்தாள உரிச்சு வெச்சிருகீங்க சின்ன அம்மிணி” என்றபடி பிறந்து சில தினங்களே ஆனா ஆட்டுக்குட்டியை தூக்கிவந்தான் அவன்.
“என்ரா என்டர பேத்திகிட்ட வம்பு பன்னுற” என்ற அன்னத்தின் குரலில்
“அதெல்லாம் ஒண்ணுமில்லீங் சின்ன அம்மிணி ஆட்டுக்குட்டி கேட்டாங் புடிச்சாந்தனுங்”...
இளந்தென்றல் காற்று இசைத்த காதலிசை அவன் செவிகளை எட்டியதோ..? தன் கண்ணிமைகளை மெல்ல விடுவித்தான் கதிராயன்.
திரைசீலைகள் அசைந்து அவனை அருகில் அழைக்க.. பஞ்சணையிலிருந்து எழுந்தவன் பால்கனி கதவுகளை திறந்துகொண்டு சென்றான்.
தூரிகை தொடா செவ்வானம்.. அங்கும் இங்குமாய் வெண்மேகங்கள்.. ஆலம் வீட்டில் விடியலை வரவேற்கும் விதமாய் பறவைகளின் சத்தம்.. ம்ஹூம்.. சங்கீதம்..!
அத்தனை இனிய காலைப் பொழுது....
‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றமே’ - நக்கீரர் நீதி போல்
நெஞ்சில் ஈரம் இன்றி நாட்டினில் வஞ்சகர் பலர் இழைத்து வரும் குற்றங்களுக்குச் சாட்சி நானே..! சிக்ஷையும் நானே தருகிறேன்..! என்பது வெய்யோனின் நீதி போலும்.
விடியலில் தொடங்கியது தொட்டு அத்தனை வெம்பல் அவனிடம்..! தலைநகரம் தவித்துக் கொண்டிருந்தது.
ஆனால்..
அதே தலைநகரில்.. முற்றும் முரணாய் குளிர்காற்றை நிரப்பிக்கொண்டு நின்றது அந்த...
யாயும் ஞாயும் யாராகி யரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக்கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப்பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே
யார் யாராகவோ இருந்து எவ்வித உறவுமுறையுமின்றி காதலால் மட்டுமே கலந்த இரு நெஞ்சங்களின் இனிய கலப்பு.
அன்பு வயப்பட்ட காதலர்கள் இதயத்தால் ஒன்றுபட்டு திருமண பந்தத்தில் அடியெடுத்து வைத்து இன்றோடு மூன்று மாதங்களாயிற்று.
லாஸ் ஏஞ்சல்ஸ்...
கொஞ்சம்.. கொஞ்சமாய்.. இருள்...
லட்சம்.. லட்சம் இடைவெளியை கடந்திடும் லட்சியத்தில் நொடிக்கு நொடி வேகம் நாடி, பூக்கள் தரும் பூமியை முத்தமிட்டுக் கொண்டிருந்தது மழை.
தலைநகரின் இன்னொரு பக்கம்... அத்தனை அத்தனை அழுக்குடன் அடையாளம் மறைந்து போகும் வண்ணம் சாலையில் சாக்கடையும் சந்தைக்கடை இரைச்சலுமாய்.. மக்களின் பொறுமைக்கு சோதனையாய்.. ஹெவி ட்ராபிக்கும் ஹெவி ரெயினும்..
“டேய் ஸ்ரீ... ஒரு காரை வாங்கித்...
நதியோடு நாள்களுக்கென்ன பந்தயமோ..? நில்லாது நிகழ்காலத்தை கடந்தகாலமாக்கியபடி சென்று கொண்டிருந்தது.
கதிரவன் பூமியில் பரப்பிய தன் செங்கதிர்களை திரும்பப் பெற்றுக்கொள்ள ஆயத்தமான நேரம்.. கடற்கரையில் மணல்வெளியில் அமர்ந்திருந்தாள் நற்பவி நங்கை.
ஆழியின் அலைகளைப்போல் அவள் அகமும் அமைதியற்று ஆர்ப்பரித்தது.
மனம் சமீபத்திய நிகழ்வுகளையே சுற்றிவந்தது. அந்த நிகழ்வுகளுக்குப் பின்னால் நிற்பவன் தான் அவன் நினைவுகளுக்குப் பின் நிற்பவனும்.
அலை நுரைகள்...