Kaathal Mozhi Pesidavaa
வான் அரங்கத்தில் மேகத்தின் அரங்கேற்றம்.. இசையோடான இன்ப மழை. அதே கணம்.. புவியிலும் ஓர் இசை அரங்கேற்றம்..!
“தி வின்னர் இஸ்.......... மிஸ் நற்பவி இராமநாதன்..!!!!!”
வான் மழையோடு வாழ்த்து மழையும் அவ்விடம் சேர்ந்திட.. சுகமாய் நனைந்தாள்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெறவுள்ள ‘தி வோர்ல்ட்ஸ் பெஸ்ட்’ என்ற ரியாலிட்டி ஷோவிற்கான தகுதிச்சுற்று பல்வேறு நாடுகளில் பல்வேறு இடங்களில்...
மழைக்காற்றும் மண்வாசமுமான மாலைப் பொழுதில்.. சிந்தும் மழைச்சாரல் சிறிது சிலிர்ப்பை சிந்திச் சென்றது மேனியில்.
மதராஸ்ல மழையா..........??
ஆச்சர்யமுடன் அந்தப் பொழுதை.. அந்திப் பொழுதை.. அனுபவித்தபடி ஸ்ரீராம்.. ஏ.டி.எம்மில் இருந்து எதிர்புறம் நின்ற யமஹாவை அடைய வேண்டி சாலையைக் கடக்கக் காத்திருந்தான்.
அவனுடன் அவள். அவள் மட்டுமே..!
பொன் மஞ்சள் உடையில்.. மஞ்சள் பூவாய்..
சிக்னல் பாசாகிட.. இவன் சாலையைக் கடக்க...
நதியோடு நாள்களுக்கென்ன பந்தயமோ..? நில்லாது நிகழ்காலத்தை கடந்தகாலமாக்கியபடி சென்று கொண்டிருந்தது.
கதிரவன் பூமியில் பரப்பிய தன் செங்கதிர்களை திரும்பப் பெற்றுக்கொள்ள ஆயத்தமான நேரம்.. கடற்கரையில் மணல்வெளியில் அமர்ந்திருந்தாள் நற்பவி நங்கை.
ஆழியின் அலைகளைப்போல் அவள் அகமும் அமைதியற்று ஆர்ப்பரித்தது.
மனம் சமீபத்திய நிகழ்வுகளையே சுற்றிவந்தது. அந்த நிகழ்வுகளுக்குப் பின்னால் நிற்பவன் தான் அவன் நினைவுகளுக்குப் பின் நிற்பவனும்.
அலை நுரைகள்...
லட்சம்.. லட்சம் இடைவெளியை கடந்திடும் லட்சியத்தில் நொடிக்கு நொடி வேகம் நாடி, பூக்கள் தரும் பூமியை முத்தமிட்டுக் கொண்டிருந்தது மழை.
தலைநகரின் இன்னொரு பக்கம்... அத்தனை அத்தனை அழுக்குடன் அடையாளம் மறைந்து போகும் வண்ணம் சாலையில் சாக்கடையும் சந்தைக்கடை இரைச்சலுமாய்.. மக்களின் பொறுமைக்கு சோதனையாய்.. ஹெவி ட்ராபிக்கும் ஹெவி ரெயினும்..
“டேய் ஸ்ரீ... ஒரு காரை வாங்கித்...
வண்ணங்கள் தூவிய விடியலின் துவக்கத்தில் சென்னை திரும்பியிருந்தான் ஸ்ரீராம்.
அவனது பிளாட்டை அடைந்தவனின் விழிகள் இரண்டும் அனிச்சையாக எதிர் பிளாட்டில் அடைக்கலம்.
காட்சி கொடுக்க யாருமில்லை கதவைத் தவிர.
இன்று விசா இன்டெர்வியு.. அதற்கான சான்றிதழ்களை சரிபார்த்து எடுத்து வைத்தவன் ஒரு குளியல் போட்டு வந்தான்.
கோபி அவனது டீமை அழைத்துக்கொண்டு பாண்டிச்சேரிக்கு டீம் அவ்டிங் சென்றிருக்க.. ஸ்ரீராம் தனக்குமட்டும்...
தென்னங் காற்றும்.. ஜன்னல் சீட்டும்..
மினி பஸ்சும்.. சொந்த ஊர்ப் பயணமும்..
யாக்கையின் ஒவ்வொரு அணுவும் ‘ஐயம் ஹாப்பி!!!!!’ என அரற்றிக் கொண்டிருக்க.. சிங்காரச் சென்னையிலிருந்து சின்னாம்பாளையத்தில் வந்திறங்கினான் ஸ்ரீராம்.
மண் வாசம் மனதை நிறைத்துச் செல்ல.. மலர்ச்சியுடன் வீட்டை நோக்கி நடை போட்டான்.
திண்ணையில் அமர்ந்துகொண்டு போவோர் வருபோரை எல்லாம் உற்று உற்று பார்த்தபடி இருந்த தொண்ணூறைத் தொட்ட...