Ilavenil En Manavaanil
அத்தியாயம் – 8
ஜெயக்னாவை இழுத்து அவனறைக்குள் நுழைந்து கதவை அடைத்து முடிக்கும் வரையிலும் பற்றியிருந்த அவள் கையை அவன் விடவில்லை.
ஒரு பக்க கதவில் அவளை சாய்த்திருந்தான், தானும் அவளை ஒட்டியே நிற்கிறோம் என்பதை முகத்திற்கு முன் தெரிந்த அவள் வதனம் கண்டே உணர்ந்தான்.
பார்வை தன்னை தள்ளிவிட துடிக்கும் அவள் கண்களை தழுவி பின் கொஞ்சமாய்...
அத்தியாயம் – 17
வழியில் காலை உணவை முடித்து அவர்கள் பயணம் மூணாரை நோக்கி ஆரம்பித்தது. ராகவ் அமைதியாகவே வந்தான்.
என்றுமில்லா திருநாளாய் ஜெயக்னா வாய் ஓயாது வளவளத்தாள் அவனிடம். லாட்ஜ் பற்றி ஆரம்பித்து அவன் அன்னை, அக்கா, அக்கா மக்கள் என்று பேச்சு நீண்டு வளர்ந்து பின் தன்னைப் பற்றி அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
வெகு நாட்களுக்கு...
“விடு போதும்...”
“அது என்னோட அன்னைக்கு மனநிலை தான்... இன்னைக்கு என் கழுத்துல தாலி கட்டுங்கன்னு உங்ககிட்ட கேட்கும் போது எனக்கு அவமானம் எல்லாம் இல்லை...”
“அவ்வளவு சந்தோசம் தான் எனக்கு... வெட்கம் கூட வரலை எனக்கு... உரிமையா உங்ககிட்ட கேட்டேன்...”
“நம்ம கல்யாணத்துல எனக்கு நெறைய சங்கடங்கள்... அக்காவுக்கு பார்த்த மாப்பிள்ளையை நான் கட்டிக்கிட்டேன்னு ஆரம்பிச்சு, அவளோட...
அத்தியாயம் – 7
திருமணம் முடிந்து மாப்பிள்ளையும் பெண்ணும் மணமகன் இல்லத்திற்கு வந்து சேர்ந்தனர்.
சந்தியா இருவரையும் நிற்க வைத்து ஆரத்தி எடுக்க ஜெயக்னா முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது என்றால் ராகவோ எந்த உணர்ச்சியும் காட்டாது நின்றிருந்தான்.
ஜெயக்னாவிற்கு ராகவ் எப்படி திருமணத்திற்கு சம்மதம் சொன்னான் அதுவும் தான் கேட்கும் போது முடியாது என்று திமிராய்...
அத்தியாயம் – 15
சந்தியா தன் குடும்பத்தினருடன் மூணாருக்கு வந்திருந்தாள் விடுமுறையை கழிப்பதற்கு. சந்தியா வந்திருப்பதால் மீனாட்சியும் பாட்டியும் கூட அங்கு வந்திருந்தனர்.
அவள் வீட்டிற்கு சென்று வந்ததில் இருந்து ராகவ் முன்பு போல அவளிடத்தில் பேசவில்லை. யார் முதலில் என்று இருவருக்குள்ளும் பட்டிமன்றம்.
நீ தானே வேண்டாமென்றாய் என்று அவனும், வேண்டாமென்றால் விட்டுவிடுவாயா என்று அவளும் தங்களின்...
ஹாய் மக்களே,
மறுபடியும் நான் தான்... ஒரு புது கதையோட வந்திருக்கேன், கதையோட பேரு இளவேனில் என் மனவானில்...
வேர் தீண்டும் இலை முடிஞ்சது இல்லையா, அது போல இதுவும் ஒரு சின்ன கதை தான், இன்னும் நீ சிறு பூக்களின் தீ(வே)யே முடிக்கலைன்னு நீங்க கேட்கறது எனக்கு புரியுது...
அந்த கதையோட பதிவுகள் வழக்கம் போல...
அத்தியாயம் – 4
ஜெயக்னா அவனை குரோதமாய் பார்த்துக்கொண்டே உள்ளே சென்றாள். ராகவிற்கு புரிந்து போனது இனி இந்த விழா நடந்தது போல தான் என்ற எண்ணம் அவனுக்கு.
அதற்கேற்றார் போல் சரவணனும் உள்ளே சென்றார் மகளின் அழைப்பை கேட்டு. உள்ளே வந்தவரிடம் எடுத்த எடுப்பிலேயே “அப்பா இந்த மாப்பிள்ளை வேணாம்ப்பா, இந்த நிச்சயம் வேணாம்ப்பா” என்றாள்...
அத்தியாயம் – 9
மையிருட்டாய் காட்சியளித்தது அந்த மாலை பொழுது. சோவென்ற மழை கொட்டிக் கொண்டிருந்தது. காலையில் ஆரம்பித்த மழை இன்னமும் விட்டபாடில்லை.
வீடுகளில் மின்சாரம் முற்றிலுமாய் துண்டிக்கப்பட்டிருந்தது. வீட்டில் தனியே இருந்த ஜெயக்னாவிற்கு பயம் கூடியது.
கையில் இருந்த போன் சார்ஜ் இல்லாமல் அணைந்து போனது. தனியாக இருப்பதற்கு எல்லாம் ஜெயக்னாவிற்கு பயமில்லை, ஆனாலும் இந்த சூழ்நிலை...
அத்தியாயம் – 13
அவள் மூணாருக்கு வந்த நிகழ்வுகள் படம் போல் மனதில் ஓட இன்றைய ராகவின் பேச்சு மனதிற்கு இதமாய் இருந்தது அவளுக்கு. அன்று தமக்கையிடம் வீராப்பாய் பேசி வந்திருந்தாள் தான்.
ஆனாலும் மனதின் ஓரத்தில் ராகவிற்கு மேக்னாவின் மீது விருப்பம் இருக்குமோ அதை மனதில் கொண்டு தன்னை பார்க்கிறானோ என்றெல்லாம் தோன்றியது அவளுக்கு.
அவள்...
அத்தியாயம் – 10
ராகவ் வெளியில் வரவும் அங்கிருந்த இருக்கையில் இருகாலையும் மடக்கி அமர்ந்திருந்தவள் அவனை முறைத்தவாறே எழுந்திருந்தாள் இப்போது.
அவனோ எதுவுமே நடவாதது போல அவளை தாண்டிக் கொண்டு போக “ஏன் இப்படி பண்ணே??” என்றாள் மொட்டையாய்.
“என்ன பண்ணேன்??”
“ஹ்ம்ம்... தெரியாத மாதிரி ஒண்ணும் நடிக்க வேணாம்...”
“நீ என்னன்னு உன் வாயால சொல்லு, நான் ஆமாவா இல்லையான்னு...
அத்தியாயம் – 11
“ஜெயா நீ பார்த்து எடு...” என்று வள்ளி மகளிடம் சொல்ல அவளோ வீட்டில் கட்டுவதற்கு என்று பத்து புடவைகளும், கொஞ்சம் வெளியில் கட்டவென்று ஐந்து சேலைகள் என்று மொத்தமே சில ஆயிரத்துக்குள் எடுத்து முடித்திருந்தாள்.
அதற்குள் சந்தியாவின் குடும்பத்திற்கு உடைகள் எடுத்து வந்து சேர்ந்தனர் மற்றவர்கள். “அவ்வளவு தானே கிளம்பலாம்...” என்று ஜெயக்னா...
அத்தியாயம் – 12
அங்கிருந்த கல் இருக்கையில் அமர்ந்திருந்த செல்வத்தையும் மேக்னாவையும் தூரத்தே கண்டுவிட்ட ஜெயக்னாவிற்கு கோபம் குடம் குடமாக கொப்பளித்ததே உண்மை...
செய்வதெல்லாம் செய்துவிட்டு எனக்கென்ன என்று வந்து அவர்கள் அமர்ந்திருப்பதாகவே தோன்றியது அவளுக்கு அக்கணம்.
இதில் எவ்வளவு தைரியம் இருந்தால் இதே லாட்ஜிற்கே வந்து தங்குவார்கள் என்று ஆத்திரம் அவளுக்கு.
அருகில் வந்தவர்களை அப்போது தான் பார்த்த...
அத்தியாயம் – 5
சரவணன் வந்து கதவை ஓங்கி ஒரு மிதி மிதிக்கவும் கதவு திறந்துக் கொண்டது. உள்ளே யாருமில்லை என்றதும் அவர் நெஞ்சில் பாரம் ஏறியது.
வீட்டில் இருந்து கிளம்பும் போது கூட ஒன்றும் சொல்லவில்லையே அவள்.
இப்போது என்ன நடந்திருக்கும் எங்கே சென்றிருப்பாள், யாரும் கடத்தியிருப்பார்களா, சிறு குழந்தை அல்லவே அவள் என்று அவரின்...
அத்தியாயம் – 3
மூணார் என்னும் பெயருக்கு மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடம் என்பது பொருளாகும் மதுரப்புழா, நல்லதண்ணி மற்றும் குண்டலி எனும் மூன்று ஆறுகள் கூடும் ஒரு வித்தியானசமான புவியியல் அமைப்பில் இந்த மலைப்பிரதேசம் அமைந்திருப்பதால் இப்பெயர் வந்துள்ளது.
இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டுக்கு அருகில் தான் இருக்கிறதா என்று பார்வையாளர்களை மலைக்க வைக்கும் இயற்கை எழிற்காட்சிகளைக்...