Ilak Mar
இலக்கணம் – 22
வீணா சொன்ன விஷயங்களை மனதுக்குள் அசை போட்டுக் கொண்டே யோசனையுடன் அமர்ந்திருந்தான் விக்ரம். வினோத்தும் அடுத்து என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருக்க அவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள் வீணா.
“என்னண்ணா... எதுவும் சொல்லாம யோசிச்சிட்டு இருக்கீங்க... நீங்க சொன்ன விஷயங்கள் எல்லாத்தையுமே ஒரு மாதிரி இலக்கியாவோட மூளைக்குள்ளே திணிச்சி...
இலக்கணம் – 7
மதிய உணவு முடிந்து மரத்தடியில் ஏதோ சூன்யத்தில் கண்ணைப் பதித்து யோசனையில் அமர்ந்திருந்த விக்ரம், அருகில் தயக்கத்துடன் ஒலித்த குரலில் திரும்பினான். இலக்கியாவும், வீணாவும் தயங்கிக் கொண்டே அவனுக்கு முன்னில் வந்து நின்றனர்.
இலக்கியாவின் விலாவில் இடித்த வீணா, “ஏய்.... சொல்லுடி.....” என்று தோழியின் காதைக் கடித்தாள்.
“உங்ககிட்டே ஒரு விஷயம் சொல்ல வந்தேன்......”...
இலக்கணம் – 8
தேர்வுக்காய் கிளம்பிக் கொண்டிருந்தனர் விக்ரமும் வினோத்தும்.
“டேய் விக்ரம்...... இன்னைக்காவது உன்னோட மனசில் உள்ளதை இலக்கியாகிட்டே சொல்லப் போறியா... இல்லை சொல்லாம திரும்ப வந்திடுவியா....” என்றான் வினோத்.
“ம்ம்..... எக்ஸாம் முடிஞ்சதும் அவகிட்டே பேசறேன் டா.... இன்னைக்கு கண்டிப்பா சொல்லிடறேன்....” என்றான் விக்ரம்.
“ம்ம்.... சரிடா..... உன் மனசுல உள்ளதை ஓபனா சொல்லிடு..... அப்புறம் அவ...
இலக்கணம் – 2
புல்லட்டை செங்கல் சூளை அலுவலகத்தின் முன்னில் நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தான் சத்யா. அவனைக் கண்டதும் பரிச்சயமாய் சிரித்தார் கணக்கர் குமரேசன்.
“வாங்க தம்பி....... மாமா உள்ளே தான் இருக்கார்...... நீங்க வந்ததும் வர சொன்னார்.....” என்று தகவலையும் கொடுத்தார். அவரிடம் தலையசைத்து விட்டு அங்கிருந்த சிறிய அறைக்கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான்.
மேசைக்குப்...
இலக்கணம் – 10
மகளின் கல்யாண விஷயத்தில் மனம் நிறைந்திருக்க எல்லாவற்றையும் தானே பார்த்து பார்த்து செய்து கொண்டிருந்தார் இளமாறன். லலிதாவும் கூட கணவனைக் கிண்டல் செய்தார்.
“மகளுக்கு கல்யாணம்னு வந்தா எல்லா அப்பாக்களுக்கும் பத்து வயசு கூடின போல முதுமையும் கவலையும் வந்து ஒட்டிக் கொள்ளும்.... உங்களுக்கு என்ன பத்து வயசு குறைஞ்சாப் போல சந்தோஷமா...
இலக்கணம் – 12
காலை நேரமாதலால் அந்த பெரிய மாலில் கூட்டம் சற்று சுமாராகவே இருந்தது. இலக்கியாவும், வீணாவும் பிளவுஸ் தைப்பதற்கு அளவு கொடுத்துவிட்டு மாலுக்கு வந்திருந்தனர். வீணா விக்ரமை அலைபேசியில் அழைக்க அவன் அங்கிருந்த காபி ஷாப் ஒன்றில் இருப்பதாகக் கூறி அங்கு வரச் சொன்னான். இலக்கியாவை இழுத்துக் கொண்டு அங்கே சென்றாள் வீணா.
“ஏய்.......
இலக்கணம் – 27
“அங்கிள், கொஞ்சம் உள்ளே வாங்க...” என்றதும் கனகு உள்ளே வர, “இந்த அப்ளிகேஷன்ல உள்ள வரிசைப்படி ஒவ்வொருத்தரா வர சொல்லுங்க...” என்றாள்.
“சரிம்மா...” என்றவர் ஹாலில் காத்திருந்தவர்களிடம் சென்று, ஒவ்வொருத்தராய் உள்ளே அனுப்பினார். கனகை அங்கேயே இருக்கும்படி சொல்ல அவரும் தொழில் சம்மந்தமான சில கேள்விகளை வந்தவர்களிடம் கேட்டார்.
குவாரி, கன்ஸ்ட்ரக்ஷன் தொழிலில் அவர்களின்...
இலக்கணம் – 30
மனதுக்கு பிடித்தவர்களிடமே கோபம், ஆற்றாமை நம்மை மீறி கண்ணீராக வெளிப்படுகிறது... பிறகு கண்ணீர் கரைந்து சிரிக்கவும் வைக்கிறது. இலக்கியாவும் அந்த மனநிலையில் தான் இருந்தாள்.
தன்னுடைய வேதனை தாயையும், பாட்டியையும், துக்கத்தை மறைத்துக் கொண்டு குழந்தையுடன் வளைய வரும் வினோதினியையும் பாதித்து விடக் கூடாது என்பதற்காய் வெளியே காட்டிக் கொள்ளாமல் அவளுக்குள்ளேயே உருகிக்...
“உள்ள வா இலக்கியா... விக்ரம்க்கு கொஞ்சம் உடம்பு முடியலை... அவனை ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போகணும்...” என்றான்.
“ஓ... விக்ரம்க்கு என்னாச்சு... நேத்து ஈவினிங் கூட நல்லாதானே இருந்தார்... காய்ச்சலா...” கேட்டுக் கொண்டே இறங்கியவளிடம் சிறு பதட்டம் வந்திருந்தது.
“இல்லை... கால் வலிக்குதுன்னு சொல்லுறான்... நேத்து கருங்கல் குவாரில பாலன்ஸ் கிடைக்காம விழப் போயிட்டானாம்... உள்ளே வச்ச பிளேட்...
இலக்கணம் – 23
“என்னடி சொல்லற, உன் அத்தான் விக்ரம் பத்தி விசாரிச்சாரா... அதுக்கு என்ன அவசியம்...” அலைபேசியில் இலக்கியா சொன்ன விஷயங்களைக் கேட்டு ஆச்சர்யக் கேள்வி கேட்டாள் வீணா.
“ஆமாண்டி, நான் எப்பவோ ஒரு நாள் சொல்லி இருந்தேன் விக்ரம்க்கு ஏதாவது நல்ல வேலை வேணும்னு... அதை இப்போ கேக்குறார்... ஆனா அவர் குடும்பத்தைப் பத்தி...
இலக்கணம் – 11
இளமாறனின் புகைப்படத்திற்கு மாலை போட்டு, முன்னில் அமைதியாய் தீபம் ஒன்று எரிந்து கொண்டிருக்க, ஊதுபத்தியின் புகையில் அந்த வீட்டின் சந்தோஷமும் புதைந்து போயிருந்தது. ஐந்தாவது நாள் காரியமாய் இளமாறனின் அஸ்தியைக் கரைத்துவிட்டு வந்திருந்தனர்.
கன்னத்தில் கண்ணீரின் அடையாளம். கண்கள் அழுதழுது வீங்கி இருக்க சோகமே வடிவாய் அமர்ந்திருந்தாள் இலக்கியா. எந்த நேரமும் அழுது...
இலக்கணம் – 26
இரு மாதங்களுக்குப் பிறகு...
“அம்மா.... நான் கிளம்பறேன்...” கைப்பையை எடுத்துக் கொண்டே அடுக்களையை நோக்கிக் குரல் கொடுத்தாள் இலக்கியா.
இப்போது அவள் தான் தந்தையின் தொழில் அனைத்தையும் பார்த்துக் கொள்கிறாள். தந்தை இருக்கும்போது அவருக்கு விசுவாசமாய் இருந்த கணக்கர் கனகை சத்யா வேலையை விட்டு நிறுத்தி இருந்தான். அவரை மீண்டும் சேர்த்துக் கொண்டவள் ஒவ்வொரு...
இலக்கணம் – 21
இலக்கியா அவளை எதிர்பாராத பார்வை பார்க்க புன்னகைத்த வீணா, “என்னடி முழிக்கறே... என்னை இந்த நேரத்தில் எதிர்பார்க்கலையா… வீட்டுல போர் அடிச்சது, சரி கொஞ்ச நேரம் உன்னோட இருந்துட்டுப் போகலாம்னு வந்தேன்...” என்றவள், ஹாலில் இருந்த பாட்டியைக் கண்டதும் அவரிடம் சென்றாள்.
“ஹாய் பாட்டி எப்படி இருக்கீங்க... உங்களைப் பார்த்து ரொம்ப நாளாச்சு...”...
இலக்கணம் – 13
கோபத்துடன் எழுந்த விக்ரம் அந்தப் பையன்களின் சட்டையைப் பிடித்திருந்தான்.
“ஒழுங்கு மரியாதையா என்னோட வாங்க.....” என்றவன் திருதிருவென்று அச்சத்தோடு முழித்த இருவரையும் இழுத்துக் கொண்டு அந்தப் பெண்கள் சென்ற பகுதிக்கு சென்றான். என்ன நடந்திருக்கும் என வினோத் ஊகித்து அங்கு செல்லும் முன்பு அவர்கள் கன்னத்தில் இடியென அடி இறங்கியிருந்தது.
“எ... எதுக்கு எங்களை...
இலக்கணம் – 28
இலக்கியாவின் அதிர்ந்த குரலையும், கோபமான முகத்தையும் கண்ட விக்ரம் தொடர்ந்தான்.
“இளா... நான் ஒண்ணும் பெரிய தியாகியோ, ஆசையை துறந்த புத்தனோ இல்லை... என்னோட காதலும் வாழணும்னு சுயநலமா யோசிக்குற சாதாரண மனுஷன் தான்... ஒரு நிமிஷம்... நான் சொல்லுறதை நிதானமா கேட்டுக்கோ... அப்புறம் உன் பதிலை சொல்லு...” என்றவன் அழுகையை அடக்க...
இலக்கணம் – 3
“விக்ரம்.... என்னடா இது.... இப்பல்லாம் நீ ரொம்ப கோபப்படறே....... எதுக்கு அந்தப் பையனைப் போட்டு அப்படி அடிச்சே......” கேட்டுக் கொண்டே விளையாட்டு மைதானத்தின் படிக்கட்டில் அமர்ந்திருந்த நண்பனின் அருகில் அமர்ந்தான் வினோத்.
கோதுமை நிறத்தில் ஆறடி உயரத்தில் லட்சணமாய் இருந்த விக்ரமின் கண்களில் ஒரு வேட்டைப் புலியின் தீட்சண்யம் இருந்தது. அழகான முடியை...
இலக்கணம் – 6
ரொமான்ஸ் நாட்டின் பேரழகன் அவன்......
புன்னகை மாநிலத்தின் பேரரசன் அவன்....
கற்பனை தேசத்தின் காவலன் அவன்.....
உலகின் எட்டாம் அதிசயமாய் - எனை
நொடிக்கு நொடி வியக்க வைக்கும்
அதிசயங்களின் நாயகன் அவன்......
கட்டிலில் படுத்துக் கொண்டு மனம் நிறையக் கனவுகளுடன் கண்களில் வழிந்த காதலுடன் சத்யாவின் புகைப்படத்துக்குக் கீழே மனதில் தோன்றியதை எழுதி முடித்த இலக்கியா, அவனை ரசித்துக்...
இலக்கணம் – 29
இலக்கியா வினோதினியை வீட்டுக்கு அழைத்து வந்ததில் பெரிதாய் உடன்பாடு இல்லாவிட்டாலும் யாருமில்லாத அவளை, பழையதெல்லாம் மறந்து போயிருந்த சூழலில் எப்படியோ போகட்டும் என்று விட்டுவிட லலிதாவின் மனமும் இடம் கொடுக்கவில்லை. என்னதான் அண்ணன் தங்கை என்று சொன்னாலும் விக்ரமின் வீட்டுக்கு அவளை அழைத்துச் செல்வது ஊராரின் வாய்க்கு அவலாக மாறவும் கூடும்....
இலக்கணம் – 5
மேடையில் இருந்து கீழே வந்த விக்ரமிடம் மாணவர்கள் சூழ்ந்து கொண்டு பாராட்டு தெரிவிக்க, நம்ப முடியாமல் அதே திகைப்புடன் அமர்ந்திருந்தாள் இலக்கியா. அவளை இழுத்துக் கொண்டு விக்ரமிடம் சென்ற வீணா, “நாட்டு நடப்பை அருமையா கவிதைல சொல்லிருக்கீங்க அண்ணா..... வாழ்த்துகள்.....” என்றாள். சிறு புன்னகையுடன் தலையசைத்தவன் அவளுக்கு அருகில் நம்ப முடியாத...
இலக்கணம் – 18
விக்ரம் திகைப்புடன் அவளைப் பார்த்துக் கொண்டு அப்படியே நின்றிருக்க அவன் கையில் இருந்த குழந்தை பொக்கை வாயுடன் இலக்கியாவைப் பார்த்து சிரித்தது. கள்ளம் கபடமற்ற அந்த சிரிப்பில் மனதைத் தொலைத்தவள் ஆசையோடு குழந்தையை நோக்கி கை நீட்டினாள்.
“அட... என்னைப் பார்த்ததும் குழந்தை எவ்ளோ அழகா கியூட்டா சிரிக்குது... வாடா செல்லம், ஆண்ட்டி...