Ennithayam Keta Aaruthal
என்னிதயம் கேட்ட ஆறுதல் – 6
வானதிக்கு வேண்டுமானால் இளம்பரிதி
பற்றி தெரியாது போகலாம். ஆனால் அருணுக்கு நன்கு தெரியுமே. அவன் சொல்லியிருப்பானா
என்ன?!! எப்படியும் பிருந்தா அடுத்து இளாவிற்கு தான் அழைப்பாள் என்று தெரியும் ஆக,
அவள் பேசும் முன்னம் தான் பேசிவிட வேண்டும் என்று அருண் நினைக்க,
இளம்பரிதிக்கு விடாது பிருந்தாவும்,
அருணும் அழைப்பு விடுக்க, ‘அட...
என்னிதயம் கேட்ட ஆறுதல் – 5
‘வானதியா??!!!’ என்று அருணின்
உள்ளம் திடுக்கிட, “அ..!! அ... சொல்லுங்க...” என்றான் தன் பதற்றம் மறைக்க
பெரும்பாடு பட்டு.
இருந்தும் அது வானதிக்கு நன்கு
தெரிந்து விட “கூல்...” என்றாள் மெதுவாக.
அருணோ இதற்கு தான் என்ன பதில் சொல்ல
என்பதுபோல் விழித்து நிற்க “ஆக்சுவலி... உங்களோட நான் கொஞ்சம் பேசணும்...” என்று
அடுத்து வானதி...
என்னிதயம் கேட்ட
ஆறுதல் – 4
அருண் மட்டும் இப்போது இளாவின் முன்
இருந்திருந்தால், அவனை என்ன செய்திருப்பான் என்றே தெரியாது இளம்பரிதிக்கு.
அப்படியொரு கோபம் அவன் மீது வந்தது. இப்படி இவனால் தான், தற்போது தனகிந்த
தர்மசங்கடம் என்று இளா எண்ண, அவன் கையில் கார் படாத பாடு பட்டுக்கொண்டு இருந்தது.
வானதியைக் கொண்டு போய் வெற்றிவேலன் வீட்டில்...
மறுநாள் காலை உணவு வேலை
முடிந்து, அனைவரும் கோவில் கிளம்பிட,
திண்டுக்கல்லில் இருந்து, பக்கத்தில் இருக்கும் ஒரு சிறு கிராமம் என்பதால் அவரவர்
காரிலேயே எல்லாம் கிளம்ப, சரோஜா அருணிற்கு சில வேலை சொல்லிக்கொண்டு இருந்தார்.
அவனோ “ம்மா இதெல்லாம் நேத்தே சொல்றதுக்கு
என்ன.. இப்போ கிளம்பிட்டு சொன்னா எப்படிம்மா??!!” என்று சொல்ல,
“இப்போதான்டா நியாபகம் வந்துச்சு..”
என்று சரோஜா சொல்ல,
வெற்றிவேலனோ “சொல்றதை...
என்னிதயம் கேட்ட ஆறுதல் – 3
“வானதிம்மா...” என்றபடி ராதா
வாசலுக்கே வந்துவிட, பிருந்தாவோ கணவனை கேள்வியாய் பார்த்தவள் பின் “வா வானதி...”
என,
“அடடா என்ன வரவேற்பு எல்லாம் பலமா
இருக்கே.. விட்டா மாலை மரியாதை எல்லாம் செய்வீங்க போல...” என்று சொல்லி சிரிக்க,
மற்றவர்கள் தான் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
“என்ன இப்போ.. நான் இப்படி வாசல்லயே
நிக்கனுமா இல்லை...”...
என்னிதயம் கேட்ட ஆறுதல் – 2
“என்ன அருண் சொல்ற நீ??!!” என்று இளா கேட்டமைக்கு, ‘நீயுமாடா...’
என்றுதான் பார்த்தான் அருண்.
இளம்பரிதிக்கு இதில் எவ்வித ஒப்புதலும் இல்லை.
கட்டிக்கொள்ளப் போகும் இருவரில் ஒருத்திக்கு இவ்விசயமே தெரியாது, இவனுக்கோ உடன்
பாடு இருப்பதாய் தெரியவில்லை.
இதில் வீட்டினர் சொல்லி கேட்காதவன் தான் சொல்லி கேட்பானா?!!
அப்படி என்ன இந்தத் திருமணம்...
என்னிதயம் கேட்ட ஆறுதல் – 1
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன்
கோவில்...
அன்றைய
தினம் வெள்ளிக்கிழமை, வழக்கத்திற்கு அதிகமாகவே கூட்டம்
நிரம்பி இருக்க, கோவிலுக்கு வந்திருக்கும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும்
இடத்தினில் நின்றிருந்தான் இளம்பரிதி.
வீட்டினருக்கு இளா... நண்பர்களுக்கு பரிதி...
பிரசாதம் வாங்கவும் நிற்கவில்லை. கொடுக்கவும் நிற்கவில்லை.
கொடுக்கும் இடத்தினில் நின்றிருந்தான். அதாவது கொடுப்பவர்களை மேற்பார்வை பார்த்து.
முகத்தினில் ஒருவித எரிச்சல் இருந்ததுவோ என்னவோ. நமக்கு...