Sunday, April 20, 2025

    Ennithayam Keta Aaruthal

                        என்னிதயம் கேட்ட ஆறுதல் – 4 அருண் மட்டும் இப்போது இளாவின் முன் இருந்திருந்தால், அவனை என்ன செய்திருப்பான் என்றே தெரியாது இளம்பரிதிக்கு. அப்படியொரு கோபம் அவன் மீது வந்தது. இப்படி இவனால் தான், தற்போது தனகிந்த தர்மசங்கடம் என்று இளா எண்ண, அவன் கையில் கார் படாத பாடு பட்டுக்கொண்டு இருந்தது. வானதியைக் கொண்டு போய் வெற்றிவேலன்  வீட்டில்...
                         என்னிதயம் கேட்ட ஆறுதல் – 7 அருணுக்கு துணிந்து எந்தவொரு முடிவிற்கும் வர முடியவில்லை. சரி என்று முழுமனதாகவும் சொல்லிட முடியவில்லை. அவனின் மனது வேண்டாம் என்ற பக்கமே வேகமாய் சென்றுகொண்டு இருக்க, வீட்டிலோ இவனின் மௌனம் கண்டு நல்லமுடிவாய் சொல்லப் போகிறான் என்றெண்ணி சரோஜா, ரேனுவிடம் “ஆள் விட்டு வீடெல்லாம் கொஞ்சம் சுத்தம் செய்யணும்... தட்டு மாத்துறது அவங்க...
                    என்னிதயம் கேட்ட ஆறுதல் – 13 திண்டுக்கல்.. இளம்பரிதியின் வீடு ஆட்கள் நிரம்பி இருந்தது. நடந்தது எப்படியான திருமணமோ, ஆனால் எப்படி நடந்தாலும் திருமணம் என்பது திருமணம் தானே. அதற்கான முறைகள் எல்லாம் செய்திட வேண்டும்தானே. விஜயன் பக்கத்து நெருங்கிய உறவுகளும், மோகனா பக்கத்து நெருங்கிய உறவுகளுக்கும் அழைப்பு விடுத்திருக்க, அவர்களின் வீடு பக்கத்தில் இருக்கும் காலி இடத்தினில் பந்தல் போட்டு விருந்து ஏற்பாடு...
    அத்தியாயம் - 22 அழகிய சங்கமம்...! இருவருக்கும் இடையில் அனைத்தும் அப்படியே தான் இருந்தது. பேசிக்கொள்ள வேண்டியதும் தெரிந்துகொள்ள வேண்டியதும் நிறையவே இருந்தது. இருந்தாலும் வாழ்வின் அடுத்த கட்டம், இந்நிலை என்பது பல விசயங்களுக்கு பதிலை கொடுத்துவிட்டதாகவே தான் இருவரும் நினைத்தனர். உறக்கம் என்பது வெகு நேரம் கழித்தே என்றாலும், உறங்கியதும் வெகு சிறு நேரமே.. விழிப்பு வந்துவிட,...
    அத்தியாயம் – 21 வானதி ஏக முறைப்பில் அமர்ந்திருந்தாள்.. திண்டுக்கல் வந்திருந்தனர்.. வானதி, இளம்பரிதி இருவரும் எண்ணியது போல இருவருக்குள்ளும் தனிப்பட்ட முறையில் எவ்வித பிரச்சனையும் இல்லை. பிறரால் தான் ஏதாவது ஒன்று வந்துவிடுகிறது. இம்முறை வெற்றிவேலனால்..!! அவரோடு பேசிய பின்னே இளா மிகவும் மன குழப்பத்திற்கு ஆளாகி இருந்தான்..!! அவர் கேட்டதை சட்டென்று முகத்தில் அடித்தது போல் மறுக்கவும்...
    அத்தியாயம் - 25             கிட்டத்தட்ட இரண்டு மாதம் கடந்திருந்தது... அனைவரும் எதிர்பார்த்த பல நல்ல விஷயங்கள் நடந்திருந்தாலும், யாருமே எதிர்பாராத சில கசப்புக்களும் நடந்தது நிஜமே.. கோபி, ரேணு மற்றும் நிகிலோடு வெளிநாடு சென்றுவிட்டான். ஆஸ்திரேலியா. அங்கே அவரின் நண்பர் குடும்பம் பல வருடங்களாக ஹோட்டல் தொழில் நடத்தி வர, அவரிடம்...
                       என்னிதயம் கேட்ட ஆறுதல் – 9 ஒருபக்கம் நிச்சய வேலைகள் பரபரப்பாய் நடந்து கொண்டு இருக்க, இளம்பரிதிக்கு பெண் பார்க்கும் படலமும் மிக மும்முரமாய் நடந்துகொண்டு இருந்தது. வெற்றிவேலன் விஜயனிடமும் மோகனாவிடமும் பேசியிருந்தார். போதாத குறைக்கு சரோஜா வேறு “அருண் வேற இளா வேறன்னு நாங்க நினைக்கல.. என்னவோ.. இளாக்கு அங்க வேலை செய்ய பிடிக்கல.. அதுக்காக அப்படியே விட்டுட முடியுமா...
                                                    என்னிதயம் கேட்ட ஆறுதல் – 8 இளாவிற்கு அன்றைய தினம் உறக்கம் என்பது கிஞ்சித்தும் வரவில்லை. மீண்டும் மீண்டும் வெற்றிவேலனோடு பேசியது தான் நினைவில் வந்து அவனை இம்சித்தது. “நான் செய்றேன்...” என்று அவனின் திருமணத்தையும் அவர் முன் நின்று நடந்த முயல, அது அவனுக்கு கசக்கத்தான் செய்தது. இருக்காதா பின்னே..!! எத்துனை பெரிய பாவம் அவனை செய்ய வைத்திருக்கிறார்.. என்ன புரண்டு படுத்தாலும், அவனால் முடியவில்லை..!! எழுந்து...
    அத்தியாயம் –19 எதிர் எதிர் இருக்கையில் இளாவும், தியாகுவும் அமர்ந்திருக்க, இளம்பரிதிக்கு தியாகு கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்ல முடியவில்லை. இதற்கும் இளாவின் கவனிப்பில் தான் ஷாலினி மருத்துவமனையில் இருந்தாள் என்பது அவனுக்குத்  தெரிந்திருக்கவில்லை. இளம்பரிதி நினைத்துக் கூட பார்க்கவில்லை, தனக்கு வாழ்வில் இப்படியொரு சூழல் வரும் என்று. தானுண்டு தன் வாழ்வுண்டு என்று வாழ...
      அத்தியாயம் – 18 கோபி மேலும் மேலும் தவறுகளின் பக்கம் போவதாய் இருக்க, ஏற்கனவே செய்த ஒரு தவறை மறைக்கவே இத்தனை பாடுகள். ஒருவனை உயிரோடு படுக்கவும் வைத்தாகிவிட்டது. இதில் அதற்கும் மேலே வேறொன்று என்றால்?! மகன் தவறான பாதையில் செல்கிறான் என்று தெரிந்த நொடியில் அவனை கண்டித்திருந்தால், தண்டித்திருந்தால் இப்போது கோபிக்கு இப்படியான சிந்தனை வந்தே...
    என்னிதயம் கேட்ட ஆறுதல் – 1 திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில்...        அன்றைய தினம் வெள்ளிக்கிழமை, வழக்கத்திற்கு அதிகமாகவே கூட்டம் நிரம்பி இருக்க, கோவிலுக்கு வந்திருக்கும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் இடத்தினில் நின்றிருந்தான் இளம்பரிதி. வீட்டினருக்கு இளா... நண்பர்களுக்கு பரிதி...  பிரசாதம் வாங்கவும் நிற்கவில்லை. கொடுக்கவும் நிற்கவில்லை. கொடுக்கும் இடத்தினில் நின்றிருந்தான். அதாவது கொடுப்பவர்களை மேற்பார்வை பார்த்து. முகத்தினில் ஒருவித எரிச்சல் இருந்ததுவோ என்னவோ. நமக்கு...
    மறுநாள் காலை உணவு வேலை முடிந்து,  அனைவரும் கோவில் கிளம்பிட, திண்டுக்கல்லில் இருந்து, பக்கத்தில் இருக்கும் ஒரு சிறு கிராமம் என்பதால் அவரவர் காரிலேயே எல்லாம் கிளம்ப, சரோஜா அருணிற்கு சில வேலை சொல்லிக்கொண்டு இருந்தார்.  அவனோ “ம்மா இதெல்லாம் நேத்தே சொல்றதுக்கு என்ன.. இப்போ கிளம்பிட்டு சொன்னா எப்படிம்மா??!!” என்று சொல்ல, “இப்போதான்டா நியாபகம் வந்துச்சு..” என்று சரோஜா சொல்ல, வெற்றிவேலனோ “சொல்றதை...
                      என்னிதயம் கேட்ட ஆறுதல் – 12 இளம்பரிதியின் கரத்தினை வானதி இறுகப் பற்றியிருக்க, அது அவள் தெரிந்து செய்தாளோ, இல்லை அவளையும் அறியாது நடந்த ஒன்றோ தெரியாது. ஆனால் இது தெரிந்த இளம்பரிதிக்கோ சற்றே திக்கென்று தான் இருந்தது. முதலில் வானதி திருமணத்திற்கு, அதாவது இளம்பரிதியை திருமணம் செய்ய சரி என்பாள் என்றே அவன் நினைக்கவில்லை. எப்படியும் அவள் மாட்டேன் என்பாள்...
                        என்னிதயம் கேட்ட ஆறுதல் - 10 சுற்றி இருக்கும் ஆட்கள் பிடிக்கவில்லை எனில், அவர்களிடம் இருந்து விலகிப் போகலாம். சூழல் பிடிக்கவில்லை எனில், வேறெங்கிலும் செல்லலாம். ஆனால், நமக்குள்ளே தோன்றும் எண்ணங்களே நமக்கு பிடிக்கவில்லை எனில்? என்ன செய்திட முடியும்??!!  எங்கு சென்று ஓடி ஒழிய முடியும்??!! வானதி ‘ஜிங்கிள்ஸ்...’லும், இளம்பரிதி ‘மருந்துக்கள்’ ன் பின்னேயும் சென்று தங்களை புகுத்திக்கொண்டனர்.. நேரம் காலம்...
    அத்தியாயம் – 23 மறுநாளே விஜயனும், மோகனாவும் ஜிங்கிள்ஸ்கான புதிய இடத்தினை பார்த்துவிட்டு வர, ஒரு நல்ல நாள் பார்த்து முன் பணம் கொடுத்து பேசி முடித்துவிடலாம் என்று முடிவானது. வானதிக்கும் சரி, இளம்பரிதிக்கும் சரி மனதிலும் உடலிலும் ஒரு புதிய உற்சாகம் தோன்ற, கிடைக்கும் தனிமைகளை எல்லாம் தங்களுக்கு ஏற்ற வகையில் ரசித்துக்கொண்டு இருக்க, ...
    அத்தியாயம் - 26                         இளம்பரிதி நினைத்தது போலவே எல்லாம் நடந்தாலும், அவன் எதிர்பாரா ஒன்றும் நடந்தது. அவன் மட்டுமல்ல யாருமே எதிர்பாரா ஒன்று. அதுதான் இளம்பரிதி – வானதி இருவருக்கும் நடந்தேறிய பிளவு...! ஆம்..! பிளவு தான்.... பிரிவு என்பதனை தாண்டி அதை...
                             என்னிதயம் கேட்ட ஆறுதல் – 5 ‘வானதியா??!!!’ என்று அருணின் உள்ளம் திடுக்கிட, “அ..!! அ... சொல்லுங்க...” என்றான் தன் பதற்றம் மறைக்க பெரும்பாடு பட்டு. இருந்தும் அது வானதிக்கு நன்கு தெரிந்து விட “கூல்...” என்றாள் மெதுவாக. அருணோ இதற்கு தான் என்ன பதில் சொல்ல என்பதுபோல் விழித்து நிற்க “ஆக்சுவலி... உங்களோட நான் கொஞ்சம் பேசணும்...” என்று அடுத்து வானதி...
                         என்னிதயம் கேட்ட ஆறுதல் – 15 இளாவிற்கு கொஞ்சம் அதிர்ச்சி தான். சரோஜாவும் ரேணுவும் வீட்டிற்கு வந்தது. வானதிக்கு கொஞ்சம் சங்கடமும் கூட. தயக்கமும் கூட. “வா... வாங்கத்தை... வாங்கக்கா...” என்றவளுக்கு அதை தாண்டி பேச்சு வரவில்லை. பிருந்தா முன்னிலையில் இளம்பரிதியோடு பேசவே அவளுக்கு மனதில் ஓர் ஓரத்தில் உறுத்திக்கொண்டே இருந்ததுதான். என்ன இருந்தாலும் அருண் அவளின் தம்பி அல்லவா.. தம்பியை மணக்க இருந்தவள்,...
                         என்னிதயம் கேட்ட ஆறுதல் – 14 எத்துனை கடினமான சூழல் என்றாலும், அதனை கடந்து வந்து தானே ஆகிட வேண்டும்.! தேங்கி அதனிலயே நின்றுவிட முடியாதே..! அப்படியொரு முடிவினில் தான் இருந்தான் இளம்பரிதி. எதுவாகினும் சரி நின்று பார்த்துவிடுவது என்று.. யாராகினும் சரி, நீயா நானவென்று பார்த்துவிடலாம் என்று.. அது வானதியானாலும் சரி.. வெற்றிவேலன் என்றாலும் சரி... இல்லை யாரோ என்றாலும் சரி.. மற்ற அனைத்தையும் விட, அவனுக்கு இப்போது அவனின் மன...
    அத்தியாயம் – 20 எதிர்பாராததை எதிர்பார் – திருமண வாழ்வில் இது எத்துனை நிஜம்...! இளம்பரிதி இதனை நன்கு உணர்ந்த தினம் இது என்றுதான் சொல்லிட வேண்டும். ராதாவின் அழைப்பை மறுக்க முடியாது, அதுவும் வானதியும் பைக்கில் செல்வோம் என்று சொல்லியபிறகு, முடியாது என்று சொல்ல முடியாது, இருவரும் கிளம்ப, அங்கே சென்று சிறிது நேரம் வரைக்கும்...
    error: Content is protected !!