Ennavan
பகுதி - 7
அனுவின் விழிகள் அவன் அறியாமல் ஆதியை படம் பிடித்துக் கொண்டிருந்தன. இவர் ஏன் என் மேல் இவ்வளவு அக்கறை எடுத்துக் கொள்கிறார்? நான் அவர் மனைவி என்பதனாலா இல்லை அவருக்கு என்னை பிடிக்க ஆரம்பித்து விட்டதா? சிறிது நாட்கள் கழித்து என்னை பிடிக்கவில்லை என்று கூறினால் என்ன செய்வது? இவருக்கு சற்றும்...
பகுதி-6
“எழுந்திருங்க…” என்று காப்பி ட்ரேயை கட்டில் பக்கத்தில் இருந்த டேபிளில் வைத்துவிட்டு அவன் அருகில் சென்று சிணுங்கினாள் அனு. அவன் தனக்கும் இந்த உலகிற்கும் சம்பந்தம் இல்லை என்ற ரீதியில் ஆழ்ந்த நித்திரையில் இலயித்திருந்தான்.
வேறு வழி தெரியாமல் விழி பிதுங்கியவள் அவன் புறம் நெருங்கி அவன் தோள் பற்றி உளுக்கினாள். உடலில் எவ்வித அசைவும்...
பகுதி - 8
“கயல் இன்றைக்கு நான் உன்னுடன் இந்த ரூமில் தங்கிக் கொள்கிறேன். நாளை முதல் நீ தனியாக படுக்க பழகிக்கொள். அனுவிற்கு திருமணமாகி விட்டது. இனி அவள் கணவனுடன் தான் இருக்க வேண்டும். பயமாக இருந்தால் …” என்ற சாரதாவை குறுக்கிட்ட கயல் “பயம் எல்லாம் இல்லை ஆன்டி. எனக்கு நீங்கள் சொல்வது...
பகுதி - 9
அவர்கள் சென்ற பின் கிட்சனில் தனக்கு தோசை சுட்டுக் கொண்டிருந்தவளை சத்தம் இல்லாமல் பின்னிருந்து அணைத்தான் ஆதி. நேற்று இருந்த தயக்கங்கள் நேற்றோடு போயிற்று, இருவருக்கும்.
தன் இடை மேல் கரம் பட்டதும் பயந்து திரும்பியவள் “நான் பயந்தே போய் விட்டேன். ஏன் இப்படி செய்தீர்கள்?” என்று அவள் சீற சற்று சுதாரித்தவன்,...
பகுதி - 10
அவள் மனதை அரிக்கும் விஷயம் அறிய ஆவலாய் இருந்தாலும் அவள் சோர்வுற்றதை கண்டு ஒரு ஹோட்டலில் வண்டியை நிறுத்தினான் ஆதி.
“வா, இங்கேயே மதிய உணவு சாப்பிட்டு விட்டு கிளம்பலாம்.” என்று கூறி அவள் கரம் பற்ற முனைந்தவனை சிடுசிடுத்தாள் அனு, “என்ன பண்றிங்க? இப்படி வெளியில் எல்லாம் என்னை தொடாதீர்கள்.” என்று...
பகுதி - 11
மதிய நேர களைப்பிற்கு சற்று ஓய்வு எடுக்க ஆதி திவானில் சாய, அனுவையும் தன் மேல் சாய்த்துக் கொண்டான்.
“நான் உங்களிடம் ஒன்று கேட்கவா?” என்று எதற்கோ அடித்தளம் போட்டாள் தன் முகத்தை அவன் மார்பிலிருந்து மேல் எழும்பி.
தலையசைத்து அவளை பேசத் தூண்டியவன், அவள் என்ன கேட்கப் போகிறாள் என்ற ஆர்வத்தோடு தன்...
பகுதி - 34
அணைப்பிலிருந்து வெளிவந்தவள், “ஆமாம் அங்கு வெளியில் இருக்கும் போது கயலிடம் என்ன சொன்னீர்கள்? ஹான்… நினைவு வந்துவிட்டது... உன் அக்கா போல் மறை கழன்று விட்டதா என்றா கேட்டீர்கள். இரண்டு அடி போட்டால் எல்லாம் சரியாகிவிடும்.” என்று முறைக்க அவள் கரங்கள் ஏற்கனவே அவனை பதம் பார்த்தன.
“உனக்கு மறை டைட்டா இருக்கிறது...
பகுதி - 12
“அக்கா இன்னும் மாமா வரவில்லையா? கொஞ்சமாவது சாப்பிடு அக்கா மணி பத்தாகிறது பார்.” என்று தன் அறையிலிருந்து வெளிவந்து மனம்தாளாமல் கயல் கேட்க அனுவோ,
“ப்ச்… எனக்கு இப்போது வேண்டாம். அவர் வரட்டும், நான் அவருடன் சாப்பிட்டுக் கொள்கிறேன்.” என்று விட்டேற்றியாய் பதிலளித்தாள் தன் பார்வையை வாயிலிலிருந்து பிரிக்காது.
சட்டென்று ஏதோ நினைவு வந்தவளாய்...
பகுதி - 20
உள்ளே கால் எடுத்து வைத்த நொடி பாப் மற்றும் பலூன் ஒன்று அவர்கள் இருவரின் மேல் வெடித்தது. அதில் பயந்த அனு கண்களை மூடி அவன் தோளில் முகம் புதைக்க அதில் சற்று பின் நோக்கி நகர்ந்தனர்.
“வெல்கம் Mr. & Mrs. ஆதித்யா” என்று சத்தமாக கத்தும் சத்தம் கேட்டு முகம்...
பகுதி - 14
“என்ன?” என்று முகம் சுளித்தவன், “போனுக்காகவா இவ்வளவு அழுகை?” என்று லேசாய் முறுவலித்து அவள் கன்னம் ஏந்தி உப்பு நீரை துடைத்தான், “சரி ஏன் உடைத்தாய்?” என்று வினவ மீண்டும் அவள் கண்கள் உவப்பு நீரை இறக்க தயாராகியது.
“இதற்கெல்லாம் ஏன்டி இவ்வளவு அழுகிறாய்?” என்று சலித்தவன் கோபம் கொள்வதற்குள் முந்திக்கொண்டாள், “எனக்கு...
பகுதி - 27
“ஏன்டா… உனக்கே இது ஓவராக இல்லை. சிஸ்டெரை அப்படி பார்க்க முடியவில்லை என்றால் ஏன் அங்கு விட்டு வந்து இங்கு புலம்புகிறாய்?” என்றது யாருமல்ல முரளியே. ஆதி குறுக்கும் நெடுக்கும் நடந்து அறையை அளந்து கொண்டிருப்பதை பார்த்து தான் அவன் இப்படிக் கேட்டது.
“எனக்கும் ஒன்றும் புரியவில்லைடா… என்னுடைய காதல் தரும் அருகாமை...
பகுதி - 17
“என்ன சொல்கிறான் உங்கள் மகன்?” என்று வினவினார் ரேகா முகத்தை தன் தோளில் இடித்துக்கொண்டு.
“அவன் வர மாட்டான்…” என்று கோபால் சொல்லி முடிப்பதற்குள் ரேகா குறுக்கிட்டார், “அதானே பார்த்தேன்... அவன் பெண்டாட்டி தான் அவனை முந்தானையில் முடிந்து வைத்திருக்கிறாளே. போதாகுறைக்கு நீங்களும் நேற்றிலிருந்து அவள் புராணம் பாடுகிறீர்கள்.” தன் பேச்சை யாரும்...
பகுதி - 13
“என்னடி வாய் ரொம்ப நீளுகிறது? உன் தந்தையை பற்றி கொஞ்சமும் கவலை இல்லாமல் இங்கே வந்து உட்கார்ந்திருக்கிறாய். உன் நடவடிக்கை எதுவும் சரி இல்லைடி. ஒழுங்கு மரியாதையாய் வீட்டிற்கு வரும் வழியைப் பார்.” என்று மறைமுக மிரட்டல் விடுத்தார் அவள் அத்தை.
“என் வீட்டில் தான் நான் இருக்கிறேன். நீங்கள் வேண்டுமானால் அவரை...
பகுதி - 18
“ஓ… அப்பொழுது… முரளி அண்ணா இதைச் சொல்லத் தான் அன்று உங்களை அழைத்தாரா?” எனவும் அவன் தலை தன்னால் ஆடியது. இரண்டு நிமிடம் மௌனம் காத்தவள் மனம் நிலாவிற்காக வருந்தியது.
“பாவம் அவர்கள்… இவ்வளவு நாள் உங்களை விரும்பி இருப்பார்கள். ப்ச்...பெற்றோர்கள் செய்த தவறால் பாதிக்கப்பட்டது என்னவோ நிலா அக்கா தான். அவர்...
பகுதி - 15
அழைப்பு மணி ஒலி கேட்டு விழித்த கயல் தன் தமக்கை உறங்குவதை கண்டு அவளை எழுப்ப மனம் இன்றி தானே கதவை திறக்க அங்கு சோர்வாக நின்றிருந்தான் ஆதி.
“மாமா…” என்று அவனுக்கு வழி விட அவன் யாரையும் கண்டுகொள்ளாமல் நேராக தன் அறையில் புகுந்து தன் மேலாடை துறந்து கட்டிலில் தலை...
பகுதி - 16
தன் பார்வையில் கயல் பட்டதும் வேகமாக தன் பாவனையை மாற்றியவள் அவன் மீது ஒரு பார்வை வீசிவிட்டு அவன் மார்பில் முகம் புதைத்து இடையை கட்டிக்கொண்டாள், “தாமதமாக வந்ததற்கெல்லாம் ஏன் மன்னிப்பு கேட்கிறீர்கள்? இன்றாவது இங்கேயே தங்குகிறீர்களே… அதுவே போதும் எனக்கு.” என்றவளை நம்பாமல் குனிந்து பார்த்தவன் இது கனவா இல்லை...
பகுதி - 33
“என்ன அமைதியாகிவிட்டீர்கள்?” என்றவள் குரல் காட்டமாகவே வந்தது.
“என்ன சொல்ல வேண்டும் என்று நீ எதிர்பார்க்கிறாய்?” என்றான் தனக்குள் இருந்த உணர்ச்சித் தடுமாற்றத்தை மறைத்துக் கொண்டு.
“நீங்கள் தான் சொல்ல வேண்டும். எனக்கு தெரியாமல் என்னென்னவோ நடக்கிறது.” என்று அதே கோபத்துடன் புருவத்தை உயர்த்த கயல் அவளருகில் சென்றாள்.
“அக்… அக்கா… சாரி… எல்லா தவறும்...
பகுதி - 19
“ஷிட்… ஷோ கேன்சல் ஆகிவிட்டது.” என்று ஆதி கடுப்பாக அனு முகம் கூம்பிவிட்டது.
அவனின் முகபாவனையை கவனித்து தன்னை சமன்படுத்தியவள், சமாளிப்பாக அவனை ஏறிட்டாள், “பரவாயில்லை வேறு எங்காவது போகலாம்…”
“இல்லைடா… உன்னை ஆசையாய் கூப்பிட்டு வந்து விட்டு இப்போது பார்…” தன் ஆசை பொய்த்தது மட்டுமில்லாமல் அனுவின் எதிர்பார்ப்பும் இப்படி சப்பென்று ஆகிவிட்டதே...
பகுதி - 21
“என்ன...?” என்று ஆதியும், கோபாலும் சேர்ந்து அதிர ரேகா இருவரையும் முறைத்தார்.
“நிலா இதெல்லாம் தவறு. வேண்டுமென்றால் அங்கு வந்து இரு, இங்கு எதற்கு?” என்றார் கோபால் முன்னெச்சரிக்கையாக.
“அத்தான் எங்கு இருக்கிறாரோ அங்கு தான் நானும் இருப்பேன். இனியும் நீங்கள் என்னை ஏமாற்றமுடியாது.” என்றாள் நிலா தீர்க்கமாக.
“உமா… என்ன இதை எல்லாம் நீ...
பகுதி - 26
“சார்ஜ் போட சொன்னால் என்ன அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாய்?” என்றான் குளித்து முடித்து அவள் அருகில் வந்து.
“உங்களுக்கு அழைப்பு வந்தது.” என்றவள் கடகடவென நிலா கூறிய அத்தனையும் ஒப்புவித்தாள்.
“நல்லதாகப் போயிற்று. இனி நமக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.” என்றுக் கூறி அவளை பின்னிருந்து அணைத்தான்.
“ம்… எப்படியோ அக்கா சரியாகிவிட்டார்கள்.” என்று...