En Nenjil Ser Yavvanaa
அத்தியாயம்-4
நல்ல உறக்கத்தில் இருந்த யவ்வனாவின் நாசியில் காஃபி மனம் கமழ அதனை வாசம் பிடித்தபடி தூக்கத்திலே புரண்டு படுத்தவளின் கையில் 'சுளீரென்று..’ வலி எடுக்க பதறியெழுந்து அமர்ந்து வலித்த இடத்தில் பார்த்தபோது தான் கையில் இருந்தக் கட்டு நேற்று நடந்தவற்றையும் தான் இருக்கும் இடத்தையும் உணர்த்தியது.
வலித்த இடத்தில் நீவிவிட்டப்படி சுற்றும் முற்றும் பார்த்தாள்.நேற்று அமர்ந்திருந்த...
அத்தியாயம்-7
"பாடிகார்ட்-ஆ..?? அதற்கென்ன அவசியம்..”
என்றவளை தமிழ் ஓர் பார்வை பார்க்க,
"இல்லங்க..நான் பார்த்த வரை எந்த வம்பு தும்பும் இல்லாமல் அமைதியா ரொம்ப அழகா அவங்க வாழ்க்கைமுறை இருக்கு..அவங்களுக்கு என்ன ஆபத்துனு.."
என்று அவசரமாய் அவள் சமாளித்தாள்.
"ஐயா எப்பவும் எளிமையா தான் இருப்பாரு...அதுக்குனு சாதாரண ஆளுனு நினைச்சிடாதீங்க..இந்த ஊருல நடக்குற எந்த நல்ல விசயமும் அவர் பங்கு இல்லாம...
அத்தியாயம்-6
நுழைவாயிலை தாண்டி சில அடிகள் வைத்ததும் தான் பிடித்து வைத்திருந்த மூச்சை விட்டாள்.
“யப்பா..சாமி..வீடாய்யா இது..எத்தனை செக்போஸ்ட்..வெளியே வரதுக்குள்ள நம்ம தாவு தீர்ந்திடுச்சு..தேவையா எனக்கிதுலாம்...இதுல புதுசா வேற ஒரு என்ரீ..அந்த தாடிகாரனும் அவன் பார்வையும்..இருக்குற வில்லனுங்களோட மல்லுகட்டவே எனக்கு நேரம் இல்ல..இதுல நியூ என்ரீ வேற….கடவுளே..”
என்று தலையிலே தட்டிக்கொள்ள அருகில் சைக்கிளில் வந்த நபரோ அவளை...
அத்தியாயம்-22
அம்மணி ஆட்டை திருடிய கள்வனாய் திருதிருவென முழித்தாலும்,
“உண்மையாவே எனக்கெல்லாம் மறந்திடுச்சு..”
என்று சின்ன குரலில் சொல்ல,
"இன்னொரு வாட்டி பொய் சொன்னே,..பல்லை கழட்டி கைல கொடுத்திடுவேன்.."
என்று அவன் கையோங்கவும்,
"அய்யோ நிஜமா தான்.."
என்று அவசரமாய் தடுத்து நேற்றில் இருந்து நடந்ததை கூறினாள்.அவள் கூறுவதை எல்லாம் பொறுமையாய் கேட்டவன்,
"அப்புறம் ஏன் என்னை தெரியலையான்னு கேட்டதுக்கு ஆமான்னு சொன்ன.."
என்று கேட்டான்.
"நீங்க என்மேல...
"ஆளே மாறிட்ட தமிழு...வாட்ட சாட்டமா நல்லா ஹீரோ மாதிரி இருக்க போ.."
"நான் மாறினது இருக்கட்டும்..நீ தான் ஆள் அடையாளமே தெரியாம மாறியிருக்க..உன் வாய்ஸை வச்சு தான் கணபதினே தெரிஞ்சிது..ஏன்டா இந்த கோலம்..உலக உருண்டையாட்டும் ஆகிட்ட..இதென்ன இந்த வயசுலே தொப்ப..."
என்று குறுஞ்சிரிப்போடு சொல்லி அவன் வயிற்றில் இடிக்க,
"நானா வச்சிக்கிட்டேன்..?தானா வந்திடுச்சு.."
என்று கணபதியும் சிரிக்க ஆங்காங்கே நின்ற...
அத்தியாயம்-8
"கவின் கிளாஸ்.. எங்கே மேடம்.."
பார்வையை சுழற்றிய யவ்வனா கேட்க,
"அதோ அந்த ப்ளாக் தான்.."
என்ற வித்யாவின் குரலிலோ மெல்லிய பதட்டம்..
அதை உணர்ந்த யவ்வனாவிற்கு புரியவில்லை எதற்கு இந்த பதட்டமென்று..
பள்ளிக்கு வந்ததில் இருந்தே வித்யா பதட்டத்தோடே இருப்பதை கண்டு அதை அவளிடமே கேட்டாள்.
"ஏன் ஒருமாதிரி இருக்கீங்க.. எதாவது பிரச்சனையா.."
"ம்ம்..எல்லாம் நான் பெத்து வச்சிருக்கேனே..அதை நினைச்சு தான்..இன்னைக்கு என்னென்ன...
"ஸ்கூல் முடியிற நேரமாச்சு..நான் போய் மதுவையும் அழைச்சிட்டு வரேன்..நீங்க இங்கேயே வெய்ட் பண்ணுங்க.."
என்று கூறி உள்ளே செல்ல தன் ஸ்கூலின் அருமை பெருமைகளை அளந்துவிட்ட கவினிற்கு செவி சாய்த்து வேடிக்கை பார்த்தக் கொண்டிருந்தவளை,
"யவ்வனா.."
என்று ஆழ்ந்து அழைக்கப்பெற்ற குரலில் சிலிர்த்தவள் சட்டென்று திரும்பி பார்க்க அதே அசரவைக்கும் புன்னகையோடு நின்றிருந்தான் தமிழ்.
'அய்யோ...இப்ப யாரு இவன புன்னகை...
அத்தியாயம்- 10
அந்தி சாயும் வேளையில் மாடியில் காய வைந்திருந்த துணிகளை வித்யா எடுத்துக் கொண்டிருக்க அருகில் பந்தலால் சிறு குடில் போல் அமைக்கப் பட்டிருந்த இடத்தில் அனு தலையை தாங்கியபடி அமர்ந்திருக்க அவளுக்கு பின்புறம் இருந்த குட்டிச்சுவரை பிடித்தபடி வெளியே வேடிக்கை பார்த்தபடி நின்றாள் யவ்வனா.
துணிகளை கையில் ஏந்தி வந்த வித்யா அனுவின் அருகில்...
அத்தியாயம்-21
தேர்தல் முடிவுகள் வெளியாகி இரண்டு நாட்களாகியும் அதன் பரபரப்பு இன்னும் தமிழகம் எங்கும் குறையவில்லை.
சென்ற முறை ஆட்சியில் இருந்த அதே கட்சியே இம்முறையும் பெரும்பாலான விழுக்காடுகளில் வெற்றி வாகையை சூடியிருந்தது.
கட்சி தொண்டர்களின் ஆர்பட்டமும் கொண்டாட்டமும் எல்லா ஊடகங்களிலும் ஒலித்துக் கொண்டிருக்க அவர்களுக்கு நேரெதிராய் கொதித்து போயிருந்தார் சிவபாலன்.
ஆம்..அவர் தொகுதியில் அவர் பெரும் வாக்கு வித்தியாசத்தில்...
அத்தியாயம்-26
திருமண மண்டபம் சொந்தங்களாலும் சுற்றத்தாராலும் நிரம்பி வழிய எஙகும் மேளதாளம்,நாதஸ்வரம் என்று மங்களகரமான இசை ஒலிக்க தமிழழகன்-யவ்வனா திருமணத்திற்கு நம் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றனர்.அதனை ஏற்று நாமும் உள்ளே சென்றால் அடடடடே!!!நம் கண்களை நிறைப்பதுபோல் பட்டுவேஷ்டி சட்டையில் மணமேடையில் மாப்பிள்ளைக்கே உரிய கம்பீரத்தோடு ஆணழகனாய் அமர்ந்திருந்தான் தமிழ்.
ஐயர் சொன்ன மந்திரங்களை கர்ம சிரத்தையாய் செய்துக்கொண்டிருந்த...
அத்தியாயம்-12
"ம்ஹூம்..ம்ஹூம்..ம்மா..."
என்று சிணுங்கிய மகனை உறுத்து விழித்த வித்யா,
"மூச்...வாயை தொறந்த பிச்சிடுவேன்.."
என்று மிரட்டி அவனுக்கு பள்ளி சீருடையை அணிவித்தாள்.
"நேத்து நான் கேட்டதற்கு சரின்னு சொன்னீங்கள்ல.. அப்புறம் ஏன் அப்பா விட்டுடு போனாரு.."
என்று அழுகைக்கு பிதுங்கிய உதட்டோடு கவின் கேட்க,
"நீ தான்டா..எழுப்ப எழுப்ப நல்லா தூங் இப்போ என்னை கேட்குறீயா.."
என்றாள்.
மனோகரை விமான நிலையத்தில் இருந்து ரிசிவ் செய்ய...
அத்தியாயம்-23
நாட்கள் அமைதியாய் நகர யவ்வனாவின் வாழ்க்கை பழைய நிலைக்கு திரும்பியிருந்தது.
சில நாட்களுக்கு மேல் அவளுக்கு வீட்டில் சும்மா இருக்க பிடிக்காமல் மீண்டும் வேலைக்கு முயற்சிப்பதாக கூறவும் அவள் தந்தை ஒரேயடியாக மறுத்துவிட்டார்.ஏற்கெனவே அதனால் வந்த வினை தான் என்ற எண்ணம் பதிந்துவிட்டதால் அவருக்கு அவளை அனுப்புவதில் விருப்பம் இல்லை.
எனவே யவ்வனாவும் தாய் தந்தையோடு வயலிற்கு...
அத்தியாயம்-16
தனக்கு நேராக அதிவேதமாய் சுழன்றுக் கொண்டிருந்த மின்விசிறியை கண்சிமிட்டாமல் கட்டிலில் படுத்திருந்த யவ்வனா பார்த்துக் கொண்டிருந்தாள்.அதன் வேகத்திற்கு ஈடாக அவள் சிந்தனை சுழன்றுக் கொண்டிருந்தது.
ஆனால் என்ன யோசித்தும் அவளுக்கு எதுவும் தோன்றவில்லை.பிச்சு போட்டதுப்போல் அங்கொன்றும் இங்கொன்றுமாக நினைவு வர அப்படி வரும் நினைவுகளையும் இன்னது என்று புரிந்துக் கொள்ள முடியாமல் மண்டை காய்ந்தது.
அவளை மேலும்...
அத்தியாயம்-15
அனைத்தையும் சொல்லிவிடவில்லை என்றாலும் சொல்ல வேண்டியவையை நடராஜன் சொல்ல அனைவருக்குமே அதிர்ச்சி தான்.பூங்கொடி கண்கள் குளமாக கணவனை பார்க்க அவர் ஆதரவாய் தலையை தடவிக் கொடுத்தார்.
அனுவோ தந்தையின் மறுபக்கத்தை அறிந்ததில் அதிர்ந்தவள் ஒரு மகளாய் தன் தாயை நினைத்து வருந்தினாள்.அவர் வாழ்கின்ற வாழ்க்கைக்கு தான் என்ன அர்த்தம் என்று மனம் வெதும்பியது.
அனைவரின் சிந்தையிலும் ஏதேதோ...
அத்தியாயம்-17
தமிழின் வீட்டில்...
நாம் இங்கு வராத சில நாட்களில் அவன் வீட்டின் முன்புறமிருந்த செடிகளில் அப்பொழுது புதியாய் மொட்டு விட்டிருந்த பூக்கள் தற்சமயம் வண்ண வண்ண பூக்களாய் மாறியுள்ளது.மரம் செடிகள் வளர்பதில் வசுமதிக்கு ஆர்வம் அதிகம்.முன்பைவிட தற்போது புதிதாய் இரண்டு மரக்கன்றுகளை நட்டிருக்கிறார்.மேலும் வீட்டிற்கு புதிதாய் பெய்ன்ட் அடித்திருப்பார்கள் போலும் வீட்டின் வண்ணமும் மாறியிருக்க ஆனால்...
அத்தியாயம்-14
ஆகிற்று..கவினும் மதுவும் தொலைந்து இத்துடன் ஒரு நாள் பொழுது கழிந்து விட்டது.ஆனால் அவர்களை பற்றிச் சிறுத் தகவலும் கிடைக்கவில்லை.அவன் கொடுத்த கெடு முடிய இன்னும் 24 மணி நேரம் மட்டுமே இருக்க வீடே துக்க வீடாய் பொழிவிழந்து போனது.
தன் தாயின் மடியில் கவிழ்ந்திருந்த வித்யா அழுதே கரைந்திருந்தாள்.
'போமாட்டேனு சொன்ன பிள்ளைய கட்டாயப்படுத்தி போக வச்சேனே...என்னால...
அத்தியாயம்-25
தமிழ் யவ்வனாவின் நிச்சயதார்த்தம் முடிந்து ஒருவாரம் ஓடியிருக்க அன்று தமிழ் யவ்வனாவை தன்னோடு வெளியே அழைத்து வந்திருந்தான்.
ஆனால் அன்றைய நாள் போல் இன்று யவ்வனா அப்பயணத்தை இரசிக்கவில்லை.கடுகடுவென்ற முகத்தோடு வாய்க்குள் ஏதோ முனங்கி கொண்டே வந்தாள்.
"ஏன் தான் இவருக்கு புத்தி இப்படி போதோ..நான் கேட்டேனா...ஏன் இந்த தேவை இல்லாத வேலை..இந்த மனுஷன வச்சிக்கிட்டு.."
என்று திட்டிக்கொண்டே...
அத்தியாயம்-18
"ஏய்..நில்லு..இங்க என்ன பண்ற நீ..."
மாடி படிக்கட்டில் சாவகாசமாய் இறங்கி வந்த யவ்வனாவை பார்த்த கணபதி கேட்டுக்கொண்டே அருகில் சென்றான்.
"ஒரே இடத்துல இருக்க போர் அடிக்குது ப்பா..அதான் சுத்தி பார்க்கலாம்னு.."
"சுத்தி பார்க்க இதென்ன டூரிஸ்ட் ஸ்பார்ட்டா.. இங்கெல்லாம் வராத எட்டனா..வெளியேந்து நாலு பேரு வந்து போற இடம்...வா முதல்ல.."
என்றபடி அவளை அங்கேந்து வேகமாய் அப்புறப்படுத்த
அவளும் பெருசாக...
அத்தியாயம்-9
அதனை கண்டதும் தமிழ் ஆத்திரம் பொங்க,
"ம்மாஆஆ.."
என்று கர்ஜித்தவன் வேகமாய் சென்று அந்த பையை எடுத்து மூடினான்.
"உனக்கு ஒருவாட்டி சொன்னா புரியாதா..அன்னிக்கே என் ரூம்ல எதையும் தொடாதேனு சொன்னேன்ல...எதுக்கு வந்த..எல்லா விசயத்துலையும் தலையிடாதனு சொன்னா கேக்குறீயா .."
என்றவனை தீப்பார்வை பார்த்தவர் வேகமாய் எழுந்துவந்து அவன் சட்டையை பிடித்தார்.
"ஏன் நான் தலயிடமா வேற எவ தலயிடுவா..இத மறைக்க...
அத்தியாயம்-19
"இந்த வீடு தாங்க.."
என்று அடையாளங்காட்டிய சிறுவனுக்கு நன்றிக் கூறியவன் தன் பைக்கை வீட்டின் அருகே நிறுத்தினான்.
சிறிய வீடு தான்.ஆனாலும் அழகாக இருந்தது.அவன் வாசலை நெருங்கிய சமயம் உள்ளே ஒரே சத்தமாய் இருக்க ஏதோ சண்டை போல என்பதை உணர்ந்தவன் மேற்கொண்டு செல்ல தயங்கினான்.
'எப்படி நீங்க இவ்வளவு பெரிய விசயத்தை மறைக்கலாம்..நாங்களும் இந்த வீட்டு பொண்ணுங்க...