En Kalla Kaamugane
“ரசம் வச்சுருக்கேன், மறுசோறுக்கு போட்டுக்கோ” அவள் சொல்ல, மெல்வதையும் பிசைவதையும் நிறுத்திவிட்டு நிமிர்ந்தவன், “ஏன் தொன தொனங்குற?” என்றான் எரிச்சலாய். இதற்கு முன்னும் இவன் பேச்சு இப்படி தான் என்றாலும், இப்போது புதிதாய் அவளுக்கு முகம் வாடியது.
“சரி நான் பேசல, நீ தின்னு” முணுமுணுத்தாள்.
“நீ கிளம்பு, நான் பாத்துக்குறேன்” என்றவன், நீ போனால் தான்...
12
மறுநாள் பொழுது விடிந்து சில மணி நேரங்கள் கடந்தே கண் விழித்தாள் நிம்மதி. உறங்கியதே அதிகாலையில் தான் என்பதால் கண்ணெல்லாம் உறக்கம் பத்தாமல் எரிந்தது. அதோடு, உடல் வேறு அடித்து போட்டதை போல எல்லா பக்கமும் வலி எடுக்க, சுனக்கமாய் எழுந்து அமர்ந்தவள் முகத்தில் மட்டும் கூடுதல் பொலிவு.
இன்னமும் வெட்கங்கள் மிச்சம் இருக்க, மூலையில்...
11
வெளியே மழை அடித்துக்கொட்ட, உள்ளே இருவரும் ஆளுக்கு ஒருபுறமாய் படுத்திருக்க, நடுவே கொஞ்சமாய் மல்லிகைப்பூ தூவி, விரித்து வைத்திருந்த கல்யாண பாயை பார்த்துக்கொண்டே, தனக்கு முதுகு காட்டி படுத்திருந்தவனை பெருமூச்சோடு ஏறிட்டாள் நிம்மதி.
அவன் தூங்கவில்லை என்று தெரிந்தாலும், அசைவே இல்லாமல் படுத்துக்கிடந்தவனை, ‘எப்படி டா வழிக்கு கொண்டு வரது?’ என்ற எண்ணத்தில் தான் தூங்காமல்...
அவன் கோபம் யாருக்கு புரிந்ததோ இல்லையோ நிம்மதிக்கு நன்றாகவே புரிந்தது.
‘இன்னைக்கு தான் இறங்கி வந்தான், திரும்ப மலையேறிடுவானோ?’ என்ற பதைப்பில் அவள் இருக்க, “இப்ப நான் என்ன செய்யணும்?” என்றான் அவன் அடக்கி வைத்த ஆத்திரத்துடன்.
“என் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கணும்” என்று தாஸ் சொல்ல, அவரை சில நொடிகள் அசையாமல் பார்த்தவன், “பண்ணிக்குறேன்!” என்றுவிட்டான்.
அவனிடம்...
10
ஏலம் ஆரம்பித்தபோது வீரப்பனுக்கு போட்டியாய் இன்னும் சிலரும் கேட்க ஆரம்பிக்க, விலை மூன்று லட்சத்தை நெருங்கியது. மூன்றை தாண்டியபோது, ஏலம் கேட்கும் குரல்கள் ஒன்று இரண்டாக குறைந்துப்போனது. மூன்று, மூன்றரை லட்சத்தை தொட்டபோது வீரப்பனின் குரல் தான் ஓங்கி ஒலித்தது.
அத்தனை நேரமும் குனிந்த தலை நிமிராமல் எதையோ யோசித்தவனாகவே அமர்ந்திருந்தான் அண்ணாமலை.
“காசு வச்சுக்கிட்டு ஏன்டா...
9
அன்று காலையில் இருந்து மட்டுமே ஒரு ஐம்பது முறையாவது அந்த ஐவரின் போனில் இருந்தும் ஆழியூர் அய்யாக்கண்ணுவுக்கு அழைப்பு போயிருக்கும். ஒருமுறை கூட தவறாது அழைப்பை எடுப்பவன், “இதோ வந்துட்டேன்... கிட்ட வந்துட்டேன்! காசெல்லாம் முன்னூறு ரூவா நோட்டா இருக்கு, அதை ஆயரூவா நோட்டா மாத்திட்டு நிக்குறேன்... நீ பத்து எண்ணிட்டு திரும்பிப்பாரு, உன்...
8
“அட, வெறும் மூணு லட்சத்துக்கா இத்தனை தயங்குற நீயி?” என்று கேட்டுவிட்டு அடக்கமாட்டாமல் சிரித்தான் அய்யாக்கண்ணு. ஆழியூரில் லோக்கல் பைனான்ஸ் நடத்தி வருபவன். அவனுக்கு அண்ணாமலையை ஓரளவு தெரியும் என்பதால் அவன் பணம் கேட்டதையே ஆச்சர்யமாய் பார்த்தவன், அவன் கேட்ட தொகையை அறிந்ததும் இன்னுமே சிரித்தான்.
எதிரே இருந்த அண்ணாமலைக்கும் பரத்துக்கும் அவன் சிரிப்பில் துளிக்கூட...
7
குளத்திற்கான ஏலம் இன்னும் பத்து நாட்களில் என முடிவு செய்யப்பட்டிருந்தது.
அன்று காலை தன் கடையில் நின்று வியாபாரம் பார்த்துக்கொண்டிருந்த அண்ணா’வின் அலைபேசி ஒலிக்க, ஐயப்பன் தான் எடுத்தான். பேசிவிட்டு வைத்தவன், கறியை வெட்டிக்கொண்டிருந்தவனிடம், “தலைவர் உன்னை வீடு வரைக்கும் வர சொல்றாரு அண்ணா!” என்றான்.
‘ஏன்?’ என்ற பார்வையோடு அண்ணா திரும்ப, “ஏதோ பேசணுமாம், நீ...
6
“ஏன்டா யோசிச்சு தான் பேசுறியா நீ!?” பரத் தன் முன்னே ஒரு முடிவுடன் அமர்ந்திருந்தவனை பார்த்து திகைப்பாய் கேட்க, மற்ற மூவரின் விழி மொழிகளும் அதே கேள்வியை தான் கேட்டது.
“யோசிக்காம தான் முடிவா சொல்றேனா நான்?” என்று திருப்பி கேட்டான் அண்ணாமலை.
“ஏற்கனவே கோழி, ஆடு, காடைன்னு நிக்காம ஓடிட்டு இருக்கோம். இதுல மீனும் சேர்த்து...
5
சுட்டு வைத்திருந்த ஆட்டின் மண்டை ஓட்டை லாவகமாய் வெட்டிக்கொண்டிருந்தான் அண்ணாமலை. கைகள் வேலை செய்தாலும், சிந்தனை மட்டும் வேறு பக்கம் தான் இருந்தது. அன்று வார நாள் தான் என்பதால் கூட்டம் ஒன்றும் பெரிதாக இல்லை. அதனால் அவனும் நந்தாவும் மட்டுமே இருக்க, தலைக்கறி கேட்டவருக்காக தான் வெட்டிக்கொண்டிருந்தான்.
வெட்டி முடித்ததும் அவன் கைகள் இயந்திரத்தனமாய்...
4
தள்ளுவண்டி கடை வியாபாரத்தை முடித்து கடைக்கட்டிக்கொண்டிருந்தான் பரத். உடன் அவனுக்கு உதவியபடி நின்றிருந்த அண்ணாமலையிடம், “இன்னைக்கு இத்தினி மீந்துடுச்சேடா! என்ன பண்ணலாம்? வழக்கம் போல பண்ணிடலாமா?” என்று கேட்டான் பரத்.
திரும்பி அவன் கையில் இருந்த பாத்திரத்தை பார்த்தான் அண்ணாமலை. கணிசமான அளவு சிக்கன் பக்கோடா மீந்திருந்தது. அன்று ஏனோ இரவு வியாபாரம் சற்று டல்...
3
“அண்ணே, நெஞ்சு பீசு ஒன்னு, காலு ஒன்னு!” இரு பயல்கள் வந்து நிற்க, “சாப்பிடவா? பார்சலா?” என்று கேட்ட பரத்தின் கரங்கள் ஏற்கனவே கேட்டவர்களுக்கு தட்டில் சில்லி சிக்கனை அளவாய் எடுத்து வைத்துக்கொண்டிருந்தது.
ஒரு பெரிய மரத்தின் நிழலில் தள்ளுவண்டி நிறுத்தி, அதில் மஞ்சள் நிற குண்டு பல்பு வெளிச்சம் கொடுக்க, எண்ணெய் சட்டியில் சுட...
2
“என்னா தாத்தா, இப்போ காத்து நல்லா வருதா?” என்று கேட்டுக்கொண்டே அவரது ஒற்றை கட்டிலில் அமர்ந்தான் அண்ணாமலை.
“நல்லா வருது அண்ணா!” என்ற தாத்தா, “திருவிழா தான் முடிஞ்சுதே! கடைக்கு போலியா?” என்றார்.
“போனும் தாத்தா... இன்னைக்கு ஒன்னும் வியாவாரம் ஆவாது! அதான் ராத்திரி கடை மட்டும் போடுவோம்ன்னு மே’வேலை பார்த்துட்டு வந்தோம்!” என்றவன் சொல்ல, “எல்லாம்...
முன்குறிப்பு:
* ‘காமுகன்’ என்ற சொல்லுக்கு ‘மன்மதன்’, ‘காதலன்’ என்ற அர்த்தமும் உண்டு.
*வைரமுத்து அவர்கள் எழுதிய, ‘வான் வருவான்’ பாடலில் இருந்து பெறப்பெற்ற வரி தான், ‘என் கள்ள காமுகனே’
1
‘’இப்பழி தப்புனை ஏன் நினைப்பித்தாய்
இனியார் விடுவார் அருணாச்சலா!
அருணாச்சல சிவ, அருணாச்சல சிவ,
அருணாச்சல சிவ, அருணாச்சலா!” பத்தடிக்கு ஒன்றாக கட்டியிருந்த ஸ்பீக்கரில் இருந்து வெளிப்பட்ட அருணாச்சல அக்ஷரமாலையின்...