Chinna Chinna Aasai
அத்தியாயம் -9
மூன்று நாட்களுக்குப் பிறகு இரவு பத்து மணி. ராம்குமார் சென்னையில் தங்கள் வீட்டில் தன் அறையில் படுத்திருந்தான். கையில் மொபைல் போன்.
அரை மணி நேரமே பார்த்த ரஞ்சனியை தனக்கு பிடித்திருக்கிறதா என்று யோசித்துக் கொண்டு இருந்தான்.
வந்த அன்றே அவன் அம்மா பானு ஆர்வமாக அவனுக்குப் பார்த்திருந்த பெண்ணின் புகைப்படத்தை காட்டி இருந்தார்.
...
ராம்குமாருக்கு அப்பாவின் கொட்டு புரிய தலை குனிந்தான். ஆனாலும் அவனால் அவன் சின்ன பாக்கெட்டை விட்டுக் கொடுக்க முடியாதே!
அதனால் அழுத்தமாகவே இருந்து கொண்டான். ஆனால் பானுவால் தான் அப்படி இருக்க முடியவில்லை.
மகனின் திருமணத்தைப் பற்றி எவ்வளவோ கனவுகள் கண்டு கொண்டிருந்தவருக்கு இந்த தகவல் பெரிய இடி.
மகனை அதற்கு மேல் கேட்கப் பிடிக்காமல் உடனே மகளுக்கு...
அத்தியாயம்-19
அன்று தான் அவர்களின் திருமண தினம். காலையிலேயே முஹூர்த்தம் என்பதால் கல்யாண மண்டபமே களை கட்டியது.
மண்டப வாசலில் மணமக்கள் ராம்குமார் B.Tech., M.B.A வெட்ஸ் வஞ்சுளவல்லி B.Tech என்று பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருக்க இளைஞர்களின் கூட்டம் தான் அதிகமாக இருந்தது.
எல்லோரும் மணமகன் மணமகளோடு ஐடி கம்பனியில் வேலை செய்பவர்கள்.
சொல்லி வைத்தாற் போல பெண்கள் எல்லோரும் லெஹெங்கா,...
அத்தியாயம் -8
ஒரு வருடம் கழித்து ராம்குமாரும் வஞ்சுவும் அதே பப்பில் அதே மேஜையில் ஒரு சனிக்கிழமை மாலையில் அமர்ந்திருந்தனர்.
இடையே பல முறை இங்கே வந்திருந்தாலும் இந்த முறை தான் இருவரும் தனியாக வந்திருந்தனர்.
ஆதியும் ரபீக்கும் மணிமேகலையும் புதிதாக வந்திருந்த சினிமாவுக்கு போயிருக்க சோனலும் ரஞ்சித்தும் சொந்த ஊருக்கு போயிருந்தனர். வந்தனா இன்னொரு...
அவரின் இத்தனை வருட திருமண வாழ்வில் மூர்த்தி இவ்வளவு வெளிப்படையாக எதையும் பேசியதே இல்லை. அப்படிப்பட்டவரே இப்போது இந்த அளவுக்கு மனதைத் தேற்றிக்கொண்டு மகனின் விருப்பத்திற்கு மதிப்பு கொடுக்கும் போது இன்னும் மகனை நினைத்தே எல்லா முடிவுகளும் எடுத்த போது இருந்த சந்தோசம் இதில் வரவில்லையே!
ஆனாலும் வேறு வழியில்லை. என்ன ஆனாலும் அவரால் மட்டுமல்ல...
கௌன் எல்லாம் சின்னப் பிள்ளைங்க போடுற ட்ரெஸ் என்று வஞ்சு மனதுக்குள் நினைத்தாலும் அதை வந்தனாவிடம் சொல்லவில்லை. அவள் நினைப்பதெல்லாம் பேசுவது ராம்குமாரிடம் மட்டும் தானே.
அப்போதே வந்தனா கூட அமர்ந்து அவளுக்கு ஆன்லைனில் கௌன் ஆர்டர் செய்ய அது சரியாக சனிக்கிழமை மதியம் வந்தது.
முழங்கால் வரை இருந்த ஸ்லீவ்லெஸ் கௌனை...
அவள் கையைப் பிடித்து தடுத்த ராம்குமார் “இதுக்கா கிட்டத்தட்ட என் ஒரு மாச சம்பளத்தை கொடுத்து இந்த ஹால ஏற்பாடு செஞ்சேன்...” என்று பீல் பண்ண அதுவரை ராம்குமார் மேலே மட்டுமே பார்வையை வைத்திருந்த வஞ்சுவின் பார்வை அந்த அறையை சுற்றி வந்தது.
சிறு நிகழ்ச்சிகளுக்காக எடுக்கப்படும் பார்ட்டி ஹால் தங்கள் இருவருக்காக மட்டுமே வாடகைக்கு...
அத்தியாயம்-3
ராம்குமாருக்கு அழைப்பு வந்தும் வஞ்சுவின் கவனம் அதில் இல்லை.
தனிமையிலும் தன் உடன் பணிபுரிபவர்களின் குத்தலான பேச்சிலும் மனதளவில் மிகவும் சோர்ந்து போய் இருந்தவளுக்கு அவன் வந்ததே யானை பலம் தர தான் இன்னும் அவன் கையைப் பிடித்து கொண்டு இருப்பதில் அவளுக்கு தவறாக எதுவும் தெரியவில்லை.
என்னவோ அந்த கையைப் பிடித்துக் கொண்டதில் ஒரு...
“அம்மா! ஏன்மா இவ்வளவு சீக்கிரம் கிளம்பறீங்க? இன்னும் கொஞ்ச நாள் இருக்கலாம் இல்ல?” என்று அவர் கையைப்பிடித்து கொண்டு கேட்க பானுவுக்கு உருகி விட்டது.
“அப்பாவுக்கு லீவு இல்லை டா! அப்புறம் வரோம்!” என்று பானு சமாதானம் சொல்ல ராம்குமார் விடுவதாக இல்லை.
“அப்பா வேணா கிளம்பட்டும். நீங்களாவது இருங்கமா!” என்று கெஞ்சவே ஆரம்பித்து விட்டான்.
மூர்த்தி சிரிப்புடன்...
இன்னொருவன் “என்ன மச்சி மாட்டர்? ஓவரா நோட் பண்ணா மாதிரி தெரியுது? ரூட் விடறியா?” என்று ரஞ்சித்தை ஓட்ட ரஞ்சித் கையை தூக்கி விட்டான்.
“டேய்! அதை பாத்தா என் குட்டி தங்கச்சி மாதிரி தெரியுது. கூட்டி போய் குச்சி மிட்டாய் வாங்கித் தரனும் போல தோணுதே தவிர சைட் எல்லாம் அடிக்க முடியாது டா!...
அத்தியாயம்-18
இரண்டு குடும்பமும் கல்யாணத்திற்கு புடவைகள் எடுக்க காஞ்சிபுரம் வந்திருந்தனர். திருமண தேதி நெருங்கி விட்டதால் ஒவ்வொரு வார கடைசியும் வஞ்சுவும் ராம்குமாரும் அவர்கள் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர்.
அதை வைத்து இருவரின் வசதியையும் கலந்து பேசித்தான் இன்று இரு குடும்பங்களும் இங்கு வந்ததே.
பானு வஞ்சு தங்களோடு சேர்ந்து கொள்வாள் என்று எதிர்பார்க்க வஞ்சு...
அத்தியாயம் -16
இவனே கூப்பிடட்டும் என்று அவளும் அவள் செய்தது ஏற்படுத்திய கடுப்பில் அவனும் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளவே இல்லை.
வஞ்சு போட்ட போஸ்டில் அவர்கள் சண்டை ஊருக்கெல்லாம் தெரிந்து போக துக்கம் விசாரிக்கும் சாக்கில் சிலர் வம்புக்கு அலைய சிலர் அக்கறையோடு அறிவுரை சொன்னார்கள். இரண்டுமே ராம்குமாருக்கு பிடிக்கவில்லை. எல்லாமே முகநூலில்...
அவன் சொன்னால் வஞ்சு ஸ்விம் சூட்டில் கூட போவாள் என்பது அவனுக்கு தெரியாதே.
இருந்தாலும் அக்கறை அவனை உந்த ஒரு தயக்கத்தோடு ஆரம்பித்தான்.
“வஞ்சு! கண்டிப்பா இந்த மாதிரி அவுட்டிங் போனா தான் உன் பர்சனாலிட்டி டிவலப் ஆகும். ஆனா....” என்று இழுத்தவன் “உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும். எப்படி ஆரம்பிக்கனு தெரியல?” என்று முடிவை...
அவள் நேரம் கடைசி நிமிடத்தில் ப்ரொஜெக்டர் வேலை செய்யாமல் போக
“இப்ப நீ என்ன செய்வியோ தெரியாது? ப்ரொஜெக்டர் மட்டும் கொண்டு வரல? அவ்வளவு தான். மேம் இப்ப வர நேரம். அவங்க ரொம்ப கோபப்படற டைப். நீ தொலைஞ்ச. நாங்க நீ தான் காரணம்னு சொல்லிடுவோம்.”
என்று பாலாஜி அவளை மிரட்ட அவன் சொன்னதெல்லாம் உண்மை...
கிளாஸ்ஐ கீழே வைத்தவள் அவர்களை பரிதாபமாக பார்க்க எல்லோரும் அவளை மாற்றி மாற்றி செய்த கிண்டலில் கண்ணில் துளிர்த்த நீரை துடைக்க தலையைக் குனிந்து கொண்டாள்.
அதற்குள் அவர்களின் கிளையன்ட் கம்பனியில் இருந்து வந்து விட சம்பிரதாய பேச்சுக்குப் பிறகு எல்லோரும் சாப்பிட ஆரம்பித்தனர்.
அவள் செய்த வேலைக்கு கிளையன்ட் கம்பனி பிரதிநிதி ரவியைப்...
அத்தியாயம் -6
பார்ட்டி சனிக்கிழமை மாலை என்பதால் காலையில் இருந்து நிறைய நேரம் இருந்தது.
மீண்டும் வாங்கியிருந்த புதிய உடைகளை எல்லாம் வெளியே எடுத்து ஒரு முறை பார்த்தவள் எதை அணிவது என்ற குழப்பத்திலேயே இருந்தாள்.
முதல் அனுபவம் என்பதால் எல்லோரும் என்ன மாதிரி உடைகள் அணிந்து வருவார்கள் என்று தெரியவில்லை.
ஆபீசில்...
அத்தியாயம் -13
வஞ்சு காதலின் அடுத்த கட்டத்தைப் பற்றி யோசிக்கவே இல்லை. அவளுக்குத் தெரிந்தது அவள் குரு அவள் காதலை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது மட்டுமே.
அதுவும் ராம்குமார் அவள் காதலை ஒத்துக் கொண்ட அடுத்த நாளே வந்து அவன் அக்காவுக்கு எல்லாம் தெரிந்து விட்டது என்று சொன்னதோடு அவளைப் பார்க்க அக்காவை குடும்பத்தோடு அழைத்திருப்பதாக...
அத்தியாயம்-2௦
கல்யாணம் முடிந்து இந்த ஒரு வாரமாக விருந்து வரவேற்பு என்று வஞ்சுவுக்கும் ராம்குமாருக்கும் நேரம் பறந்தது.
ஏற்கனவே கல்யாணத்திற்கு முன் பத்து நாட்கள் லீவு எடுத்ததால் மேற்கொண்டு ஹனிமூனுக்கு தனியாக லீவு எடுக்க முடியாத நிலை.
அதோடு அவர்கள் இருவரும் குடி போகவென்று புதிதாக பார்த்திருந்த வீட்டில் வீட்டுக்கு தேவையான பொருட்களை எல்லாம் அடுக்க வேண்டிய வேலை...
அத்தியாயம் -15
ராம்குமாரின் எரிச்சல் எல்லாம் சிறிது நேரம் தான். அப்படியே படுத்து ஒரு தூக்கம் போட்டு எழுந்தவன் மணியைப் பார்க்க அது பத்து என்றது.
தூங்கி எழுந்ததில் நன்றாக பசிக்க எங்கே போகலாம் என்று யோசித்தான். அவன் நண்பர்கள் எல்லாம் இப்போது படம் முடிந்து அவர்கள் வழக்கமாக போகும் பார் கம் அசைவ ஹோட்டலுக்கு...
மறுநாள் காலையில் விடுமுறை என்பதால் ஒரு வழியாக பத்து மணிக்கு எழுந்த ராம்குமார் நண்பர்களை எட்டிப்பார்க்க எல்லோரும் படுத்திருந்த நிலையே அவர்கள் எழுந்திருக்க இன்னும் சில மணி நேரங்கள் ஆகும் என்று புரிந்தது.
பழைய பழக்கமாக வஞ்சுவுக்கு “ஹாய் ஸ்வீட்டி! குட் மார்னிங்!“ என்று சில முத்த ஸ்மைலிகளோடு வாட்சப்பில் போட்டவன் அவள் முந்தைய மேசெஜுக்கே...