வஞ்சிக்கொடியும்! வத்தலகுண்டின் ரகசியமும்!!
"ஐயோ பாவம்! யாரு பெத்த புள்ளையோ. இப்படி என் வீட்ல வந்து மயங்கிருச்சே. டேய் மகனே மூச்சு பேச்சு இருக்கான்னு கொஞ்சம் பாருடா" அரவிந்த் சித்துவிடம் புலம்பி தள்ள
"கொஞ்சம் உன் வாய மூடிட்டு நில்லு ப்பா. உட்டா நீயே கொன்னுருவ போல. மூச்சுலாம் இருக்கு எதோ அதிர்ச்சியில மயங்கின மாதிரி தான்...
அரவிந்தின் பழைய பீரோவில் இருந்து இரண்டு கவர்களை அள்ளி வந்து போட்ட சித்து "நைனா இந்தா லேண்ட் டாக்குமெண்ட்ஸ் எதை அடகு வைக்கிறதுன்னு சொல்லு. கமான் பாஸ்ட்"
அரவிந்த் சரி என்றவுடனே கேட்டு பெறவில்லை எனில் அவர் மீண்டும் வேண்டாம் என முறுங்கைமரம் ஏறிவிட்டால் என்ன செய்வது என அவசர அவசரமாக எடுத்து...
அன்று காலையிலே வானம் தூரல் வீசி மக்களை குளிர்வித்துக் கொண்டிருக்க அதை ரசித்தபடி தன் வீட்டின் வராண்டாவில் அமர்ந்து அந்த குளிரை போக்கும் விதமாக தன் கையில் இருந்த காபியை உறிஞ்சி கொண்டிருந்தான் சித்து.
"காலைல இப்படி மழைச்சாரல்ல உக்காந்து காபி குடிக்கிறதும் ஒருமாதிரி நல்லா சுகமா தான்யா இருக்கு" என்றபடி அந்த...
சிலுசிலுவென இயற்கை காற்று, கத்திரி வெயில் வெளியே மண்டையை பிளந்தாலும் அது தெரியாத அளவுக்கு குளிர்ச்சி அந்த இடத்தை சூழ்ந்திருந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நல்ல உயரமான தென்னை மரங்கள், நடுநடுவே மா, கொய்யா மரங்கள் என எங்கு பார்த்தாலும் கண்ணுக்கு விருந்தாகவே இருந்தது அக்காட்சி. அதை எல்லாம் வாயை பேவென...
"ஐயா! ஐயா!
கார்மேகம் ஐயா!
கார்மேகம் ஐயா!"
வாசலில் யாரோ கார்மேகத்தை கூப்பிடும் குரல் கேட்க, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து எழுந்தனர் கார்மேகம் அலமேலு தம்பதியினர். அது கிராமம் ஆதலால் அதிகாலையில் எப்போதும் விரைவாகவே எழுந்துவிடும் பழக்கம் கொண்டவர்கள் தான் அலமேலு மற்றும் கார்மேகம் இருவரும். இன்று ஏனோ வெகு நேரம் உறங்கி விட்டனர்.
அதோடு...
"நாட்டாம தீர்ப்பை மாத்து....!" என்று ஒரு குரல் கேட்க பழைய துருப்பிடித்த பீரோ கதவை திறந்தது போல் தன் தலையை மெதுவாக திருப்பினார் கார்மேகம்.
"டேய் இங்க என்ன பஞ்சாயத்தா நடக்குது. ஏன்டா அந்த மனுஷன கடுப்பேத்துற" கடுமையாக முறைத்துக் கொண்டிருந்த கார்மேகத்தின் மனைவி அலமேலு பேசிய தன் மகனை கடிந்தார்.
"பின்ன...
கண்ணாத்தா கிழவி கொடுத்த ஷாக்கில் இருந்து முதலில் மீண்டு வந்தது நம் மாதவனே. அந்த பேய் சொல்லியதை கேட்டு உள்ளுக்குள் ஒரு பூகம்பமே வெடித்தது மாதவனுக்கு.
பின்னே இருக்காதா இவ்வளவு நேரம் இந்த பேயை கண்டு பயந்து நடுங்கிய அவனுக்கு, இது ஒரு டம்மி பீசிலும் கம்மியான பீசாக இப்போதுதான் தெரிகிறதே.
போயும்...
"உனக்கு ஒரு விஷயம் தெரியுமா வீரா. அந்த கடைசி வீட்டு காவேரி இருக்கால்ல. அவ பொண்ணு ஒரு பையன கூட்டிட்டு ஓடிட்டாளாம்"
கங்கா எப்போதும் போல் ஊர் கதை ஒன்றை வீராவிடம் பேசிக் கொண்டே கீரையை சுத்தம் செய்துக் கொண்டிருந்தாள்.
அவள் கூறியதை கேட்டு "அட ஆமா க்கா உனக்கு இது தொரியுமா....
பொம்மையின் கைவண்ணத்தில் அங்கிருந்த ஒவ்வொருவரும் மூஞ்சி முகரையெல்லாம் வீங்கி விழுந்து கிடக்க, 'இவனுங்க யாருடா இடையில மலமாடு கணக்கா கெடக்குறானுங்க' என கடுப்பாய் பார்த்து வைத்தான் மாதவன்.
அவனை சுற்றி, அந்த மாளிகையை சுற்றி நடக்கும் மர்மங்கள் என்னவென மாதவனுக்கு புரியவில்லை என்றாலும் எதோ பெரிய விஷயம் இதுக்கு பின்னால் இருக்கென அவனுக்கு...
காரிருள் சூழ்ந்த அமாவாசை இரவு நேரம். நிலா இருந்தாலே பலர் இரவில் அஞ்சி நடுங்குவர். அப்படி இருக்க அந்த அமாவாசை இருட்டு மனிதர்களை பயம் கொள்ள செய்வதில் ஆச்சரியம் இல்லை. ஒரு போன் கால் வர வீட்டினுள் சிக்னல் கிடைக்காத காரணத்தால் அதை தூக்கிக் கொண்டு பேசுவதற்கு அந்த இருட்டில் வந்து நின்றார்...
அந்த விசாலமான அறையை சுற்றி பார்த்தபடி வீரா கதிர் இருவரும் நிற்க, சித்துவோ கடுப்பாக அவன் கையில் இருந்த பையை கீழே போட்டுவிட்டு புசுபுசுவென மூச்சு வாங்கிய படி அமர்ந்து விட்டான். அவனை கண்டு குழப்பமாக புருவத்தை சுழித்த வீரா
"என்ன ஆச்சு சித்து? ஏன் பேக இப்புடி தூக்கி போடுறீங்க. உங்க...
சூரிய தேவனவன் தன் காதலியாம் ஆழ்கடலுடன் சங்கமம் ஆகி சில மணி நேரம் கடந்திருக்க, தென்றல் காற்று சில்லென சற்று வேகத்துடனே அந்த இடத்தை ஆக்கிரமித்திருந்தது.
அதை வைத்து அப்போது இரவு நேரம் மணி ஒரு பத்து இருக்கும் என கூறலாம். நன்கு இருட்டியிருந்த அந்தகார வேளையில் அந்த பரந்து விரிந்த தென்னந்தோப்பின்...
திருட்டு பூனை கருவாட்டு குழம்பை திருட வருவதைப் போல் பதுங்கி பதுங்கி சுற்றும் முற்றும் பார்த்து வீராவின் அறைக்கு வந்தான் சித்து. எல்லாம் எதற்கு அவன் காதல் ஏக்கத்தை கால் வாசியாவது தீர்த்துக்கொள்ள தான்.
'மெல்ல திறந்தது கதவு' என கூறும்படி அவ்வளவு மெல்லமாய் அவள் அறை கதவை தள்ளி வைத்து உள்ளே...
கண்ணாத்தா கிழவி தன்மேல் சுமத்தப்பட்ட கடமையை அப்பாவி ஜீவன்களை பாடாய்படுத்தி, குட்டிக்கரணம் அடித்து வெற்றிகரமாய் நிறைவேற்றிவிட்டு, காற்றில் கரைந்து போவதை அனைவரும் ஆவென பார்த்திருந்தனர்.
"ஹப்பாடா ஒருவழியா பிரச்சினையும் முடிஞ்சது. நம்மல ராப்பகலா போட்டு படுத்தி எடுத்த அந்த கெழவியும் ஒழிஞ்சது, இப்பதான் நிம்மதியா இருக்கு"
வாய்விட்டே மாதவன் சொல்லி நிம்மதி பெருமூச்சுவிட்டான்....
இடி மின்னல் சூறாவளி என மொத்தமாய் தாக்கியதில் பிஞ்சு பீசுவாங்கி போன காய்ந்த ரொட்டிப்போல் மாதவனும் ஷங்கரும் நட்ட நடுவீட்டில் தலை மீது கை வைத்து வாழ்க்கையை வெறுத்த நிலையில் அமர்ந்திருந்தனர்.
'சோதனை வேதனை; இன்னும் ரெண்டு நாளு நாம உயிரோட இருந்தோம்னா அது மிகப்பெரிய சாதனை' அவர்கள் மைண்ட் வாய்சோ ரைமிங்காக...
நள்ளிரவு நேரம் அந்த பெரிய வீட்டின் ஈ எறும்பு கூட நல்ல உறக்கத்தில் இருக்கும் நேரம் இரு களவானிகள் பின்வாசல் வழியாக உள்ளே நுழைந்திருக்க நம் அரவிந்தும் அவர்களை பாலோ செய்து வந்திருந்தார்.
இருளில் மெல்ல அந்த இரண்டு உருவங்களும் சுற்றுப்புறத்தை கவனித்தபடி நகர்ந்து ஹாலை வந்தடைய, அதில் ஒருவன் அங்கிருந்த டேபிளை...
அப்படி அந்த புதையலை அந்த புண்ணியவான் எங்கே மறைத்து வைத்திருக்கிறான் என அங்கிருந்தவர்கள் எல்லாரும் மண்டையை பிய்த்து கொள்ள, "எனக்கு ஒரு ஐடியா இருக்கு" என்று சொல்லி எல்லோர் மனதிலும் லிட்டர் கணக்கில் பாலை ஊற்றினாள் வீரா.
"என்ன ஐடியா வீரா பாப்பா"
புதையல் அப்படி எங்க தான் போனதோ என ஆர்வத்தில்...
அந்த குகையில் காற்று வீசும் சத்தம் கூட கேட்கவில்லை, அவ்வளவு அமைதி இல்லை இல்லை பேரமைதி. அந்த அளவு அங்கிருந்த ஒவ்வொருவரின் கண்களும் வியப்பில் விரிந்திருந்தன.
அரவிந்தோ தன் அருகிலேயே இருக்கும் பொம்மையின் வாய் மட்டும் அசைவதை ஒருவித திகிலுடன் பார்த்திருந்தார். அந்த குகையில் எப்போதும் நிறைந்திருக்கும் அமானுஷ்யத்தை விட இப்போது இந்த...
ஏதையோ பார்த்து பயந்தவன் போல் அமர்ந்திருந்த மாதவனை குழப்பமாக பார்த்த அவன் நண்பன் ஷங்கர் கேட்டான்.
"என்ன மாதவா என்ன ஆச்சு? ஏன் எதையோ பாத்து பயந்தவன் மாதிரி உக்காந்துட்டு இருக்க?"
எதுவும் பேசாத மாதவனோ எதோ பெரிய விஷயத்தை யோசிக்கிறான் என அவன் சிந்தனை முகமே காட்டி கொடுத்தது.
"அப்படி என்னத்த...
மாலை நேர காற்று இதமாக வீசிக் கொண்டிருக்க, அதை எதையும் உணராமல் அந்த ரயில் நிலையத்தில் இருந்த மக்கள் பரபரவென நகர்ந்து சென்றுக் கொண்டிருந்தனர்.
கல்லூரி முடிந்து செல்லும் மாணவர்கள், அலுவலகம் முடிந்து செல்லும் அலுவலர்கள் என பலர் அவர்களின் இல்லங்களுக்கு செல்ல ஒருவரை ஒருவர் முட்டி மோதி ரயிலில் ஏறிக் கொண்டிருந்தனர்.
...