நெஞ்சம் பேசுதே
திருமகளை கேட்கவா வேண்டும்... அத்தை கூறிய நிமிடம் சட்டென எழுந்து கொண்டாள். அவன் மீது இருந்த கோபங்கள் விலகி கொள்ள, அவன் மனைவியாக அவனுடன் ஆண்டாளின் முன் நிற்க ஏக்கம் கொண்டது மனது.
இருவரும் உள்ளே சென்று மீண்டுமொருமுறை வணங்கி முடிக்க, இம்முறை அர்ச்சகர் கொடுத்த குங்குமத்தை வாசுதேவனிடம் நீட்டினாள் திருமகள். வாசுதேவன் அவள் செயலில்...
நெஞ்சம் பேசுதே 23
திருமகள் வாசுதேவனின் இல்லம் திரும்பி இரண்டு நாட்கள் கடந்திருந்தது. இரண்டு நாட்களும் பெரிதாக எந்த மாற்றத்தையும் விதைத்து விடவில்லை. எப்போதும் போலவே தன் அத்தையிடம் செல்லம் கொஞ்சிக்கொண்டும், வாசுதேவனை அவ்வபோது வம்பிழுத்துக் கொண்டும் தன்னியல்பு மாறாமல் சுற்றி வந்து கொண்டிருந்தாள் திருமகள் நாச்சியார்.
அதுவும் அன்று வாசுதேவன் "உன்னையே உன்னை...
நெஞ்சம் பேசுதே 09
அன்று இரவில் வாசுதேவகிருஷ்ணன் "திரு.." என்று அழைத்துவிடவும், அப்படி ஒரு நிறைவு திருமகள் நாச்சியாருக்கு. என்னவோ பெரிதாக ஏதோ ஒன்றை சாதித்துவிட்ட உணர்வுடன் தான் உறங்கி எழுந்தாள் அவள். ஆனால், அடுத்தநாள் காலையில் வழக்கம் போல் தன் மௌன கவசத்தை அணிந்து கொண்டிருந்தான் வாசுதேவகிருஷ்ணன்.
திருமகள் நாச்சியார் ஏக்கத்துடன் பார்த்து நின்ற போதும்,...
"நீ யார்.." என்று அவள் கேட்டுவிட்டால் என் முகத்தை எங்கே வைத்துக் கொள்வேன் என்ற பதைப்பு தான். ஆனால், அவர் நினைத்ததற்கு மாறாக திருமகள் அமைதியாக நின்றதே அதிர்ச்சி என்றால், அவர் வார்த்தையை மீறாமல் அவர் மகனை மணக்க சம்மதித்தது அடுத்த அதிர்ச்சி. அத்தனைப் பேரின் மத்தியில் அவள் மறுத்திருந்தால் எத்தனைப் பெரிய...
நெஞ்சம் பேசுதே 08
வாசுதேவகிருஷ்ணன் குளித்து வெளியே வர, அவனுக்கு முன்பாக அறையை விட்டு வெளியேறினாள் திருமகள். அவனுக்கான உணவை எடுத்து வைத்தவள் உணவு மேசையில் அவனுக்காக காத்திருக்க, அவளிடம் போராட முடியாமல் அமைதியாக உணவை முடித்துக் கொண்டு வெளியேறி விட்டான் அவன்.
அவன் சென்றதும் தானும் அமர்ந்து உண்டவள் தனது அறைக்கு சென்று...
நெஞ்சம் பேசுதே 10
"என்கிட்டே நீங்க நீங்களா இருக்கணும் இல்லையா மாமா.." என்று கண்ணீருடன் திருமகள் கேட்டு அமர்ந்திருக்க, அவளுக்கு உண்மையில் என்ன பதில் கூறுவது என்று புரியாத நிலையில்தான் இருந்தான் வாசுதேவன்.
அவள் கேட்பதில் தவறென்ன என்று அவன் மனம் மங்கைக்கு ஆதரவாக சாய, தவறுகிறோமோ என்று தடுமாறி நின்றான் வாசுதேவகிருஷ்ணன். பேச்சை...
நெஞ்சம் பேசுதே 25
திரு உதட்டைக் குவித்து மிரட்டி வாசுதேவனை ஓடவிட்டு ஒருவாரம் கடந்திருக்க, அன்று திருவிழாவின் கடைசிநாள். இந்த ஒரு வாரமும் வாசுதேவனைக் காணும் நேரமெல்லாம் யாருமறியாமல் உதட்டைக் குவித்து அவனை ஒருவழி செய்து கொண்டிருக்கிறாள் திருமகள்.
இன்னும் அரைமணி நேரத்தில் கோவிலின் வாசலில் தீமிதித்தல் நடைபெற இருக்க, ஊர் மொத்தமும் கோவில் வாசலில் தான்...
காலை நன்கு விடிந்தபின்னும் அவள் அப்படியே அமர்ந்து தலையை கால் முட்டியில் புதைத்திருக்க, விசாலம் மருமகளுக்காக காத்திருந்தவர் பொறுக்க முடியாமல் அறைக்குள் நுழைந்திருந்தார். திருமகள் அமர்ந்திருந்த நிலையே இரவு நடந்ததை எடுத்து கூறிட, "நாச்சியா.." என்று வேகமாக அழைத்துக் கொண்டே அவளை நெருங்கியவர் "என்னம்மா.. ஏண்டி இப்படி இருக்க. என் கண்ணு என்னடி ஆச்சு.....
மாலை வேளையில் கோவிலில் பூஜை முடித்து மாகாளி தேரில் ஊரை வலம் வந்து பூக்குழியின் முன்னே இருந்த சிம்ம வாகனத்தின் மீது அமர்த்தப்பட, கோவிலின் பூசாரியின் மீது சாமி அழைக்கப்பட்டு அவர் உத்தரவு கொடுக்கவும், தீமிதி தொடங்கியது.
ஊரின் பெரியவர்கள், கோவில் நிர்வாகிகள், மற்ற ஆண்கள் என்று அத்தனைப் பேரும் வரிசையாக இறங்க, வாசுதேவன் தன்...
நெஞ்சம் பேசுதே 24
கோவிலில் பூஜை முடிந்து வீடு திரும்பியிருந்தது வாசுதேவகிருஷ்ணனின் குடும்பம். ராகவனும், விசாலமும் கிளம்புகையிலேயே, அவர்களுடன் தானும் வீடு திரும்பிவிட்டாள் திருமகள் நாச்சியார். கடைசி சில மணி நேரங்களாக வாசுதேவகிரிஷ்ணனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை அவள்.
கோபம் உள்ளுக்குள் கனன்று கொண்டே இருந்தது. இத்தனை நாள் அவனது சமாதானங்களையும், சமாளிப்புகளையும் ஏற்றுக் கொண்டவளால்...
நெஞ்சம் பேசுதே 16
வாசுதேவகிருஷ்ணன் தனது நிலையை தெளிவாக எடுத்துச் சொல்லியபின்பும் திருமகள் அவனை புரிந்து கொள்ளாமல் முகம் திருப்பிக் கொண்டது பெரிதாக பாதித்தது அவனை. அவன் குணத்திற்கு அவன் தானாக இறங்கிவந்து அவளிடம் விளக்கம் கொடுத்ததே பெரியது.
அதையும் அவள் கண்டுகொள்ளாமல் போக, "இதற்குமேல் என்னால் எதுவும் செய்ய முடியாது." என்று முடிவெடுத்துக்...
வந்தவுடன் "என் கொழுந்தனை ஏன் அடிக்கிறீங்க.." என்று அவள் கேட்டதை மறக்க முடியவில்லை திருமகளால். அந்த ஒரு வார்த்தையிலேயே மொத்தமாக கோதையை ஒதுக்கியிருந்தது அவள் மனம்.
அவள் அமைதியாக விசாலத்தின் அருகில் வந்து நிற்க, விசயத்திற்கு ஏகத் திருப்தி அவளது செயல். கோதையை பார்த்து நொடித்துக் கொண்டவர் "வா.." என்று மருமகளின் கையைப்...
வாசுதேவன் கலியமூர்த்தியை அடித்துவிடுபவன் போல் பார்வையால் சுட்டெரிக்க, ராகவன் தோளிலிருந்த துண்டை உதறிக்கொண்டார்.
"ஏய் கலியமூர்த்தி உன் ஆட்டத்துக்கு எல்லாம் வேற இடத்தை பாரு.. என் மகன்கிட்ட வாலாட்ட நினைச்ச, உரிச்சு உப்புக்கண்டம் போட்டுடுவேன். யாரு யார்கிட்ட மன்னிப்பு கேட்கிறது. பஞ்சாயத்துக்கு வரவும் தான் நிதானமா பேசிட்டு இருக்கேன். இல்ல, உன்னையும் உன் மகனையும்...
நெஞ்சம் பேசுதே 18
மாகாளியம்மன் கோவிலின் முன் ஊர்பெரியவர்களும், பஞ்சாயத்தார்களும், இன்னும் ஊர்மக்கள் பலரும் கூடியிருக்க மீண்டும் ஒரு பஞ்சாயத்து. ஆனால், இந்த முறை புகார் வந்திருப்பது தன் மகன் மீது என்பதால் ராகவன் இருக்கையில் அமராமல் மகனுடனே நின்று கொண்டார்.
பஞ்சாயத்தார் "நீங்க வந்து உட்காருங்க ஐயா.. யாரா இருந்தா என்ன, விசாரிச்சு...
நெஞ்சம் பேசுதே 01
மாலை சாற்றினாள்
கோதை மாலை மாற்றினாள்
மாலை சாற்றினாள்
கோதை மாலை மாற்றினாள்
மாலடைந்து மதிலரங்கன்
மாலை அவர்தன் மார்பிலே
மாலை சாற்றினாள்
கோதை மாலை மாற்றினாள்
மாலடைந்து மதிலரங்கன்
மாலை அவர்தன் மார்பிலே
மையலாய் தையலாள் மாமலர் கரத்தினால்
மையலாய் தையலாள் மாமலர் கரத்தினால்
மாலை சாற்றினாள்.....
என்று வாய் அதன்பாட்டிற்கு முணுமுணுத்துக் கொண்டே இருக்க, எதிரில் இருந்த மேடையில் தம்பதி சமேதராக காட்சி கொடுத்த...
நெஞ்சம் பேசுதே 22
எப்படியோ ஒருவழியாக திருமகள் நாச்சியாரை சரிகட்டி, வாசுதேவன் தன்னுடன் அழைத்து வந்துவிட, வீட்டை நெருங்க நெருங்க ஒரு இனம்புரியாத அச்சம் வியாபித்துக் கொண்டது திருமகளை.
விசாலத்திடம் சொல்லிக்கொள்ளாமல் வீட்டைவிட்டு வெளியேறியது இந்த நிமிடம்தான் உரைத்தது அவளுக்கு. கால்கள் தயக்கத்துடன் தந்தியடிக்க, உள்ளே செல்வதா.. இல்லை, இப்படியே ஓடிவிடுவோமா என்று ஏககுழப்பம் பெண்ணுக்கு.
விசாலத்தின் வாய்...
நெஞ்சம் பேசுதே 27
மருத்துவமனையில் இருந்து தன் பிள்ளையுடன் நேரே தன் தாய் வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தாள் கோதை. முழுக்க முழுக்க திருமகள் நாச்சியாரின் முடிவு இது. அன்று ஈஸ்வரி "எங்கிட்டே தான் வந்தாகணும்.." என்று சூளுரைத்தபோதே முடிவெடுத்துவிட்டாள் அவள்.
அன்று இரவே கணவனிடம் பேச, வார்த்தைகள் இல்லாமல் மனைவியைக் கட்டிக்கொண்டு தன் ஒப்புதலை...
வாசுதேவகிருஷ்ணன்- திருமகளின் நிறைவான வாழ்வு ஐந்தாண்டுகளை கடந்திருக்க, அவர்கள் அன்புக்கு சாட்சியாக நான்குவயதில் திருமகளின் மறுஉருவமாக வந்து பிறந்திருந்தான் வம்சி.. வம்சி கிருஷ்ணா.. பேச்சு, செயல், நடவடிக்கைகள் என்று அத்தனையிலும் திருமகள்தான் அவன்.
அதனால் தானோ என்னவோ விசாலத்திற்கும் அவனுக்கும் ஒத்துபோவதே கிடையாது. எப்போதும் விசாலத்திடம் சரிக்கு சரி நிற்பான் பேரன். "அப்படியே அவளை...
நெஞ்சம் பேசுதே 15
திரு மௌனவிரதம் பூண்டு இன்றுடன் மூன்று நாட்கள் முடிந்திருந்தது. பேசாமலே இருந்தாள் என்று கூற முடியாதபடி எண்ணி எண்ணி பேசினாள் வாசுதேவகிருஷ்ணனிடம். அவசியத்திற்கு மட்டுமே வார்த்தைகள் என்றாக, பெரிதாக பதில்களையும் வேண்டி நிற்கவில்லை அவள்.
அவன் தேவைகளை அழகாக கவனித்துக் கொண்டவள் அவன் முகம் பார்க்க மட்டும் மறுத்தாள். வாசுதேவகிருஷ்ணனும்...
நெஞ்சம் பேசுதே 28
திருமகளின் கழுத்தில் முகம் வைத்து, மொத்தமாக அவளை அணைத்தபடி உறங்கிப் போயிருந்தான் வாசுதேவகிருஷ்ணன். ஒருமணி நேரத்திற்கும் மேல் அவன் உறங்கி கொண்டிருக்க, இன்னும் அவன் கைப்பிடியில்தான் இருந்தாள் திருமகள்.
இப்படி தன்னை வளைத்துக் கொண்டிருப்பவன் மீது கோபம் கொண்டாலும், சோர்ந்திருந்த அவன் முகம் கண்டபின் சண்டையிடவும் மனம் வரவில்லை. "அப்படி...