Monday, April 28, 2025

    தித்திக்கும் முத்தங்கள்

    அவருக்கு அடுத்தபடியாக பூச்சி... கார்த்தியின் அழைப்புக்கு ஏற்ப, அண்ணனாகவே மாறி உடன் நின்றான் அவன். அவனும் பார்ப்பதையெல்லாம் வாங்கி வந்து கார்த்தியின் கையில் கொடுப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்க, கார்த்திகா தான் திணறிப் போவாள். கார்த்திகா பரிசோதனைக்கு செல்லும் நேரமெல்லாம் குமரன் உடன் வந்தாலும், இருவருக்கும் ஓட்டுநர் வேலை பார்ப்பது பூச்சி தான். குமரன் கூட சொல்லிப்...
    அடுத்த இரண்டுமணி நேரங்கள் பேச்சும், சிரிப்புமாக நீண்டு, அயர்ந்த உறக்கத்தில் முடிவடைய, குமரன் மீண்டும் கண்விழித்த நேரம் இரவு ஒன்பது மணி. கார்த்திகா இன்னும் உறக்கத்திலிருந்து எழாமல் இருக்க, அவளை எழுப்பாமல், பூச்சியை அழைத்து இருவருக்கும் உணவு வாங்கிவர சொல்லியவன் அவன் வருவதற்குள் குளித்து உடை மாற்றிவிட்டான். பூச்சி உணவை வாங்கி வந்து கொடுத்துவிட்டு கிளம்பிவிட,...
    தித்திக்கும் முத்தங்கள் 15 பிரியா அழுது சிவந்த விழிகளுடன் தனது தாய்வீடு இருந்த குடியிருப்பை நெருங்க, வழக்கம்போல் அந்த குடியிருப்பின் கீழே இருந்த தண்ணீர்த்தொட்டிக்கு அருகில் அமர்ந்து கதையளந்து கொண்டிருந்தார் ராணி. தொலைவில் வரும்போதே அவரைப் பார்த்துவிட்ட பிரியா "அம்மா..." என்று அழுகையுடன் அழைக்க, அவள் தோற்றம் கண்டு பதறிப்போனார் ராணி. "பிரியா..." என்று அவர் வேகமாக...
    தித்திக்கும் முத்தங்கள் 07   ராஜம்மா தன் வீட்டில் இருந்த சில பாத்திரங்களை குமரகுரு - கார்த்திகைச்செல்வியின் உபயோகத்திற்காக பிரித்துக் கொடுக்க, அதுபோக இன்னும் என்னென்ன வாங்க வேண்டும் என்பதையும் அவரே குமரனுக்கு பட்டியலிட்டுக் கொடுத்தார் . குமரன் தன் ஆட்டோவின் ஆர்சி புத்தகத்தை சேட்டிடம் கொடுத்து அதன் பெயரில் இருபதாயிரம் பணம் வாங்கியவன் அவர் எழுதியிருந்த...
    தித்திக்கும் முத்தங்கள் 11 கார்த்திகாவிடம் அவள் படிப்பைப் பற்றி பேசியதில் இருந்தே அதே யோசனையாகத் தான் சுற்றிக் கொண்டிருந்தான் குமரன். என்ன யோசித்தாலும், எப்படி அவள் புத்தகங்களை எடுத்து வருவதென்று ஒருவழியும் புலப்படவில்லை. அடுத்தநாள் காலையிலும் அதே சிந்தனையுடன் சுற்றிக் கொண்டிருந்தவனுக்கு சுலபமாக வழியமைத்துக் கொடுத்தது பூச்சிதான். குமரன்  விஷயத்தைக்  கூறிய கணமே அவன் நினைவில் வந்தது...
    இவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த புதிய வீட்டில் ராஜம்மாவும், பூச்சியும் காத்திருக்க, குமரன் கார்த்திகாவோடு உள்ளே நுழைந்தான் இப்போது. யாரும் எதுவும் சொல்வதற்குள் அவனே, "விளக்கை ஏத்து." என, கார்த்திகா மறுப்பதற்குள் பார்வையால் மீண்டும் பயம் காட்டினான். அவன் எதிர்பார்த்ததுப் போலவே பயந்து போனவள் அமைதியாக விளக்கை ஏற்ற, ஒருநிமிடம் கண்களை மூடி வேண்டிக்கொண்டான் குமரகுரு. 'இதயெல்லாம் சரி பண்ணிக்குடு...
    தித்திக்கும் முத்தங்கள் 17  அன்று காலையில் அவசர  அவசரமாக கிளம்பிச் சென்ற குமரன் நாள் முழுவதும் வீட்டிற்கு வராமல் இருக்க, வீட்டில் இருந்த பொருட்களைக் கொண்டு எதையோ சமைத்து வைத்திருந்தாள் கார்த்திகா. மதியம் வழக்கமான நேரம் கடந்தும் அவன் வரவில்லை என்றாகவும், நான்கு மணிக்கு மேல் தான் மட்டும் உண்டு முடித்திருந்தாள். எப்போதும் திட்டிக்கொண்டும், மிரட்டிக்கொண்டும் மட்டுமே...
    "இந்த கதைக்கும் அவளுக்கும் இன்னா லிங்க் இருக்கு. அவளை இழுக்காத" என்று குமரன் கூறும்போதே, "அதெப்படி இல்லாம போவும். அவ ஆத்தாக்காரி மேல தான கேஸ் கொடுத்து இருக்கேன். இந்நேரம் பொண்ணுக்கு போனை போட்டு சொல்லி இருப்பா. உன் பொண்டாட்டி உன்கிட்ட நீலிக்கண்ணீர் வடிச்சிருப்பா. அதுக்காக தான வந்திருக்க." என்று தானாகவே எதையோ ஊகித்து பிரியா...
    தித்திக்கும் முத்தங்கள் 23 அந்த சிறிய வீட்டின் சுவற்றில் சாய்ந்து குமரன் அமர்ந்திருக்க, அவன் மடியில் தலைவைத்து உறங்கிக் கொண்டிருந்தாள் கார்த்தி. ராணி ஆடிய ஆட்டத்தில் மொத்தமாக உடைந்து போயிருந்தாள் அவள். குமரனுக்காக அழுகையை நிறுத்திக் கொண்டாலும் முகம் வாடிப்போனது. குமரன் பலமுறை எடுத்துக் கூறியும் அவள் இயல்புக்கு திரும்பவில்லை. இறுதியில் குமரன் சற்று கடுமையாக அதட்டித்...
    தித்திக்கும் முத்தங்கள் 01                     வடசென்னையின்  அடையாளங்களில் ஒன்றான காசிமேடு கடற்கரை அதிகாலை பரபரப்பில் சுழன்று கொண்டிருந்தது. பெரிய அளவிலான விசைப்படகுகளும், மோட்டார் படகுகளும், சிறிய கட்டுமரங்களும் என்று கடலே தெரியாத அளவுக்கு படகுகள் நிறைந்திருக்க, மீன்களை இறக்குபவர்களும், படகுகளை நிறுத்துபவர்களும், வலைஞர்களும், வியாபாரிகளும் என்று நிரம்பி வழிந்தது கடற்கரை.                  அப்போதுதான் வந்து நின்ற படகில்...
    இந்த பண விஷயத்தில் அவளாலும் எதுவும் செய்ய முடியாதே. அவளால் முடிந்தவரை அவளது செலவுகளை சுருக்கிக் கொண்டாள். இதுவரை குமரன் கொடுக்கும் பணத்திலிருந்து ஒரு ரூபாய் கூட தனது சொந்த செலவுக்கென்று அவள் உபயோகப்படுத்தியதே இல்லை. அவள் வீட்டை விட்டு வெளியேச் செல்வதும் வருவதும் குமாரனோடு மட்டுமே என்கையில், அவளது அத்தனை செலவுகளையும் அவனே பார்த்துக்...
    நேற்றுப்போலவே மனைவி சமைக்காமல் அமர்ந்திருந்தது ஆத்திரம் கொடுக்க, வந்ததும் வராததுமாக சண்டை வேண்டாம் என்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவன் அமைதியாக அவள் அருகில் அமர்ந்தான். "என்ன பிரியா.  உடம்பு முடியலையா." என்று நிதானம் தவறாமல் தான் வினவினான் அவன். ஆனால், பிரியா அவனை விட வேண்டுமே. "உடம்பு முடியலைன்னா, என்ன பண்ண போற." என்றாள் சவாலாக. "ஏய்.. இன்னா...
    அந்த நினைவே கசப்பாக இருக்க, எப்படி அங்கிருந்து கிளம்பினான். எப்படி வீடு வந்து சேர்ந்தான் என்று சத்தியமாக தெரியாது அவனுக்கு. வீட்டின் கீழே ஆட்டோவை நிறுத்தி இறங்கியவனுக்கு வீட்டுக்குச் செல்ல மனம் வரவில்லை. என்ன நினைத்தானோ மீண்டும் ஆட்டோவை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பியவன் பைத்தியக்காரன் போல் அன்று முழுவதும் சென்னையை சுற்றிவர, இதற்கும் சவாரிகூட இல்லை....
    கார்த்திகா கூட முதலில் மறுத்துப் பார்த்தவள் குமரனின் பிடிவாதத்தால் அவன் போக்கிற்கே விட்டிருந்தாள். பெயர் வைக்கும் நிகழ்வு நல்லபடியாக முடிந்த, அடுத்த இரண்டு வாரங்களில் முதுநிலை படிப்புக்கு விண்ணப்பித்து விட்டாள் கார்த்திகா. மகன் பிறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே அவள் இளநிலைப் படிப்பு முடிந்திருக்க, ராஜம்மா கூட, "ஒருவருஷம் கழிச்சு பாரேன் கண்ணு." என்று எடுத்து...
    தித்திக்கும் முத்தங்கள் 25 வழக்கமான அதிகாலை நேரம் தான். ஆனால், குமரனுக்கு மட்டும் வாழ்வு வசந்தமாகி விட்டதைப் போல் ஒரு எண்ணம். தன் மனைவியின் மனதில் தனக்கான இடம் என்னவென்பதை நேற்றைய அவளின் கண்ணீர் உணர்த்தியிருந்தது. ஒரு கணவனாக அதற்குமேல் என்ன வேண்டும் அவனுக்கு. அருகில் நிம்மதியாக உறங்கி கொண்டிருந்த மனைவியின் மீது பார்வை பதியவும், தன்னைமீறி...
    தித்திக்கும் முத்தங்கள் 29 நேற்று இரவு பிரியா வீட்டிற்குள் வந்தபின்னும் கூட ராணி தன் வசைமாரியை நிறுத்தவே இல்லை. அவளைத் தொடர்ந்து வீட்டிற்குள் வந்தவர் மகன் தனது பேச்சைக் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்திய கோபத்தையும்  பிரியாவின் மீதே காண்பித்தார். இரவு முழுவதும் அவரின் வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டு அசையாமல் படுத்திருந்தவள் காலையில் எழுந்து குளித்துவிட்டு வேலைக்கு புறப்பட்டுவிட்டாள். என்னவோ...
    தித்திக்கும் முத்தங்கள் 08 மகாலட்சுமி பணத்தைக் கொடுத்தவுடன் தன் கடமை முடிந்தது என்று வெளியேறிவிட, கதிர்வேல் யோசிக்கும்போதே சட்டென பணத்தைக் கையில் எடுத்துக் கொண்டாள் பிரியதர்ஷினி. பணத்தை அப்படியும் இப்படியும் திருப்பிப் பார்த்தவள், "இவ்ளோ நல்லவங்களா உங்க அம்மா. நமக்கு வீடெல்லாம் பார்த்து கொடுக்கறாங்க." என்றாள்  கிண்டல்போல். "நீ வேற... அது நம்மளை வீட்டை விட்டு வெளியே...
    தித்திக்கும் முத்தங்கள் 32 கார்த்திகைச்செல்வி பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்க, அவள் இருந்த அறைக்கு வெளியே இருந்த படியில் அமர்ந்திருந்தனர் ராஜம்மாவும், குமரனும். அரசு மருத்துவமனை என்பதால் கார்த்தி இருந்த அறைக்குள் எல்லாம் அனுமதி கிடையாது. இவர்களையே அவ்வபோது விரட்டிக்கொண்டு தான் இருந்தனர். குமரன் எத்தனையோ முறை எடுத்து சொல்லியும் கேட்காமல், கார்த்தி தனது கர்ப்பகால பரிசோதனைகளை அரசு...
    தித்திக்கும் முத்தங்கள் 19 அந்த மகளிர் காவல் நிலையத்தின் ஆய்வாளர் முன்பு நின்றிருந்தான் கதிர்வேல். எதிரில் அவனை எள்ளலாக பார்த்தபடி அவன் மனைவி நின்றிருக்க, மறந்தும் அவள் பக்கம் திரும்பாமல் தனக்குமுன் அமர்ந்திருந்த அந்த பெண் அதிகாரியைப் பார்த்திருந்தான் அவன். தன் கையில் இருந்த புகாரை நிதானமாக படித்துப் பார்த்த அந்த அதிகாரி, "வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவியா?...
    தித்திக்கும் முத்தங்கள் 21 நேற்று இரவு கார்த்திகாவின் அருகாமையில் குமரன் நிம்மதியாக உறங்கியிருக்க, காலை ஆறுமணி வரையும் கூட அவன் உறக்கம் தொடர்ந்து கொண்டிருந்தது. ஆனால், கார்த்திகா எப்போதும்போல் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்துவிட, குமரனை எழுப்பாமல் தானே வீட்டின் கதவைத் திறந்துகொண்டு கீழே இறங்கி வந்திருந்தாள். அதே நேரம், ராஜம்மா வாசல் தெளிப்பதற்காக எழுந்து வெளியே வந்திருந்தார்....
    error: Content is protected !!