தழலாய் தகிக்கும் நினைவுகள்
அத்தியாயம் - 16
திதி அன்று காலையில் சவரம் செய்து, குளித்து, வேட்டி, சட்டை, மேல் துண்டு சகிதம் எழுந்து வந்தான். சமையலறையில் அதற்குள் தலைக்குக் குளித்து, புடவையில் வானதி எதோ கிண்டிக்கொண்டிருந்தாள், ஏலக்காய் மணம் கமழ்ந்தது.
“நான் கோவிலுக்கு கிளம்பறேன் வானதி.”, என்றான்.
வாசலில் நின்றவனைத் திரும்பிப் பார்த்தவள், முகம் மீசை, தாடி எடுத்து மழமழவென்று இருந்தது...
“விடு வானதி… என் மேலையும் தப்புதான். நீ சொன்ன மாதிரி நான் யோசிச்சு என்னை மாத்திக்க வேண்டியது நிறைய இருக்குன்னு புரியுது…. ம்ம்… மதன் குழந்தை பிறந்ததை சொன்னதும், நாம் போய் பார்த்துட்டு வரலாம். அப்படி நான் வெட்டினாப்பல கிளம்பியிருக்கக் கூடாது. சாரி. “
வினோத்தின் நிஜமான வருத்தத்தைப் பார்த்தவள், “ பரவாயில்லை விடுங்க. மதனுக்கு...
பெய்ஜ் கலர் சீனோஸ் பாண்ட், காலரில்லாத வெளிர் நீல சட்டையும், மேலே கரு நீல ப்ளேசரும், காலில் காஷுவல் ப்ரௌன் ஷூஸ் அணிந்து படு ஸ்டைலாக இருந்தான் வினோத். அதற்கான அவன் எந்த ஒரு மெனக்கெடலும் செய்யவில்லை என்பதால் அவனுக்கு பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. ஒரு விழாவிற்கு செல்லும் தோற்றம். இவந்தான் விழா நாயகன்...
அத்தியாயம் - 2
அந்த உயர்தர உணவகத்தில் கலகலப்புக்குப் பஞ்சமில்லை. அத்தனை களேபரத்திலும், ஒருத்தி மட்டும் இருவர் அமரும் ஒரு மேசையில், கண்ணாடி ஜன்னல் வழியே கீழே சென்று கொண்டிருந்த வாகனங்களைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் அவனின் வரவுக்காக.
ஏதோ உணர்வு உந்த, திரும்பியவள் கண்டது அவளை நோக்கி வரும் அவனைத்தான். இறுதியாக ஈர உடையில் மனைவி பிள்ளைக்கு...
“அதேதான்…அதேதான் எனக்கும் தோணுச்சு. இந்த பொண்ணு ஏன் இப்படி நடந்துக்கணும்? வினோத் கைடா இருக்க மாட்டேன்னா, அடுத்து கார்த்திகேயன் சார் கைடா வந்துட்டார். மிஞ்சிப் போனா இதுனால ஒரு மூணு மாசம் வேஸ்ட்டாச்சு. அதைத் தாண்டி, இப்படி ஒரு குற்றச்சாட்டை வினோத் மேல சொல்றதுக்கும், தன் பேரை தானே கெடுத்துக்கவும் என்ன காரணம்னு எனக்கு...
ஸ்வாதி வம்சியின் நினைவு நாள் முடிந்த ஒரு இரண்டு மூன்று நாட்களில் தேறிக்கொண்டான் வினோத். வானதி எந்த விதத்திலும் அவனை தொந்தரவு செய்யாமல் இருந்தாள். அவள் செய்த ஒரே வேலை, பூஜை அறையின் ஒரு பக்கத்தில் ஸ்வேதா, வம்சியின் போட்டோவை மாட்டிவைத்ததுதான். சுவாமி படங்களுடன் சேர்த்து அதற்கும் பூ வைத்தாள்.
வினோத் பார்த்தாலும் ஒன்றும் சொல்லிக்கொள்ளவில்லை....
அத்தியாயம் - 15
சற்று நேரத்திற்கெல்லாம், கையில் போனை பிடித்தபடியே, படியில் தடதடத்து வந்தவனைத்தான் பெண்கள் இருவரும் பார்த்திருந்தனர். கீரீம் கலரில் லினென் சட்டை, அடர் சாம்பல் நிற ஜீன்ஸ் அவன் உடற்பயிற்சி செய்த உடலை பறைசாற்ற, கையில் அவன் விரும்பிக் கட்டும் டாக்ஹாயர் வாட்ச். கவர்ந்திழுக்கும் புன்னகை மட்டுமே முகத்தின் ஒரே அணிகலன். அதுவே...
அத்தியாயம் – 12
கான்ஃப்ரென்ஸ் அறையின் கதவு ஒரு முறை நாசூக்காக தட்டப்பட்டு திறந்தது. மிக நேர்த்தியாக கட்டப்பட்ட சில்க் காட்டன் புடவை, மேக்கப் என்று சென்ட் மணம் கமழ, அழகாக வாசலருகே நின்றிருந்தாள் வானதி.
“வணக்கம் சர். உள்ள வரலாமா?”, வாசலில் அவளைக் கண்டதும் வினோத்திற்கு முகம் இருண்டது. யார் இவளுக்கு சொன்னது? இப்போது இங்கே...
அத்தியாயம் – 9
ஒரு சனிக்கிழமை விடியற்காலை மலையேற்றக் குழு ஒன்றுகூடியது. அதில் வினோத், வானதி, சங்கர் புனிதாவுடன் சேர்த்து ஆண்களும், பெண்களுமாக பதினைந்து பேர் இருந்தனர். இவர்களுடன் செல்ல பொறுப்பாளர், வழிகாட்டி, மலையேற்ற கைட் தணிகாசலம், தேவைப்படும்பொழுது அவரே முதலுதவி சிகிச்சை நிபுணரும் கூட.
வானதிக்கு அதில் இருந்த மற்ற இருவரைத் தெரிந்திருந்தது. அவளுடன் முன்பு...
அத்தியாயம் – 19
ட்ரெக் முடித்து வருபவர்களுக்கு பெரியகுளம் ஹோட்டல் ஒன்றில் அறைகள் ஏற்பாடாகியிருந்தது. வட்டக்கனல் சென்று வந்த குழு உள்ளே நுழையவும், அவர்களை வரவேற்றது வினோத். கண்கள் வானதியை தேடியது.
வேர்வையும் களைப்புமாக வந்தவளைக் கண்டு “வானதி”, என்றான். அவன் குரலில் சட்டென்று நிமிர்ந்தவள், திகைத்துப் பார்த்தாள். “வினோத்… நீங்க எங்க இங்க?” என்று கேட்டபடியே...
“எனக்கு கொஞ்சம் டைம் குடுங்க. நான் யோசிக்கறேன். ஒரு வாரம் வெயிட் பண்ண சொல்லுங்கப்பா.”, தந்தை , தாய் முகம் காணச் சகியாமல் அப்போதைக்கு வாய்தா வாங்கினாள்.
இந்த அளவிற்கு ஒத்துக்கொண்டதே போறும் என்பதுபோல அப்போதைக்கு அமைதியானார்கள்.
“வானதி… வானதி ….சாப்பிட போலாம் வா.”, தோளைப் பிடித்து இழுக்கவும், நினைவுக்கு வந்தவள்,
“ஹா… ப்ரியா… சாரி..எதோ யோசனை. வா...
மருமகளைக் கண்டிக்காமல் மௌனமாக இருந்து தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் பார்வதி.ஊரில் இல்லாத பிள்ளையாக ஏன் இவரை தேர்ந்தெடுக்க வேண்டும். சரி அப்படித்தான் முடிவென்றால் அதை முழு மனதோடு செய்யலாம் அல்லவா? இப்படி புடவை, தாலி எடுக்கக்கூட வரவில்லை. வானதியிடமும் அவன் வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லை. இவர்கள் மாப்பிள்ளையைப் பார்க்க அவன் வீட்டிற்கு சென்ற...
இரவு மலர் போனதும், இவர்கள் இருவரும் சாப்பிட அமர்ந்த பின், வினோத் மெதுவாக ஆரம்பித்தான்.
“வானதி… நாம் பேசணும். கல்யாணத்துக்கு முன்ன நம்ம வாழ்க்கையை எப்படி கொண்டு போகணும் நிறைய யோசிச்ச. ஆனா, நம்ம இரண்டு பேருக்குமே ஒரு பிடித்தம் வரும்னு யோசிச்சயா?”
“இல்லை…. “,
“ஏன்? அதுவும் ஒரு ஆப்ஷந்தானே?”, வினோத் கேட்கவும், தோளைக் குலுக்கியவள்,
“உங்களுக்கு என்னைப்...
ஆழ் நீலக் கடலும், மேகங்கள் காணாத நீல வானும் தூரத்தே ஏதோ ஒரு புள்ளியில் இணையும் இடம் கரு நீலக் கோடு போல தெரிந்தது. பளீர் வெள்ளை மணலில் நட்டு வைத்திருந்த வண்ணக் குடையின் கீழே, இருவர் சாய்ந்து படுக்கும் வகையில் அமைந்திருந்த இருக்கையில் சாய்ந்திருந்தான் அரவிந்த்.
நீச்சல் ஷார்ட்ஸ் மட்டும் அணிந்திருக்க உடற்பயிற்சியில் வார்த்தெடுத்த...
அத்தியாயம் – 13
“காபியை மேலே கொண்டு வா வானதி ப்ளீஸ். பேசணும். “, வினோத்தின் கோரிக்கைக்கு சம்மதமாக தலையசைத்து அவனை அனுப்பி வைத்தவள்,
‘கூல் வானதி… அவரை கோவிக்க உனக்கு எந்த ரைட்சும் கிடையாது.’ என்று நூறாவது முறையாக சொல்லிக்கொண்டாள்.
அவனுக்கான காபி, சிற்றுண்டியை ட்ரெயில் அடுக்கி எடுத்துக்கொண்டு, அவன் அறை வாசலை தட்டவும்,
“வா வானதி…”, என்ற...
Prologue
வானதி அந்த வீட்டிற்குள் அடியெடுத்து வைக்கையில் அவளைச் சுற்றி நிறைய பேர் நின்று கொண்டிருந்தார்கள். அந்த வீட்டின் எஜமானிக்கு அப்படி கூட்டம் இருந்தால் பிடிக்கும். சென்ற வாரம் கூட நட்பு வட்டத்திற்காக ஒரு பார்ட்டி. அதுவும் சிங்கப்பூரிலிருந்து விடுமுறைக்கு வந்திருக்கும் அவளுக்காக என்றே ப்ரத்யேகமாக நடந்த நட்பு விழா.
அதன் நினைவுகளின் தாக்கத்தில் நின்ற வானதியை,...
அத்தியாயம் – 5
படுக்கை அலங்காரத்தைப் பார்த்து எரிச்சலானவன்,
“உங்க அண்ணனா?”, என்று கேட்டான், உள்ளே நுழைந்தபடியே.
“வாய்ப்பே இல்லை. கண்டிப்பா செய்திருக்க மாட்டான். அவனும் தான நம்மோட எல்லாரையும் வழியனுப்பி வெச்சிகிட்டு இருந்தான்?”, வானதி கேட்கவும், கோட்டை கழட்டியவன் ஒரு நொடி விரைத்து,
“அஃப் கோர்ஸ்… அந்த ஹாஃப் பாயில் வேலையாத்தான் இருக்கும்.”, பல்லைக் கடித்தபடி போனை எடுத்து...
அத்தியாயம் – 11
“ஹலோ… மேடம்… நான் வினோத் சர் ஸ்டூடன்ட் ப்ரியா பேசறேன். அன்னிக்கு உங்க வீட்டுக்கு வந்திருந்தோமே…”
“அஹ்… சொல்லு ப்ரியா… ஞாபகமிருக்கு.”, இவள் எதற்கு போன் செய்கிறாள் என்ற யோசனையோடே, குரல் சற்று பதற்றமாக இருப்பது போல படவும், தொடர்ந்து வானதியே,
“எல்லாம் ஓக்கே தான ?”, என்று கேட்டாள்.
“ம்ம்.. இல்லை மேம்… இங்க...
அத்தியாயம் – 20
என்ன நினைத்தாளோ… அத்தனை வார்தையாடல்களுக்கு பிறகு ஒரு முடிவுக்கு வந்தவளாக, படுக்கையில் சாய்ந்து அமர்ந்தவள், பேசத் தொடங்கினாள்.
“நான் வேலைக்கு சேர்ந்து ஒரு ஏழு எட்டு மாசத்துல கல்யாணத்துக்கு பார்க்க ஆரம்பிச்சாங்க வீட்ல. நான் உள்ள இருக்கறது தெரியாம, அப்பா ஒரு ஜாதகம் வந்திருக்குன்னு அம்மாகிட்ட காமிச்சாங்க. அம்மா கூட இருந்த போட்டோ...
அத்தியாயம் – 18
கதவு தட்டப்பட, கவனம் கலைந்தவன் சென்று பார்க்க, காபியோடு , இட்லி சாம்பாரையும் கொண்டுவந்திருந்தார் மலர்.
ட்ரேவை வாங்கிக்கொண்டு நன்றி சொன்னவன், “சாப்ட்டு இன்னும் கொஞ்சம் தூங்கறேங்க்கா. நீங்க மதியத்துக்கு செஞ்சிட்டு கிளம்புங்க. நைட் நான் பார்த்துக்கறேன்.”, எனவும், சரியென்று கிளம்பிவிட்டார்.
உணவும் காபியும் உள்ளே செல்ல, மூளை கொஞ்சம் சுறுசுறுப்பாகியது. இன்று ஞாயிற்றுக்கிழமை....