தகிக்கும் தீயவள்
*12*
ஊர் அடங்கி சாய்ந்த வேளையில் அவளெதிரே அமர்ந்திருந்தான் ராஜா. கண்களும் கன்னங்களும் உப்பி, நாசி சிவந்து, கலைந்த கோலமாய் இருந்தவள் அவளாகவே வாய் திறக்கட்டும் என்று அமைதியாய் இருந்தான். வழக்கமாக இது போன்ற பின்னிரவு நேரங்களில் அவள் வீட்டிற்கு வருவதை தவிர்த்து விடுபவன் இன்று ஒரு வேலை சம்மந்தமாக பேச வந்தபோது அவளின் உருக்குலைந்த...
*11*
“அக்கா, இவங்க கயல் பாப்பாவோட அப்பா, எங்க ஸ்கூல்ல சயின்ஸ் டீச்சரா இருக்காங்க.” என்று நிலா சக்திவேலனை காண்பித்து சக்தியிடம் சொல்லியவள், “சார் இவங்கதான் என்னை காப்பாத்தி வேலையில் சேர்த்துவிட்டு இந்த நிலைமையில வச்சிருக்காங்க. சக்தி அக்கா.” என்று சக்திவேலனிடம் அவளை அறிமுகப்படுத்தி வைத்தாள்.
இருவருக்குமே அவள் சொல்வது எதுவும் சிந்தையில் ஏறவில்லை. பல வருட...
*10*
அன்று பள்ளி முடிந்ததற்கான பெல் அடிக்கவும் அரட்டையடித்துக்கொண்டு மாணவர்கள் வெளியேற, கயல்விழி பேக்கை மாட்டிக்கொண்டு வகுப்பறையில் இருந்து மெதுவாக ஆசிரியர் அறை நோக்கி நடந்தாள். எதிர்ப்பட்ட நிலா இவளைக் கண்டதும் அப்படியே நிற்க, அவளை கூர்ந்து பார்த்த கயல்விழி உதடு சுழித்தபடி கடந்தாள்.
‘இந்த சிறுசு கூட மதிக்க மாட்டேங்குது. என்ன பொழப்புடா இது.’ விரக்தி...
*9*
அன்று தீபாவளிப் பண்டிகை. ஊரே விழாக்கோலம் பூண்டிருக்க, சக்திவேலன் எழுவேனா என்று உறக்கத்தை தழுவியிருந்தான். அவன் அழகியும் விடுவேனா என்று தலை குளித்து துவட்டிய துண்டின் நுனியை மெலிதாக சுருட்டி அவன் செவி துவாரத்தில் விட்டு தீண்டினாள். உறக்கம் தடைபட முகம் சுழித்து செவி தீண்டுவதை தட்டிவிட்டு முகத்தை மறுபுறம் திருப்பி உறக்கத்தை தொடர,...
*8*
வாக்கு கொடுத்தது போல் மாலை பள்ளி முடித்து வீடு வந்து வயிற்றை கவனித்து உடை மாற்றி கயல்விழியை கடற்கரைக்கு அழைத்துச் சென்றான் சக்திவேலன். மாலை மங்கி இருள் கவிழத் தொடங்கியது. சிலிர்க்க வைக்கும் தென்றலின்றி மனதை இலகுவாக்கும் காற்றாய் தேகம் உரசிச் செல்ல, ஆங்காங்கு மக்கள் கூட்டம்.
கடலூரில் கடற்கரை இருந்தாலும் அவர்கள் இருந்த இடத்திலிருந்து...
கடலூர் மாவட்டத்தில் ஒரு பகுதியின் பெயரை சொல்லி அங்கிருக்கும் பள்ளியின் பெயரை குறிப்பிட்டவள், “நான் அங்க ரெண்டு வருஷம் படிச்சேன் சார். நீங்ககூட எனக்கு அப்போ சயின்ஸ் க்ளாஸ் எடுத்தீங்க, குடும்ப கஷ்டம்னு ஒருதடவை புக்ஸ், நோட்ஸ் வாங்க ஹெல்ப் கூட பண்ணீங்க.” என்று அவளே அறிமுகப்படுத்திக்கொள்ள, அந்த ஊர் மற்றும் பள்ளியின் பெயரைக்...
*7*
வழக்கம் மாறாது நாட்கள் அதன்போக்கில் நகர, அப்பாவும் மகளும் அப்பள்ளியில் கச்சிதமாக பொருந்திவிட்டார்கள். வார விடுமுறை தினமான அன்று இருவரும் நன்றாக இழுத்துப் போர்த்தி உறங்கிக்கொண்டிருக்க, அழைப்பு மணி சத்தத்தில் கண் விழித்தான் சக்திவேலன். தன் மேல் கால் போட்டு உறங்கும் மகளை நகர்த்திவிட்டு எழுந்தவன் அணைவாய் தலையணை வைத்துவிட்டு கண்களை கசக்கிக்கொண்டே வந்து...
*6*
“சக்தி கவுன்சிலரை போய் பாத்துட்டு வந்துடுவோமா?” காலை உணவு முடித்து ஓய்வாக அமர்ந்திருக்கும் வேளையில் ராஜா கேள்வியெழுப்ப, நெற்றி சுருக்கியவள், “எதுக்கு இப்போ?”
“உன் பிறந்தநாளுக்கு ஒரு அட்டனென்ஸை போட்டுட்டு வரணும்.”
“ம்ச்… நான் என்ன அரசியல்லையா குதிக்க போறேன், அவர் வீட்டுக்கு போய் கும்புடு போட?” என்று அலட்சியம் செய்தவளை மறுப்பாய் பார்த்த ராஜா,
“பெரிய இடத்து...
*5*
எழுந்ததிலிருந்து அவனை ஓரக்கண்ணால் நோட்டமிட்டபடி பரபரப்பாய் அங்குமிங்குமாய் சுழன்று கொண்டிருந்தவளை நாற்காலியில் அமர்ந்து கன்னத்தில் கை வைத்து பார்த்துக்கொண்டிருந்தான் சக்திவேலன்.
“எதுக்கு இப்போ இப்படி பாத்துட்டு இருக்கீங்க? போய் வேற வேலை இருந்தா பாருங்க.” அவன் பார்வை வீச்சை பொறுக்க 7முடியாமல் சிணுங்கினாள் அழகி.
“என் வேலையைத் தானடி பாக்குறேன்.” என்றான் இவனும் கிறக்கமாய்.
“நீங்க இப்படி என்னை...
*4*
தன்னருகில் அமர்ந்திருக்கும் சக்தியை பார்ப்பதுமாய் பின் குனிந்து கொள்வதுமாய் இருந்த நிலாவை கண்ணாடி வழியே கோவத்துடன் பார்த்த ரவி, “இன்னாத்துக்கு இப்போ நீ க்காவை லுக் வுட்டுட்டு இருக்க? அதான் இளையராஜாகிட்ட பாடம் கத்துக்கிட்டதாட்டம் சோககீதம் வாசிச்சு அட்டை மாதிரி ஒட்டிக்கிட்டியே.” என்று அதட்டலாய் பேச, “ரவி கம்முனு இரு.” என்ற சக்தியின் கண்டனம்...
*3*
பொருட்கள் எதுவும் இன்னும் அதன் இடம் சேராது பெட்டியில் அடைந்திருக்க, அந்த புது வீட்டின் பெயிண்ட் வாசனைத் தாண்டி மல்லிகைப்பூ மணம் அவன் நாசியை நிறைத்தது. பால் டம்ளருடன் தன்னெதிரே நிற்கும் அழகியை பார்த்தான்.
“இன்னைக்கே இதெல்லாம் பண்ணனுமா?” என்று அவன் கேட்க, அவளுக்கு என்ன புரிந்ததோ வெட்கத்தில் தலை குனிந்தவள் பாலை கட்டிலின் கால்...
*2*
தான் வேலை செய்யும் அதே பள்ளியில் கயல்விழியை இரண்டாம் வகுப்பில் சேர்த்திருந்தான் சக்திவேலன். காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளி திறந்து இரண்டு நாட்கள் சென்றிருந்தது. புது பள்ளி, புது சூழ்நிலை, புதிய சீருடை என்று மருண்ட விழிகளுடன் தந்தை கையை பற்றிக்கொண்டு தன் வகுப்பு நோக்கி நடந்தாள் கயல்விழி. மகளை போலவே சுற்றத்தை நோட்டமிட்டபடி...
சாமான்களை ஏற்றிச் சென்ற லாரி முன்னே சென்றிருக்க, மூன்றரை மணி நேர பயணத்தின் இடையில் காரை நிறுத்தி சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டார்கள். முன்னிரவில் சென்னை வாகன நெரிசலில் போராடி பட்டினப்பாக்கம் வந்துவிட்டிருந்தனர். பட்டினப்பாக்கம் கடற்கரைக்கு செல்லும் தெருவொன்றில் அவன் வீடு பார்த்திருந்தான். அந்த தெருவுக்கு பின்னே அவன் வேலை செய்யும் பள்ளி இருப்பதால் கடற்கரை...
*1*
கண்களைப் பறிக்கும் வெளிப்பூச்சுகளின்றி இருப்பதை சற்று எடுத்துக்காட்டும் விதமாய் ஓரடுக்கு பவுடரும் கள்வனைக் கவரவென மான் விழிகளில் மைப்பூச்சிட்டு உடைக்கு ஏற்றார் போல் நெற்றியில் அரக்கு பொட்டிட்டு தேவதையென ஆட்டோவில் வந்திறங்கிய பாவையை விரிந்த புன்னகையோடு வரவேற்றான் அவன்.
உடுத்தியிருக்கும் உடையை விழி மொழியாலே சுட்டிக்காட்டி எதிர்பார்ப்புடன் அவனை அவள் ஏறிட, அவளை நெருங்கி விரல்கள்...