சுடும் பனித்துளியே!
திருநெல்வேலி பாளையங்கோட்டையில், தனக்கு பிடித்த பாடலை முணுமுணுத்தபடி வீட்டில் தனது அறையில் அபியுதித் கிளம்பிக் கொண்டு இருக்க,
அவன் அறையினுள் வந்த அவனது தந்தை அன்பரசு வருத்தம் தோய்ந்த குரலில், “என் மகன் என்னை போல் யாருக்கும் தீங்கு நினைக்காதவன்னு பெருமையா மார்தட்டிட்டு இருந்தேன்.. அதை கானல் நீரா மாத்திட்டியே! உன் உடம்பில் உன் அம்மா...
துளி 1
பூங்காவனத்தூர் கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. இன்று அவர்களின் இளைய ராணியின் திருமணம்.
பூங்காவனத்தூர் கிராமம் - திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் அவ்வூரை நவீன கிராமம் என்று சொல்வதே சரியாக இருக்கும். ஆம்! நகரத்தில் இருக்கும் அனைத்து விஞ்ஞான வசதிகளும் இங்கேயும் இருக்கிறது. கூடுதலாக இயந்திர சத்தங்களும், மாசும் இல்லாத இயற்கையுடன் கூடிய அமைதியான சூழலை...
அபியுதித்தைப் பார்ப்பதைத் தவிர்த்தபடி கூட்டத்தினரைப் பார்த்தவள், “இவுக சொல்லுற குற்றசாட்டை நம்புறவெங்க இடதுபுறமும், நம்பாதவெங்க வலது புறமும் வாங்க” என்றாள்.
“ஏய்! யென்ன பேசி..” என்று பேச ஆரம்பித்த மாப்பிள்ளையின் அன்னையை முறைத்தவள், “நீங்க பேசினப்ப நானு அமைதியா தான கேட்டுகிட்டு இருந்தேன்.. இப்போ நீங்க..” என்றபடி தனது உதட்டின் மீது ஆள் காட்டி விரலை...