Tuesday, April 29, 2025

    உறைகின்ற நினைவில் உயிராய் நீ.

    உறைகின்ற நினைவில் உயிராய் நீ 28                              இன்பன் காலையில் சிபியை விட்டு சென்றவன் இன்னும் அறைக்கு திரும்பாமல் இருக்க, கிட்டத்தட்ட நேரம் இரவை நெருங்கி கொண்டிருந்தது.. இனியன் வேறு சிணுங்கி கொண்டே இருக்க, எப்படியோ அவனை சமாளித்து கொஞ்சம் பால் மட்டும் புகட்டி உறங்கவைத்து இருந்தாள்.                           ஓரிடத்தில் நிற்காமல் எப்போதும் துறுதுறு வென ஓடிக்...
    உறைகின்ற நினைவில் உயிராய் நீ 11                               சிபியின் வீட்டில் இருந்த ஒற்றை பாயில் படுத்திருந்தான் இன்பன், படுத்திருந்தான் என்பதைவிட படுக்க வைக்கப்பட்டு இருந்தான் என்பது பொருத்தமாக இருக்கும். ஆம்... லாரன்சும் ஜெகனும் சேர்ந்து தான் அவனை அங்கே கிடத்தி இருந்தனர்..                             சிபியிடம் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் அவன் மொத்தமாக தன்னிலை இழந்திருக்க, மருத்துவர்கள் சொல்லி...
                 மூன்று ஆண்டுகளுக்கு முன் அவன் இருந்த நிலை தானாகவே அவர் கண்முன் விரிந்தது. இந்த பழக்கங்கள் எல்லாம் அறவே பிடிக்காது அவனுக்கு..                      அவர்களுக்கு சொந்தமான கல்லூரியிலேயே அவன் சிவில் இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க, மேற்படிப்புக்காக டெல்லிக்கும் சென்று வந்திருந்த சமயம் அது. அவன் வெளிநாட்டுக்கே சென்று...
                           "இல்ல.. நான் அங்கே.." என்று அவள் இனியனின் மறுபுறம் செல்ல பார்க்க, "அவனை எழுப்பி விட்டுடாத சிபி.. இங்கேயே படு.." என்றவன் அவள் கையை பிடித்து தன்னுடன் இழுத்து கொள்ள, அவன் நெஞ்சில் வந்து விழுந்தாள் அவள்..                         இதயம் படபடவென தன் துடிப்பை வேகமாக்க, இன்பனின் செயல்கள் முழுதாக புரியவில்லை என்றாலும், அவன்...
    உறைகின்ற நினைவில் உயிராய் நீ 01                               தமிழகத்தின் அழகான நகரங்களில் ஒன்றான வால்பாறை, தனக்கே உரித்தான குளிர்ச்சியை அனைவர்க்கும் பிரித்தளித்து விடியலுக்கு தயாராகி கொண்டிருக்க, அந்த நகரத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது நந்தவனம்.                               மிகப்பெரிய அளவில் பரந்து விரிந்திருந்தது அந்த தேயிலை தோட்டம்... அதன் உரிமையாளர் மிகவும் அன்பானவராக அப்பகுதியினரால் அறியப்பட, தன்...
    ஏன் மாதவியே ஒரு லேசான பட்டுபுடவையும், லேசான அலங்காரத்துடன் வந்திருக்க, என்னை நலம் விசாரிக்கவா வந்தனர் இவர்கள்..என்பது போல ஒரு மிதப்பான பார்வைதான் பார்த்தார். இதற்குள் மதுசூதனனும் வந்துவிட, இன்பனும், லாரன்சும் நின்று அவர்களை சிரிப்புடன் வரவேற்று விட்டு தங்கள் அறைக்கு வந்துவிட்டனர்.                       மதுசூதனன் அவர்களுடன் அமர்ந்துவிட பேச்சு தொடர்ந்தது.. தொழில் தொடர்பாக இருவரும் பேசிக்...
    உறைகின்ற நினைவில் உயிராய் நீ 21                                  நாட்கள் தொடங்குவதும், முடிவதும் இன்பனின் வாழ்த்துக்களோடு தான் என்று ஆகி இருந்தது சிபியின் நிலை.   இன்பன் அவளிடம் பேசியதையோ, அவளுக்கு நாள் தவறாமல் வந்து விடும் கவிதை வரிகளை குறித்தோ இதுவரை யாரிடமும் பகிர்ந்து கொண்டிருக்க வில்லை அவள்.                                   அவளின் மொபைல் பெரும்பாலும் பையிலேயே இருப்பதால், அவளின்...
    உறைகின்ற நினைவில் உயிராய் நீ 19                               இன்பன் முதன்முதலில் சிபியை பார்த்தது ஒரு கோவிலில் தான். அவன் அன்னையின் சொல்படி அன்றைய தினம் கோவிலுக்கு வந்திருந்தான் அவன். கடவுளை வணங்கி முடித்து அங்கிருந்த மண்டபத்தில் அவன் அமர்ந்திருந்த போது தான் அவனுக்கு எதிரே இருந்த சன்னதியில் வந்து அமர்ந்தாள் சிபி.                              அவளுடன் இருந்தவர் அன்னையாகத்...
    அபிராமி சிபியின் பக்கம் திரும்பினார்.. இதுவரை ஒரு வார்த்தை கூட பேசி இருக்காத மருமகள்.. மருமகள் என்று அவளுக்காக எதுவுமே செய்து இருக்காதவர் இன்று மகனுக்காக அவளிடம் வந்து நின்றார்.. இனியனை பற்றி இருந்த அவள் கையை பிடித்துக் கொண்டவர் " எங்களை மன்னிச்சிடுடா... " என்று அவளிடமும் மன்னிப்பு கேட்க                        என்ன பதில்...
    உறைகின்ற நினைவில் உயிராய் நீ 29                          இன்பன் தனது நட்சத்திர விடுதியின் அலுவலக அறையில் அமர்ந்திருக்க, அந்த அறையின் ஒரு பகுதியில் சிபிக்கும்  இடம் ஓதுக்கப்பட்டு இருந்தது. ஒரு டேபிளும், சேரும் போடப்பட்டு, புதிதாக ஒரு கணினியும் அங்கே இடம்பெற்று இருக்க, தனக்கு முன்னால் இருந்த கணினியில் கவனமாக இருந்தாள் சிபி.                        இன்பன் அவளிடம்...
                                 அவனிடம் அதற்குமேல் எது பேசினாலும், இன்னும் இன்னும் ஏறிக் கொண்டே தான் இருப்பான் என்று புரிய, தலையை தொங்க போட்டுக் கொண்டு அங்கிருந்து வெளியேறினார் மதுசூதனன்.. தந்தை அப்படி செல்வதை அவன் திருப்தியாக பார்த்து நிற்க, ஜெகனும், லாரன்ஸும் இன்னமும் அவனுடன் தான்..                            அந்த அறையில் இருந்தவர்களை எப்போதோ ஜெகன் வெளியேற்றி விட்டிருக்க,...
    இன்பனுக்கு சிபியின் மனம் புரிந்தே இருக்க, அவளை இலகுவாக்கவே இங்கு அழைத்து வந்திருந்தான். வெகுநேரம் கையை கோர்த்துக் கொண்டு அலையில் நின்றவர்கள் அமைதியாக வந்து மணலில் அமர்ந்து கொண்டனர்.                     இரவு ஏறி வெகுநேரம் கழித்தே இருவரும் அங்கிருந்து வீட்டிற்கு கிளம்ப, உணவு நேரமும் மௌனமாகவே கழிந்தது.. சிபி பிரிட்ஜில் இருந்த ரசமலாய் ப்ளாஸ்ட் எடுத்து...
    "இன்னும்கூட என்னல்லாமோ சொன்னிங்க... பார்த்திருக்கவே மாட்டேன்... கஷ்டப்படுத்திட்டேன்ன்னு..." என்று அவனைப்போலவே அவள் ஒற்றைப்புருவம் உயர்த்த                      அவள் புருவங்களை மெல்ல நீவிவிட்டவன் "எல்லாமே அப்படியே தான் இருக்கு.. ஆனா, நான் உன்கூடவே தானே இருக்கேன்.. அதுபோதும்... என்ன கஷ்டம் வந்தாலும், ஒண்ணுமில்லாம பண்ணிடுவோம்.." என்றதும், சிபி அவன் தாடையை  பற்றியவள் அவன் முகத்தை இப்படியும், அப்படியுமாக...
    இதற்குள் சுதாரித்து கொண்டவள் "ம்ம்ம்.." மட்டுமே சொல்ல                           "என்ன நினைக்கிற சிபிம்மா நீ.. இப்படி அழுதா என்ன நினைக்கட்டும் நான்.. எதுக்காக அழற.. என்ன பண்ணுது உனக்கு.. உடம்பு எதுவும் முடியலையா.. இல்ல.. அந்த உன் மாமப்பையன் எதுவும் பிரச்சனை பண்றானா?? இல்ல வேற எதுவும் பிரச்சனையா.." என்று அவளை பேசவே விடாமல் அவன்...
    உறைகின்ற நினைவில் உயிராய் நீ 27 இன்பன் கூறிய வார்த்தைகளின் அர்த்தத்தை கிரஹித்துக் கொள்ளவே சிறிது நேரம் தேவைப்பட்டது அபிராமிக்கும், மதுசூதனனுக்கும். என் மகனை அழிக்க பார்த்தார்களா?? என்று தாயாய் அபிராமியின் மனம் கொதிக்க, தன் கணவரின் குடும்பத்தின் மீது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு வெறுப்பு வந்தது. மதுசூதனனுக்குமே இது அதிர்ச்சி தான். கலையரசன் கொஞ்சம்...
    தொடர்ந்து அழைப்பு வரவும், சிபியும் அதற்குமேல் யோசிக்காமல் அழைப்பை ஏற்று "ஹலோ" என்று ஒற்றை வார்த்தை உரைத்து காத்திருக்க, எதற்காக அழைத்தோம் என்பதே மறந்து விட்டது இன்பனுக்கு.                        சிபி எதிர்முனையில் இன்னமும் இரண்டு மூன்று முறை ஹலோ..ஹலோ.. என்று கத்தி இருக்க, "சிபி.." என்று ஆழ்ந்த குரலில் மென்மையாக அவளை தீண்டிய அந்த குரல்...
    உறைகின்ற நினைவில் உயிராய் நீ 13                                              சிபியின் வலது  கையின் மேல்பகுதியில் காயமாகி இருக்க, கையை சுற்றி கட்டு  போட்டு இருந்தனர் மருத்துவமனையில்.. காயம் சற்றே ஆழமாக இருக்க, வலியும் அதிகமாகவே இருந்தது சிபிக்கு. இதற்கு இடையில் லாரன்ஸ் தான் துரத்தி சென்றவனை தவற விட்டிருக்க, சிபியின் பையும்  அவனுடனே சென்றிருந்தது.                                   இன்பன், ஜெகன்...
                        இன்பன் கொஞ்சமும் இளக்கம் காட்டாமல் அவளை முறைக்க, தானாக வாயை திறந்து இருந்தாள். தட்டிலிருந்த மொத்தத்தையும் அவன் ஊட்டி முடிக்க, எழுந்து கொள்ள பார்த்தவளிடம் "இங்கே உட்காரு.. நான் பேசணும்.." என்று அவன் அழுத்தமாக கூற                    அவன் எதிரில் சிபி அமர, "அடுத்து என்ன செய்ய போற.. " என்றவன் அவள் முகம்...
    உறைகின்ற நினைவில் உயிராய் நீ 24                                வெகு நாட்களுக்கு பிறகான அழகான விடியல் சிபியின் வாழ்வில். லேசாக அசைந்து, திரும்பக் கூட முடியாத அளவுக்கு இறுக்கமாக அவளை அணைத்திருந்தான் இன்பன்.. இது போன்ற காட்சிகள் எல்லாம் வெறும் கனவு மட்டும்தான் இனி என்று நினைத்தே தன்னையே ஒடுக்கி கொண்ட வாழ்வு அவளுடையது..                             ஆனால், அத்தனையும்...
    உறைகின்ற நினைவில் உயிராய் நீ 16                          பேரின்பன், சிபி மற்றும் இனியன் மூவரும் ஒரு காரில் தங்கள் பயணத்தை தொடங்கி இருக்க, அவர்களுக்கு சற்றே பின்னால் ஜெகன் மற்றும் லாரன்ஸ் அவர்களை தொடர்ந்து கொண்டிருந்தனர்.. இன்பனை பொறுத்தவரை நீண்டு கொண்டே இருக்காதா?? என்று ஏக்கம் ஏற்படுத்தும் பயணம்...                        அவன் டிரைவர் இருக்கையில் அமர்ந்திருக்க, அவனுக்கு...
    error: Content is protected !!