ஆள வந்தாள்
திரும்பி வந்த மதுரா மாமியார் பேசுவதை எல்லாம் சகிக்க முடியாமல் வேகமாக அறைக்கு சென்று விட்டாள்.
மதியமே பூங்கொடியை மோகன் அவனது வீட்டிற்கு அழைத்து சென்றிருந்தான்.
இரவு உணவாக சாதம், பூண்டு குழம்பு, வத்தல் என இருக்க இரண்டு தட்டுகளில் தானே பரிமாறிக் கொண்டவன் அறைக்கு வர, “இன்னும் என்னென்ன கேட்கணும் நான்? இருபத்தி நாலு மணி...
அத்தியாயம் -2(2)
“ஏற்கனவே என்னை நிறைய அசிங்க படுத்திட்ட. எம்மேலயும் கொஞ்சம் தப்புங்கிறதாலதான் அமைதியா போறேன். இனியும் அசிங்க படுத்தாத. அவன் யாருடி உனக்கு? நான் பக்கத்துல உட்கார்ந்தா அவனை எதுக்கு பார்க்கிற?” கண்களை மூடிய படியே சின்ன குரலில் உறுமலாக பேசினான்.
அவள் பதில் பேசாமல் இருக்க கண்களை திறந்து பார்த்தான். அவளது...
நிச்சயம் தனியாக வேண்டாம், நேரடியாக திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என கந்தசாமி பேசியதற்கு சுகந்தியின் தந்தை ஒத்துக் கொள்ளவில்லை.
சுகந்தியின் தம்பி இபோதுதான் கல்லூரி முதல் வருடம் படிக்கிறான். அவனுக்கு திருமணம் செய்யவெல்லாம் சில வருடங்கள் ஆகும் என்பதாலும் திருமணம் பையன் வீட்டில் என்பதாலும் அவரது பக்கத்திலிருந்து நிச்சயத்தை விமரிசையாக செய்ய பிரியப் பட்டார்.
செலவு அவர்களுடையது எனும்...
ஆள வந்தாள் -13
அத்தியாயம் -13
சரவணன் அவனது பெற்றோர், பூங்கொடியின் பிள்ளைகள் அவளது மாமனார் மாமியாரும் கூட அந்த காரில் சென்று கொண்டிருந்தனர். அந்த காரை தொடர்ந்து சேரன், மதுரா ஜோடியும் மோகன், பூங்கொடி ஜோடியும் தனித் தனி பைக்கிலும் சரவணனின் நண்பர்கள் இரண்டு பேர் இன்னொரு பைக்கிலுமாக சென்றனர்.
சரவணனுக்கு பெண் பார்ப்பதற்கான பயணம் அது....
ஆள வந்தாள் -7
அத்தியாயம் -7
வீட்டின் உள்ளே வந்த சேரன் செய்வதறியாது கூடத்தின் ஓரமாக நின்று கொண்டிருந்த மதுராவை கண்டு உருகிப் போனவனாக, “மதுரா…” என அழைத்தான்.
அவனை கண்டவள் வேகமாக அவனருகில் வர, அதே சமயத்தில் செழியனும் உள்ளே நுழைய மீண்டும் தள்ளிப் போய் நின்று கொண்டாள்.
“சேரா, உன்கிட்ட மாமா என்னமோ பேசணுமாம் கூப்பிடுறார்” என...
அத்தியாயம் -19
பைக் திரும்ப வந்து விட்டதை சரவணன் மூலமாக அறிந்திருந்த மதுராவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. சமையல் வேலையெல்லாம் முடித்தவள் முகம் கழுவி தலை வாரி தெளிவாக இருந்தாள். அழுததால் ஏற்பட்டிருந்த கண்களின் வீக்கம்தான் முழுதுமாக சரியாகியிருக்கவில்லை.
மூங்கில் தட்டில் பூவோடு வந்த அண்ணனை பார்த்த சரவணன், “என்ன ண்ணா இது?” எனக் கேட்டான்.
“ம்ம்ம்… புடலங்காய்… போடா…”...
அத்தியாயம் -1(2)
“எப்பய்யா வழி வுடுவீங்க? ஆய பஸ் ஏத்தி விடணும்” ஆட்டோவை செல்ல விடாமல் நிறுத்தி வைத்திருந்தவனிடம் சொன்னான் ஆட்டோக்காரன்.
உள்ளே யார் என எட்டிப் பார்த்தவன் அவசரமாக சேரனிடம் ஓடி சென்றான். சேரனின் முகத்தை எல்லாம் கேக்கால் பூசி விட்டிருந்தனர் அவனது நண்பர்கள் படையினர்.
“இந்த முறை கவுன்சிலர், அடுத்த முறை...
சட்டென தலையாட்டி விட்டவள், அவனது பேச்சு புரிந்து திகைத்து பின் தெளிந்து, “அவ்ளோ சீக்கிரம் இறங்கி வந்தா உங்களுக்கு பயமில்லாம போயிடும். ஒரு மாசம் என் வாய் பட்டினியாவே கெடக்கட்டும். அப்பதான் உங்க வாய்க்கொழுப்பு, கோவம் எல்லாம் அடங்கி வரும்” என முறுக்காக சொன்னாள்.
“பதமா சொன்னா கேக்க மாட்டியே நீ!” என்றவன் வெடுக் என...
விடியற்காலையில் எழுந்து விட்டனர்.
சேரனின் வீட்டிலும் யாருக்கும் சரியான உறக்கம் இல்லை. சிதம்பரத்தின் ஆட்கள் சேரனை பிடித்து விட்டால் என்னாகுமோ என்ற பயத்திலேயே வீட்டு ஆண்கள் அவர்களது ஆதரவாளர்கள்களுடன் ஆளுக்கொரு பக்கமாக இருந்தனர்.
கிராமம்தானே, அடிக்கடி வயிறை வாடாமல் பார்த்துக் கொண்டால் போதும், வேறு எதிர்பார்ப்புகள் இல்லாமல் இப்படியான சந்தர்ப்பங்களில் உடன் நிற்பார்கள். தேநீர் கடை வைத்திருக்கும்...
ஆள வந்தாள் -20
அத்தியாயம் -20 (1)
மதுராவின் அழுகையை அமத்த அவளை வீட்டுக்குள் அழைத்து சென்று விட்டான் சேரன்.
கந்தசாமி, சரவணன் இருவரையும் பொதுவாக பார்த்த சுகந்தியின் தந்தை, “ஒத்த பொண்ணுக்கு சிறப்பா செய்யணும்னு நினைச்சு இங்குட்டு பிரிவினைய கொண்டு வர இருந்தேன். எம் பொண்ணுக்குன்னு உள்ளத வேற விதத்துல சேத்து வச்சிடுறேன்....
ஆள வந்தாள் -6
அத்தியாயம் -6
செழியனுக்கு சொந்தமான தென்னந்தோப்பில் உள்ள மோட்டார் அறையில் இருந்தனர் சேரனும் மதுராவும்.
அறை நன்றாக சுத்தம் செய்யப் பட்டு தண்ணீர் பானை, உணவு, ஒற்றைப் போர்வை என மிச்சமிருக்கும் அன்றைய நாளை கடக்க ஏதுவாக இருந்தது.
சுவற்றில் சாய்ந்து முழங்காலில் முகம் வைத்து அழுது கொண்டிருந்தாள் மதுரா.
“நானும் அரை மணி நேரமா பார்க்கிறேன்,...
சிறு விஷயத்திற்கு இத்தனை களேபரமா? என அயர்ந்து வந்தாலும் இந்த விஷயத்தை அக்கா மாமாவிடம் எப்படி திரித்து சொல்வாளோ, மாமா என்ன நினைப்பாரோ, அதற்குள் அக்காவை சமாதானம் செய்து விடுவோம் என நினைத்து சேரனும் வெளியே வந்தான்.
மதுரா தூக்கி வைத்திருந்த அனுவை வெடுக் என பிடுங்கி தன் இடுப்பில் வைத்துக்கொண்ட பூங்கொடி, தன்னோடு வர...
அத்தியாயம் -23(2)
இப்படி அழுகிறாள் என்றால் விபரீதமாக என்ன நடந்ததோ என உள்ளுக்குள் வேறு பதற ஆரம்பித்திருக்க, “கோவத்தை கூட்டாம என்னன்னு சொல்லுடி” என சத்தமாக அதட்டினான்.
“உங்கம்மா வீட்டை பூட்டி வெளியில நிறுத்திட்டாங்க என்னை, போதுமா?” சீற்றமாக கேட்டவளுக்கு மூச்சு வாங்கியது.
“என்ன…” சேரனுக்கு விளங்கிக் கொள்ள முடியவில்லை.
அவள் சொன்னதை இன்னொரு...
துவைத்து உலர்த்திய துணிகளை மதுரா மடித்து வைத்துக்கொண்டிருக்க அவனுடைய வெள்ளை உடுப்புகளை எடுத்துக் கொண்டு கூடம் வந்த சேரன் தொலைக்காட்சியில் பாடல்களை ஒலிக்க விட்டு இஸ்திரி செய்ய ஆரம்பித்தான்.
சரவணன் அவனுடைய ஆடைகள் சிலவற்றை எடுத்து வந்து வைக்க, “என்னடா என்னை பாத்தா எப்படி தெரியுது, எடுத்திட்டு ஓடிப் போயிடு” என்றான் சேரன்.
முறைத்த சரவணன் நாற்காலியில்...
ஆள வந்தாள் -14
அத்தியாயம் -14
சேரன் களத்து மேட்டில் இருக்க அவனை காண செழியன், மதன் இருவரும் வந்தனர். ஆட்கள் நெல்லை எடை போட்டு மூட்டைகளில் கட்டிக் கொண்டிருக்க மேற்பார்வை செய்து கொண்டிருந்தான் சேரன்.
“என்ன மாப்ள… நீ செஞ்ச கூத்துல கட்டிலு காலு உடைஞ்சு போச்சுதாம், மாமா புதுக் கட்டிலுக்கு ஆர்டர் கொடுத்திருக்காவோ! பாத்து சூதானமா...
ஆள வந்தாள் -2
அத்தியாயம் -2(1)
திருவாரூர் நோக்கி பைக்கை செலுத்திக் கொண்டிருந்தான் சேரன். மூன்று வருடங்களுக்கு பிறகு அவனோடு இப்படி ஒரு அருகாமை. மதுராவுக்கு கண்களை கரித்துக் கொண்டு வந்தது. அவனுக்குமே சொல்லத் தெரியாத இதமான உணர்வுதான்.
கோவங்கள், வருத்தங்கள், இழப்புகள் என இரு பக்கங்களிலுமே உள்ளன. ஆனால் இந்த பிரிவை இருவராலுமே சகிக்க முடியவில்லை.
சேரனாவது தனக்கு...
ஆள வந்தாள் -10
அத்தியாயம் -10
“இத்தனை நாள் திருவிசாவ வம்பு சண்டை இல்லாத பயலுவோ நடத்தி காட்டிப்புட்டானுவளேன்னு காலைலதான் எமூட்டுல சொல்லிட்டிருந்தா. அப்படிலாம் சும்மா விட மாட்டோம்னு இந்தா ப்ரூ பண்ணிப்புட்டானுவளேப்பா!” என்றார் வயதானவர் ஒருவர்.
“ஆமாங்கிறேன், எப்பவும் ராத்திரிலதான் சண்டை கச்சேரி நடக்கும். இந்த தவணை பகல்லேயே சரவெடி வெடிச்சிப்புட்டாய்ங்கன்ன?” என்றார் இன்னொருவர்.
ஆமாம் சற்று முன்னர்...
ஆள வந்தாள் -25(pre final 3)
அத்தியாயம் -25(1)
கனகாவை சேரனும் மதுராவும் முற்றிலுமாக தவிர்க்க ஆரம்பித்து விட்டனர்.
மகனால் வெகு நாட்களுக்கு தன்னிடம் பேசாமல் இருக்க முடியாது. புதுப் பொண்டாட்டி மீதுள்ள மோகம் கலைந்தால் தன்னால் என்னிடம் பேசி விடுவான் என பகல் கனவு கண்டு கொண்டிருந்தார் கனகா.
புதுக் கதவு போடப்...
அத்தியாயம் -25(2)
இரண்டு நாட்கள் கனகா மருத்துவமனையில்தான் இருக்க நேரிட்டது.
சேரனின் நண்பர்களும் மோகனும் காரில் ஊருக்கு புறப்பட்டனர். அவர்களுடனே மதுராவையும் அனுப்பி வைத்து விட்ட சேரன் அவனும் பூங்கொடியுமாக மருத்துமனையில் தங்கி அம்மாவை பார்த்துக் கொண்டனர்.
கூடவே இருந்தாலும் ஒரு வார்த்தை அம்மாவுடன் பேசியிருக்கவில்லை சேரன். அவன் முகம் பார்த்து பார்த்து அவனது...
அத்தியாயம் -21(3)
தராத மாமி, “ம்ம்… பொண்டாட்டி இருக்கையில என்னை கவனிக்கிறியான்னு டெஸ்ட் பண்ணி பார்த்தேன், பாஸ் மார்க் வாங்கிப்புட்ட மாப்ள. வீம்புக்கு எடை தூக்கி உன் இடுப்பு புடிச்சுகிட்டுன்னா இன்னிக்கு ராத்திரி என்னையில்ல திட்டி குமிப்பா உன் சம்சாரம்” என்றார்.
குபீர் என சுற்றி உள்ளோர் சிரிக்க, அவன் முறைக்க, “சேச்ச பெரியம்மா,...