நெஞ்சம் பேசுதே
நெஞ்சம் பேசுதே 12
அளவுகடந்த கோபத்தில் இருந்தாள் திருமகள் நாச்சியார். அதீதமான கோபம். கோதை கூறிய செய்தியின் தாக்கம் கொஞ்சமும் குறையவே இல்லை இந்த நிமிடம் வரை. வாசுதேவகிருஷ்ணன் என்ன நினைத்து உதவினானோ, திருமகளைப் பொறுத்தவரை அது பெருங்குற்றமாகிப் போனது.
அதுவும் தன்னிடம் அதைப்பற்றி ஒன்றுமே கூறாமல் விட்டது இன்னும் வேதனை கொடுக்க, அப்படியென்ன...
ஆனால், அதே மனோகர் எந்த இடத்திலும் அவன் தாய் தந்தையையும் விட்டு கொடுத்தது இல்லை. திருமணம் முடிந்த நிமிடம் நேராக அவன் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டான் அவன். அவன் வீட்டிலும் ஆயிரம் ஏச்சு பேச்சுக்கள் இருந்தாலும், இவர்களை வெளியே துரத்தாமல் வீட்டிற்குள் அழைத்துக் கொள்ள, புகுந்த வீட்டை நினைத்து பெருமைதான் அந்த நேரம்.
அப்போதுகூட...
நெஞ்சம் பேசுதே 11
வாசுதேவகிருஷ்ணனும் திருமகள் நாச்சியாரும் இருவர் ஒருவராக கலந்து ஒரு வாரம் கடந்திருக்க, வழக்கம் போல் ஒரு அவசரமான காலை வேளை தான் அது. முதல் நாளுக்கு பிறகு காலையில் தாமதமாக எழுவதை தவிர்த்து விட்டிருந்தாள் திரு. தனது வழக்கமான வேலைகளை முடித்துவிட்டவள் வாசுதேவகிருஷ்ணனுக்கு அலைபேசியியில் அழைக்க, எடுக்கவே இல்லை அவன்.
...
நெஞ்சம் பேசுதே 10
"என்கிட்டே நீங்க நீங்களா இருக்கணும் இல்லையா மாமா.." என்று கண்ணீருடன் திருமகள் கேட்டு அமர்ந்திருக்க, அவளுக்கு உண்மையில் என்ன பதில் கூறுவது என்று புரியாத நிலையில்தான் இருந்தான் வாசுதேவன்.
அவள் கேட்பதில் தவறென்ன என்று அவன் மனம் மங்கைக்கு ஆதரவாக சாய, தவறுகிறோமோ என்று தடுமாறி நின்றான் வாசுதேவகிருஷ்ணன். பேச்சை...
திருமகளை கேட்கவா வேண்டும்... அத்தை கூறிய நிமிடம் சட்டென எழுந்து கொண்டாள். அவன் மீது இருந்த கோபங்கள் விலகி கொள்ள, அவன் மனைவியாக அவனுடன் ஆண்டாளின் முன் நிற்க ஏக்கம் கொண்டது மனது.
இருவரும் உள்ளே சென்று மீண்டுமொருமுறை வணங்கி முடிக்க, இம்முறை அர்ச்சகர் கொடுத்த குங்குமத்தை வாசுதேவனிடம் நீட்டினாள் திருமகள். வாசுதேவன் அவள் செயலில்...
நெஞ்சம் பேசுதே 09
அன்று இரவில் வாசுதேவகிருஷ்ணன் "திரு.." என்று அழைத்துவிடவும், அப்படி ஒரு நிறைவு திருமகள் நாச்சியாருக்கு. என்னவோ பெரிதாக ஏதோ ஒன்றை சாதித்துவிட்ட உணர்வுடன் தான் உறங்கி எழுந்தாள் அவள். ஆனால், அடுத்தநாள் காலையில் வழக்கம் போல் தன் மௌன கவசத்தை அணிந்து கொண்டிருந்தான் வாசுதேவகிருஷ்ணன்.
திருமகள் நாச்சியார் ஏக்கத்துடன் பார்த்து நின்ற போதும்,...
நெஞ்சம் பேசுதே 08
வாசுதேவகிருஷ்ணன் குளித்து வெளியே வர, அவனுக்கு முன்பாக அறையை விட்டு வெளியேறினாள் திருமகள். அவனுக்கான உணவை எடுத்து வைத்தவள் உணவு மேசையில் அவனுக்காக காத்திருக்க, அவளிடம் போராட முடியாமல் அமைதியாக உணவை முடித்துக் கொண்டு வெளியேறி விட்டான் அவன்.
அவன் சென்றதும் தானும் அமர்ந்து உண்டவள் தனது அறைக்கு சென்று...
பிரபாகரனுக்கு அடுத்து பிறந்தவன் அகிலன். இஞ்சினியரிங் முடித்து விட்டு இப்போது வெட்டியாக நேரத்தை செலவழிக்கிறான். அந்த வீட்டின் செல்லப் பிள்ளை என்பதால் அவன் இஷ்டத்துக்கு அவனை விட்டுவிட்டார்கள். அவனும் தவறான பாதையில் செல்பவன் கிடையாது என்பதால் தான் அவனுக்கு சுதந்திரம் கிடைத்திருக்கிறது. அப்பா அம்மா சொல் பேச்சு மட்டும் அல்ல. அண்ணனின் சொல் கேட்டு...
நெஞ்சம் பேசுதே 07
மூன்று நாட்களுக்கு முன்பாக ஊர்சபையில் நடந்ததை முற்றிலும் மறந்தவளாக திருமகள் நாச்சியார் வலம்வர, நடந்த எதையும் மறக்க முடியாமல் அறைக்குள் அடைந்திருந்தான் முரளி. மூன்று நாட்களுக்கு முன் பஞ்சாயத்து முடிந்து வீடு வந்த நிமிடமே அவன் அண்ணி அவளது பஞ்சாயத்தை ஆரம்பித்திருந்தாள்.
இந்த மூன்று ஆண்டுகளாக பரமசாது என்று பெயர்...
நெஞ்சம் பேசுதே 06
வீட்டின் முற்றத்தில் காலை நீட்டி திருமகள் அமர்ந்திருக்க, அவள் கால்களில் தலைசாய்த்து படுத்திருந்தான் ரகுவரன். திருமகள் காலையில் முரளி தன் வீட்டில் இருந்து வெளியே வந்தது முதல், விசாலத்தின் எதிர்வினை, தனது திடீர் திருமணம் வரை ஒன்றுவிடாமல் நிதானமாக கூறி முடித்தாள்.
முழுதாக கேட்டு முடித்தவன் "இப்பவும் இது அத்தையோட...
அதுவும் அன்னை இரண்டு பேரின் உயிரையும் முன்னே நிறுத்த மறுத்துப் பேச வழியில்லாமல் பட்டென தாலியைக் கட்டிவிட்டான். ஆனால், அத்துடன் முடிந்து விடுவது இல்லையே.. இனிதானே ஆரம்பம்... அது இனிதாக இருக்குமா.. என்ற சிந்தனை தான் ஓடிக் கொண்டிருந்தது வாசுதேவனின் மனதில்.
திருமகள் நாச்சியாரை எதிர்கொள்ளவே கொஞ்சம் தயக்கமாகத் தான் இருந்தது வாசுதேவகிருஷ்ணனுக்கு. திருமகள் கூட...
...
வந்தவுடன் "என் கொழுந்தனை ஏன் அடிக்கிறீங்க.." என்று அவள் கேட்டதை மறக்க முடியவில்லை திருமகளால். அந்த ஒரு வார்த்தையிலேயே மொத்தமாக கோதையை ஒதுக்கியிருந்தது அவள் மனம்.
அவள் அமைதியாக விசாலத்தின் அருகில் வந்து நிற்க, விசயத்திற்கு ஏகத் திருப்தி அவளது செயல். கோதையை பார்த்து நொடித்துக் கொண்டவர் "வா.." என்று மருமகளின் கையைப்...
நெஞ்சம் பேசுதே 04-1
விசாலம் அறைந்ததில் கீழே விழுந்த நாச்சியாளுக்கு "இனி இவர் வார்த்தைகளை வேறு கேட்க வேண்டுமா.." என்ற எண்ணமே துயரத்தைக் கொடுத்தது. எப்போதும் அவளை வலிக்க வைக்கவே பேசுபவர் தானே. இன்று இத்தனை இலகுவாக சந்தர்ப்பம் கிடைத்திருக்க விட்டு விடவா போகிறார் என்று நினைக்கையிலேயே தனது நிலையை மிகவும் கீழாக உணரத்...
நெஞ்சம் பேசுதே 03
முரளியின் வார்த்தைகளில் நாச்சியார் அதிர்ந்து நின்றது சில நொடிகள் தான். வாசுதேவனின் பார்வை முரளியிடம் இருந்து தன்னிடம் வரவும் சுயம் தெளிந்தாள் அவள். என்னவோ வாசுதேவன் பார்வையில் கடுமையைக் கண்ட நொடி வேகமாக தலையை மறுப்பாக அசைத்துவிட்டாள்.
அவளது பதட்டம் அத்தை மகனுக்கு அத்தனை உவப்பாக இருக்க, நிதானமாக மீண்டும்...
நெஞ்சம் பேசுதே 02
திருமகள் நாச்சியார் வீடு வந்தபோது நேரம் இரவு ஒன்பது மணியை நெருங்கியிருக்க, அவசரமாக தன் இருசக்கர வாகனத்தை நிறுத்தி இறங்கியவள் வேகமாக வீட்டின் பின்புறம் சென்றாள். அங்கே சற்று விஸ்தாரமாக விரிந்திருந்தது அந்த மாட்டுத் தொழுவம். அவள் வந்த வேகத்தைப் பார்த்து "நாந்தேன் இருக்கேன்ல.. நீ ஏன் தாயி இப்படி...
நெஞ்சம் பேசுதே 01
மாலை சாற்றினாள்
கோதை மாலை மாற்றினாள்
மாலை சாற்றினாள்
கோதை மாலை மாற்றினாள்
மாலடைந்து மதிலரங்கன்
மாலை அவர்தன் மார்பிலே
மாலை சாற்றினாள்
கோதை மாலை மாற்றினாள்
மாலடைந்து மதிலரங்கன்
மாலை அவர்தன் மார்பிலே
மையலாய் தையலாள் மாமலர் கரத்தினால்
மையலாய் தையலாள் மாமலர் கரத்தினால்
மாலை சாற்றினாள்.....
என்று வாய் அதன்பாட்டிற்கு முணுமுணுத்துக் கொண்டே இருக்க, எதிரில் இருந்த மேடையில் தம்பதி சமேதராக காட்சி கொடுத்த...