“இப்போவாவது உண்மையை சொல்லேன்” எல்லாம் ஸ்ரீநாத் மூலம் தெரிந்தும், அவளிடம் வம்பு வளர்த்தான்.
லேசாய் அவன் முகம் பார்த்தபடி திரும்பி “சில விசயம் நாம ஏத்துக்கிட்டு தான் வந்தாகனும் பிர்லா. மறதின்றது நிறைபேருக்கு சாபமா இருக்கலாம், ஆனா உங்களை பொறுத்தவரை அது வரம் உங்க கூட வாழ்ந்த நான் சொல்றேன் இது நிச்சயமா உங்களுக்கு வரம் தான்.
நாம இரண்டு பேரும் பிரிஞ்சு வாழ்ந்தது இரண்டு பேருக்கும் நரகம் தான். ஆனால் அதையே நினைச்சு, இனியும் நம்ப வாழ்க்கையை சிக்கலாக்க வேண்டாம் பிர்லா.
நிறை குறையோட இருக்குறது தான் வாழ்க்கை, நதி மூலம் ரிஷி மூலம் பார்க்க கூடாது, அது உங்களுக்கும் பொருந்தும் பிர்லா” அவனது நெஞ்சோடு உரசி கொண்டே இவள் பேச
ஆனால் எதற்காக கேட்கிறான. என தெரியாதவள் இல்லையே ப்ருந்தா.லேசாய் இதழ்கள் வளைய
“கோபமே வராதா?” என லேசாய் சிரித்தவள் “முதலில் ரொம்ப வரும். இப்போ கொஞ்சம் வரும், நம்ப காதலை உணராத உங்க அம்மா மேல,
நம்ப பிரிவோட வலி தெரியாத என் அப்பா மேல,
அவங்க இரண்டு பேரையும் தடுத்து நிறுத்த முடியாத உங்கப்பா மேல
அமைதியா நின்னு வேடிக்கை பார்த்த எங்கம்மா மேல “இருக்கு எல்லார் மேலேயும் கோபம் இருக்கு” அந்த கோபத்திலும் புன்னகைத்தது அவள் இதழ்கள்
“என் மேல கோபம் இல்லையா?”
“அவங்க எல்லாரையும் விட உங்க மேல நூறு மடங்காவது ஜாஸ்தியா இருக்கு”
“ப்ருந்தா”
“ஆனால் அதை விட ஓரே நாளில், என்னை தேடிக்கிட்டு வலியை கூட பொருட்படுத்தாமல், என்னை பார்க்க என் வீட்டுக்கே வந்து நின்னதை கண் கூடா பார்த்த பிறகு, கோபம் அப்படியே பின்னாடி போய்டுச்சு”
“அதுவும் ஒவ்வொரு இடமா ஒளிச்சு வச்சு இருக்கீங்களே நம்ப காதலை, அதையெல்லாம் பார்க்குறப்போ கோபம் வருமா என்ன?”
“தவிர இன்னொரு முறை உங்களை இழக்க முடியாது, இழக்க காரணமா இருக்குற அந்த கோபம் எனக்கு வேண்டாம்”
“ஹேய்” அருகில் கிடந்தவளை இழுத்து தன் மீது போட்டுகொண்டான்.
‘தாய் ஒரு புறம் தாரம் ஒரு புறம் என இருவரின் ஒரே நோக்கம், தனக்கு பழைய நோய் எதுவும் வந்து விடக்கூடாது என்பது தான். தன் உயிருக்கு எதுவும் ஆகி விட கூடாது என்பது தான் இருவரது நோக்கமும்’ நீ சொல்லன்னா எனக்கு தெரியாதா! ஸ்ரீநாத் மூலமாக உன்னோட காதல், அம்மாவோட பாசம் இரண்டையும் புரிஞ்சுகிட்டேன். தன் உடல் நலனுக்காக போராடும் இந்த இரு பெண்களின் குணம் வேறாக இருந்தாலும், அவர்களின் எண்ண அலை ஒன்று தானே
என இறுக அணைத்து கொண்டான் அவளை.
அவளை பயம் கொள்ள செய்ய வேண்டும் என அவள் அறைக்குள் வந்தவனுக்கு, அவளது காதலால் பாரம் ஏறிக்கொண்டது.
—————
அப்படி இப்படி என இருந்த சொச்ச நாட்களும் நொடியாய் விரைந்தோட, நாளை திருமணம் என்ற நிலை
திருமணத்திற்கு முந்தைய நாள்,சந்திரா மற்றும் வேலாயுதம் குடும்பத்தின் நெருங்கிய சொந்தங்களும் நிறைந்து இருந்தனர் பிர்லாவின் வீட்டில். ப்ருந்தாவின் பெற்றோர், மற்றும் விமல் கூட பிர்லாவீட்டிலேயே தங்க வைக்கப்பட்டனர்.
காலையில் இருந்தே நெருங்கிய சொந்தங்கள் வர ஆரம்பிக்க, ஒரு ஒன்பது மணி போலவே ப்ருந்தாவின் வீட்டினர் வந்திறங்கினர்., பெரியவர்கள் திருமண வேலையில் இறங்கிட, பிர்லா ஸ்ரீநாத்துடன் வீட்டினுள்ளே வலம் வந்து கொண்டிருந்தான்.
அதுவும் ப்ருந்தாவிற்கு மெஹந்தி போட்டு கொண்டிருக்க, அதை சாக்காய் வைத்து அவளை கண்களால் பருகி கொண்டிருந்தான் பிர்லா. அங்கே கவனிப்பாரின்றி ஒரு ஓரமாய் அமர்ந்தபடி இருந்த விமலின் ஒரே வேலை இருவரையும் வேவு பார்க்கும் வேலை தான்.
‘ப்ருந்தாவின் முகம் தேஜஸை காட்டியதே ஒழிய, அவளுண்டு அவள் வேலையுண்டு என ஏதோ ஒரு கனவுலகில் வலம் வந்து கொண்டிருந்தாள்.
விமல், தமக்கையின் முகத்தை பார்த்தே கண்டு கொண்டான் இருவருக்கும் பிரச்சனைகள் சரியாகிப்போனது என.
ஏனோ பழைய ப்ருந்தாவை வெளிக்கொணரும் முயற்சியில் விமலின் மூளை யோசிக்க, மெஹந்தி முடிந்த தருவாயில்
“அக்கா இங்கே வா!” என அழைத்து அவன் வேலையை துவங்கினான்.
‘எதாவது விசயமிருக்கும் என இவளும் அவன் அருகில் சென்றாள்’ விமல் ஆரம்பித்த பேச்சு வார்த்தை சற்று நேரத்தில் தீவரமான விவாதத்தில் இருந்தனர் ப்ருந்தாவும், கமலும்.
சிறிது நேரமாகவே விவாதத்தில் இருக்கும் இருவரிடமும் ஒரு கண் வைத்திருந்தான் பிர்லா.
வாய் சண்டை கை சண்டையாய் மாறும் நேரம் ‘என்னாச்சு இவங்களுக்கு, ஏன் சண்டை போடுறாங்க’ தன்னவளின் இழுத்து சென்றது இவன் கால்கள்.
“அப்போ சரி, நான் மாமாகிட்ட சொல்லிகிறேன்!” மெதுவான குரலில் இவன் மிரட்ட
“சொல்லாத விமல் ப்ளீஸ்டா” பதிலுக்கு இவள் மிரட்ட
“சொல்ல கூடாதுன்னா, எனக்கு கொடுக்க வேண்டியதை கொடு?”
“அதுக்காக ஐயாயிரம் கேட்பியா நீ, ஐயாயிரம் எல்லாம் ஓவர்டா?”
“பின்ன லேப்லெட் ஐநூறு ரூபாய்க்கு யார் தருவாங்க,உன வீட்டுகாரர் கொடுப்பாரா?” என வம்பிழுக்க
“என்ன டீலிங் எல்லாம் பயங்கரமா இருக்கு!” பின்னிருந்து கேட்ட பிர்லாவின் குரலில் திடுகிட்டு ப்ருந்தா திரும்ப, விமலோ சாவகாசமாய் திரும்பி பார்த்தான்.
“சும்மா தான் பேசிட்டு இருக்கோம் பிர்லா” என ப்ருந்தா கூறினாலும், விமலிடம் ‘தயவு செஞ்சு சொல்லிடாதடா’ என யாசித்தது இவள் விழிகள்.
“என்ன சொன்னான் அவன்? எதுக்கு நீ இப்படி பயந்துட்டு இருக்க?” என ப்ருந்தாவிற்கு சப்போர்ட் செய்ய
“ஆஹா! ஆடு தானா வந்து மாட்டுது” என விமல் மனதினுள் மத்தளம் கொட்டியபடி,
“நீங்களே கேளுங்க மாமா, இந்த நியாயத்தை!” என விமல் ஆரம்பிக்க
‘நியாயமா? ஓ இவங்க பஞ்சாயத்துக்கு நான் சொம்பா? ரைட்டு!’ என மனதினுள் நினைத்தவன்.
‘இதை எப்படி நான் சொல்லுவேன்’ ப்ருந்தா திருதிருக்க,
“அவள் சொல்ல மாட்டாள், நான் சொல்றேன் கேளுங்க! உங்களுக்கு சொல்ல கூடாத ஒரு சீக்ரெட் இவ கிட்ட இருக்கு, ஆனா அது இப்போ எனக்கும் தெரிஞ்சு போச்சு, அதை வச்சு டீல் போட்டால் இவ ஒத்து வர மாட்றா! அதான் உங்க கிட்ட சொல்லிடுவேன்னு மிரட்டிட்டு இருக்கேன்?”
இவளை மிரட்டும் அளவிற்கு “அப்படி என்ன சீக்ரெட்!” இவளை பிர்லா கேட்டான்.
இதை இதை தானே எதிர்பார்த்தேன் என்றபடி “இவ சரியான குடிகாரி மாமா, அதுவும் ஓட்கா மட்டுமே குடிக்கிற குடிகாரி, பழசெல்லாம் மறந்துட்டீங்க தானே, அதான் இவளும் அதை உங்ககிட்ட இருந்து மறைக்கிறா!” பட்டென உடைத்தான் விமல்.
“என்னது ஓட்கா குடிப்பாளா?” வாய் பிளந்து இவன் பார்க்க, ‘குண்டா, குட்டி அண்டா இப்படி கோர்த்து விட்டுட்டியே!’ பிர்லாவை நிமிர்ந்து பார்க்க முடியாமல் இவள் தடுமாறிப்போனாள்.
விமல் சொல்வதை உண்மை என நம்பாமல் போனாலும், இவளது அமைதியும் நின்றிருந்த தோரணையும் உண்மை தான் அது என அவனை நம்பத்தான் வைத்தது.
“நீ ஓட்காலாம் குடிப்பியா?” என ப்ருந்தாவை கேட்க
ஆம் என தலையசைந்தது இவள் முகம்.
வேண்டுமட்டும் முறைத்துவிட்டு “விமல், நீ டீல் போட்டது தப்பே இல்லை டீலிங்கை கண்ட்னியூ பண்ணுப்பா” என ஒரு மார்க்கமாய் பேசினான் பிர்லா
“இனி டீலிங் அவ கிட்ட இல்லை மாமா! உங்க கிட்ட தான்!”
“என்னது என் கிட்டேயா? அதுவும் டீலா?” பகீரென இருந்தது அவனுக்கு
“ஆமா, உங்களுக்கு தான் தெரிஞ்சு போச்சே ,இனி அவளை மிரட்டி ஒரு பிரயோஜனமும் இல்லை அதனால் ஐஞ்சாயிரம் இப்போ நீங்க தான் தரனும்!” என டீலிங்கை அவன் புறமாய் திருப்ப
“தரலைன்னா? என்ன டா பண்ணுவ” என்பது போல் பார்க்க
“உங்க லைப் பாட்னர் பாருக்கு போகிற, ஓட்கா குடிக்கிற, மொடா குடிகாரின்னு, எங்கம்மா, எங்கப்பா, உங்கம்மா உங்கப்பான்னு எல்லார் கிட்டேயும் சொல்வேன்!” எப்படி வசதி என்பது போல் பதிலுக்கு பார்க்க
விழிதட்ட முடியாமல் அப்படியே நின்று விட்டான் பிர்லா. “இதுக்கு பேர் தான் போட்டு வாங்குறதா?” இவன் பார்த்தபடி நிற்க
ப்ருந்தாவை போல் விமலேயஷே அவனது பர்சை எடுத்தான்.
“முன்னெல்லாம் பணமா இருக்கும், இப்போ டிஜிட்டல் மணியா இருக்கு! பரவாயில்லை, பாஸ்வேர்டு சொல்லுங்க” என பாஸ்வேர்ட்டையும் கேட்டு கொண்டு, டெபிட் கார்டை எடுத்து கொண்டு சென்றுவிட்டான் விமல்!
“நீ டிரிங் பண்ணுவியா?” யாருமில்லாததை உணர்ந்து அவளிடம் பிர்லா கேட்க
“டிரிங் மட்டும் இல்ல மாமா, அவ டிகிரி கோல்டர் கூட கிடையாது, என்ஜினியரிங் கிராஜூவேட்னு பொய் சொல்லிட்டு திரியுறா! அம்புட்டும் அரியர்” என விமல் இடையில் புக
“டேய், நீ வேற ஏண்டா ரோதனையை கூட்ற, அதான் எடிஎம் கொடுத்தாச்சு தானே போய் தொலைடா” என பிர்லா எறிந்து விழ
“அடுத்து ஒரு பத்தாயிரம் சேர்த்து ரெடி பண்ணிக்கோங்க! இல்லை அரியர் விசயமும் வெளியில் போய்டும்” போகிற போக்கில் கொழுத்தி விட்டு, சென்றுவிட்டான்.
“அடப்பாவிகளா, என்னங்கடா போர்ஜரி பண்ணிட்டு திரியுறீங்க” என வாய் பிளந்து நின்றது பிர்லாவே தான்.
இதெல்லாம் ஒரு புறம் ஓட, ப்ருந்தா அங்கிருந்து நைசாக நகர எத்தனிக்க, அதை உணர்ந்து அவளை பிடிக்க வந்தவன் மெஹந்தி அழிய கூடாது என அவள் முழங்கையில் கை கொடுத்து, அருகில் இருந்த தனியறைக்கு இழுத்து சென்று கதவை சாற்றினான் அவசரமாக.
“ப்ருந்தா நீ நிஜமாவே டிரிங் பண்ணுவியா? அதிவும் ஓட்காவா?”
“ஆமாம், டிரிங் பண்ணுவேன்” அவன் கண்களை பார்த்தபடியே இவள் கூற
என்ன செய்வதென தெரியாமல் திருதிருவென விழித்தவன் “ஓகே போனது போகட்டும் முன்னாடி எப்படியோ, இனி குடிக்க கூடாது” என ஸ்ட்ரிக்ட்டாக சொல்ல
“எனக்கு ஓட்கா வாங்கி கொடுக்குற ஒரே ஆளு நீ்ங்க தான். நீங்களும் இப்படி சொன்னால் எனக்கு யாரு வாங்கி தருவா” என பாவமாய் இவள் கூற
“என்ன, நான் உனக்கு வாங்கி தருவனா?” அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அடைந்தவன் சற்று சுதாரித்து “என்னோட நியாபக மறதியை ஓவரா மிஸ்யூஸ் பண்ற ப்ருந்தா. எந்த பையனும் ஒரு பொண்ணுக்கு ஓட்கா வாங்கி கொடுக்க மாட்டான். அதுவும் லவ்வருக்கு, ஒய்ப்புக்கு கண்டிப்பா வாங்கி கொடுக்க மாட்டான்” என
“என்மேல சத்தியம், நீங்க எனக்கு ஓட்கா வாங்கி தந்துருக்கீங்க அதுவும் என்னோட பர்த்டே கிப்ட்டா” என
அவள் சத்தியம் செய்த விதமும் பேசிய பாவனையும் இவனை நம்ப வைக்க “சரி நான் விவாதம் பண்ணலை, இனி ஓட்கா இல்லை எந்த ஆல்கஹாலையும் சாப்பிட கூடாது” என சீரியாஸாய் பேச
“இல்லை நான் சாப்பிட மாட்டேன், குடிக்க தான் செய்வேன்” சிரித்தபடி இவள் கூற
இதென்ன இப்படி வாயாடுகிறாள்? இது ப்ருந்தா தானா! அவளையே பார்த்தபடி பல முறை இவன் ஆராய்ச்சி செய்ய
“நாளைக்கு நம்ப பர்ஸ்ட் நைட், செலிப்ரேட் பண்ணனும்ல, டூ ஓட்கா பார்…சல்…” என்றவள் “அப்புறம் சைட் டிஸ்க்கு ஒரு பிக் சைஸ் டேரிமில்க் சாக்லேட்” என பேசி மேலும் கண்ணடிக்க வேறு செய்தாள்.
‘ஙே’ என விழித்து கொண்டு நின்றது பிர்லா மட்டும் தான்.