பொறுமை பறந்தது பிர்லாவிற்கு விலகிய அவளை விலக விடாமல் அவளின் கையை பிடித்து தன் அருகில் இழுத்து வந்தது அவனது நீண்ட கைகள்
‘சாவியை கொடு’ என அவன் பிடிப்பை இன்னும் இறுக்க
‘நீ கேட்டா நான் கொடுத்திடுவேனா ’ என்ற பிடிவாதத்துடன் இருந்தவளுக்கு அவனது பிடி வலியை கொடுக்க சட்டென மூளை குறுக்காய் வேலை பார்த்தது ப்ருந்தாவிற்கு
அவனிடம் ஒரு கை மாட்டியிருக்க மறுகையினை வாயின் அருகில் எடுத்து சென்று சற்று இடப்புறமாய் முகத்தை திருப்பி தன் அருகில் இருந்த பாட்டியின் காதில் விசிலொன்றை அடிக்க
மரகதத்தின் கையில் இருந்த போன் கார் கதவின் வழியாய் வெளியில் சென்று விழுந்தது “அம்மாடி“ என்ற பெரும் சத்தத்துடன்
பிர்லாவின் பிடி அந்தரத்தில் தொங்கினாலும், அந்த ஒரு நொடிக்குள் அவள் கையில் இருந்த சாவியை தன் கைக்கு மாற்ற மறக்கவில்லை அவன்.
அதற்குள் “டேய் விளையாடறதுக்கு ஒரு அளவு வேணாம் இப்படியாடா விசிலடிப்ப ஒரு நிமிசம் நெஞ்சே அடச்சிடுச்சு ” என பெரும் பெரும் மூச்சுக்களை எடுத்தபடி பிர்லாவை வசைபாட
‘பண்ணினதெல்லாம் அவள் பனிஸ்மெண்ட் மட்டும் எனக்கா.’ என்பது போல் ஒரு பாவனையை மரகத்திடம் காட்ட
“பண்றதெல்லாம் பண்ணிட்டு இதென்னடா ரியக்ஷன் முதலில் கீழே விழுந்த என் போனை எடுத்து கொடு ” என சுள்ளென எரிந்தும் விழ
ப்ருந்தா விழுந்து விழுந்து சிரிக்காத குறை தான் மற்றபடி சிரிப்பில் கண்ணீரே கோர்த்துவிட்டது
“டேய் உன்ன தான் சொல்றேன் முதலில் போனை எடுத்து கொடு” என கத்த
கார் கதவை திறந்து இறங்கிப்போய் போனை எடுத்து வந்தவன் காரில் மீண்டும் ஏறி காரை ஸ்டார்ட் செய்ய
“அடப்பாவி என் கையில் இருந்த சாவியை நீ எப்படி புடுங்குன ?” என அவனை பார்க்க
“நான் எப்பவுமே அலர்ட் தான் ” என்பது போல் அவளை நக்கலாய் ஒரு பார்வை பார்த்து வைக்க
“பிர்லா உனக்கு இருக்கு” என்பது போல் முகத்தை திருப்பிகொண்டு அமர்ந்தாள் ப்ருந்தா
மீதி பயணம் முழுவதும் மரகதாம்பாள் சாதவுடன் ஏதோ ஒரு தீவிர பேச்சில் ஈடுபட்டபடியே வர, ப்ருந்தாவோ, பிர்லாவை சீண்டி கொண்டே தான் வந்தாள்.
“பிர்லா ஏன் இப்படி நெளிஞ்சுட்டே வர்ற பின் சீட்டில் யாரும் இருக்காங்களா ?” என பேசியபடியே இவர் திரும்பி பார்க்க, சீட்டின் உள்ளே இவள் தன்னை மறைக்க,
“பாட்டி, ஒழுங்கா உக்காரு, இல்லை நீ முழுசா வீடு போய் சேரமாட்ட” என சட்டென பிர்லா அவரை அதட்ட
“நீ வர வர சரியில்லை பிர்லா எதையோ எங்ககிட்ட மறைக்கிற” என
“அதெல்லாம் ஒன்னும் மறைக்கல கொஞ்சம் பேசாமல் வர்றியா” என இவன் சிடுசிடுக்க, அமைதியாய் வந்தார் மரகதாம்பாள்.
வீடு வந்தபின் காரை விட்டு இறங்கி கதவை மூடி வீட்டு திரும்பிய மரகத்தின் கண்களுக்கு காரின் பின் கதவில் இருக்கும் கண்ணாடி வழியாய் ஏதோ உருவம் தெரிந்தது. அதில் கதவை சாற்றிய வேகத்தில் மீண்டும் முன் சீட்டின் கார் கதவை திறக்க வர பிர்லா பார்த்துவிட்டான்
ஒரு கையால் ப்ருந்தாவின் தலையை தன் பலம் கொண்ட மட்டும் அழுத்தி ஒன்றும் அறியாதவனாய்
“என்ன பாட்டி !” என சாவகாசமாய் கேட்க “உள்ளே யாரோ இருந்த மாதிரி இருந்தது யாரைடா ஒழிச்சு வச்சு விளையாடற ?” என இன்னமும் விலகாத சந்தேகத்துடனே பேச
“ம் உன் புருஷனை தான் ஒளிச்சு வச்சு விளையாண்டுட்டு இருக்கேன் வாயில் எனக்கு என்னம்மாதான் வருது போ பாட்டி !”
“நீ ஏதோ என்கிட்ட மறைக்கிற” என திறந்திருந்த கதவினுள் மீண்டும் தலையை மட்டும் விட்டு பார்க்க
“இப்படியே பண்ணிட்டு இருந்த இனி உனக்கு டிரைவர் வேலை பார்க்க நான் வர மாட்டேன் உன் புருஷன் தான் வருவாரு !” என மிரட்ட
“ஆமாம் கேட்ட கேள்விக்கு ஒழுங்கா பதில் வராது, உன் தாத்தா மாதிரி மிரட்ட மட்டும் வந்துடு, என்னமும் பண்ணி தொலை !” என வாய்க்குள் மீண்டும் முனுமுனுத்தபடி சென்றுவிட்டார்.
ஆசுவாசமாய் பெருமூச்சு விட்டபடி சீட்டின் இடுக்கில் இருந்த ப்ருந்தா மெதுவாய் எழுந்து அமர்ந்தவளை பார்த்தபடி
“ஏன் இப்படியெல்லாம் பண்ணி தொலைக்கிற .?” என நிஜமாகவே கோபத்துடன் கேட்க
“எல்லாம் உன் கிட்ட இருந்து கிப்ட் வாங்க தான்“ என
“என்ன கிப்டா ! அதுக்கா இப்படி பாடா படுத்துன” என இவன் கேட்க
“இப்போ நீ வாங்கி தர முடியுமா முடியாதா !” என
“கிப்ட் தானே வாங்கி கொடுத்தாபோச்சு வா !” அவள் முகத்தை விட்டு முன்புறம் திரும்பியவன் காரை எடுத்தான்.
சிறிது தூரம் வரை சென்றவன் கண்கள் ப்ருந்தாவை விட்டு விட்டு வேறு எதையோ அதி தீவிரமாய் தேடியது
ஓரிடத்தில் அவன் கண்கள் நிலை குத்தி நிற்க சற்று தள்ளி நிறுத்திவிட்டு
“உனக்கு பிடிச்ச கிப்ட் இருக்கிற கடை இங்க தான் இருக்கு வா உனக்கு பிடிச்சதை வந்து வாங்கிக்க !” என அவளையும் சேர்த்து அழைக்க
“எனக்கு பிடிச்சதை வாங்கிக்க நீ் எதுக்கு ? உன் பர்ஸே போதுமே !” என
“அப்போ, நான் என்ன வாங்கி கொடுத்தாலும் ஓகே வா ?” அவளுக்கு சரியாய் புரிந்து கொண்டு பதில் பேச
“ம் அதுக்கு தானே வந்திருக்கேன்” என்றவள் சட்டமாய் அமர்ந்து கொண்டு “போ பிர்லா சீக்கிரம் வாங்கிட்டு வா ஐயம் வெயிட்டிங் ” என அந்த விழிகள் காட்டிய எதிர்பார்ப்பை தனக்குள் வாங்கியபடி சென்றது பிர்லாவின் விழிகள்
இவள் காரிலேயே அமர்ந்திருக்க, பிர்லா மட்டும் கடைக்குள் சென்றான். கடை என்றால் அனைத்துவிதமான பொருட்களும் கிடைக்கும் ஹைப்பர் மார்க்கெட் அது.
இவன் உள்ளே செல்வதை பார்த்தவளின் கை சும்மா இருக்காது, டாஸ்போர்டின் மேல் கிடந்த பிர்லாவின் மொபைலை பார்த்தவளுக்கு வேறு ஒரு எண்ணம் உதிக்க இதழ்களில் மென்னகை தானாகவே உதித்தது… அதே சிரிப்புடன்
‘போஸூ இனி உன் தூக்கம் புஸ்ஸூ ஏன்னா நைட்டும் என் தொல்லை தொடர போகுது இந்த மொபைல் வழியா…!’ என அவனது மொபைலில் இருந்து தன் மொபைலுக்கு மிஸ்ட் கால் கொடுத்து அவனது நம்பரை எடுத்த திருப்தியில் மீண்டும் அதை டாஸ்போர்டின் மேல் வைத்துவிட்டு அமர்ந்து கொண்டாள்.
உள்ளே சென்றவன், நீண்ட நெடிய அரை மணி நேரத்திற்கு பிறகு வந்தான், இரு கைகளுக்குள் அடங்கிய பொக்கே அமைப்புடன் கூடிய பூக்கூடையுடன்.
ஏதோ ஒரு பரிசை எதிர்பார்த்தவளுக்கு, நிஜ ரோஜாக்களும், அழகூட்டும் இலைகளும் அலங்கரித்த பொக்கேவை இவள் எதிர்பார்க்கவே இல்லை.
இந்த முறை காரின் பின் சீட்டில் அவனாகவே ஏறினான் கையில் இருந்த பொக்கேவை அவளிடம் நீட்டி “விஷ் யூ மெனி மோர் ஹேப்பி ரிட்டன்ஸ் ஆப் த டே” என அவளிடம் நீட்டினான்
ரோஜாக்களாலும் இலைகளாலும் அலங்காரம் செய்யப்பட்டு இருந்த அந்த பொக்கேவினுள் கிப்ட் ரேப்பரால் சுற்றபட்ட நீளமான அட்டை பெட்டி தெரிய
நெற்றி சுருங்கியது பிருந்தவிற்கு அந்த இலைகளை விலக்கி அட்டைபெட்டியை வெளியே எடுத்து, அதன் ரேப்பரை பிரித்து பார்க்க அத்தனை மகிழ்ச்சி அவள் முகத்தில் தாண்டவமாடியது. உள்ளே இருந்ததோ அவளுக்கு பிடித்த ஓட்கா
“பிர்லா…”
“பிர்லா
பிர்லா… யூ…. “ என ஆரவாரமாய் கிட்டதட்ட கத்திக்கொண்டு பிர்லாவிற்கு கொடுக்க வேண்டிய இதழ் பரிசை மாற்றி அந்த ஓட்கா பாட்டிலுக்கு கொடுத்தாள்
“ஹேய் பிர்லா இதை நான் எக்ஸ்பெக்ட் பண்ணவேயில்லை ” மீண்டும் ஒரு முத்தம் வைத்தபடியே இவள் பேச
அவளின் இதழில் குவிந்த பிர்லாவின் விழிகள், வேறெங்கும் அசையக்கூட இல்லை
“யாருமே இந்த கிப்டை எனக்கு பிரசண்ட் பண்ணதேயில்லை”
“ஆனாலும் நீ பண்ணுவன்னு, சத்தியமா எக்ஸ்பெக்ட் பண்ணவேயில்லை ரொம்ப தேங்க்ஸ் பிர்லா… தேங்க்யூ சோ மச்” என பாட்டிலை அட்டை பெட்டியில் இருந்து பிரித்தவள் பிர்லாவின் விழி துளைக்கும் தேடலில் கொஞ்சமும் அசராமல் பாட்டிலை லாவகமாய் பிரித்து அங்கேயே குடிக்க எத்தனிக்க
பாட்டிலுக்கும் இதழ்களுக்கும் இடையில் பிர்லாவின் விரல் வந்து அமர்ந்து கொண்டது அழுத்தமாய்.
வாங்கீ கொடுத்துட்டு குடிக்க கூடாதுன்னா என்ன அர்த்தம்? என்ற ஒரு பார்வையை அவள் வெளியிட
“குடிக்க கூடாது” செயலோடு அவனது வார்த்தைகளும் அவளுக்கு தடை விதிக்க
“வாங்கி கொடுத்ததே நீ்தான். இப்போ குடிக்க கூடாதுன்னு சொன்ன என்ன அர்த்தம்?” என இவள் முகத்தை சுருக்க
“இனிமேல் குடிக்க கூடாதுன்னு அர்த்தம். எனக்காக இல்லை உனக்காக! உன்னோட ஹெல்த்க்காக!” என
“ஷப்பா” என சலித்தவள் “என்ன லவ்வர்ன்ற கெத்த காட்றியா? இப்போவே அதை செய்யாதே இதை செய்யாதேன்னு ஆர்டர் போடற!” என அவனது சட்டை காலரை பிடித்து இழுக்க
அவள் பிடித்து இழுத்ததில் பிர்லாவின் கழுத்தில் கிடந்த இரும்பினாலான செயின் வெளியில் வந்து விழுந்தது. அதன் லிங்கம் போன்ற அமைப்பும் வாகாய் சிக்கியது அவள் கைகளில். லாவகமாய் அதை பிடித்து இழுக்க, மிக நெருக்கத்தில் அவர்கள்.
அதீதமான அந்த நெருக்கம் பிர்லாவிற்கு சங்கடத்தை கொடுக்க அவள் கையில் மாட்டி இருந்த செயினை பிடுங்கிக்கொண்டு
“இது தப்பு தள்ளி போ” என அவளை விட்டு தள்ளி அமர்ந்தான் பிர்லா
“எதுக்கு இப்போ தள்ளி போகனும்?” மீண்டும் விட்ட இடைவெளியை இவள் நிறைவு செய்ய
“அப்பறம் ஒட்டிக்கிட்டேவா இருக்க முடியும்?” மீண்டும் இவன் விலக
“இருந்தா தப்பில்லை தானே!” மீண்டும் இவள் ஒட்டி அமர,
“தப்பில்லைனு சொல்ற அளவுக்கு நமக்குள்ள உரிமை இருக்கா என்ன?” அடுத்து நகர முடியாதளவிற்கு கார் கதவு இடைஞ்சல் கொடுத்த கடுப்பில் சுள்ளென விழுந்தான் பிர்லா
“இருக்கே, உரிமை இருக்கே” என இவள் சாவகாசமாய் சொல்ல
“என்ன உரிமை இருக்கு?” என இவன் கடுப்பாய் கேட்க
“என்ன இருக்கா?” என போலியாய் வாய் பிளந்தபடி “காதல் இருக்கு பிர்லா காதல் இருக்கு. நமக்குள்ள காதல் இருக்கு” என பிர்லாவின் முகம் பார்த்து விழியசைக்காமல் சொன்னாள் ப்ருந்தா
ஆனால் அவனோ எந்த ஒரு அதிர்வும் இல்லாமல் “காதலா? நமக்குள்ளேயா? ப்ச்.. உன்கிட்ட இருக்குனு சொல்லு என்கிட்ட அதெல்லாம் இல்லை” சொல்லிவிட்டு பட்டென முகத்தை வேறு புறம் திருப்பினான் பிர்லா
“உன்கிட்ட இல்லைனா பரவாயில்லை பிர்லா , முதலில் என்னோட காதலை இரண்டு பேரும் ஷேர் பண்ணிக்கலாம், அப்பறமா உன்னோட காதலை எனக்கு குடு” புருவங்கள் இரண்டும் மேலேற சொன்னாள் ப்ருந்தா.
“கொடுக்க முடியாது” பட்டென இவன் கூற
“நீ கொடுக்கலைன்னா நானும் உனக்கு கொடுக்க மாட்டேன்” முறுக்கி கொண்டாள் இவள்.
“என்ன எனக்கு என்ன கொடுக்க மாட்டே நீ?”
“உனக்கு பாப்பா கொடுக்க மாட்டேன்!” சட்டை காலரோடு இவனையும் சேர்த்து உதற
அதை கூட உணராமல், அடுத்த மூச்சை எடுக்க இவன் இதயமும் தடுமாறி நின்று போனது, ப்ருந்தா கொடுத்த அதிரடியான பதிலில்