அடுத்து வந்த நாட்களில் பிர்லா பப் சொல்லும் எண்ணத்தையே மறந்து தான் போனான், தன் பெற்றோர்களின் விருப்பம் என்னவென்று அறியமுடியாமல் பப் செல்ல முடியவில்லை ப்ருந்தாவை நேரில் பார்க்கும் எண்ணம் துளியும் இல்லை.
ஆனால் அவனை தேடி பப்பிலேயே காலம் கழித்த ப்ருந்தாவோ குடிக்கும் எண்ணத்தையே மறந்து போனாள் அப்படி வந்த சில வாரங்களில் ஒரு வாரத்தில் பிர்லா ப்ருந்தாவிடம் சிக்கினான்.
பிர்லா என்ற பெயரை தவிர்த்து வேறு எதுவும் அவளுக்கு தெரியாது தெரிந்த ஒரே இடம் பப் மட்டும் தான்
பப்பிலேயே காலம் கழித்து கழித்து நொந்து போய் கடைசியில் கடவுளிடமே சண்டையிட வந்திருந்தாள்
சண்டை போடும் முன் கடவுளே வெள்ளை கொடியை பறக்கவிட்டு பிர்லாவை அவள் கண் முன் நிறுத்தினான்.
பாட்டி மரகத்திற்கு டிரைவராய் வந்திருந்தான் ஏனோ பாட்டியுடன் உள்ளே செல்ல பிடிக்காமல் வெளியில் இருந்த கோவில் பிரகாரத்தில் சுற்றிக்கொண்டிருந்தான்
கடவுளிடம் வேண்டிக்கொள்ளவும் மனமில்லை, இப்படி ஒரு பெண்ணின் நினைவில் தவிக்க விட்டு விட்டாயே என திட்டவும் இல்லை இத்தனை நாட்களாய் நினைவில் கூட இல்லாத நோயின் தாக்கம், அதே நோயை காரணம் காட்டி ஒரு பெண் தன் வாழ்வில் வருவாளா மாட்டாளா? என புலம்பும் அவல நிலையை யாருக்கும் தாராதே! என்ற ஆதங்கத்தை மட்டும் கடவுளிடம் பகிர்ந்து கொண்டிருந்தான்.
சன்னிதானத்தினுள் செல்ல மனமில்லாமல் பிரகாரத்தில் இருந்த சுவற்றில் சாய்ந்து கண்களை மூடியபடி நின்று இருந்தவனின் மன குளத்தில் கல் எறிந்தார்போல் அவனின் குறுக்கே மீனாய் துள்ளிக்குதித்து அவனுள் நுழைந்தாள் ப்ருந்தா.
தடாரென்ற சத்தத்தில் பட்டென கண்திறந்தவன் தன்னை ஒற்றைக்காலில் நிலைப்படுத்த முடியாமல் எக்குதப்பாய் கீழே விழ இருந்த பிர்லா ஒரு நொடியில் சட்டென தன்னை சுதாரித்து நிலைபடுத்தி் நின்றான்.
அதற்குள் பிர்லாவின் நிலையை பார்த்து வாய்விட்டு சிரித்துவிட்டாள் ப்ருந்தா
அவள் சிரிப்பு மேலும் அவனை கடுப்பிற்குள்ளாக்க “உன் குரங்கு சேட்டையை எப்போ தான் விட போற.!” என இவன் முதல்முறையாய் திட்ட
அதை காதிலேயே வாங்கிக்கொள்ளாமல் சிரிப்பை நிறுத்தி “ஏன் பப்க்கு வரலை உனக்காக எத்தனை நாள் அங்கேயே காத்து கிடக்குறது !”
“நீ வருவ வருவன்னு காத்திருந்து, வாங்கின ஓட்காவ கூட டிரிங்க் பண்ண மனசில்லாமல் அப்படியே போட்டுட்டு வந்துட்டேன் ” என சற்றே மூக்கு விடைக்க கூறியவள்
“ஆனால் நீ என்னை தேடவே இல்லை, அதுவும் இல்லாமல் ‘குரங்குனு’ திட்ட வேற செய்றல, உன்னை போய் தேடினேன் பாரு என்னை சொல்லனும் ”
“உனக்காகவே காத்திட்டு இருந்தேன் பாரு என்னை நானே அடிச்சுக்கனும்…”
“போ போ நான் போறேன் ” என மூச்சு வாங்க பேசியபடி தரையோடு தரையாய் விரிந்திருந்த ஸ்கர்ட்டை ஒரு கையில் தூக்கி பிடித்தபடி அத்தனை கோபத்துடன் திரும்ப
பிர்லாவிற்கோ கோபத்தை விடுத்து விட்டு உதட்டுக்குள் விரிந்த நமட்டு சிரிப்புடன் “எல்லாம் சரி தான் கடைசியா என்னவோ சொன்னியே ம் ‘நான் போறேனு !’ எங்க போற ?” என சிரிப்புடன் அவளை தடுத்து நிறுத்த
“ம் பப்புக்கு தான் இன்னைக்கு குறைஞ்சது நாலாவது அடிக்க தான் போறேன் ” பற்களை கடித்துக்கொண்டு பதில் சொன்னாள் ப்ருந்தா
“அடிக்கிறது இருக்கட்டும், முதலில் நாழு பாட்டில் வாங்க பணம் இருக்கா !”என மேலும் கிண்டலடிக்க அவன் அருகே வந்து
“ம் இருக்கே இதோ இங்க இருக்கே ” என அன்று போல இன்றும் அவன் பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டு பர்ஸை அப்படியே எடுத்துக்கொண்டாள்
‘பே’ என ஒரு நொடி ஸ்தம்பித்த அவன் உணர்கள் அடுத்து சிரிப்பாய் வெடித்து சிதறியது.
“சிரிக்காத பிர்லா ” என இவள் சொல்ல அவனது சிரிப்போ நிற்காமல் தொடர்ந்து கொண்டே இருக்க
“ஏம்மா, கோவிலில் வந்து பப்பு, பாட்டில்ன்னு பேசிட்டு இருக்கீங்க இது கோவில் ஞாபகம் வச்சுக்கங்க ” அங்கிருந்த பெண் ஒருத்தி கண்டிக்க
அந்த பெண்ணின் பேச்சை விட ,அந்த பெண்ணின் முகம் சுவாரஸ்த்தை கொடுத்தது. ‘ஒரு பத்து நிமிசத்துக்கு முன்னாடி நான் பார்த்த லேடி தான் இது’ என உதட்டை சுழித்தபடி
“ஓ இது கோவிலா ?” என சுற்றும் முற்றும் பார்த்தவள்
“பின்ன பார்க் ன்னு நினைச்சியோ!” என மீண்டும் அந்த பெண் சீறீக்கொண்டு வர
“உங்க புருஷனை கழட்டி விட்டுட்டு பக்கத்து வீட்டு காரனோட ஓடறதுக்கு இங்க வந்து பிளான் போடும் போது மட்டும் தெரிலையா ? இது கோவில்னு !” என நிறுத்தி நிதானமாய் பேச
அந்த பெண்ணிற்கு சர்வாங்கமும் ஒடுங்கி விட. அதற்கு மேல் அங்கே நிற்காமல் ஓடியேவிட்டாள் அந்த பெண்
ப்ருந்தாவின் நடவடிக்கைகள் முதலில் கோபம், பின் சிரிப்பு இப்போது ‘ஐய்யோ பப்ளிக்ல’ சண்டை போடறாளே என்ற பதட்டம் என இத்தனை நவரசங்களையும் காட்டியவள் இறுதியில் சிரிப்பில் முடித்துவைக்க…
பிர்லாவிற்கு இன்னமும் சிரிப்பு பீரிட்டு கிளம்ப அங்கே ஒரு நொடி கூட அவனால் தேங்கி நிற்க முடியாமல் தன் காரை நோக்கி நடந்தான்.
“டேய் என்னை தனியா விட்டுட்டு போறியே நீயெல்லாம் என்னடா லவ்வர்” என அந்த பெண்ணை அப்படியே விட்டுவிட்டு இவன் பின்னே ஓடினாள் ப்ருந்தா
பிர்லா காரின் பின் கதவை திறப்பதை பார்த்து இவளும் மறுபுறத்தின் பின்புற கதவை திறக்க இவன் “இவ ஏதாவது ஏடாகூடாமா பண்ணி வைப்பா” என்ற எண்ணம் சிரிப்புனூடேயே எழவும் சட்டென பின் கதவை மூடி விட்டு முன்புறம் ஏறி அமர்ந்தான்
“ஏன் இவன் இப்படி ஏமாத்துறான்” என பின்புறமே ஏறி அமர்ந்தபடி ,அவனை நன்றாக கவனிக்க, பிர்லா வாயக்குள் சிரிப்பை அடக்கி கொண்டிருந்தான்.
‘ப்ருந்தா உன்னை பார்த்தா இவனுக்கு லவ் பீல் வர்ற மாதிரி தெரியலை காமெடி பீல் தான் வருது போல. நீ எங்கே இவனை கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணி பிள்ளை குட்டினு பார்த்து உப்ப்ப்ப்…’ என பெருமூச்சு கிளப்பியபடி
“போதும், நீ சிரிச்சது போதும். நான் ஒன்னும் அவ்வளவு பெரிய காமடி சீன் போடலை “ என்ற இவள் குரலில் சிரிப்பை நிறுத்தி சட்டென திரும்பியவன், அவளது பாவனையில் மீண்டும் பீரிட்ட சிரிப்பை முயன்று அடக்கி
“அந்த லேடியோட மேட்டர் உனக்கு எப்படி தெரியும்?” என சிரிப்பினூடே இவன் கேட்க
“வேறென்ன ஒட்டு கேட்டேன்” என பதில் சொல்ல
“கோவிலுக்கு இதுக்கு தான் வந்தியோ!”
“அதுக்காக பார்க்குற கண்ணையும் , கேட்கிற காதையும் அடைச்சா வைக்க முடியும் தானா காதில் விழுந்தது” நான் என்ன பண்ண ! என்பது போல் இவள் பார்த்து வைக்க
“சரி சரி அதுக்குனு இப்படியா கேட்டு வப்ப, அதுவும் கோவிலில்! அறிவேயில்லையா உனக்கு ”
“அறிவாளியா பேசுனா யாருக்கு தான் பொறுக்கும் அதுவும் உனக்கு எப்படி பொறுக்கும்!” ‘ஹூம்’ என இதழை சுழித்தபடி
“அந்த லடியை பத்தி பேசினது போதும்! இப்போ சொல்லு, ஏன் ரொம்ப நாளா பப்புக்கே வரவில்லை உனக்காகவே காத்திருந்தேன் தெரியுமா?” என கவலையாய் கேட்க
“ஆமாம், இல்லாட்டாலும் உனக்கு அங்கே போகுற பழக்கமே இல்ல பாரு” சிறிது இடைவெளி விட்டவன் “குடிகாரி” என திட்டவும் செய்ய
“ஆமாம் போஸ், பப்புக்கு போவேன் தான். முன்னேயும் போனேன் இப்போவும் போறேன். ஆனால் இந்த கடைசி நாழு முறையும் உனக்காக தான் பப்க்கு போனேன். ஆனால் ஒரு தடவை கூட டிரிங் பண்ணவேயில்ல தெரியுமா உன் மேல ப்ராமிஸ்” என
அவளது போஸ் என்ற அழைப்பில் உறைய இருந்த இதழ்களுக்கு சிறை போட்டு “நீ என்ன வேணும்னாலும் சொல்லு நம்புறேன் ஆனா டிரிங் பண்ணலைனு மட்டும் பொய் சொல்லாத அதுவும் என் மேல சத்தியம் வேற அடி வெளுத்துருவேன்!” என பொய்யாய் மிரட்டினான்.
“சத்தியமா குடிக்கலைப்பா நம்புப்பா…” சட்டென நிமிர்ந்து அவன் தலையில் அடித்து சத்தியம் செய்து “எல்லாரும் லவ்வரை பார்க்க முடியலைனு டிரிங் பண்ணுவாங்க ஆனா நான் உன்னை பார்த்தால் தான் டிரிங் பண்ணுவேனு ஓட்கா மேலயும் ப்ராமிஸ் பண்ணிருக்கேன்“
“என்னையும் விட்டு வைக்கல, ஓட்காவையும் விட்டு வைக்கல பாரபட்சம் பார்க்காமல் இரண்டு பேரு மேலயும் சத்தியமா? நானும் ஓட்காவும் ஒன்னா!” என முறைக்க
“ஒன்னா, ஒன்னுல்லையா லாம் எனக்கு தெரியாது ஆனால் நீங்க இரண்டு பேரும் இல்லாமல் என்னால் இருக்க முடியாதே! அதான் இரண்டு பேரு மேலயும் சத்தியம் !”
வெறுமையான பார்வை மட்டுமே அவனிடம் பதில் சொல்ல முடியாத விவாதம்
அவனின் அமைதி பொறுக்காமல் “பப்புக்கு ஏன் வரலை நீ ? ஏன் என்னை தேடலை நீ ?” என மீண்டும் விட்டதை பிடிக்க
“தேடுறதற்கு நீ என்ன தொலைஞ்சா போய்ட்ட ” என ‘படு சீரியஸாய்’ கேட்க
அவளோ கிண்டலை உணராமல் “ஆமாம் பிர்லா நான் தொலைஞ்சு தான் போய்ட்டேன் இதோ இங்க ” அவனிதயத்தை கை காட்டி . “ ஆனால் நீ இன்னும் என்னோட இதயத்துக்குள்ள வரலை தெரியுமா வந்திருந்தா நான் கேட்ட கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்லியிருப்ப அதில் இருந்தே தெரியுது பிர்லா உனக்கு இன்னும் என்னை பிடிக்கலைனு ”
“ஆனால் என்னை உனக்கு ஒரு நாள் பிடிக்கும், அப்போ நான் கேட்காத கேள்விக்கும் பதில் சொல்ல தான் போற!”
“அதெல்லாம் நடக்குறப்போ நடக்கட்டும் ”
“எது எப்படி இருந்தாலும் நீ இன்னைக்கு மட்டுமாவது என் கூட இருந்தே ஆகனும் ”
“அதென்ன இன்னைக்கு மட்டும்?” என கேள்வி கேட்க
“இன்னைக்கு எனக்கு பர்த் டே ” முகத்தை மகிழ்வாய் வைத்து கொண்டு சொல்ல
‘அதான் இத்தனை மேக்கப்பா ’ என மனதினுள் ஓடிய எண்ணத்தின் பின்பே, அவளது புது உடை, பிறந்தநாளுக்குரிய பிரத்யேகமான பொலிவை சுமந்த முகம், என ஒவ்வொன்றாய் ரசித்து கொண்டிருக்க
“எனக்கு பர்த்டேனு சொன்னேன் ” என தன்னில் உறைந்திருந்த தன் காதலனை நனவுலகிற்கு இழுத்து வந்தாள்
“உனக்கு தானே பர்த்டே அதுக்கு நான் என்ன பண்ண ?” அழகாய் சமாளித்தான் பிர்லா
“நீ என்ன பண்ணனுமா ? பர்த்டே பேபிக்கு விஷ் பண்ணனும் ஒரு விஷ்க்காக உன் முகம் பார்த்து நிக்க வச்சுட்டல்ல ” முறைத்துக் கொண்டே பதில் சொல்ல
“ஹேப்பி பர்த் டே ” என முன் இருக்கையில் இருந்து நன்றாக திரும்பி அவள் புறமாய் கை நீட்டி சொல்ல
அவன் வாழ்த்தை ஏற்றுக்கொள்ளாமல், நீட்டிய அவன் கையை பார்த்தபடி,”கிப்டுக்கு கூட உன் கையை பார்த்து நிக்கனும் போல “ என இன்னும் முகத்தை தூக்க
“இப்போ தானே ப்ர்த் டே சொன்னே அதுக்குள்ள கிப்ட்டுக்கு நான் எங்க போக ” கேட்டு முடிக்கும் முன்
“எங்கனாலும் போ ” எனக்கென்ன ! எனக்கு தேவையானது கிப்ட் என்பது போல் சட்டமாய் அமர்ந்திருந்தாள்
அதற்குள்
“கோவிலுக்குள்ள உன்ன தேடிட்டு இருந்தால் ,இங்கே என்ன பண்ணிட்டு இருக்க பிர்லா?” காரின் பின் சீட்டில் ப்ருந்தா இருப்பதை அறியாமல் அவனுடன் பேசியபடி பிர்லாவின் அருகில் மரகதாம்பாள் அமர
இருவருக்குமே பேரதிர்ச்சி தான்
ஒரு நொடி என்றாலும் அதீத தடுமாற்றத்தை அவனது உடல் காட்ட பாட்டிக்கு பதில் சொல்வதை மறந்து இருந்தான் பிர்லா…
“பிர்லா உன் கிட்ட தான் கேட்டேன்” என மரகதாம்பாள் அனது வித்யாசத்தை உணர்ந்து சற்று சப்தமாய் மீண்டும் கேட்க
“அது ஒரு இம்பார்ட்டன்ட் கால் பாட்டி, டிஸ்டர்பன்ஸ் இல்லாமல் இருக்கனும்னு காரிலயே உக்கார்ந்துட்டேன் ” சட்டென்ற சுதாரிப்பில் பதில் வந்து விழுந்தது.
“ஓ அப்படியா .” என்றவர் “பேசி முடிச்சிட்டியா“ என கேட்க
“ம் முடிஞ்சது பாட்டி ” என காரை ஸ்டார்ட் செய்ய ஆயத்தமான கைகளுக்கு கார் சாவி கிடைக்காமல் போகவே…
கார் ஓபன் பண்ணும் போது நம்ப கையில் தானே இருந்தது இந்த லூசு கிட்ட பேசிட்டு எங்கயோ தொலைச்சிட்டேன் போலவே என கீழே குனிந்து தேடியவனின் கண்கள் தாமதகவே ரியர் வியூ மிரரை பார்க்க
அதற்காகவே காத்திருந்தார்ப்போல் அவன் கண்களுக்கு விருந்தானது ப்ருந்தாவின் கைகளில் ஆடிக்கொண்டிருந்த கார் சாவி
‘அட ஆமாம் முதலில் பின் கதவை தானே திறந்தேன் அப்படியே போட்டுவிட்டு முன்னால் அமர்ந்த தன் முட்டாள் தனத்தை நொந்தபடி, திரும்பி பாட்டியை பார்க்க அவரோ போனில் சதானந்த்துடன் ஏதோ உரையாடலில் இருக்க
சந்தேகம் வராத அளவிற்கு மெதுவாய் பின்புறம் திரும்பி ‘சாவியை கொடு ’ என அவள் புறமாய் கைகளை நீட்ட
அவன் விரல்களோடு தன் விரல்களை கோர்க்கவும், இறுக்கி பிடிக்கவும், பின் தளர்த்தவும் என விளையாண்டு கொண்டிருக்க
“ஐய்யோ சாவடிக்கிறாளே” தன் உணர்வுகளை இப்போதைக்கு ஒதுக்கி வைத்துவிட்டு
பாட்டி இன்னமும் போனில் பேசுவதை ஊர்ஜிதம் செய்து கொண்டு ப்ருந்தாவின் புறம் திரும்பி “பிளீஸ் சாவியை கொடு” என கெஞ்சவே ஆரம்பிக்க இவளோ தருவது போல் தெரியவில்லை
‘மாட்டேன் ’ என நன்றாக தலையசைத்து இன்னும் சற்று நகர்ந்து உள்புறமாய் விலகி அமர்ந்து கொள்ள .