அவளது அதிர்வான முகம், இவனுக்கு விரக்தியை தான் கொடுத்தது, அதில் “இப்போ கூட இந்த தாலியை பத்தின இறந்தாகாலம் எதுவுமே எனக்கு தெரியாது” விரக்தியான வார்த்தைகளும் அவனிடமிருந்து அம்பாய் கிளம்பியது.
“நகை கடைக்கு போய், எந்த கடையில் செஞ்சதுன்னு கேட்டு, அந்த கடையை தேடி மறுபடியும் ஓடினேன்.
உன் பேர் தெரியாமல், நீ எந்த தேதியில் வாங்கினன்னு தெரியாமல் உன்னை கண்டுபிடிக்க முடியாத கடுப்பில் வீட்டுக்கு வந்து, கிறுக்கு பிடிச்சவன் மாதரி வீட்டையே கவுத்தி போட்டு தேடுனா… ! அப்பவும் ஒன்னு கிடச்சது… அது என்ன தெரியுமா?” என நிறுத்தியவன்
பேண்ட் பாக்கெட்டின் மறுபுறத்தில் கிடந்ததை எடுத்து டீபாயின் மீது வைத்து “இந்த சிலை!” என
‘இந்த சிலையா இது இது’ மீண்டும் ஓர் சுழல் அவளை எங்கேயோ இழுத்து செல்ல நிலை குழைந்து போனாள் ப்ருந்தா. அவனது பேச்சு, டீபாயின் மீது கிடந்த தாலி, இவர்களை அச்சில் வாழ்ந்த செராமிக் சிலை இதெல்லாம் பார்த்து அவள் கண்கள் நீரை கோர்த்து, அவன் உருவத்தை மறைத்தது.
தாலியை பற்றி சந்திரா, தேவி, சதா, மரகதாம்பாள் என யாருக்குமே தெரியாததால், அது ப்ருந்தாவின் கழுத்தில் பிர்லா கட்டிய தாலி என்று தான் நினைத்திருந்தனர். ஆனால் அந்த தாலி தன்மகனின் கழுத்தில் ப்ருந்தா அணிவித்தது என தெரியவில்லை.
மற்றொன்றோ சிலை. சந்த்ரா அதை கையில் எடுத்து பார்க்க, சாட்சாத் இருவரையும் சிறிதாக்கியது போல் இருந்த சிலையை பார்த்து ‘எல்லாம் கடவுளின் செயல் போல!’ என அவர் நினைக்க, பாவம் அவருக்கு தெரியாமல் போனது அது காதலின் செயல்’ என.
“மறுபடியும், நகைகடைக்கு போய் நாயை விட கேவலாமாய் அங்கேயே மணிக்கணக்கா காத்திருந்து, கெஞ்சி, கூத்தாடி, சிசிடிவி கேமரா, பில் போடும் போது நீ கொடுத்த உன் கான்டாகட் டீட்டெய்ல்ஸ் எல்லாத்தையும் வாங்கிட்டு, உன் வீட்டுக்கு போனா, செக்யூரிட்டிகிட்ட ஒழுங்கா பதில் இல்லை, செக்யூரிட்டி மூலமாவே உங்கப்பன்டா பேசுனா, கட் பண்ணிட்டு போய்ட்டான் உங்கப்பன்,
இதோ எங்கம்மாட்ட கேட்டும் ஒழுங்கா பதில் இல்லை, கையை கட் பண்ணிணதுக்கு அப்பறம் வருது பதில்!” இவன் சொல்ல சொல்ல, தேவி, சந்திராவிற்கு காட்சிகளாய் கண் முன் விரிந்தது அத்தனை நிகழ்வுகளும்.
“இது எல்லாத்தையும் தாண்டி உன்னை பார்க்க வந்தா, நீ ஹாயா படுத்துகிட்டு, டிவியை பார்த்துக்கிட்டு, அதுலையும் என்னோட வீடியோவை ஓட விட்டுட்டு கனவில் மிதந்திட்டு இருக்குற!” தங்கு தடையின்றி வந்த வார்த்தைகள், உறுதியாய் வெகு நிதானமாய் ,அதே நேரம் வெகு அழுத்தமாய் மாறி,
“எல்லாத்தையும் மறந்த நானே! இந்த தாலியை பிடிச்சி கிட்டு உன்னை தேடி வந்துட்டேன், ஆனா நீ எக்கேடு கெட்டு போனால், எனக்கென்னன்னு!” பற்கள் நறநறவென கடிபட ஷோபாவை விட்டு எழுந்து வந்து, தன் அருகில் இருந்தவளை இழுத்து சுவற்றில் சாய்ந்து கழுத்தை நெறித்திருந்தான்.
“என்னோட வீடியோ மட்டும் போதும்னு எப்படி உன்னால சேக்ரிபைஸ் பண்ண முடிஞ்சது!” மூச்சுக்கு திணறி இருமல் சத்தம் கேட்க சந்திரா பதறி அடித்துக்கொண்டு
“டேய் அவளை விட்றா விட்றா!” அவனை பிடித்திழுத்து அவளை விட்டு தள்ளி நிறுத்த, “பிர்லா விடு பிர்லா விடு” என சதானந்தமும் அவனை பிரிக்க, வறட்டு இருமலில் வறண்டு போன தொண்டையை பிடித்தபடி இன்னமும் இவள் இருமியபடியே நிற்க
தேவியோ சர்வாங்கமும் ஒடுங்கிப்போய் நின்றிருந்தார், மரகதமும் செய்வது அறியாது நின்றிருந்தனர்.
“ப்ருந்தா நீ போம்மா?” சந்திரா மறுபடியும் அவளை உஷாராக்க
“பதில் சொல்லாமல் இங்க இருந்து போய்டுவியா? நீ?” இவன் கர்ஜிக்க
“ஏண்டா இப்படி நடந்துக்குற? ப்ருந்தா நீ போம்மா!” என அவளை அனுப்ப
“போய்டுவியோ நீ” சந்திராவிடமிருந்து திமிறிக்கொண்டு இவன் வர
தானாகவே இரண்டடி பின் வாங்கியது அவள் கால்கள்.
“ஏண்டா அவளை பயமுறுத்துற?” “நீ போம்மா” என கூறியும் அவள் பிர்லாவின் முகம் பார்த்து அசையாமல் இருக்க
“ம்மா, அவளை கூட்டிட்டு போம்மா!” என மரகதத்தை அழைக்க
“நீ போம்மா அவனை நாங்க பார்த்துகிறோம்” சந்திரா சொல்ல
“என்னது நீங்க பார்த்துப்பீங்களா? என்னை நம்பி வந்த பொண்ணை, கண் காணாத இடத்துக்கு அடிச்சு துரத்திவிட்டுட்டு, என்னத்தை நீங்க பார்த்துப்பீங்க?”
மற்றவர்களோ அதிர்ந்து நிற்க “அவள் சொல்ற எல்லாத்தையும் அப்படியே நம்புவேன்னு நினைச்சீங்களோ, எங்கே இவள் என்னை பிரிஞ்சு போனதுக்கு இவள் மட்டும் தான் காரணம், பெரியவங்க நீங்க யாருமே காரணம் இல்லைன்னு சொல்லுங்க பார்போம்” உறுதியாய் இவன் பேச ப்ருந்தாவின் கண்கள் சாசராய் விரிய சந்திரா ‘இதெல்லாம் தேவைதானா?’ என தேவியை பார்த்திருக்க
‘அவரோ என்ன செய்வது என தெரியாமல் திரு திருவென முழிக்க
“டேய் புரியாமல் பேசாதடா, அன்னைக்கு நிலைமையே வேறாடா!” சந்திரா தான் இடையில் தலையிடும்படி ஆனது.
“ம் அப்போ நீங்க எல்லாரும் சேர்ந்து தான் எங்களை பிரிச்சிருக்கீங்க!”
அவர்கள் வாயிலிருந்தே உண்மையை வரவழைத்தவனை இன்னமுமே அதிர்வாய் இவர்கள் பார்த்திருக்க
“என்ன சொன்னீங்க அன்னைக்கு நிலைமை வேறயா? என்ன நிலைமை வந்தால் என்ன? அதுக்காக அவளை துரத்துற அளவுக்கு வரனுமா?” இவன் பல்லை கடித்து கொண்டு பேச
“அவ பண்ணினா காரியம் அப்படிடா, நீ இந்த நிலைக்கு நிக்கிறதுக்கு ப்ருந்தாவும் ஒரு காரணம்டா” தேவி வாய் திறக்க
“அப்போ இன்னொரு காரணம், நீங்களும் அப்பாவுமா?” என வார்த்தையாலேயே அடிக்க!
“நீ கொஞ்சம் வாயை மூடு தேவி” சந்திராவும் சேர்ந்து கத்த, தேவியின் கண்களும் அழ தயாரானது.
“நீங்க பேசறதை பார்த்தால்! அவளை இந்த வீட்டில் யாருக்கும் பிடிக்கலை! அப்படி தானே!”என
இவர்களிடம் மௌனமே பதிலாய் வர “சோ உங்களுக்கு எல்லாம் பிடிக்கலைன்னு, என்கிட்ட இருந்து இவளை பிரிச்சுட்டீங்க! இப்போ எனக்கு உங்க எல்லாத்தையுமே பிடிக்கலை! என்ன செய்லாம்?” என உச்சந்தலையில் அதிர வைக்க
அரண்டு இருண்டு போனது அனைவருடைய முகமும்
“அப்போ உனக்கு பழசெல்லாம் நியாபகம் வரலையாடா?” நடப்பது அனைத்தையும் அமைதியாய் கவனித்த சதானந்தம் கேட்ட பின்பே, தேவி சந்திரா மரகதாம்பாள் மூவருக்கும் சொரனை வர ‘எல்லாவற்றையும் தங்களிடமே கேட்கிறான் என்றால்? இவனுக்கு நிஜமாகவே இவனுக்கு பழைய நியாபகங்கள் ஏதும் வரவில்லையா?” என அவன் முகத்தையே பார்த்திருக்க
“எனக்கு நியாபகம் வந்துடுச்சுன்னு உங்களுக்கு யார் சொன்னா? நியாபகம் வரலைன்ற ஒரு காரணத்துக்காக மட்டும் தான் நான் இவளை இங்கே அழைச்சிட்டு வந்திருக்கேன்.” என இவன் முற்று புள்ளி வைத்தான்.
தேவி சந்திராவை பார்க்க ‘பழைசெல்லாம் நியாபகம் வரமாலேயே இந்த ஆட்டமா? வந்தால்?’
‘ருத்ர தாண்டவம் தான்’ என சந்திராவின் பார்வை சொல்ல
‘கடவுளே இவனுக்கு நியாபகமே வர கூடாது’ என கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க
அவர்களின் பார்வை பார்த்து “நியாபகம் வரவே கூடாதுன்னு சாமியை வேண்டுறீங்களோ!” என
அதில் படாரென இவன் புறமாய் இருவரும் திரும்பினர் “வேண்டிக்கோங்க வேண்டிக்கோங்க, நல்லா வேண்டிக்கோங்க!” என்றவன்
“கொஞ்சம் இல்லை நிறையவே பர்சனலா பேச வேண்டி இருக்கு, வர்றியா” அவங்களுக்கு என்க்வரி முடிஞ்சது அடுத்து உனக்கு தான் ‘வரியா’ என ப்ருந்தாவிடம் நன்றாகவே பேசியது அவன் பார்வை.
ப்ருந்தாவிடம் கூறிவிட்டு விடுவிடுவென மாடியேறி சென்றான். பயந்தபடியே அவன் பின்னே சென்றாள்.
சிவதாண்டவம் ஆடி முடித்த இடமாய் அந்த இடமே அமைதி கொள்ள, தலையை பிடித்தபடி அமர்ந்துவிட்டார் தேவி ‘இவனை எப்படி சமாளிக்க போகிறோம்’ என
இவள் சென்ற இடம் அவனது அறை திருமணத்திற்கு முன் ப்ருந்தாவின் கையால் தாலி ஏறியது முதல், திருமணத்தின் பிறகு அவர்களின் அந்தரங்க வாழ்வின் ஒட்டுமொத்த நினைவுகளின் இருப்பிடம் அவனது அறை. பார்த்த மாத்திரத்திலேயே கண்களில் நீர் கோர்க்கும் போல் இருந்தது.
ஆனால் இவன் அதெல்லாம் கண்டுகொண்டார்ப்போல் தெரியவில்லை! அறையினுள் இருந்த சேர் ஒன்றில் கால் மேல் கால் போட்டபடி அமர்ந்திருந்தான்.
இவள் உள்ளே வர, கட்டிலில் அமரும் படி செய்கை செய்தான்.
கையில் இருந்த தாலியை அவள் முன் வைத்தான்,
“சொல்லு இது எனக்கானதா? உனக்கானதா?” என
‘அவன் கேள்வியே குதற்கமாய் ஆரம்பித்தது’
இவள் அசையாமல் பார்த்திருக்க!
“நீ எனக்காக வாங்கினதா, இல்லை உனக்காக நான் வாங்கினதா!” கேள்வியின் தீவிரத்தை விட அவன் பார்வையின் தீவிரம் சற்று அதிகமாய்!
அதில் அவள் மனம் பதறி “எ… எனக்காக தான் வாங்கினேன்” பொய் உரைக்க
உட்கார்ந்திருந்த சேரை தூக்கி வீச, படார் என்ற சப்தம் அந்த அறையை தாண்டியும் வெளிப்பட தனது ஆறடிக்குமாய் நிமிர்ந்து நின்றவன்
“அப்பறம்… என்ன டேஷ்க்கு அது என் கழுத்தில் இருக்கனும்! இது எங்க இருந்து எடுத்தேன் தெரியுமா?” இவன் செய்கையில் கட்டிலை விட்டு பதறி அடித்து இவள் எழ
“என் கழுத்தில் இருந்துடீ” என பெட்டில் ஒரு ஓரமாய் கிடந்த அந்த சிவன் டாலரையும் எடுத்து அவன் முன்னே போட்டு “இந்த லாக்கெட்டில் இருந்து தான் எடுத்தேன்”
“சாவடிச்சிருவேன், உண்மையை சொல்லு!” பற்களை கடித்துக்கொண்டு வர இவனுடைய காதலில் நடுங்கி போனாள்.
“சொல்ல்ல்லு!” என இவளை நெருங்க
“நான் உங்களுக்காக வாங்கினது” என திக்கி சொல்ல ‘அப்பறம்’ சொல்லு என இவன் பார்வையே இவளை பேச வைக்க
“நீங்க என்னை லவ் பண்ணினீங்க, ஆனால் அக்செப்ட் பண்ணலை, நம்ம மேரேஜூக்கும் சரின்னு சொல்லலை! அதனால”
“அதனால ?”
“நான் உங்களிக்ஐஏ தெரியாமல் சுவறேறி குதிச்சு, உங்க ரூம்க்கு வந்து உங்க கழுத்தில கட்டிவிட்டுட்டேன்!”
ஆத்திரத்தில் ஆடியவன் உடல் இவளது பதிலில் கோழையாய் துவண்டு போனது.
ஒரு ஆண் பெண் கழுத்தில் தாலி கட்டி விடுவது சம்ப்ரதாயம் ஆனால் ஒரு பெண் இதை செய்வதென்றால்? எத்தனை காதல் தன் மீது இருந்திருக்கும்! என இவன் உடல் இளகித்தான் போனது.
ஒரு நாளாய் உணர்ந்த காதலையே தன்னால் தாங்க முடியவில்லை, இவள் எத்தனை வருடங்களாய் காதலை சுமந்து கொண்டிருக்கிறாளோ! கண்கள் தாமாய் மூடிக்கொள்ள, சுவரில் சாய்ந்து அவன் மனம் கதறியது.
இவளோ அவன் நெஞ்சில் சாய துடித்த மனதை அடக்கி நின்றிருந்தாள்.