“என்னடா என்னாச்சு?” மூச்சு வாங்க தன் முன் நின்ற மகளை ஆசை தீரப்பார்த்தார்
“விமல் சாப்பிடற சிப்ஸ் எங்கே கிடைக்கும் டாடீ?”
“இங்க இருந்து மூனு தெரு கிராஸ் பண்ணினா மெயின் ரோடு, அங்கே ஒரு சூப்பர் மார்க்கெட் இருக்கு அங்கே கிடைக்கும்”
“தேங்க்ஸ் டாடீ” எம்பி அவர் கன்னத்தில் முத்தமிட்டு தட தடவென படி இறங்கியவள், மீண்டும் அதே வேகத்தில் மேலே ஏறி வந்தாள்.
“டாடீ என் ஸ்கூட்டி கீ” என கை நீட்ட
“உன் ரூம் டிரெஸிங் டேபிளில் இருக்கு! எடுத்து தரவாடா”
“வேணாம் டாடி நான் எடுத்துகிறேன்” வேகவேகமாய் அறைக்கு ஓடினாள், அதே வேகத்தில் ஸ்கூட்டி சாவியை எடுத்து வந்தாள்.
வீட்டிற்கு வெளியில் சென்றவள், மீண்டும் தடதடவென படியேறினாள் “பணம் கொடுங்க டாடி சும்மா சிப்ஸ் யாரும் தர மாட்டாங்களே” என முகம் குழந்தையாய் சிணுங்க
அவர் எடுத்து தரும் முன் பாக்கெட்டில் இருந்த பர்ஸை பிடுங்கி அவளே எடுத்து கொண்டு பட்டாம்பூச்சியாய் பறந்து சென்றாள்.
இத்தனை நாட்களாய் கூட்டுப்புழுவாய் சுருண்டு கிடந்தவள் சிட்டாய் பறப்பதை பார்த்து வேலாயுதம் கண் இமைக்க மறக்க, செண்பாவிற்கு கண்கள் குளம் கட்டிப்போனது.
விமலை இரண்டு மாதங்களுக்கு முன்பே வரவழைத்திருக்கலாமோ என தான் இருவரின் மனதிலும் ஓடிக்கொண்டிருந்தது.
அடுத்த பத்து நிமிடங்களில் “விமல், இந்தாடா வாங்கிட்டு வந்துட்டேன்!” சோபாவில் சரிந்திருந்தவனை எழுப்ப
இவள் அவசரம் புரியாமல் மெதுவாய் எழுத்து மெதுவாய் சிப்ஸ் பாக்கெட்டை பிரித்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு அமைதியாய் சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.
“அவரை அவரை நீ பார்த்தியா?” பூவாய் பூத்திருந்த முகத்துடன் ஆர்வமாய் கேட்டாள்
“அவர்கிட்ட பேசினியா?”
“என்னபத்தி எதுவும் கேட்டாங்களா?”
“ம்” ஆர்வமாய் ஒவ்வொரு கேள்வியாய் கேட்க இவனோ
“அதெல்லாம் அப்பறம் சொல்றேன் முதல்ல என் வயித்துக்கு ஏதாவது போடு” கால் மேல் கால் போட்டு தோரணையாய் அமர
“இப்போ தானே விமல் சிப்ஸ் பாக்கெட்டை முழுசா முழுங்கின! அதுக்குள்ளேயும் வேற தீணிக்கு நான் எங்க போவேன்!”
“சிப்ஸ் பத்தலையே பக்கி! நான் என்ன செய்றது. போ வேற ஏதாவது சாப்பிட கொண்டு வா!”
ஆர்வம் மிகுந்த அவள் முகம் சிறிது கோபமாய் மாற “மாமாவை பார்த்தியா அதை முதலில் சொல்லு ”என
“எல்லாம் சொல்றேன் ஆனால் அதுக்கு முன்னாடி எனக்கு ஏதாவது கொண்டு வா” இல்லைனா சொல்ல மாட்டேன் என இன்னமும் சட்டமாய் சொல்ல
அவனை லேசாய் முறைத்தும் முறைக்காமலும் சமையலறைக்கு சென்றாள் பதினைந்து நிமிடங்களுக்கு பின் டீ பாட் நிறைய காபி, பெரிய ஜக்கில் தண்ணீர், கிடைத்த ரெடிமேட் ஸ்னாக்ஸ் அயிட்டங்கள் சில என பெரிய ட்ரேயை நிரப்பி எடுத்து கொண்டு வந்தாள்
“யானை பசிக்கு சோளப்பொறியா?” என விமலேஷ் உதட்டை சுழித்து அந்த ட்ரேயை பார்க்க,
‘வேணாம்னா போ’ என்பது போல் டேபிளில் வைக்க வேண்டிய ட்ரேயை மீண்டுமாய் தன் கையில் ஏந்தி சமையலறைக்கு இவள் திரும்ப “சரி சரி பரவால்லை கொடு” என அவளிடமிருந்து அதை வாங்கிகொண்டான்.
“இப்போவாவது சொல்லுடா ப்ளீஸ் ”
“அந்த ஏர் கூலரை போட்டுவிடுக்கா, ரொம்ப வெட்கையா இருக்கு” இவள் கேட்பதை சட்டை செய்யாமல் சர்ட் பட்டன்களை கழட்டிவிட்டபடி சொல்ல
‘தடிமாடு இருக்கு உனக்கு கச்சேரி’ என பல்லை கடித்துக்கொண்டு ஏர் கூலரை போட்டு விட்டாள்.
“இப்போவாவது சொல்வியா மாட்டியா?” பழைய ப்ருந்தாவாய் தோனி மாறி இருந்தது.
ஆனால் அவனோ டீயை கொண்டு வந்தா பத்தாது, அதை கப்பில் சர்வ் பண்ணி தரணும் எப்படி டீ பாட்டோட குடிக்கிறதாம்?” வியாக்கானம் பேசிக்கொண்டிருக்கும் போதே விமல் “ஆ ஆஆஆஆஆ” என அலறி இருந்தான்.
இவள் தான் கையில் கிடைத்த சோபா குஷனை வைத்து அவன் தலையில் மொத்து மொத்து என மொத்திக்கொண்டிருந்தாள்.
“பொறுமைக்கும் ஒரு அளவு உண்டு நீ ரொம்ப சோதிக்கிறடா” என இன்னமும் மொத்திக்கொண்டிருக்க
“நீ இப்படி அடிச்சிட்டே இருந்த நான் மாமாவை பத்தி எதுவும் சொல்ல மாட்டேன்!” அந்த ரணகளத்திலும் இவன் மிரட்ட
பிடித்தாள் அவன் குரல் வளையை, “நீ சொல்லாமல் இங்க இருந்து ஒரு இன்ச் கூட நகர முடியாதுடா குட்டிக் குண்டா” பழைய ப்ருந்தாவாய் மாறி அவனுடன் சரி மல்லுக்கு நின்றிருந்தவளிடம்
“சொல்றேன் முதலில் கையை எடு நான் செத்து கித்து போய்ட போறேன் “ பலமாய் மூச்சு வாங்க
அவன் கழுத்தில் இருந்து கையை எடுக்க, அடுத்த நொடி அவனிடம் இருந்து தப்பி ஓட ஆரம்பிக்க
“கையில் சிக்குன செத்தடா நீ” என இவனை விரட்டிக்கொண்டு ஓட
“இப்போ என்ன ஆச்சுன்னு தெரியனும், அவ்வளவு தானே ”
ஒரு நொடி தடைபட்டு அவன் கால்கள் நின்றுவிட்டது.
“ஆண்டி வைரஸ் ஹெவியா அபக்ட் ஆகி, சிஸ்டம் அதுவே பார்மட் ஆயிடுச்சாம் மதர்போர்ட்டை ரிப்பேர் பார்க்கவே முடியலையாம்” இவன் சொல்ல
இவனது பதிலில் அப்படியே நின்றுவிட்டாள் ப்ருந்தா “புரியற மாதிரி சொல்லி தொலைடா தடிமாட்டு தாண்டவராயா” காட்டு கத்தலாய் கத்த
“ஆண்டி வைரஸ் தெரியாது ஆண்டி வைரஸ் அது உன்னோட டேப்லட்டில்ல் வந்திருச்சு சிஸ்டம் மொத்தமும் அடி வாங்கிருச்சு, கேம் விளையாட முடியலைக்கா, கொஞ்சம் மதர் போர்டை ரிப்பேர் பார்த்து கொடேன்” என வேண்டுமென்றே சொல்ல
அவனது பதிலில் கோபம் உச்சிக்கு ஏற “செத்தடா இன்னைக்கு நீ” என தோட்டதிற்கு ஓடியவனை துரத்தி கொண்டு ஓடினாள்.
“ப்பா அவனை பிடிங்க, ம்மா அவனை விடாத” என
மகள் பேச்சுக்கு மறு பேச்சு பேசாமல் இருவரும் சிறு குழந்தையென ஓடி வந்து அவனை கப்பென பிடித்துக்கொள்ள
செக்யூரிட்டியின் கையில் இருந்த பைப்பை பிடிங்கி அவன் மேல் பிய்ச்சி அடிக்க துவங்கினாள்.
கமலோடு அவள் பெற்றோர்களும் நனைய, ஏதோ ஒரு கட்டத்தில் கமலின் கைக்கு அந்த பைப் மாற இப்போது முழுதும் நனைவது இவள் முறையானது
இப்படியே விமல் ப்ருந்தா கைகளில் மாறி மாறி இடம் பிடித்த அந்த பைப் நால்வரின் மகிழ்ச்சியை மீண்டும் தத்தெடுத்துக்கொண்டது. வீடே அவர்களின் சிரிப்பு சப்தத்தில் நனைந்து கொண்டிருந்தது.
சிரித்து கொண்டிருந்தவளின் கண்ணில் நீர் வழிந்தோட, பார்வை நாலா பக்கமும் சுழன்றது, ஏனோ அந்த இடத்தை விடுத்து தனிமையை தேடி ஓடியது அவளின் கால்கள்.
இரண்டு மாதங்களாய் இருந்த மனதைரியம் தூள்தூளாய் உடைந்து சிதற, பிர்லா நன்றாகத்தான் இருப்பான், எனக்கு ஒன்றும் ஆகவில்லையே அப்போ அவனுக்கும் ஒன்றும் ஆகி இருக்காது என்ற நம்பிக்கையும் சுக்குநூறாய் உடைந்து சிதற, இப்போது விமலும் ஆசை காட்டி ஏமாற்ற, அந்த ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் தனக்குள்ளே ஆதரவு தேடி வீட்டிற்குள் ஓடினாள். ஈரமான உடையை கூட மாற்ற தோன்றாமல், கண்ணீர் தலையணையை நனைக்க பெட்டில் ஓங்கி ஓங்கி குத்திக்கொண்டிருந்தாள்.
“டாட் இதெல்லாம் பிராடு வேலை… சின்ன பையனை ஏமாத்தாதீங்க…” என்ற பிர்லாவின் குரலில் படுத்திருந்த ப்ருந்தா மூர்ச்சையாகிப்போனாள்.
ஆம் இது பிர்லாவின் குரல் தான்
பிர்லாவே தான் அதுவும் பிர்லாவின் மிக மிக மகிழ்ச்சிகரமான சூழ்நிலைகளில் மட்டுமே வெளிப்படும் காணகிடைக்காத சிரிப்புடன் கூடிய செல்ல மிரட்டல்,
ஆனால் எப்படி! என தடாரென எழுந்து குரல் வந்த திசையை பார்க்க
அந்த அறையின் பாதி சுவற்றை மறைத்திருந்த எல்ஈடீ டிவியில், சந்த்ரா ஒரு புறமும், பிர்லா மறுபுறமும் டென்னிஸ் விளையாண்டு கொண்டிருக்க, அவுட் ஆப் போகஸ் என்பார்களே அதில் தேவி மரகதாம்பாள் சதானந்தம் என அத்தனை முகங்களும் அவ்வப்போது தோன்றி மறைந்தபடியும் இருந்தது.
“நீயா சின்ன பையன் இந்த கிழவன் கூட போட்டி போட முடியலைன்னு சொல்லுடா சும்மா ப்ளேம் பண்ணிட்டு இருக்காத”
“யாருக்கு? எனக்கா போட்டி போட முடியலை? இருங்க உங்களை” என டென்னிஸில் தன் வீர தீர சாகசத்தை காட்ட அந்த இளம் காளையிடம் போட்டி போட முடியாமல் சந்திரா தோற்று விட
“ஹேய் டாடி அவுட் தோத்துட்டாரு” என பிர்லா கும்மாளமிட
“டேய் நீ கல்லாட்டை ஆடுற போடா” என செல்லமாய் கோபம் கொண்டு கையில் இருந்த டென்னிஸ் பேட்டையும் தூக்கி எறிய
பிர்லாவின் சிரிப்பு சப்தம் அந்த அறையையே அதிர வைத்தது. அந்த சிரிப்போடு நின்றிருந்தது அந்த வீடியோ!
“மாமா கோமா ஸ்டேஜில் இருந்து சரியாகிட்டாங்க, ஆனால் எதுவுமே, யாருமே, ஏன் நீ கூட நியாபகம் இல்லைக்கா, சின்ன பையனை மாதரி எல்லாத்துக்கும் பழக்கி, அப்பறம் தான் அவரை சரி பண்ணிருக்காங்க, மத்தபடி, மாமா நல்லா இருக்காங்க க்கா.
மாமா எப்படி இருக்காங்கன்னு சொல்றதை விட காட்டினா பெட்டர்னு தோணினது,
நான் உனக்கு அண்ணனா இருந்தா அப்பா கூட சண்டை போட்டாவது மாமாகிட்ட உன்னை கொண்டு போய் விட்ருப்பேன், ஆனால் சின்ன பையனா போய்ட்டேனே அதான் ஸ்ரீதர் அங்கிள்கிட்ட கேட்டு வீடியோ எடுக்க சொல்லி அதை பென் ட்ரைவில் போட்டு வாங்கிட்டு வந்தேன்”
“அழாதக்கா, நீ மாமாவை தேடிப்போக கூடாதுன்னு வேணா அம்மா அப்பா உன்னை தடுக்கலாம், ஆனால் மாமாவே உன்னை தேடி வரப்போ தடுக்கமுடியாதுல்ல மாமா கண்டிப்பா உன்னை தேடி வருவாங்க!” இவன் பேச பேச இன்னமும் அழுதுகொண்டிருந்தவளை தோன்றும் வழி தெரியவில்லை.
ஏற்கனவே டிவியில் நின்று போய் இருந்த வீடியோவை மீண்டும் ரீப் ப்ளே செய்துவிட அடுத்தடுத்த வீடியோக்களில் பிர்லாவின் மகிழ்ச்சியான குரலில், அழுகையை சற்றே கட்டுப்படுத்தி, திரையில் தெரிந்த தன்னவனின் உருவத்தில் அழுத்தமாய் நிலைப்பெற்றது.
ஆனால் அடுத்த நொடி அவளுள் காதல் வெறி தீப்பிடிக்க அவனே முன்னால் இருப்பது போல் பாவித்த அவள் இதழ்களோ, டீவியை நெருங்கி, அவன் கன்னம் நெற்றி மூக்கு வாய் என பார்த்த இடத்தில் எல்லாம் முத்தத்தால் நிரப்பிக் கொண்டிருந்தாள். மிக நீண்ட எண்ணில் அடங்கா முத்தங்களை வாறி இறைத்தாள்.