“எல்லாம் முடிஞ்சதா டாக்டர் பிர்லா பிர்லாவை நான் பார்க்கனும்…போகலாமா ” அழுகையை அடக்கியபடி பேச
“சிஸ்டர் கூட்டிட்டு போவாங்க ஆனால் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி பிர்லாவை டிஸ்டர்ப் பண்ண கூடாது சரியா !”
“ஏன் ?”
“இன்னமும் பிர்லா தூங்கிட்டு தான் இருக்கான் ப்ருந்தா” என
“ம் சரி டிஸ்டர்ப் பண்ண மாட்டேன், போகவா ?” என
“ஆனா அதுக்கு முன்னாடி ஒன்னு தெரியனுமே !”
“என்ன…?”
“இரண்டு பேருக்கும் எப்படி அடி பட்டது, நேத்து நைட் என்னாச்சு ?” என முரளி கேட்க
ஒரு நொடி ஸ்தம்பித்தாள், பேந்த பேந்த விழித்தாள்
“என்ன நடந்ததுன்னு சொன்னால் தான், அடுத்த முறை இதே மாதிரி பிர்லாக்கு நடக்காமல் பாத்துக்க முடியும் ” இது ஸிஸூர்(வலிப்பின் ஒரு வகை) பிரச்சனை தான் என ஊர்ஜிதமானாலும் மூளை இத்தனை பாதிப்பிற்குள்ளாகுமா ! என்ற சந்தேகத்தை தீர்க்கவே ப்ருந்தாவிடம் கேட்டார்
இதிலும் பிர்லாவை இழுக்க, ப்ருந்தா நடந்ததை கட கடவென ஒப்பித்தாள். எப்படி நடந்தது என கூறினாளே தவிர்த்து, ஏன் ? எதற்காக ? என்ற காரணம் சொல்லவில்லை அவளுக்கும் தெரியவில்லை என்றபின் தான் சிஸ்டருடன் பிர்லாவின் அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டாள்.
இன்னமும் ஐசியூவில் தான் இருந்தான். ஐசியூவின் வெளியே உயிரை பிடுங்கி எறிந்தார்ப்போல் கிடந்த பார்வதிதேவியும் சந்திராவும் அவள் கண்களுக்கு தட்டுப்படவேயில்லை.
ஏறி இறங்கிய மார்பை தவிர வேறு அசைவில்லை அவனிடம்
“பிர்லா ” நாடி நரம்பெல்லாம் வலித்தது அவன் பெயரை சொல்லும் முன்பே,
நிஜமாகவே தூங்குவது போல் ஒரு தோற்றம் தான் அவனிடம்
“என்னை பாரு பிர்லா ” அவன் நெஞ்சில் கை வைத்து லேசாய் அவனை அசைத்தாள்.உடல் அசைந்ததே தவிர அவன் நித்திரையில் எந்த அசைவும் இல்லை
“பி ர்.லா ”
“பிர்லா ” என ஐசியூவின் அமைதியை அவள் குரல் கலைத்தது. அமைதியான அவள் குரல் மறைந்து ஆங்காரமாய் கத்த தயாரான குரலில் அலர்ட் ஆனாள் நர்ஸ், “பிர்லாக்கு தூக்க மாத்திரை கொடுத்திருக்கு எழுந்ததும் பேசலாம் சரியா மறுபடியம் அழுதேன்னா அப்பறம் பிர்லாவை பார்க்க முரளி சார் அலவ் பண்ண மாட்டாங்க !” என சொல்ல
அழ துடித்த இதழ்களை கட்டுபடுத்தி
“எப்போ முழிப்பான் ?”பிர்லாவை பார்த்தில் சிறிது தெளிவு ஏறியது.
“காலையில் தான் ” அசால்ட்டாய் நர்ஸ் சொல்ல
“ஏன் ஏன் அவ்வளவு நேரம் தூங்கனும்” படபடப்பனாள் ப்ருந்தா.
அவள் நெற்றியை தொட்டு காட்டி “உனக்கு இங்க அடிபட்ட மாதிரி, பிர்லாக்கு பின் தலையில் அடி பட்டுடுச்சு, அதான் ’ ஏதோ சொல்ல வந்தவரை தடுத்து
“ஆனால் நான் முழிச்சிட்டேனே ! ஏன் அவன் இன்னும் முழிக்கலை ! அப்போ வேறெதோ ஆயிடுச்சு அவனுக்கு, அதான் முழிக்க மாட்றான் ” பொறுமை இழந்து கொண்டிருந்தது அவளுக்கு.
இப்போ தான் இவ அப்நார்மலா பிகேவ் பண்ணினா, இப்போ நார்மலா கேள்வி கேட்கிறாளே ! மனதினுள் ஓடியதை மறைத்து
“இல்லைம்மா அவங்க தூங்கிட்டு தான் இருக்காங்க டிஸ்டர்ப் பண்ண கூடாதென்று டாக்டர் சொன்னாங்க தானே !” என நினைவூட்ட
“தூங்கறவனை எழுப்பினா எழுந்துக்கனுமே ! ஆனா பிர்லா அசையக்கூட மாட்றானே ! எழுந்துக்கவும் மாட்றானே ! சொல்லு என்னாச்சு அவனுக்கு சொல்லு… சொல்ல்ல்லூ…!” என நர்ஸை போட்டு உலுக்கி, ஒரு வழியாக்கிக் கொண்டிருந்தாள்.
யாராலும் அவளை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.
பைத்தியம் போல் நடந்து கொள்பவளை கண்டு வேடிக்கை பார்க்க முடியாமல் மற்ற ட்யூட்டி நர்ஸ் இருவரும் சேர்ந்து அவளை அமுக்கி பிடித்து மயக்க மருந்தை செலுத்தி அவளை உறங்க வைக்க வேண்டிய நிலை.
ரத்தினம் வாயை மூடி கதறிக்கொண்டிருக்க வேலாயுதம் மகளை அவள் அறைக்கு மாற்றுவதில் ஈடுபட பார்வதிதேவிக்கு பகீரென இருந்தது. மற்றவர்களுக்கு சொல்லவும் வேண்டுமோ !
மீண்டும் ஒரு ஆழ்ந்த உறக்கம் அவளை தழுவி, கண் விழிக்கும் போது நடுராத்திரி. சப்தம் செய்யாமல் வெளியே வந்தாள் ,காலையில் நர்ஸ் அழைத்து சென்ற பாதையை நினைவில் கொண்டு வந்து ஐசியூ சென்றாள். வெளியே இருந்த செவிலியர்கள் கிடைத்த இடத்தில் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தனர். எப்படியோ ஐசியூ வந்து சேர்ந்தாள்.
ஆனால் ஐசியூ வெளியே இருந்த சிஸ்டர், அதன் உள்ளும் புறமும் அடிக்கடி நுழைந்து வெளியேறிக்கொண்டிருந்த நர்ஸ்கள் வெகு சுறு சுறுப்பாய் வேலை பார்த்து கொண்டிருந்தனர். ஐசியூவில் இவன் மட்டும் இல்லையே, வேறு நிறைய பேசண்ட்கள் இருந்தனரே அத்தனை பேரையும் ஏமாற்றி உள் நிழைவது கஷ்டம் என யோசித்துக்கொண்டிருக்கும் போதே “நீ அந்த நூத்து இரண்டாவது ரூம் பேசண்ட் தானே இங்க என்ன பண்ணிட்டு இருக்க ” என சுள்ளென விழுந்த நர்ஸ்
கை பிடித்து தர தரவென இழுத்து வந்து, ரூமினுள் விட்டார். “ஏம்மா, பேசண்டை பார்த்துக்காமல் தூக்கம் என்ன வேண்டி கிடக்கு !” ஏதோ அசதியில் உறங்கியிருந்த ரத்தினத்தை எழுப்பி கத்தினார் அந்த நர்ஸ்
“என்னம்மா என்னாச்சு “ அரக்க பரக்க ரத்தினம் எழும் முன் “பைத்தியத்தை வச்சு செக்கடிக்கனும்னு எங்க தலையெழுத்து” யார் மீதோ இருந்த கோபம் ப்ருந்தாவின் மேல் இறங்க, அதன் தாக்கம் ரத்தினத்திடம் !
காலையில் விழித்திருந்தும் அமைதியாய் இருந்தாள் “பைத்தியம்” என்ற வார்த்தையில். அதைவிட கத்தி கூச்சலிட்டால் எங்கே பிர்லாவை பார்க்க விட மாட்டார்களோ என பயந்து அமைதியாய் கிடந்தாள்.
காலைகடன்களை முடித்தாள், குளித்தாள், உண்டாள் ஆனால் அதன் பின்
“ப்ளீஸ் மா ம்மா ப்ளீஸ் மா ” மகளின் கெஞ்சல் உயிரை உலுக்க அவளை நர்ஸிடம் அழைத்து சென்றார்.
“பத்து நிமிசம் தான் வெளியே வந்திடனும், டாக்டர் ரவுண்ட்ஸ் வர நேரம் ” ப்ருந்தாவின் சாந்தமான முகத்தை கண்டுசொல்லி சென்றார் நர்ஸ்.
ஆனால் இதெல்லாம் காதில் விழும் முன் பிர்லாவை நெருங்கி இருந்தாள் ப்ருந்தா.
கட்டிலில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தவனை பார்த்து அவன் தலை முகம் கை கால்கள், என வருடி அவனது விழி திறப்பதற்காய் காத்திருந்தாள். “காலையில் முழிச்சுப்பான்னு சொன்னாங்களே ! ஏன் இன்னும் முழிக்காமல் இருக்கான்” தன்னுடைய ஒரு தொடுகையில் கண்விழித்து, பார்வையாலேயே ‘என்ன ?’ என கேட்பவனாயிற்றே இவன் ! அப்படிபட்டவனுக்கு தன் தொடுகை உணராமல் போனதேன் ! இல்லை உணராமல் கிடக்கிறான் ! என மூளை பதில் சொல்ல அப்படின்ன்னா…? என யோசிக்கும் போதே
“ஐ திங்க் இட்ஸ் கோமா ஸ்டேஜ் ” என பேசியபடியே பிர்லாவின் கட்டிலை சுற்றி போடப்பட்டு இருந்த ஸ்கிரீனை விலக்கியபடி நர்ஸ் ஒருவர் வர, பின்னால் முரளி கூடவே வேறொரு டாக்டர் வந்தார்
இருவருமே ப்ருந்தாவை பார்த்து அதிர, “ஏய் நீ எப்போ உள்ள வந்த ?” என நர்ஸ் கேட்கும் போதே “டாக்டர் பிர்லாக்கா கோமா ! சொல்லுங்க சொல்லுங்க !” என கத்த ஆரம்பித்தவள்
“அவனுக்கு கோமா லாம் இல்லை”
“இல்லை அதெல்லாம் இல்லை, பிர்லா நல்லா இருக்கான் ”
தனியாக புலம்ப ஆரம்பித்தவள் திரும்பி பிர்லாவின் அருகில் சென்று
“பிர்லா எழுந்திரு உனக்கு கோமான்னு எல்லாரும் சொல்றாங்க! உனக்கு கோமாலாம் இல்லை தானே எழுந்திரு பிர்லா ப்ளீஸ் பிர்லா ”
“பிர்லா எழுந்திரு, பிர்லா எழுந்து வா! என்கிட்ட பேசு, ஏன் பேச மாட்டேன்கிற” அவன் நெஞ்சினில் தன் கை வைத்து அவனை உலுக் எடுக்க,, அத்தனை பேச்சுக்கும், செயலுக்கும் அமைதியாய் கிடந்தவனின் கன்னத்தில் அடுத்ததாய் லேசாய் தட்ட துவங்கினாள்.
“என்னை பாரு பிர்லா, ஒரே ஒரு தடவை பாரேன்”
“பார்க்க மாட்டியா, என்னை பார்க்க மாட்டியா?”
“பேச மாட்டியா என்கிட்ட?”
என்கிட்ட பேசமாட்டியா! பேசவே மாட்டியா?” என அழுகையில் ஆரம்பித்து ஆக்ரோஷமாய் அவன் கன்னத்தில் பளார் பளார், என அடிக்கவே ஆரம்பித்துவிட்டாள் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல்.
“சிஸ்டர்” என முரளி அழைக்கும் முன் ப்ருந்தாவின் கூச்சலிலும் செயலிலும் இரண்டு மூன்று பேர்அவளை பிடித்து விட்டனர். பிர்லாவை அடிக்க விடாமல் ஐசியூவின் வெளியே அழைத்தும் வந்துவிட்டனர்.
மகளுக்காக காத்திருந்தவர், டாக்டர் அவர் அறையில் இருந்து ஐசியூவின் உள் சென்றதை அறியவில்லை. அது தவிர அப்போது தான் அங்கே வந்திருந்த தேவியிடம் என்ன பேசுவது என தெரியாமல், பிளாஸ்க்கில் பால் எடுத்து வந்த கணவனிடம் மகள் உள் சென்றிருப்பதை கூறிக்கொண்டிருந்தார்.
“எதுக்கு அனுப்புன அவ தான் நார்மலா இல்லையே !” என வேலாயுதம் கூறி முடிக்கவும் ப்ருந்தாவுடன் செவிலியர்கள் பெரும் சப்தத்துடன் வெளி வருவதற்கும் சரியாய் இருந்தது.
“என்னை விடுங்க நான் அவனை பார்க்கனும், பேசனும் விடுங்க விடு…ங்ங்…ங்க” அத்தனை சக்தியையும் திரட்டி அவர்களை தள்ளிக் கொண்டிருந்தாள்.
பார்த்த வேலாயுதம் “இதுக்கு தான் அனுப்பாதன்னு சொன்னேன் “ என சொல்லியபடி அவர்களை நெருங்கி
“ஏய் ப்ருந்தா என்ன பண்ற !” வேலாயுதம் அவளை தன் புறமாய் பிடிக்க, ஏதோ ஒரு ஊசியோடு அவளை நெருங்கிய நர்ஸ்க்கும் இடையில் செண்பக ரத்தினம் வந்து நிற்க அந்த இடம் போர்க்களமானது.
என்ன முயன்றும் கட்டுக்குள் கொண்டுவரவே முடியவில்லை அவளை., நர்ஸ் இருவர் சேர்ந்து அவளுக்கு மயக்க மருந்தை செலுத்தினர்
முரளி தன் அறைக்குள் சென்றிருக்க, ப்ருந்தாவை தவிர அனைவரும் அங்கே சென்றனர்.
“கிட்டதட்ட உயிர் போற நிலையில் பிர்லாவை பார்த்திருக்காங்க உங்க பொண்ணு, ப்ருந்தா தன்னிடம் கூறியதை விளாவரியாக சொல்லி, அது அவங்களை மன ரீதியாக பாதிச்சிருக்கு, மத்தபடி பிரையினில் ஒரு பிராப்ளமும் இல்லை ”
“அப்பறம் ஏன் இப்படி பிகேவ் பண்றா ?”
“அதான் சொன்னேனே மன ரீதியான அதிர்ச்சின்னு ”
“இதை சரி பண்ண முடியாதா !”
“உங்க பொண்ணு முன்னாடி பிர்லா முழு ஆரோக்கியத்தோட வந்து நிக்கனும், பிர்லாக்கு ஒன்றுமில்லை, நல்லா இருக்கிறான்னு அவ மனசு நம்பனும் அப்போ இது சரியாகிடும் ”
“பிர்லா எப்போ கண்ணு முழிப்பான் ” பார்வதிதேவி அந்த அமைதியை உடைக்க
“நாற்பத்து எட்டு மணி்நேரத்திற்கு இன்னும் இரண்டு மணி நேரம் தான் இருக்கு., அதுக்குள்ள கண் முழிச்சா தான் உண்டு !”
“இல்லைன்னா ?”
“கோமா தான் !” தலையில் இடி இறங்கியது அனைவருக்கும்
“இதை நாங்க டிஸ்கஸ் பண்ணும் போது கேட்டுட்டு தான் இத்தனை ஆர்ப்பாட்டம் இரண்டு மணி நேரத்தில் பிர்லா கண்ணு முழிக்கலைன்னா ப்ருந்தாவை சைக்கியார்டிஸ்ட்கிட்ட கூட்டிட்டு போய்டுங்க மன ரீதியான பிரச்சனை இது, உடனே சரிபண்ணலைன்னா, பிராப்ளம் ப்ருந்தாக்கு தான் ” முரளி அனைத்தையும் பேசி முடிக்க
யார் யாருக்கு ஆறுதல் கூறுவது என தெரியாமல் இஷ்ட தெய்வத்திடம் சரண்டைந்தனர், பிர்லாவிற்கு நினைவு திரும்ப வேண்டும் என !