“உங்க பொண்ணுக்கு ஒரு இரண்டு மணி நேரத்தில் கான்சியஸ் வந்திடும் நெற்றியில சின்ன அடி ஒரு பத்து நாளில் சரியாய்டும் நீங்க எதுவும் கவலை பட வேண்டாம் ”
“ஆனால் பிர்லாக்கு, பிட்ஸ் வந்திருக்கு ஈஈஜி பார்த்து வெரிபை பண்ணியாச்சு, அட் தி சேம் டைம் தலையில் அடி வேற, அன்கான்சியஸ் ஸ்டேஜில் இத்தனை நேரம் அப்படியே இருந்து இருக்கான். கான்சியஸ் வர வரை வெயிட் பண்ணுவோம் ”
பிர்லா அறைக்குள் நுழைந்ததில் இருந்து தான் பார்த்த அத்தனையும் முரளியிடம் சொல்லி இருக்க ‘பெற்றவர்களுக்கே என்ன நடந்தது என்பது தெரியாத போது,வீணாக கேள்விகள் கேட்பது தவறு, ப்ருந்தா எழுந்து வந்து சொன்னால் மட்டுமே சாத்தியம்’ என அதோடு ஒரு முற்று புள்ளியை வைத்துவிட்டு, இருவருடைய தற்போதைய நிலையை மட்டும் முரளி சொன்னார்.
ப்ருந்தாவிற்கு ஒன்றுமில்லை என ஆசுவாசபடவும் முடியவில்லை, பிர்லாவின் உயிருக்கு ஆபத்தில்லை என நிம்மதியும் கொள்ளமுடியவில்லை இருவரது பெற்றவர்களால்.
‘கெங்கா இருந்திருந்தால் அவனது உண்மை நிலையாவது தெரிந்திருக்கும், அவள் இருந்தால் அவனை இத்தகைய சீரியஸான நிலையில் வைத்திருக்க மாட்டாள்’ நிதர்சனம் என்ற ஒன்றையும் தாண்டி ஆளாளுக்கு எண்ணங்கள் ஓடியது.
இருந்தும் மனம் கேட்காமல் ஐசியூவின் வெளியில் இருந்த ட்யூட்டி நர்ஸிடம் மீண்டும் பிர்லாவை பற்றி சந்திரா விசாரித்தார்.
“ம் ஹை பீவர் வேற நைட் புல்லா அன்கான்சியாஸா இருந்திருக்காங்க கான்சியஸ் வர மெடிசின்ஸ் கொடுத்திருக்கோம்… அதுவரை வெயிட் பண்ணுங்க ” எங்களுக்கு இவனை போல் பல கேஸ்கள் இருக்கிறார்கள் என சர்வ சாதாரணமாய் அந்த நர்ஸூம் சென்றுவிட்டனர்.
ப்ருந்தாவின் பெற்றோர்களுக்கு ஐசியூவின் முன் நிற்க முடியவில்லை மகளை தேடிய தேடலை ஒரு தாயாய் மரகதாம்பாள் கண்டுகொள்ள
“ப்ருந்தா அங்கே தனியா இருப்பா நீங்க போங்க ” என, அதன் பின் தான் பிர்லாவின் பெற்றொர்களும் நிமிர்ந்து பார்த்தனர்.
“தெரியலம்மா ப்ருந்தா சொன்னால் தான் நடந்தது என்னன்னு தெரியும் ” சந்திரா இடையில் பதில் சொல்ல
“இவர்களும் தானே வேதனையில் இருக்கிறார்கள், பேசியோ, சண்டையிட்டோ நடந்ததை மாற்ற முடியாது, வா “ வேலாயுதம் மிக மெதுவாய் பேசி அவரை ப்ருந்தாவிடம் அழைத்து சென்றார்.
சரியாய் இரண்டு மணி நேரத்தில் ப்ருந்தா கண் விழித்தாள் எங்கிருக்கிறோம் ? என்ற ஆராய்வில் சுருங்கிய நெற்றி காயத்தையும் சேர்த்தே சுருக்க சுள்ளென்ற வலி அதை தொடர்ந்து நெற்றியை வருடிய விரல்களின் வழியே நியாபகங்கள் படையெடுக்க
“பிர்ர்ர்ல்லாஆஆஆ” அலறலுடன், படுத்து கிடந்தவள் அலறியபடி எழுந்தமர, கையில் ஏறிக்கொண்டிருந்த ட்ரிப்ஸ் பிடுங்கப்பட்டது போல் ஒரு புறம் தூக்கி எறியப்பட ட்ரிப்ஸ் ஏறிய இடத்தில் இரத்தம் ஏற ஆரம்பிக்க
“ஏய், ஏய் என்னம்மா பண்ற “ என நர்ஸ் அவளை பிடிக்க வர அந்நேரம் தான் ப்ருந்தாவை தேடி இவளது பெற்றோர்கள் வர அறையில் ஒலித்த ஆங்காரமான குரலில் கிட்டதட்ட அவளிடம் ஓடினர் இருவரும்.
“பிர்லா எங்கே எங்கே அவன்… எங்க அவ்வன்….!” உச்ச குரலில் கத்திக்கொண்டிருந்தாள் அந்த நர்ஸிடம்
“மாப்பிள்ளைக்கு ஒன்னுமில்லை நல்லா இருக்காரு நீ் முதலில் உட்காரு ” என பெட்டில் அவளை அமர வைக்க
அமரவைத்த அடுத்த நொடியே “இல்லை இல்லை நான் பிர்லாவை நான் பார்க்கனும் “ “ப்ளீஸ் ப்பா பார்க்கனும் ப்பா ” குரல் சப்தம் கொஞ்ச கொஞ்சமாய் உயர்ந்து அறை சுவரில் பட்டு எதிரொலிக்க, அறையே அதிர்ந்தது அவேது ஆட்டத்தில்
“ஸ் ஸ் .கத்தாதடா”
“கையில் பாரு எவ்வளவு ரத்தம் ”
“நீ முதலி்ல் டென்சன் ஆகதா ! ரிலாக்ஸ்டா குட்டிமா ”
பெற்றவர்கள் மாறி மாறி அவளை ஆசுவாசப்படுத்த முயல
ஆசுவாசப்பட்டது போல் தெரியவில்லை… “பிர்லா நல்லா இல்லைப்பா… “ கண்ணில் நீர் வடிய
“இல்லைப்பா அவனுக்கு ஏதோ ஆச்சு…! நே நே த்து… நேத்து நைட் ”
“பிர்லா…” “பிர்லா உடம்பு வெட்டி வெட்டி துடிதுடிச்சது ப்பா ” “த் த்தலையில் அடிபட்டுதுப்பா ”
“கண்ணெல்லாம் மேல போய்டுச்சுப்பா ”
“அவனுக்கு ஏதோ ஆயிடுச்சுப்பா ”
“செத்துடுவானாப்பா ” பெற்றவர்களை கதி கலங்க வைக்கிறோம் என புரியாமல் இவள் பாட்டிற்கு பேசிக்கொண்டே செல்ல
“அய்யோ பாப்பா… ஏன்டீ இப்படிலாம் பேசற !” செண்பா தலையில் அடித்து அழ
வேலாயுதம் கண்ணில் திரண்ட நீரை கட்டுபடுத்த வேறு புறம் திரும்பிக்கொண்டார்.
“அம்மா ஏன் ம்மா அழற !”அவளுக்காக தான் அழுகிறார்கள் ,அதுவும் தெரியவில்லை அவளுக்கு. தாய் பதில் அளிக்கவில்லை என தந்தைபுறம் திரும்பி
“அப்பா அம்மா ஏன் அழறாங்க ஏன் ஏன்ன்ன்ன்…? ப்பா…” “ஏன்ப்பா அழறாங்க ?” பயத்தை கண்ணில் தேக்கி கேட்டாள்.
பதில்லா அவர் முகத்தில் எதை உணர்ந்தாளோ
“அப்போ பிர்லாக்கு ஏதோ ஆயிடுச்சுல்ல “
“ஆமா ஏதோ ஆயிடுச்சு “
“ஆயிடுச்சு…” சுயம் மறந்து அவளுக்கு அவளே புலம்பி, கேள்விகேட்டு, அவளே பதிலும் சொல்லி, ஆத்திர ஆத்திரமாய் கத்தி கொண்டிருந்தவளை இறுதி வாக்கியங்கள் அவளை மயக்கத்திற்கு தள்ள கட்டிலில் வேர் அறுந்த மரமாய் விழுந்தாள், நினைவற்று
“அய்யோ இதெல்லாம் பார்க்கவா நான் இவளை பெத்தேன் ” அலங்கோலமாய் கிடந்தவளை ஒழுங்காய் படுக்க வைக்க நர்ஸ் ஊசி கிழித்தருந்த அவள் கைக்கு பிளாஸ்டர் போட்டு, மற்றொரு கையில் ட்ரிப்ஸ் போட்டுவிட்டார்.
ப்ருந்தாவின் நடவடிக்கை அப்நார்மல் என தெரிய முரளிக்கும் அதை தெரியப்படுத்தினார் நர்ஸ்.
மீண்டும் ஒரு ஒன்றரை மணி நேர ஓய்வு தான் எடுத்திருப்பாள், அதற்குள் அவள் மனம் அவனை தேடியதோ ! “பிர் லா பிர்லா !” உளறியபடி தான் கண் விழித்தாள். வெளிச்சத்திற்கு கண்கள் பழக்கப்பட, “பிர்லா .பிர்லா என்னோட பிர்லா ?” ஒரு வித உத்வேகம் அவளை எழுந்து அமரவைக்க
ட்யூட்டி நர்ஸ் ,முரளிக்கு அழைத்தாள் “சார் பேசன்ட் இப்போவும் நார்மலா இல்லை சார் !”
“ம் ” என்றவர், ப்ருந்தாவின் அறைக்கு விரைந்தார்.
வழக்கம் போல் ப்ருந்தாவின் பெற்றோர் ஒரு பக்கம், நர்ஸ் இருவர் ஒரு பக்கம், எல்லோரது குரலையும் மழுங்கடிக்கடிக்கும் வகையில் ப்ருந்தாவின் சத்தம் வேறு அதிர்ந்து கொண்டிருந்தது.
கதவு திறக்கும் சப்தத்தில் ஒரு நொடி அனைவரது கவனமும் அறைவாசலில் தேங்க அந்த நொடியில் நடப்பதை ஊகித்து சிறு செய்கை அவரிடம், அமைதியாய் இருக்க சொல்லி. அதன் பின் மற்றவர்கள் அமைதியாகிவிட “ப்ருந்தா நீங்க அமைதியா நான் சொல்வதை கேட்டால் பிர்லாவை பார்க்க நான் அனுமதிக்கிறேன் ” என அவர் குரல் மட்டும் தனித்து இயங்க
ப்ருந்தாவின் பேச்சு அப்படியே நின்று போனது. ‘பிர்லாவை பார்க்கலாம்’ என்ற வார்த்தையில்.
“நான் அமைதியா இருந்தா பிர்லாவை பார்க்கலாமா ” அப்படி ஒரு சாந்தமான குரல் அவளிடம்.
“ம் கண்டிப்பா பார்க்கலாம் ” தன் கட்டுபாட்டில் கொண்டுவந்த நிம்மதி அவரிடம்.
“நிஜமா சார் ?” தேக்கி வைத்த ஆசை எதிர்பார்ப்பாய் வெளிப்பட்டது அவளிடம்.
“ப்ராமிஸ் பண்ணவா ?” என இன்னும் நம்பிக்கையை தூண்ட
“இல்ல நான் உங்களை நம்புறேன் நீங்க என்ன சொன்னாலும் கேட்பேன் ” அவருக்கு அருகில் வந்தாள் ப்ருந்தா.
“அவங்க எடுக்குற டெஸ்ட் எல்லாத்துக்கும் கோ ஆப்ரேட் பண்ணனும் “
“ம் ”
“அப்பறம் பிர்லாவை பார்க்கலாம் !”
“எல்லாம் செய்றேன் ஆனா அதுக்கு முன்னாடி இப்போ ஒரே ஒரு முறை அவனை பார்க்கனும் ப்ளீஸ் டாக்டர் அப்பறம் நீங்க சொல்ற எல்லாத்தையும் செய்றேன் ” ஆத்திரத்தை விட்டு அமைதியாய் கொஞ்சியவளை கண் கொண்டு பார்க்கமுடியவில்ல முரளியால் கூட, மற்றவர்களை பற்றி்சொல்லவும் வேண்டுமோ ! அத்தனை பேரும் அழுகையை அடக்க பெரும்பாடு பட்டுக்கொண்டிருந்தனர்.
“பிர்லா தூங்கிட்டு இருக்கானே எல்லாத்தையும் நீங்க முடிச்சிட்டு வந்தீங்கன்னா, அதுக்குள்ள பிர்லாவும் எழுந்திடுவான் சரியா !” என கூறி பின் அவளது பதிலுக்கு காத்திருக்காமல்
“சிஸ்டர் நான் சொன்ன எல்லாத்தையும் ப்ருந்தா முடிச்சவுடனே பிர்லாகிட்ட கூட்டிட்டு போங்க ” வேறு வழியேஇல்லாமல் சிஸ்டரிடம் கண் ஜாடை காட்டி செல்லிவிட்டு, ப்ருந்தாவை கட்டாயத்திற்கு தள்ளிவிட்டு சென்றுவிட்டார்.
“டாக்டர் டாக்டர் ப்ளீஸ் டாக்டர் நான் பிர்லாவை பார்க்கனும் ப்ளீஸ் டாக்டர் “ கத்திக்கொண்டே அவர் பின்னே செல்ல முயன்றவளை தடுத்தது நர்ஸின் குரல்
“கத்திட்டு இருக்குற நேரத்திற்கு ,டாக்டர் சொன்னதையெல்லாம் செய்யலாம்ல ப்ருந்தா !” அவள் தோளை தொட்டு மெதுவாய் சொல்ல
“இல்லைன்னா மாப்பிள்ளையை பார்க்க முடியாதும்மா ” வேலாயுதம் நான்கு இட்லிகளை தட்டில் ஏந்தியபடி வந்தார்
நிலாவை காட்டி சோறுஊட்டுவது போல், பிர்லாவை வைத்து அவளை சாப்பிட வைத்தார். டெஸ்ட் எடுக்க சிஸ்டருடன் அனுப்பி வைத்தார். “பிர்லாவை பார்க்க வேண்டும் ஒரு தூண்டுதல் அவளை அமைதியாய் செயல்பட வைக்க” அவருடன் சென்றாள்.
ஈஈஜி எடுக்கும் இடத்தில் முரளியும் உடன் இருந்தார், ப்ருந்தாவிற்கு சிறு அதிர்ச்சி மட்டுமே இத்தகைய தாக்கத்தை கொடுத்திருக்கிறது அந்த அதிர்ச்சி பிர்லா நலமுடன் இருக்கிறான் என தெரிந்தால் முழுமையாய் சரியாக வாய்ப்புள்ளது என உணர்ந்தார்
இரண்டு நாட்கள் தள்ளிப்போனதற்கே கற்பமாக இருப்பதாய் எண்ணிக்கொண்டு, பிர்லாவோடு மருத்தவமணை வந்தது, கெங்கா இல்லாததால் வேறொரு மருத்துவரை அனுகியது, ‘நெகட்டிவ் என அறிந்த பின் ப்ருந்தாவின் முகம் போன போக்கு, அதை அழகாய் சமாளித்து, சிரித்த முகத்துடனே அழைத்து சென்ற பிர்லா என அடுக்கடுக்காய் நினைவுகள் எழுந்தது.