“அப்பா ரெய்ட்னு யாரு போன் பண்ணினா !”என இவன் யோசனைகளினூடே கேட்க
“ம் நம்ப ஆடிட்டர் தான் ஏன் !”
“யாரு கம்ளைண்ட் பண்ணினான்னு கேளுங்க டாட்”என பிர்லா அவரை பார்க்க
“ஆமாம் பிர்லா நானும் இதை மறந்தே போய்ட்டேன் இரு விசாரிச்சு சொல்றேன் ” என பைல்களை எல்லாம் லாக்கரினுள்ளே போட்டு, அதை திரும்பவும் பழைய நிலைக்கு கொணர்ந்த பின் தான் போனை கையில் எடுத்தார்.
பல போன்கால்களின் பின்
“பிர்லா சீனிவாஸ் தான்” என பல்லை நற நறவென கடித்தவர்
“டென்டர் கிடைக்கலைன்னறதுக்காக இன்கம் டேக்ஸ்க்கு கம்ளைண்ட் பண்ணுவானா அவனை ”
“அவனை நான் டீல் பண்ணிக்கிறேன் விடுங்க டாட் இப்போதைக்கு ரெய்ட் முடியட்டும் அவன் இப்போ முக்கியமில்லை ” என அத்தோடு பேச்சை முடித்துவிட்டான் பிர்லா.
தன் அறைக்கு வந்த சந்திரா அமைதியாய் அமர்ந்திருந்த பார்வதிதேவியிடம்
“இவ்ளோ லவ் பண்றவங்களை பிரித்து வைக்க எப்படி தான் மனசு வந்ததோ உனக்கு” அதுவரை மனதை அரித்ததை கேட்டுவிட்டார் அவர்.
“நான் பிரிச்சு வைக்கலாம் நினைக்கல ப்ருந்தாவை பத்தி பிர்லாகிட்ட எல்லாத்தையும் பேசனும், ப்ருந்தாவோட காதல் பொய்னு அவனுக்கும் தெரியனும்னு நினைச்சேன் அவ்வளவு தான் ”
“ப்ருந்தாவை பத்தி அவனை விட உனக்கு ரொம்ப தெரியுமோ”
“போதும் உங்க மகன் பேசினதே போதும் நீங்க எதுவும் பேசவேண்டாம் நான் தாங்கமாட்டேன்.” என கண்களை இறுக்கமாய் மூடி திறந்தவர் “நான் இனிமேல் எந்த விசயத்திலும் தலையிட மாட்டேன்.” என விலகி விட்டார்.
————-
ஏற்கனவே டீ கப்புடன் அவர்களது அறையில் தஞ்சமடைந்திருந்தவளின் அருகில் சட்டமாய் வந்து படுத்துக்கொண்டவனை பார்த்து பகீரென இருந்தது ப்ருந்தாவிற்க்கு பார்வையும் அதையே காட்டி கொடுத்தது.
“ஏன் இப்படி பார்க்குற !”
“இல்லை ,ஆபிஸ் போகலையா !” பீதியை கண்களில் காட்ட
‘நான் மறந்தாலும் நீ நியாபகப்படுத்திடற தோ வரேன் இரு ’ என நினைத்தபடி
“நான் ஆபிஸ் போறதுக்கும்,நீ இப்படி பார்க்குறதுக்கும் என்ன சம்பந்தம் !” அவளுக்கு தூண்டில் போட்டான் பிர்லா.
வெகுவாய் தயங்கினாள் அவள்
“என்கிட்ட என்ன தயக்கம் சும்மா சொல்லு “என ஏற்றிவிட
“இல்லை, நீங்க கேட்ட டீயை தான் கொடுத்துட்டேன்ல அப்பறமும் ஏ ஏன் நீங்க ஆபிஸ் போகலை ”
“அது வேலாண்ணா போட்ட டீ தானே !” என இவளை மடக்க
“எப்படியும் நீங்க கேட்ட டீ வந்துருச்சு தானே. கிளம்புங்க ஆபீஸ் கிளம்புங்க ” என கட்டிலை விட்டு அவனை எழுப்ப தயாரானாள் அவள்
“அது சரி எல்லாருக்கும் லீவு எனக்கு மட்டும் வேலையா !” அவளை ஒரே இழுவாய் இழுத்து தன் அருகில் கிடத்தினான் பிர்லா.
“எ எதுக்கு லீவு…” அவன் பிடியில் அவள் வார்த்தைகளிம் தடுமாறியது.
“நியூ இயர்டீ தடிமாடு ” லேசாய் விரிந்த இதழ்களை அவள் காதோரமாய் உரசியபடி பேச
‘நேத்து நைட் நியூ இயர் பார்ட்டிக்கு பிர்லா தானே கூட்டிட்டு போனான்’ அவள் மனசாட்சி தலையிலேயே அடித்துக்கொள்ள
‘ஆமாம்ல்ல ’ என இவள் மனதினுள்ளே சொல்ல
“நீ தான் உன்னையவே மறந்து சுத்திட்டு இருக்கியே இதில் எப்படி நியூ இயர் நியாபகம் இருக்கும் ” அடுத்ததாய் இதழோடு உரச துவங்கினான் பிர்லா
அவ்வளவு தான் ப்ருந்தா பேச்சு உறைந்து போனது.
“என்ன பதிலையே காணோம் !” சிவந்து போன அவள் முகத்தை பார்த்தபடியே இவன் கேட்க.
‘படுத்துறானே ’ இதழ்கள் கடிபட்டு கொண்டிருந்தது அவளிடம்.
வெட்கம் கொண்ட அவள் கன்னம், கடிப்பட்ட இதழ்கள் என இரண்டையும் வருடியபடியே
“அச்சம் மடம் நாணம் எல்லாம் பர்ஸ்ட் நைட்டுக்கு மட்டும் தான் இருக்கும் அதுக்கப்பறம் பழகிடும்ன்னு சொன்ன ஆனால் உன் முகம் அதெல்லாத்தையும் வாடகைக்கு எடுத்துகிச்சு போலயே !” என அழுத்தமாய் கேட்க
“எங்கே தான் கத்துகிட்ட இப்படி பேச ப்ளீஸ் !” அவனது அட்டகாசம் தாங்கமுடியாமல் கெஞ்சினாள் ப்ருந்தா.
“எல்லாம் இந்த பேட் கேர்ள் கிட்ட இருந்து தான் ” என அவளை நோக்கி ஒற்றை விரலை காட்டினான்.
“ப்ப்ப்ப்ளீஸ் பிர்லா ” உன் அடாவடித்தனத்தை நிறுத்தேன் என அவள் விழிகள் யாசிக்க
வருடிக்கொண்டிருந்த விரல்கள் அவளது பிடறியில் கை கொடுத்து தன் முகம் நோக்கி திருப்பி
“ப்ருந்தா… உனக்கு மட்டுமில்லை எனக்கும் நிறைய எக்ஸ்பெக்டேசன்ஸ் இருக்…!” அதற்குள் அவன் வாயை இவள் மூடி ‘ஏடா கூடாமாய் எதுவும் பேசிடாதே’ சிறு மிரட்டல் அவளிடம்
அதை ரசித்தபடியே “ம்ஹூம் அப்படியில்லை ” என மறுப்பாய் தலையசைத்தவன், அவள் கைக்கு பதிலாய் இதழ்களை மூட கற்று கொடுத்தான்.
————
காலை ஒரு பத்து மணி இருக்கும் போதே “பார்வதிதேவி கம்பெனிக்கு ரெயிட்க்கு ஆள் வந்தாச்சாம், நான் போறேன், வேற யாரும் வர வேண்டாம்” என சந்திரா கிளம்பிச் சென்றார்.
அதன் பின், சுமார் பனிரெண்டு மணிக்கு மேல், வேறொரு கும்பல் அவர்களது வீட்டில் ரெய்ட்க்காக வந்தனர்.
கம்பெனி காலேஜ் தான் அவர்களது டார்கெட் என நினைத்திருக்க அவர்களது வீட்டையும் விட்டு வைக்கவில்லை.
என்னவோ ஏதோ வென பிர்லாவின் பின் வந்த ப்ருந்தாவிற்கும் கண்களை கட்டிக்கொண்டு வந்தது.அத்தனை பேரை பார்த்து.
“லீவ் தான், ஆனால் எந்த நாளிலும் ரெயிட் வரதுக்கு இவங்களுக்கு ரைட்ஸ் அண்ட் பவர்ஸ் உண்டு” என
அதற்குள் வீட்டு ஆட்கள் ஒருபுறம், வேலைக்காரர்கள் ஒருபுறமும் என அவர்களை நகரவிடாமல் செய்துவிட்டு அவர்களது வேலையை பார்க்க ஆரம்பித்தனர்… அத்தனையையும் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது அவர்களால்.
அங்கே அவர்களது கல்லூரி பினான்ஸ் கம்பெனி என இரண்டையும் பிரட்டி போட்டு மண்டை காய வைத்தனர் என்றால் வீடு காலேஜ் கம்பெனி என அனைத்திலும் ஒன்று கூட கிடைக்கவிடாமல் அவர்களை மண்டை காய வைத்தான் பிர்லா
அங்கே கிடைத்த அத்தனை அசையும் அசையா சொத்துக்களுக்கு சரியான கணக்கை காட்ட ரெய்ட் நடத்தியவர்களுக்கு வெறும் கை மட்டுமே மிஞ்சியது.
ரெய்ட் நடத்தியவர்கள் வெறும் கையுடன் செல்வதை பார்த்த பின்பே அத்தனை நிம்மதி அனைவருக்கும்.
வீடு, கம்பெனி காலேஜ் மூன்றையும் சரி செய்ய இரவு வரை பிடித்தது பிர்லா, சந்திரா, பார்வதிதேவி மூவருக்குமே
இது எதிலும் தலையிடாமல் ப்ருந்தா வீட்டிலேயே முடங்கிக் கிடந்தாள்.
நேற்று இரவு இன்றைய பகல் என உறக்கத்தை தொலைத்திருந்தவள் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள். பிர்லாவின் அதீதமான வேலைகள் அவனது கண்களையும் சொப்பனத்தில் சேர்க்க தலையனை போல் அவன் தலைவியை கட்டிக்கொண்டு உறங்கிப்போனான் அந்த காதல் தலைவன்.
மறுநாள் காலையில் “பிர்லா, மறுவீடு போகனும்ப்பா ” என சந்திரா சொல்ல
“ம் போகலாம் ப்பா ”
“போகலாம்ன்னா ? என்னடா அர்த்தம் !”
“நீங்களும் எங்க கூட வர்றீங்கன்னு அர்த்தம்”
“நான் எதுக்குடா ?”
“வர்றீங்க அவ்வளவு தான் ” என
“வரவே மாட்டேன்” என திட்டவட்டமாய் மறுத்து கம்பெனிக்கு முதல் ஆளாய் கிளம்பி சென்றதென்வோ பார்வதிதேவி மட்டும் தான்.
“நீங்களாவது வாங்கப்பா” என தந்தையையும் உடன் அழைத்து சென்றான் பிர்லா.
ப்ருந்தாவும் கண்டு கொள்ளவில்லை. ஆனால் வழி மாறி செல்வது தெரிய
“நாம வேற எங்கேயாவது போறோமா !” என தயக்கமாய் கேட்க
“ம் ஆமாம் ப்ருந்தா, முக்கியமானவங்க வீட்டுக்கு போறோம் ஜஸ்ட் ஒரு ஒன் அவர் அப்பறம் உங்க வீட்டுக்கு போகலாம் ” என
ஒரு மணிநேரம் தானே என அவளும் அமைதியாகிவிட்டாள்.
ஆனால் சந்திராவிற்கு மகன் சொல்லாதபோதும் மகனது கார் செல்லும் வழியே காட்டி கொடுத்தது இவன் கெங்கா வீட்டிற்கு அழைத்து செல்கிறான் என சிறிதாய் ஒரு முறுவல் சிரித்து கொண்டார்.
“இது யாரு வீடு பிர்லா !”கதவை திறந்தபடி கேட்க
“வா சொல்றேன் !” என உள்ளே அழைத்து சென்றான். க்ளீனிக் செல்வதற்காய் கிளம்பி வந்த கெங்கா காலிங் பெல் சப்தத்தில் கதவை திறக்க, இன்ப அதிர்ச்சியானார்.
“வா வாங்க வா பிர்லா… வாம்மா” என அழைப்பை விடுத்து வீட்டிற்குள் அழைத்தார்.
வந்த அடுத்த நிமிடமே கெங்காவின் அருகில் தந்தை நிறுத்தி வைத்து
“இவங்க கெங்காம்மா ”
“அப்பாவோட இரண்டாவது மனைவி” என தன் மனைவிக்கு அறிமுகம் செய்து வைத்து, காலில் விழுந்தான் ப்ருந்தாவை இழுத்துக்கொண்டு ‘ஹான் இவன் என்ன சொல்றான் ?’ என என்னவென அவள் மூளை கிரகிக்கும் முன் ஆசிர்வாதம் வாங்கி இருந்தனர் இருவரும்
“ஆயுள் முழுக்க இரண்டு பேரும் சந்தோஷமா இருக்கனும் ” என வாழ்த்தியவர்.
“ஒரு வார்த்தை கூட சொல்லலீயேடா ” என பிர்லாவை முறைத்தார் கெங்கா
“கல்யாணம்னு எனக்கே இவள் சொல்லலையே ம்மா ! இதில் நான் எப்படி உங்களுக்கு சொல்றதாம்!” ப்ருந்தாவின் காலை வாரினான் இவன்
“உனக்காக சாகற அளவுக்கு போய் இருக்குறா நீ அவளை கிண்டல் பண்றியா ! படுவா ” என அவன் காதை திருக
பிர்லா கள்ளமாய் சிரிக்க, ப்ருந்தாவோ உண்மை தெரிந்து விடுமோ என நெளிந்து கொண்டிருந்தாள்.
அதன் பின் பரஸ்பர நல விசாரிப்புகள், அறிமுகங்கள் என நடக்க ப்ருந்தா மட்டும் கெங்காவின் மேல் வைத்த பார்வையை அகற்றவே இல்லை
“என்னம்மா எங்கிட்ட எதுவும் கேட்கனுமா !” என கெங்காவே கேட்க
“நீங்க ஏன் ஹாஸ்பிடல் வரலை அன்னைக்கு எங்க கல்யாணம் நடந்தன்னைக்கு!” என தயக்கமாய் கேட்டாள் ப்ருந்தா.
“அம்மாவுக்கும் அவங்களுக்கும் நிறைய விசயத்தில் ஒத்து போகாது அதான் அம்மா இருக்குற இடத்துக்கு மேக்ஸிமம் கெங்காம்மா வரமாட்டாங்க” பதில் வந்தது என்னவோ பிர்லாவிடமிருந்து தான்.
“நிறைய விசயம் ஒத்து போகாதுன்னா அப்போ கொஞ்ச விசயம் மட்டும் ஒத்து போகுமோ ” சிறு சிரிப்புடன் ப்ருந்தா பேச
“கொஞ்சம் எல்லாம் இல்லைம்மா ! ஒரே ஒரு விசயம் தான் ஒத்து போகும் இரண்டு பேருக்கும் அதுவும் நம்ம பிர்லா விசயத்தில் மட்டும் தான் “ என சந்திரா உடைத்து பேச
விழிகள் பிர்லாவையும் கெங்காவையும் மாறி மாறி பார்க்க
“பிர்லாவுக்காக மட்டும் தான் இரண்டும் பேரும் ஒத்துபோவாங்க அதுவும் பிர்லா எதாவது சொன்னான் என்றால் நோ அப்பீல் .” என சந்திரா சிரிக்க
“டாட் ” என இவன் முறைக்க
“நீங்க சும்மா இருக்க மாட்டீங்க ” என கெங்கா லேசாய் அவர் விலாவில் இடிக்க
சந்திராவிற்கு, பார்வதிதேவிக்கு பதில் கெங்கா தான் பொருத்தமாய் இருப்பது போன்ற எண்ணம் ப்ருந்தாவினுள்ளும் எழுந்தது.
அங்கே இல்லாத ஒரு குடும்ப ஒற்றுமை இங்கே இருப்பது போல் பிரம்மை எழுவதை தடுக்கமுடியவில்லை அவளால்
“சரிங்க டாட் நீங்க பேசிட்டு வாங்க நாங்க ப்ருந்தா வீட்டிற்கு கிளம்போறோம் ” என இருவரிடமும் விடை பெற்று கிளம்பினர் அந்த இளம் தம்பதியினர்.
“சூப்பர் கப்பிள்ஸ்ல !” ப்ருந்தாவின் எண்ண வோட்டத்தை அப்படியே இவன் சொல்ல
சிறிதாய் திடுக்கிட்டு தான் போனாள் ப்ருந்தா.
“உங்களுக்கு கோபம்லாம் இல்லையா !” நேரடியாய் கேட்க
“முன்ன இருந்தது இப்போ இல்லை அதுக்காக தப்புன்னு சொல்லிட்டு போலீஸ் கம்ளைண்ட்டும் பண்ண முடியாது தவிர கெங்காம்மாக்கும் யாருமே இல்லை ” இவனும் மனதில் பட்டதை கூறினான்.
“ஆனால் இது உங்கம்மாக்கு பண்ற துரோகம் இல்லையா !” சிறு வலி அவளிடம்.
“இதெல்லாம் பேசி ப்ரயோஜனம் இல்லை ப்ருந்தா ப்ராக்டிக்கலா திங்க் பண்ணு ”
“இதுக்கு நீங்க என்ன தான் பதில் சொல்லி சமாளிச்சாலும் நான் அக்செப்ட் பண்ண மாட்டேன் பிர்லா ” தீர்மானமாய் ப்ருந்தா சொல்ல திடுக்கிட்டு போனான் பிர்லா
ஆணின் மகிழ்ச்சி தன் காதல் மதிக்கப்படும் இடத்தில் தான் உயிர்பிக்கப்படும், அதனால் தான் கெங்காவிடத்தில் உயிர்ப்போடு இன்னமும் இருக்கிறது என இவளுக்கு யார் சொல்வது.
தனக்காக தான் தாய் தந்தை இருவரும் நடித்துக்கொண்டிருக்கிறார்கள் என இவளுக்கு சொன்னாலும் புரியுமா !
அப்பாவும் கங்கம்மாவும் இப்படி ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கு முக்கிய முழு காரணமே அம்மா தான் இதை சொன்னாலும் புரிந்து கொள்ளும் பக்குவம் இருக்குமா…!
இப்படி நிறைய கேள்விகள் அவனிடம் பதில் தான் இல்லை அவனிடம் !