“அடேய் உனக்கும் வெட்கமா!!!!!!” கேட்டது அவன் மனசாட்சி
ஆனால் அவள் கொடுத்த மயக்கத்தில் இருந்து வெளிவரமுடியாமல் அப்படியே சாய்ந்து நின்றான் பிர்லா
கடந்த சில மணி்நேரங்களில் அதிர்ச்சி, பயம், கோபம், தாபம் , ஏமாற்றம் என அத்தனையையும் லைவ்வா காட்டி என் உயிரை என் கிட்ட இருந்து உருவி எடுத்து அத்தனை நவரசங்களையும் கண் முன்னால் நடத்தி காட்டியவள், அட மடையா நவரசத்தில் இன்னும் ஒன்று இருக்கிறது என தன் வாய்ப்பேச்சில் நிறுபித்தாள் அந்த தாரகை ஆம் இறுதியில் மென்னகையில் அல்லவா நிறுத்தியிருக்கிறது.
அவன் கோபம் எரிச்சல் அத்தனையும் அவள் பேச்சில் வென்றுவிட்டாள் இருந்த கோபம் எல்லாம் சென்ற இடம் தெரியவில்லை.
எல்லோருக்கும் இப்படி ஒரு மனைவி அமைவது இல்லை என ப்ருந்தாவின் மீதான ரசிப்பு தன்மையை விட்டு வெள வர வைத்தது “ஹாய் மாமா ” என்ற கமலின் குரல்
‘அடுத்து இவனா…!’ என மனம் யோசிப்பதற்குள்
“ஆமாம் மாமா ஒருநாளைக்கு நீங்க எத்தன முறை சாப்பிடுவீங்க ” இவனே துவங்கினான்
“ஏண்டா…?” என கேள்வி எழுப்பி “மூன்று முறை தான் !” பதில்சொன்னான் பிர்லா
“இனி எக்ஸ்ட்ரா இரண்டு வேளை சாப்பிட்டு பழகுகங்க மாமா அவ கூட போராட தெம்பு வேணுமில்ல !” என
“ம்…” என அவனை முறைக்க
“அப்பறம் மாமா , சின்ன கிளாரிபிகேஷன் ” என
“என்ன ?”
“இல்ல நான் மாமா ஆக போறேனா மாமா ?”
“ஹ . என்ன ?” என புருவம் சுருக்கி…யோசித்து “டேய்ய்ய்…ஒட்டுக்கேட்டியா…” என
பிர்லாவோ தலையில் சொத் என அடித்துக்கொண்டு ஸ்ரீதரிடம் மாட்டிக்கொள்ளாமல் இருக்க விறு விறு வென வெளியேறினான்
இப்படியாய் நேரம் ஓடிக்கொண்டிருந்தது. பிர்லா ப்ருந்தாவின் அறையை விட்டு சென்ற அடுத்தநொடி செண்பா அத்தனை ஆத்திரத்துடன் உள்ளே நுழைய (பழையபடி அமைதியாய் படுத்துவிட்டாள்)
கிழிந்த நாராய் இருந்த மகளை கண்டு ஆத்திரம் வடிந்துவிட்டது அவருக்கு. “பெத்தவங்க நாங்க உயிரோடு இருக்கும் போது நீ ஏண்டி சாக துணிஞ்ச” கதறி அழுதே விட அங்கு வந்து சேர்ந்த மற்றவர்களுக்கும் இதே எண்ணம் தான் அமைதியாய் நின்று கொள்ள, ப்ருந்தாவின் தந்தை வேலாயுதம் கூட அவளருகே ஒரு சேரை இழுத்து போட்டு அவளின் கையை பிடித்தவர் தான் அப்படியே அமர்ந்து விட்டார்.
‘நல்ல வேளை நீ மேக்கப் போட மறந்துட்ட இல்ல உன் மூஞ்சே காட்டி கொடுத்துருக்கும் ’ மேக்கப் செட் இல்லாமல் கலையிழந்த தன் முகத்தை வாழ்வில் முதல் முறையாய் மெச்சிக்கொண்டாள் ப்ருந்தா.
அன்று மாலை ரவுண்ட்ஸ் வந்த டாக்டர், அவளை மேலேட்டமாய் செக்கப் செய்து
“டிஸ்சார்ஜ் பண்ணனும்னா பண்ணிக்கங்க,” என
“காலையில் தான் அட்மிட் ஆனா, ட்ரீட் மெண்ட் எதுவும் பார்க்க வேண்டாமா ?” எப்படியும் ஒரு வாரம் வரை இங்கு தான் இருக்க வேண்டும் என நினைத்தவர்களுக்கு ஒரு வகையில் நிம்மதி தான் அந்த வார்த்தைகள்.
“தேவையில்லை, டைமுக்கு அவங்களை கொண்டு வந்ததால பிராப்ளம் இல்ல ஸ்டொமக் வாஷ் பண்ணியாச்சு இனி நீங்க அழைச்சுட்டு போகலாம்” என ப்ருந்தாவை பார்த்துவிட்டு செல்ல
மற்றவர்கள் கவனிக்காத போதும் பிர்லாவின் கண்களில் சிக்கிக்கொண்டது அந்த நிகழ்வு
ப்ருந்தா ஒரு வேளை ஊமையாகிவிட்டாளோ என எண்ணும் அளவிற்கு இருந்த நடிப்பை பார்த்து பிர்லாவும், கமலும் ஆழமாய் பார்த்துக்கொண்டனர்.
எல்லோரையும் கிளம்ப செய்து ப்ருந்தாவையும் ஒரு கையில் தாங்கியபடி ரிசப்சன் வந்தனர்.
இரு வீட்டாருக்கும் ஒருவர் முகத்தில் மற்றொருவர் முழிக்க முடியா அளவிற்கு தயக்கம் தத்தெடுத்துக்கொண்டது. உயிருக்கு எதுவும் ஆபத்தில்லை என்ற செய்தியின் பின் அடுத்த கட்டமாய் ப்ருந்தாவை ஏற்று கொள்வார்களா என்ற எண்ணம் செண்பக ரத்தினத்திடம்…, கூடவே அழைத்து செல்ல சொல்லி விடுவார்களோ என்ற எண்ணம் பார்வதிதேவியிடம்.
இரு குடும்பத்திற்கும் இடையே பரஸ்பர அறிமுகம் முதல்முறையாய் நடந்தேற அமைதியாய் இருந்தது என்னவோ இரு வீட்டு பெண்களும் தான். அது பார்வதிதேவியும் , செண்பகமும் தான்.
“நாங்க கிளம்புறோம் ” என ப்ருந்தாவின் தந்தை சொல்ல
‘உப்….‘ என்ற பெரு மூச்சு சற்று வெளிப்படையாகவே இருந்தது பார்வதிதேவியிடம், சந்த்ரபோஸ் கூட சற்று திரும்பி அவரை முறைக்க, முகத்தை வேறு புறம் திரும்பி கொண்டார் பார்வதிதேவி
பெற்றவர்களே யோசிக்கும் இந்த விசயத்தில் நாங்கள் என்ன செய்ய என்பது போல் மரகதாம்பாள் சதானந்ம் தயங்கிக்கொண்டிருந்தனர்
அதற்குள் “இல்லை, என்கூடவே….” என நிறுத்தியவன் “எங்க வீட்டுக்கு அவளை கூட்டிட்டு போறோம்“ என பிர்லா சொல்ல
இந்த முறை ‘உப்…‘ என்ற பெருமூச்சு ப்ருந்தாவிடம்
‘பரவாயில்லை இவனை ஒரு தடவை மிரட்டினால் போதும் நமக்கு அடிமை தான் இவன் ’ என ப்ருந்தா நினைக்க
கட்டளைக்கு அல்ல காதலுக்கு அடிபணிந்தவன் இந்த பிர்லா என உணரவில்லை இவள் .
“இல்ல… மா…” என திக்கியவர் “இல்லை மாப்பிள்ளை ,ஹாஸ்பிடல்ல இருந்து அப்படியே அனுப்புறது நல்லா இருக்காது” என வேலாயுதம் சொல்ல
“ஆமாம்… நல்ல நாள் பார்த்து அவளை முறைப்படி அனுப்பி வைக்கிறோம்” என அவள் தாயும் சேர்ந்து சொன்னார்
கடுப்போ கடுப்பு ப்ருந்தாவிற்கு, ‘சாமி வரம் கொடுத்தாலும் இந்த பூசாரிங்க தடுக்குதே’ என தாய் தந்தையை ஓரக்கண்ணால் முறைத்து பிர்லாவை பார்த்தாள்.
அவளை பார்த்தபடியே “அதுவரைக்கும் ப்ருந்தா இதே மாதிரி வேற எதுவும் வேலை பார்த்து வைக்க மாட்டானு என்ன நிச்சயம்… நான் என்கூட கூட்டிட்டு போறேன் அது தான் சேப் ” என பிர்லா திட்டவட்டமாய் கூறி தன் பெற்றோரை ஒரு பார்வை பார்த்தான்.
மகன் முடிவு செய்துவிட்டான் இனி பின் வாங்குவது கஷ்டம் என அவனது தந்தை “அதான் பிர்லாவே சொல்லிட்டானே, அனுப்பி வைங்க அவன் பார்த்துப்பான்” என சொல்ல
சந்த்ரபோஸிடமிருந்து பதில் வந்தவுடன் சிறு நிம்மதி ப்ருந்தாவின் பெற்றோர்களுக்கு
“நீ என்னம்மா சொல்ற ?” என ப்ருந்தாவை அவள் தாய் மெதுவாய் கேட்க
“கல்யாணம் தான் உங்களை கேட்காமல் நடந்தது, இனி எல்லாம் உங்க இஷ்டம்ம்மா நீங்க என்ன சொன்னாலும் கேட்டுப்பேன்” என தலையை நிமிர்த்தாமல் சொல்ல
பிர்லாவின் இதழ்கள் தாமாகவே இடைவெளிவிட்டு பிளந்து நின்றது அதிர்ச்சியில்
அதையும் கீழ்க்கண்ணால் பார்த்தது மட்டும் இல்லாமல் கண்ணடிக்கவும் செய்தாள் அவனது காதல் கொள்ளைகாரி…
அவனது மோனநிலையை பார்த்து , அடுத்ததாய் இதழ் குவித்து ஒரு முத்தத்தை பறக்கவிட…நூல் இருந்த காத்தாடியாய் ரசிக்கும் மனம் அந்தரத்தில் பறந்து விட, அடுத்ததாய் அவள் தந்த இதழ் முத்தத்தில் எந்த சுவற்றில் முட்டிக்கொள்ளலாம் என்பது போல் கடுப்புடன் பார்வையை அலையவிட்டான் பிர்லா.
கண்களில் சிக்கியது என்னவோ விமல் தான்
வழக்கமான வேகத்தை விட பல மடங்கு வேகம் அவனிடம் ஏன் இப்படி திங்கிறான், அதுவும் சிப்ஸை போய்… என யோசித்தவனுக்கு பல்ப் எறிந்தது. கூடவே சிரிப்பும்
அதிகமான சிப்ஸை வாய்க்குள் அடைத்து தன் கோபத்தை தீர்த்து கொண்டிருக்கிறான் விமல், என புரிந்ததினால் வந்த சிரிப்பு… அதுவும் அவன் முகமும் அரைபட்ட வாயும் அவன் கோபத்தின் அளவை கூட்ட இன்னமும் சிரிப்பு தான், பிர்லாவிற்கு அதை அடக்க பெரும்பாடு பட்டு போனான்.
“ப்ராப்ரா நல்ல நாள் பார்க்கட்டும் பிர்லா , கொஞ்சநாள் வெயிட் பண்ணலாம்” என பார்வதிதேவி எல்லோருக்கும் பொதுவாய் கூறிய பதிலில் அத்தனைபேரின் மனவோட்டமும் தடைபட்டு நின்றுவிட, ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கும் நிலைக்கு தள்ளபட்டனர்
“இப்போ மாமியாரா ?” என ப்ருந்தா தான் அதீதமாய் வெறுப்பை முகத்தில் காட்டினாள்.
ஆனாலும் இவள் சோர்வடையாமல், பிர்லாவை ஓரப்பார்வை பார்த்து தன் வயிற்றை மெதுவாய் தடவிக்காட்ட
கடுப்பானன் பிர்லா அதே கடுப்புடன்
“மாம் , ப்ளீஸ் ” என்ற வார்த்தை அதே கடுப்புடனே தாயின் காதில் சென்று விழ
அவனுக்கு முன்பாய் காரில் சென்று அமர்ந்தார் பார்வதிதேவி
“அம்மாவை நான் சரி பண்ணிக்கிறேன் நீங்க வாங்க, ப்ருந்தாவை விட்டுட்டு அப்பறமா கிளம்புங்க” என பிர்லாவே சமாதானம் செய்தான்.
பிர்லாவின் சப்போர்ட் அவர்களுக்கு பெரும் நிம்மதியை தர இரு குடும்பங்களும் அவர்களது காரில் பயணப்பட்டு பிர்லாவின் வீட்டிற்கே வந்தனர்
மருத்துவமணை வாசம், திருமணம் என இரண்டிற்கும் பொதுவாய் மரகதத்தின் கையால் ஆரத்தி சுற்றப்பட்டு உள் அழைக்கப்பட்டனர் தம்பதிகள்.
மருத்துவமனையிலிருந்தே வேலனுக்கு தகவல் சொல்ல பட்டிருக்க, லைட் டிபனும் அசத்தலாய் தயாரானது பிர்லாவின் தயவில், அது கூடுதல் ப்ளஸாக கவனிக்கப்பட்டது ப்ருந்தாவின் பெற்றோரிடத்தில்.
‘என் பொண்ணை பத்திரமா பார்த்துக்கோங்க’ என்ற வார்த்தை தேவையே படவில்லை பிர்லாவிடத்தில் ஆனால் அவனது பெற்றோரிடத்தில் அதை சொல்ல வேண்டிய கட்டாயம்
“நான் பிர்லா அப்பாகிட்ட பேசிட்டு வரேன் நீ அந்தம்மாகிட்ட பேசிட்டு வா…” என வேலாயுதம் சொல்ல
“ஹா… நானா ?” என பின் வாங்கிய செண்பகத்தை வற்புறுத்தி அனுப்பினார்.
“என் பொண்ணு முறையில்லாமல் கல்யாணம் பண்ணி் இருக்கலாம் ,ஆனா ரொம்ப நல்ல பொண்ணு தப்பா எடுத்துக்க வேணாம் ” வேலாயுதம் வெளிப்படையாய் பேச
“உங்க பொண்ணுகிட்ட தான் எங்க பையனோட சந்தோஷம் அடங்கி இருக்குனா, நாங்க நிச்சயமா தடையா இருக்க மாட்டோம்” என நீண்ட அமைதியை உடைத்தார் சந்த்ரபோஸ்
இருவீட்டு ஆண்களின் பேச்சும் சுபம் போட்டது என்றால்
“என் பையன் சந்தோஷத்துக்காக தான் உங்க பொண்ணு எங்க வீட்டுக்குள்ள இருக்கா இல்லைன்னா நடக்குறதே வேற ” என்ற பார்வதிதேவியின் மிரட்டலுக்கு
செண்பகத்தினால் பதில் கூட சொல்லமுடியவில்லை தலை குனிந்து தான் இருந்தார்,
நீண்ட நேர கோபத்தை உடைத்த பார்வதிதேவி அங்கிருந்து செல்ல
வழக்கம் போல் ஆயிரத்தெட்டு அட்வைஸ்களுக்கு பின் ப்ருந்தா குடுப்பத்தினர் கிளம்பிச் சென்றனர்.