பிர்லா பார்த்த பார்வையில் ப்ருந்தாவிற்கு உயிரை கையில் பிடித்த நிலை தான் அதுவும் ஒரீரு நொடிகள் மட்டுமே… அதன் பின் வாலில்லா குரங்காய் மனம் மாற
“ஹா…. ஆனானப்பட்ட உன் அத்தையவே சமாளிச்சிட்ட அந்த அத்தை பெத்த இந்த அம்பியை சமாளிக்கிறதா கஷ்டம்…
ப்ருந்தா பயத்த மட்டும் முகத்தில் காட்டிடாத?” என மனசாட்சி அலாரம் அடித்து அவளை தயார் செய்தது.
அதற்குள் பிர்லா அவளை எதுவும் சொல்லவோ, திட்டவோ முடியாமல் வேக வேகமாய் வெளியேறினான். பேச முடியாத கோபம் தாண்டவமாடியது அவனிடத்தில்.
‘என்ன இவன் சாமியாடுவானு பார்த்தால், அமைதியா போறான் ’ என முதலில் அதிர்ந்தவள்
‘ஐய்யோ அவனை பிடி, பிடி…. ப்ருந்தா…’ தனக்கு தானே கட்டளை பிறப்பித்தபடி எழுந்து அவன் பின்னே ஓடினாள்.
அவன் கையை இழுத்து பிடித்து “எதுக்கு இப்போ இத்தனை கோபம்” என அவனிடம் கேட்க
இவன் இருந்த அத்தனை கோவத்தையும் அவளது கையோடு பிணைத்திருந்த தன் கையில் காட்டினான். கையை உதறியதில் அவளையே உதறியது போல் துள்ளிப்போய் பெட்டில் விழுந்தாள் என்றால், அவன் பார்த்த பார்வையில் அவளிதயமும் துள்ளி வெளியே வந்துவிடும் போல் படபடவென துடித்து கொண்டிருந்தது பயத்தில்
ஆக்ரோசமான பார்வை அது ‘என்னை உயிரோடு கொல்லாமல் போக மாட்டாயா ?’ என்ற தீவரம் தான் அதிகம் பதம் பார்த்தது அவளை
ஆனால் அவன் பார்வை சுத்தமாய் புரியவில்லை அவளுக்கு.
“ஏன் இப்படி பார்க்குறான்” மனதோடு பேசுவதாய் நினைத்து கேள்வியாய் வெளி வந்தது அவள் சந்தேகம்
“ஏன்… பார்க்குறனா !” அவளை திட்ட முடியாமல், அடிக்கவும் முடியாமல் பல்லை கடித்தவன், அடுத்து அதை தவிர வேறு வழியில்லை என கத்த தொடங்கினான்
“நீ பண்ணின வேலைக்கு உன்னை கொல்லாமல் போறேனு சந்தோஷப் படு” “ச்சை…” என
“நீ கோபப்படற அளவிற்கு நான் என்ன பண்ணினேன்” வேண்டுமென்றே இவள் கேட்க…
அவ்வளவு தான், பதில் சொல்ல வேண்டிய அவன் வாய் இறுக்கமாய் மூடிக்கொள்ள, இறுக்கமாய் இறுகி கிடக்க வேண்டிய விரல்கள் பதில் சொன்னது அவளுக்கு, அதுவும் வெகு அழுத்தமாய்.
‘பளார்’ என்ற சத்தம் அந்த அறையையே அதிர வைக்க ‘ங்கொய்ங்….’ என்ற சத்தம் அவள் காதையே அதிர வைத்தது
“ஏமாத்தி கல்யாணம் பண்ணினதும் இல்லாமல் வாய் வேறையா உனக்கு… எதுக்குமே ஒரு லிமிட் உண்டு ”
‘அடித்து விட்டோமே ‘ என்ற கவலை ஒருபுறமிருந்தாலும் அடித்ததில் இவனது கோபம் சற்று ஆசுவாசப்பட்டது. ஆனால் அவளுக்கோ அடங்க காளையாய் சிலிர்த்தெழுந்து அவனை வம்பிழுத்தாள்.
“எனக்கு லிமிட்டை கிராஸ் பண்ணி தான் பழக்கம்” கன்னத்தில் பதிந்த இவன் விரல் தடத்தை தடவியபடி இவள் சொல்ல
“கிராஸ் பண்ணினா தான் பரவாயில்லையே…நீ தான் அதுமேல எகிறி குதிச்சில்ல விளையாண்டுட்டு இருக்க ”அழுத்தம் குறைந்ததால் சலிப்பு வெளிப்படது அவனிடம்…
வாங்கிய அடியை மீறி ‘களுக்’ என்ற சிரிப்பின் எதிரோலி அவளிடம், அதை பார்த்து பிர்லா முறைக்க
ஆனால் இவளோ “ஏன் நான் எகிறி குதிச்சதில உனக்கு சேதாரம் ஜாஸ்தியோ…” வெகு நக்கலாய் கேட்க
“ஜாஸ்தியா… ? நான் அஸ்தியா ஆயிருப்பேண்டி !!!!” அவள் சிரிப்பிற்கு எதிராய் பல்லை கடித்தபடி சீறியவன்
“ஏமாத்தி கல்யாணம் பண்ணினதும் இல்லாமல் இத்தனை வாயாடி உனக்கு இம்சை…” நிஜமாகவே சிடுசிடுத்தான்.
“சும்மா ஏமாத்துனேன் ஏமாத்துனேன்னு சொல்லாத . என்ன ஏமாத்துனேன்! முதலில் ஏமாத்துறதுக்கு அர்த்தம் தெரியுமா உனக்கு…!
உன்னை லவ் பண்ணிட்டு வேற ஒருத்தனை கட்டிகிட்டா தான் ஏமாத்தினதா அர்த்தம்
நான் உன்னை தான் லவ் பண்ணினேன் உன்னை தான் கல்யாணமும் பண்ணிகிட்டேன், இதில் நான் எங்க உன்னை ஏமாத்தினேன்
முன்னையாவது லவ் பண்ணின பொண்ணு விட்டுட்டு போய்ட்டா தான் ‘ஏமாத்திட்டா…ஏமாத்திட்டா’,னு பாட்டு பாடினாங்க சினி பீல்டில்
இப்போ லவ் பண்ணினவன் பின்னாலேயே வந்தாலும் ‘ஏமாத்திட்டா, ஏமாத்திட்டானு நீ பாடுறியா ?
அப்போ லவ் பண்ணின பொண்ணுங்களுக்கு எப்போ தான் நல்லவனு அவார்ட் கொடுப்பீங்க…
நீ பேசுறதில் லாஜிக்கே இல்ல பிர்லா” என முகம் வேறு புறம் திரும்ப
ஒவ்வொன்றாய் கேட்டு கொண்டிருந்த பிர்லாவிற்கு தலையே சுற்றி போனது இவள் பேச்சில்
“என்னது ! லாஜிக்கா…! என் விசயத்தில் நீ பண்றது எல்லாமே மேஜிக்கா இருக்கு, இதில் லாஜிக் வேற எக்ஸ் பெக்ட் பண்றியா நீ ?”
“என்னது மேஜிக்கா…! கொஞ்சம் விம் பார் பீளீஸ் !”
“கண் கட்டு வித்தைனு சொன்னேன் நீ தான் நல்லா செய்றியே ! என் கண்ணை கட்டாமலேயே வித்தை காட்டிறீயே இது போதாது ”
“ஓ இது தான் உன் கவலையா விட்டு தள்ளு இன்னைக்கு நைட் நான் உனக்கு கண்ணை கட்டாமலேயே வித்தை காட்றேன் ” என கண் சிமிட்ட
‘என்ன இன்னைக்கு நைட்…?’ என உள்ளுக்குள் எழுந்த கேள்விக்கு உடல் ஒரு நொடி ஆட்டம் கண்டது அவனுள் ‘பாவி எப்படிலாம் பேசறா கொஞ்சம் கூட கூச்சமே இல்லையா இவளிடம் இந்த அச்சம் மடம் நாணம் இதில் ஒன்னு கூடவா இவளுக்கு இல்ல
“அதெல்லால் ரெண்ட்க்கு விட்ருக்கேன் பிர்லா, அநேகமா இன்னைக்கு நைட்டே வந்திடும் ” என
“ஹான் என்ன ?” என இவன் பார்க்க
“அதான் பா அச்சம் மடம் நாணம் இதெல்லாம் தான் !”
‘இவ நிஜமாவே கண்கட்டு வித்தை தெரிஞ்சவ தான் மனதினுள் ஓட’
“அப்போ நாளைக்கு இதைல்லாம் இருக்காதோ !” குறுகுறுவென இவன் பார்க்க
“அது பர்ஸ்ட் நைட் முடியற வரைக்கும் மட்டும் தான்,அது வரைக்கும் நடிக்கிறதே பெரிசு, அதுக்கப்பறம் செகன்ட் நைட் தேர்ட் நைட்டுக்கெல்லாம் என்னை கண்டுபிடிச்சடுவ, அப்பறம் எதுக்கு இதெல்லாம்”
‘பதிலே பேச முடியவில்லை அவனுக்கு…
“எனக்கும் இதுக்கும் செட்டே ஆகாது,
அச்சம் எல்லாம் அலறிக்கிட்டு ஒடிடும்
மடம் எல்லாம் மன்னிப்பு கேட்கும்
நாணம் எல்லாம் நட்டுகிட்டு போய்டும் என்கிட்ட இதெல்லாம் நிற்கவே நிக்காது நான் இப்படி தான் ” என சத்தமாய் கூறியவள்
அவன் காதருகில் நெருங்கி “அதுவும் தவிர, எனக்கு பர்ஸ்ட் நைட் பத்தி நிறைய எக்ஸ்பெக்டேஷன் இருக்கு”ஹஸ்கி வாய்ஸில் சொல்ல…
பேயை பார்த்தது போல் பாரத்தான் பிர்லா அசையவே இல்லை அவனது கருவிழிகளிடம்
“இதில் பெரிய பிரச்சனை, எனக்கு அதை பத்தி ஒன்னுமே தெரியாது” இன்னும் ஹஸ்கியான குரலில் இவள் பேசிக்கொண்டே இருக்க
‘யாரு இவளுக்கா ?’ என்ற கேள்வி எழுந்தாலும் , ம்ஹூம் வாயை திறக்கவேயில்லையே இவன்…
“ஏய், உனக்கெல்லாம் தெரியும்ல…” ஹஸ்கி குரல் சீரியஸாய் மாற
‘எந்த பக்கம் தலையாட்டுவது என தெரியாமல்‘ விழிபிதுங்கி நின்றான் பிர்லா
அவன் முகத்தை பார்த்தவள் “ம்க்கும் முத்தத்துக்கே தகிடுதோம் இதில்….!” வார்த்தைக்கு பதில் பெருமூச்சு தான் அவளிடம் இருந்தும் வாயை மூடினாலா அவள் “அப்படி எதுவும் தெரியலைனா, வீடியோ கீடியோ எதாவது பார்த்துட்டு வா…” என இவளே கேள்வி கேட்டு பதிலும் சொல்ல
நிஜமாகவே மூச்சடைத்தது பிர்லாவிற்கு அதை எளிதாய் சமாளித்தபடி
“ஏன் நீ பார்த்துட்டு வரது ?” குரல் ஒரு மாதிரியாய் வந்தது.
“ம், அதையும் ட்ரை பண்ணினேன், கண்ணெல்லாம் கூசிப்போச்சு, ABCD கூட பார்க்கலப்பா இதில் Z வரைக்கும்னா என் கண்ணு ப்யூசா போனாலும் போய்டும் ” என சலிப்புடன் கூறியவள் “ம் ” என கவலையில் முடிக்க
“அம்மாடி…” என வாயின் மேல் கை வைத்துவிட்டான் பிர்லா
‘அய்யய்யோ… இவன் கொடுக்குற ரியாக்ஷன பார்த்தால் ஓவரா பேசிட்டோமோ…!’ ஞானோதயம் லேசாய் உதித்தது அவளுள்… ‘ப்ருந்தா சமாளி சமாளி ’ என கூக்குரல் ஒலிக்க
“வாய் பொளந்தது போதும், என்னை உன் வீட்டுக்கு எப்போ கூட்டிட்டு போக போற ” பேச்சை அப்படியே திசை திருப்பினாள் ப்ருந்தா…
சரியாய் பிர்லாவும் அலார்ட் ஆனான்
“உனக்கு இத்தனை நடந்ததுக்கு அப்பறமும் இப்படி வேற ஆசை இருக்கா ! அதுவும் எங்க வீட்டுக்கு கூட்டிப்போவேன்னு ?”
“ஏன் இருக்க கூடாதோ !” திமிராய் கேட்க
“ஒருவேளை நான் உன்னை எங்க வீட்டிற்கு கூட்டிட்டு போகலைனா?” இவனும் திமிராய் கேட்டான்.
“ப்ருந்தா, இவன் உன்னை கூட்டிட்டு போக மாட்டானாம் ! அடுத்த பிளானுக்கு ஸ்கெட்ச் போடு ” தனக்கு தானே பேசிக்கொண்டாள் ப்ருந்தா
“பிளானா ? என்ன பிளான் ?”இவன் அதிர்ச்சியாய் கேட்க
“இரண்டு மாசம் ஆச்சுனு சொல்வேன் ” பிளானை சொல்ல
“என்ன …? என்ன இரண்டு மாசம்…?”
“உன் பிள்ளை என் வயித்துக்கு வந்து இரண்டு மாசம் ஆச்சுன்னு சொல்வேன்” என அலட்சியாமாய் சொல்ல
அவ்வளவு தான் “அம்மாடி…” நெஞ்சை பிடித்துக்கொண்டு சேரிலயே பொத் என விழுந்தான்
இவளால போன தடவை பிட்ஸ், இப்போ நெஞ்சு வெடிச்சே . செத்துருவேன் போலயே! மனசாட்சி கவுண்டர் கொடுக்க
“நான் உன் கூட இருக்குற வரை எமன் கூட உன்னை நெருங்க மாட்டான்…” நெஞ்சை பிடித்தபடி இருந்த கைகளை விலக்கிவிட்டபடி இவள் பதில் சொல்ல
“அதானே எமன விட பவர்புல்லான ஆளு நீ இருக்கும் போது அவர் எதுக்கு என்னை நெருங்க போறான் ”
“ப்ச் நான் சீரியஸா பேசட்டு இருக்கேன் நீ காமெடி பண்ணிட்டு இருக்க பிர்லா ”
“நாம இரண்டுபேரும் மீட் பண்ணியே அவ்வளவு நாள் தாண்டி இருக்கும் அப்பறம் எப்படிடீ பிரக்னன்ட்டுனு சொல்வ!”
“பார்த்த அன்னைக்கே முடிச்சிட்டேனு சொல்வேன் ” அடுத்த வெடியை கொழுத்த…
அந்த வெடி இதயத்துக்குள் வெடித்த உணர்வு அவனுக்கு
“பார்த்த அன்னைக்கு ஒருத்தனுக்கு பேலிமி பிளானிங்கே பண்ணின, அவன்கிட்ட இருந்து காப்பத்த வந்ததுக்கு என் பேமிலேக்கே பிளான் பண்ணிட்டியேடி !”
“நடத்துடீ நடத்து… இனி உங்கிட்ட பேசி பயணில்லை !”என அங்கிருந்து நகர
அதற்கும் ஏதோ பேசப்போனவளை கை நீட்டி தடுத்தவன் “இன்னைக்கே எங்க வீட்டுக்கு உன்னை கூட்டிப்போக வேண்டியது என் பொறுப்பு ” “இதுக்கும் மீறி உன்கிட்ட பேச எனக்கு தெம்பில்லை என்னை விட்டுடு ” என கடுப்புடன் கூறிவிட்டு வந்தவன், வெளியே ஜன்னலருகே நன்று கொண்டான் ப்ருந்தாவின் பேச்சில்…
“ப்ருந்தா, அந்நியனை அம்பியா ஆக்கிட்ட இனி ரெமோ வா மாத்த வேண்டியது உன் கடமை…”
“ஐய்யோ இது ரொம்ப பெரிய கடமையாச்சே ”
“குருவி தலையில் பணங்காயை வைக்கலாம், இப்படி ஒரு ‘பார்’ஐயே வைக்கிறியே ஆண்டவா !” தனக்கு தானே பேசிக்கொள்ள
“குருவி தலையில் பார் ஆ… “ ஐய்யோ இவளை பெத்தானா இல்லை செஞ்சனா அவங்க அப்பன். எப்போ பாரு ‘பார்’ நியாபகம் தானா !
இவளது அட்டகாசங்களை சன்னல் வழியே பார்த்திருந்தவனுக்கு சிரிப்பே பிரீட்டு கிளம்பியது
இன்னமும் தொடர்ந்தது அவள் பேச்சு
“ஐய்யய்யோ இன்னைக்கு பர்ஸ்ட் நைட் வேற ”
“எப்படி ப்ருந்தா சமாளிக்க போற ?” என்ற பேச்சில்
தழையதழைய கட்டிய பட்டுபுடவை, தலைநிறைத்த மல்லி, கையை நிறைந்த பால் சொம்பு அத்தனையும் தாண்டி அவளது வெட்கம் சுமந்தமுகம் என மனக்கண்ணில் காட்சி ஓடியது இருவருக்குள்ளும்
அவளையே பார்த்து கொண்டிருந்த பிர்லாவின் பார்வையின் வேகம் கூர்மையானது
அதையறியாத ப்ருந்தாவின் உதடுகளோ மனக்கண்ணில் தான் கண்ட உருவத்தில் அவளது இதழ்கள் தாமாகவே மெல்லிய பாடலை பாடியது,
அவளின் இதழ்கள் ஏதோ முனுமுனுக்கிறது என அறிந்து கொண்டவன், கண்களுக்கு கொடுத்த கூர்மையை காதுக்கு மாற்ற, தெளிவாய் விழுந்த்து அந்த வரிகள்
மன்னவன் பேரை சொல்லி மல்லிகை சூடி கொண்டேன்
மன்மதன் பாடல் ஒன்றை நெஞ்சுக்குள் பாடி கொண்டேன்
சொல்ல தான் எண்ணியும் இல்லயே பாஸைகள்
என்னவோ ஆசைகள் எண்ணத்தின் ஒசைகள்
மாலை சூடி ம்ம்ம்
மஞ்சம் தேடி ம்ம்ம்
மாலை சூடி ம்ம்ம்
மஞ்சம் தேடி ம்ம்ம்
காதல் தேவன் சன்னிதி காண காண காண காண… என ஆழ்ந்து பாடிக்கொண்டிருந்தவள்
“காணவா ?” என முகத்தை மூடிக்கொண்டு
ஐய்யோ வெட்க வெட்கமா வருதே, என கட்டிலில் குப்புற விழுந்து கால்களை மேலும் கீழும் அசைத்து சிறு குழந்தையாய் குதுகலிக்க
“காண தான போற ” முழுதும் காதலில் குழைந்த குரல் சன்னமாய் வெளிப்பட்டது அவனிடம்
கூடவே அவளது குறும்பு கூத்தாடும் பேச்சு, மெல்லிய பாடல் வரிகள் ,அது கொடுத்த மயக்கம், எல்லாம் சேர கீழ் உதடு பற்களுக்குள் சிக்கி கொள்ள, மென்மையாய் தலையை திருப்பிக்கொண்டான்