“இல்லை இவன் நிஜமாகவே பிர்லா தான்” என மீண்டுமாய் அவள் மனசாட்சிக்கு ஒரு கொட்டு வைத்து, கண்களை கசக்கிவிட்டபடி தெளிவாய் பார்த்தாள். ஆனால் இந்த முறை அவள் கண்கள் பொய் சொல்லவில்லை. அவன் பிர்லா தான் அடித்து சொல்ல, அது ஏறிக்கொண்டிருக்கும் எஸ்கலேட்டர் என்பதையும் மறந்து பட படவென கீழறங்கினாள். எஸ்கலேட்டரோ அவளை மேலே இழுத்து போவதிலேயே குறியாய் இருக்க, ப்ருந்தா தரை தளத்தை அடையும் வழியை தான் காணவில்லை.
இவள் இறங்க, எக்ஸலேட்டர் ஏற என இருக்க, அங்கிருந்த பலர் சிரித்தே விட்டனர். பிர்லாவிற்க்குமே சிரிப்பை அடக்குவது பெரும்பாடு தான். அவளை பார்த்ததுமே கண்டுகொண்டான் குடித்திருக்கிறாள் என
ஆனால் அதையும் தாண்டி ஒரு சிலரின் சிரிப்பு சத்தத்தில் பிர்லாவிற்கு கோபம் ஏற, இவன் வேக வேகமாய் எக்ஸ்கலேட்டரில் ஏறினான். அவளின் அருகில் சென்று அவளை இறங்கவிடாமல் கையை பற்றி “ப்ருந்தா“ என அவள் காதருகில் உறும
“ஹேய் பிர்லா… உன்ன தே டி தான் வ ந்தேன் ” என கண்கள் சொருக ,உயிரும் உருக சொன்னாள் ப்ருந்தா.
பென்சில் பிட், ஸ்லீவ்லைஸ் டீசர்ட், அதன் மேல் பட்டன் போடாமல் திறந்திருந்த செக்டு சர்ட் என அவள் உடை கூட போதையில் கிடந்தது.
“வாயை மூடு” அடிகுரலில் உறுமியவன், மற்றவர்களின் பார்வையை சட்டை செய்யாமல் மறுபுறமாய் இருந்த எஸ்கலேட்டரில் அவளை இழுத்துக்கொண்டு கீழே வந்தான்.
பார்க்கிங்கில் இருந்த தன்னுடைய காரினுள் தள்ளி அவனும் உள்ளே ஏறினான். அடுத்ததாய் அவன்செய்த முதல் காரியம், அவளை நெருங்கி படபடவென அவள் சட்டை பட்டன்கள் அனைத்தையும் மாட்டிவிட்டான்
“பேட் பாய்…” என மோகனமான சிரிப்பொன்றை உதிர்க்க
“என் விரல் கூட உன் மேல படலை !” சீறிக்கொண்டு வந்தது பதில் பிர்லாவிடமிருந்து
“அதான் பேட் பாய்… சொன்னேன் !“
“புரியற மாதிரி பேச மாட்டியா” என
“ குட் டச் பண்ணாத பேட் பாய் ” கலகலவென சிரிக்க…
“குட் டச், பேட் பாய்” என அவள் வாரத்தைகளின் அர்த்தம் புரிய அவளை அடிக்கவா உதைக்கவா என்பது போல் பிர்லா முறைத்து
“எப்போவும் லிமிட்டா தான அடிப்ப, இப்போ ஏன் இத்தனை அடிச்சிருக்க ?”
“உன்னை பார்க்க முடியலைனு தான் ஓவரா அடிச்சேன் !” என
“நீ ஓவரா போற ப்ருந்தா கொஞ்சமாவது அடங்கு அன்னைக்கு என்னடான்னா ‘உன்னை பார்க்காமல் குடிக்க முடிலைன்ற இன்னைக்கு உன்னை பார்க்க முடியாமல் தான் குடிச்சேன்கிற” என கடுப்பில் இவன் கத்த
“ம் அடங்குறேன், உனக்கு ஒய்ப் ஆன அப்பறம்” என ஹஸ்கி குரலில் சொல்ல
“ஓய்ப்பா ?” உப்ப்ப் என பலமாய் மூச்சுகாற்றை வெளியே தள்ளி, “உன் மேல எனக்கு எந்தவொரு பீல் ம் வரவேயில்லை, வரவும் வராது ”
“ஏன்?”
“ஏன்னா! யாரோ ஒருத்தியை எல்லாம் எனக்கு மனைவியா ஏத்துக்க முடியாது”
பதிலுக்கு இவள் முறைக்க, இவன் அதை கருத்திலே கொள்ளாமல்
“தவிர எனக்கு தேவையானது ஒரு பொண்ணு தான் குடிகாரி இல்லை ” என ஒரு முடிவுடன் இவன் பேச, அவளை தவிர்ப்பது போலவே இருந்தது அவனது பதில்கள் அனைத்தும்.
“சரி நான் குடிக்கிறது தானே பிரச்சனை ,நான் இனிமேல் குடிக்க மாட்டேன் உன் மேல ப்ராமிஸ் ” என போதையிலும் இவள் அவனுக்கு உறுதியை அளிக்க, இவன் நம்பாமல் பார்த்தான்.
“ப்ளீஸ் லவ் மீ பிர்லா ”
“மேரி மீ பிர்லா “
“ஏன் என்னை பிடிக்கலை ”
“நான் பேசுறது பிடிக்கலையா”
“என் பிகேவியர்ஸ் உனக்கு புடிக்கலையா?”
“இந்த ட்ரெஸ் உனக்கு பிடிக்கலையா ?”
“இந்த மாதிரி ப்ரீ கேர் உனக்கு பிடிக்கலையா ?” அவள் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் இல்லையில்லை உளறிய அத்தனை உளறலுக்கும் பிர்லாவிடமிருந்து பதில் இல்லாது போகவே…
“இதுக்கு மேல ஒரு பொண்ணால காதலை பிச்சையா கேட்க முடியாது கேட்கவும் மாட்டாளுங்கடா என்னை கல்யாணம் பண்ணி தொலையேன் இல்லை நான் தொலைஞ்சி போய்டுவேன் !” இவள் கேட்டு கொண்டே இருக்க,
அவனோ முகத்தை திருப்பியவன் தான் இவள் புறம் திரும்பவே இல்லை.
“என்னை கெட்ட பொண்ணா ஆக்குறதே நீ தான்” என கெஞ்சலில் இருந்து கோபத்திற்கு இடம் பெயர்ந்தது இவள் வார்த்தைகள்
“இல்லாட்டாலும் ரொம்ப நல்லவ தான் நீ ” நக்கலாய் வந்து விழுந்தது வார்த்தைகள்.
அவனின் புறக்கணிப்பில் மனம் வலிக்க, காரைவிட்டு கீழறங்கி கதவை சாத்தினாள்
கண்ணாடி வழியாக உள்ளே தலையை நீட்டி “நீ விட்டாலும், உன்னை நான் விடவே மாட்டேன், பிடிக்கலைன்னாலும் உன் வாழ்க்கை என்னோட தான்” போதையோடு சொல்லி சென்றாள் ப்ருந்தா.
……….
அன்றிரவு நித்ராதேவிக்கு பதில் ப்ருந்தா தேவி அவனை கவ்வி பிடித்திருக்க தனக்கு பதில் ‘காதல்’ என்ற நிஜமான கனவு ஒன்று அவனை ஆக்கிரமித்ததில் நித்ரா தேவி கூட அவர்களின் காதலை காணப்போகும் ஆவலில் ஆர்வமுடன் சற்று தள்ளி நின்று வேடிக்கை பார்த்தாள்
‘இரண்டு மூனு தடவை தான் பார்த்திருக்கிறோம் பார்த்தவுடனே எப்படி என்னை செலக்ட் பண்ணின ?
நான் உனக்கு கம்பர்டபிளா இருக்கலாம் ஆனால் தீராத என்னோட நோய் உனக்கு கம்பர்டபிளா இருக்காதே
வேணாம் ப்ருந்தா நீ என்னோட வாழ்க்கைக்குள்ள வர வேண்டாம் என் மேல் இருக்குற தீராத காதல் என் நோயை கண்டா தீர்ந்து போய்டும்
உன்னோட ஆசை தீர வாழ்ந்துட்டு ,இந்த நோயை காரணம் காட்டி உன்னை பிரிஞ்சா நகரமாயிடும் என் வாழ்க்கை.
அதுக்கு நீ என்னை நெருங்காமல் இருக்குறது தான் நல்லது என்னை விட உனக்கு தான் நல்லது ’
இப்படி அத்தனையையும் தூக்கி தன் தலையில் போட்டுக்கொண்டவனால் குடிபழக்கம் கொண்ட ப்ருந்தாவின் மீது பழி போட மனம் வரவில்லை.
அவளது முதல் சந்திப்பில் இருந்து இதோ இன்று காலையில் காரினுள் நடந்த சந்திப்பு வரை ப்ருந்தாவே முழுதும் ஆக்கிரமித்து இருந்தாள், அவளை தனக்குரியவளாய் மாற்ற முடியாத ஏக்கத்தில் மனம் முழுதும் பாரம் ஏறிக்கொண்டது.
இருவரின் காதல் பாசைகளுக்கு காத்திருந்த நித்திராதேவிக்கோ அவனை பார்த்து பரிதாபமே எழ ‘நீ காதல் செய்த லட்சனம் போதும்’ என ப்ருந்தாவை புறம் தள்ளி, அவனை அரவணைத்துக்கொள்ள சுகமாய் அல்லாது சுமையாய் கண் மூடினான் பிர்லா
அடுத்த இரு வாரங்கள் ப்ருந்தா அவன் கண்ணில் படவேயில்லை அன்று தான் அவன் பார்வையில் பட்டாள்
அதுவும் அவனது வீட்டில் !
அவனது அறையில் !
அவனது பஞ்சனையில் !
விடியற்காலையில் இவன் கண்விழிக்கும் நேரத்திற்காக காத்திருந்தாள் என்பதை சுவாதீனமாய் அவள், அவன் அருகில் அமர்ந்திருந்த தோரனையே காட்டி கொடுத்தது.
விழித்தவனின் கண்களுக்கு பெரும் அதிர்வே ஏற்பட, இவள் எப்படி இங்கே வந்தா? என யோசனைகள் ஓட
“ஏய் நீ எங்கே இங்கே வந்த !” அதுவும் தன் அருகில் அவளை பார்த்ததும் அலறியடித்துக்கொண்டு எழுந்தான் பிர்லா
“யாரோ ஒருத்தியை எல்லாம் ஏத்துக்க முடியாதுன்னு சொன்ன தானே !” கேட்டபடி அவனை நெருங்கினாள் ப்ருந்தா
“இப்போவும் நீ எனக்கு யாரோ தான் ” தூக்க கலக்கம் பறந்தோட, புருவங்கள் நெறித்தபடி தெறித்து விழுந்தன வார்த்தைகள்
“இப்படி என்னை சீண்டி சீண்டி தான் என்னை இங்கே வரை கொண்டு வந்து நிறுத்தியிருக்க பிர்லா ”
‘இவ என்ன சொல்றா !’ அவனது குழப்பம் தீரும் முன்பே
“என்னை யாரோனு கேட்ட தானே… இப்போ கேட்டு தான் பாரேன்” என அவனை நேர்பார்வை பார்த்தபடி இன்னமும் அவன் நெருங்க
“ஏய் காலையிலேயே தண்ணியடிச்சிருக்கியா !” பிர்லா சற்று பின் நகர்ந்து அமர முயற்சிக்க
“இல்லை அது இனிமேல் தான் ” அதையும் அசால்ட்டாய் சொல்லியபடி அவன் காலை பிடித்து சர்ரென இழுக்க இதை எதிர்பாராமல் மீண்டும் கட்டிலில் மல்லாக்க விழுந்தான். அதை கூட கூட பொறுத்து கொண்டவன் ,அவளின் அடுத்த செயலில் அதிர்ந்து போய்
“ஏய் என்னடி பண்ற…!” என அலறியேவிட்டான். ஆம் அவன் மேல் ஏறி அமர்ந்துவிட்டாள். தன் மேல் ஏறி அமர்ந்த ப்ருந்தா திறந்திருந்த கதவு என மாறி மாறி அவன் பார்வை போக
அதையும் மீறி வந்தது கிறக்கமான அவன் வார்த்தைகள் “ஏய் தள்ளியாவது உக்கார்ந்து தொலைடி ” என அவஸ்தையாய் நெளிந்தான் பிர்லா.
அவள் சற்றும் அதை கண்டு கொள்ளாமல் தான் கொண்டு வந்த கைப்பையை அவன் மார்பின் மீது வைத்து குடைந்து கொண்டிருந்தாள்
குடைந்தது கிடைக்காத கடுப்பில் அவன் மார்பின் மீதே கொட்டி கவிழ்க்க அத்தனையும் அவன் மீது தான் கிடந்தது.
மார்பில் விழுந்த லிப்ஸ்டிக், ஐலைனர்,கர்ச்சீப், மொபைல் என அத்தனையும் தன் மீது கவிழ்ந்ததில் “ஏய் எரும, என்னை பார்த்தால் டேபிள் மாதிரியா இருக்கு, அத்தனையும் என் மேல கொட்டி கவிக்குற” என பேசியவனுக்குள் அதையும் தாண்டி ‘ஏன் இவள் இப்படி பண்றா?’ என்ற எரிச்சலும் கூடவே எழ்தான் செய்தது. ஆனால் இவன் பேசுவதையும் சட்டை செய்யாமல் அதில் தனக்கு தேவையானதை எடுத்து கொண்டு மீதியை அப்படியே கையால் வழித்து கீழே தள்ள அவனுக்கு அருகிலேயே மொத்தமும் சரிந்து விழுந்தது.
“ப்ருந்தா என்ன பண்ணிட்டு இருக்க நீ” பெருமூச்சுடன் அவளை பார்க்க, விட்ட பெருமூச்சு மீண்டும் அவனது சுவாசகுழாய்க்கு தான் சென்றது அப்படி ஒரு அதிர்ச்சி அவனுக்குள் ஏனெனில் ப்ருந்தாவின் கைகளில் இருந்தது தாலி.
“ப்ருந்தா என்னதிது தாலியை கொண்டு வந்திருக்க?” பெரும் அதிர்ச்சியில் இவன் கேட்க
“எப்படியும் நீ வாங்கப்போறதில்லை, அதான் நானே வாங்கிட்டு வந்துட்டேன் ” ஒரு முடிவுடன் இவள் சொல்ல
“இது எப்போ வாங்கினாள்?” மனதினுள் பேசுவதாய் நினைத்து சத்தமாய் பேசிவட
“நேத்து தான் ஜி ஆர்ட்டியில் வாங்குனேன்” என இவளும் பதில் சொல்ல
அதற்குள் சுதாரித்தவன் “நீ என்ன பிளாக்மைல் பண்ணுனாலும், நான் உன் கழுத்தில் தாலி கட்ட மாட்டேன், முதல்ல என் மேல இருந்து எழுந்திரு ” என இவன் எரிச்சலாய் கூறினான்.
“இதை… நான்… என் கழுத்தில் கட்டுவதற்காக வாங்கி வரலியே !” நிறுத்தி நிதானமாய் இவள் பேச
“பின்னே ?” இது எதற்கு என பார்க்க
“நான் உன் கழுத்தில் கட்டுறதுக்கு !” என இவள் சொல்லி அவன் விழிகள் விரியும் முன் அவன் கழுத்தில் போட்டுருந்தாள் அந்த தாலியை ஆம் ஏற்கனவே கட்டி தான் எடுத்து வந்திருந்தாள்.
தாலியை அவன் கழுத்தில் போட்ட தோடு, அவள் கை அவன் தலையை நிமிர்த்தியது, பின் நிதானமாய் அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.
இவளது அடுத்தடுத்த செயல்களில் இவனது புலன்கள் அனைத்தும் உணர்வுகளை இழந்தது.
“ஹேப்பி மேரிட் லைப் மை பெட்டர் ஹாப்” என முகம் முழுதும் பூக்கள் பூக்க கூறிய நிமிடத்தில் இவன் மீண்டு வந்தது.
“மரியாதையா, நீ என் கழுத்தில் தாலி கட்டி இருந்திருக்கலாம், இப்போ பாரு, நான் புருஷன் ஆயிட்டேன். நீ எனக்கு பொண்டாட்டி ஆயிட்ட” என பேசிக்கொண்டிருந்தவளை அப்படியே பிரட்டி தள்ள, கட்டிலின் விளிம்பில் இருந்தவள் கட்டிலின் கீழே கிடந்தாள்
மார்மேல் கிடந்த குழந்தையை உருட்டி தரையில் தள்ளியது போல் திருதிருவென விழித்தவளை பார்த்து சிறிதும் பாவம் பார்க்காமல்
“ஏய்ய்ய்… என்ன நினைச்சிட்டு இருக்க நீ” கத்தியகத்தலில் ப்ருந்தா அரண்டு தான் போனாள்.
கட்டிலைவிட்டு கீழ் இறங்கியவன் கழுத்தில் கிடந்த அந்த மஞ்சள் கயிறை கழட்டி தூர வீசி
“அந்த கர்மத்தை எடுத்துட்டு மரியாதையா இங்க இருந்து போய்டு ” என இவன் உறும
“இந்த தாலிக்கு நீ மரியாதை கொடுத்தாலும் சரி கொடுக்காட்டாலும் சரி உனக்கும் எனக்கும் ஒரு பந்தத்தை இந்த தாலி ஏற்படுத்தி கொடுத்துடுச்சு
அந்த மஞ்சள் கயிறை ஈசியா கழட்டி எறிஞ்சிட்ட ஆனால் என்னை அவ்வளவு சீக்கரம் தூக்கி எறிய முடியாது இந்த ஜென்மத்தில் நீ சாகற வரை உன் வாழ்க்கை என்னோட தான் சாவே நம்பளை பிரிச்சாலும்,முதலில் நான் செத்த அப்பறம் தான் உன்னை எமன் கூட நெருங்க முடியும் ” பனியனை பட்டென விடுவித்து அவனை திரும்பியும் பாராமல் சென்றுவிட்டாள்.
கடலின் சீற்றம் அலையின் அதிர்வை பொறுத்தது ஆனால் அந்த கடலின் சீற்றத்தை மொத்தமாய் அடக்கி சென்றது இந்த அதிர்வில்லா அலை…