Advertisement

எல்லையற்ற பேரழகே 4 :

 

அலுவகத்தில் வேலை செய்து கொண்டிருந்த கண்மதியை பார்த்த அர்ஜுனிற்கு அவளின் மேல் மதிப்பு கூடியது…  காரணம் அன்று அந்த ஹோட்டலில் அவள் பேசியவார்த்தை.

 அன்று அவனும் அந்த ஹோட்டலில் தன் நண்பனுடன் வந்திருந்தான் அது தெரியாத கண்மதி கதிர் பேச பேச தன் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பேச,  அவளின் பேச்சைக் கேட்டவனுக்கு அவளின் மேல் மதிப்பும் மரியாதையும் கூடியது.

 

மற்றவரின் பேச்சுக்காக தன்னை தாழ்த்திக் கொள்ளாமல், தன்னுடைய சுயமரியாதையை வீட்டுக் கொடுக்காமல் தைரியமாய் பேசிய கண்மதியை கண்டு அவனுக்கு அவளின் மேல் ஏதோ ஒரு உணர்வு தோன்ற அதை என்னவென்று ஆராய தோன்றாமல், அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்…

 

சட்டென்று ஏதோ தோன்ற கணினியில் இருந்து தன் பார்வையை உயர்த்திய கண்மதி அவனின் பார்வையில் உள்ளம் படபடக்க பார்க்க, அவனோ அவள் தன்னை பார்த்ததும் அவளின் செயலை பார்த்து உதட்டில் மெல்லிய புன்னகை தவழ, சிரிப்புடன் தன் வேலையை தொடர்ந்தான்….

 

இவளோ, அவனின் பார்வையை உணர்ந்து கொள்ள முடியாமல் படபடப்புடன்…. துடிக்கும் இதயத்துடன் கணினியில் தன் முட்டைக் கண்ணை வைத்து முழித்துக் கொண்டிருந்தாள்….

அவளுக்கு அவனின் பார்வையை புரிந்துக் கொள்ள முடியாவிடினும், அவனின் இந்த ஒரு பார்வையே அவளுக்கு உயிர் வரை தாக்க, அதனை எதிர்கொள்ள முடியாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்..

 

———–

மச்சி, காலேஜ் பொண்ணுங்களா உன்ன தான் அவங்க ஹீரோவா பாக்குறாங்க, ஆனா நீ என்னடா அவங்கள கண்டுக்கறதே இல்ல இதுவே உன் இடத்துல நான் இருந்தா?…. ” என்றவாறு

சொல்ல வந்த தன் நண்பன் அருணை பார்த்தவன்

கிழிச்சிருப்ப…என்றவாறு சொல்ல

அவன் சொன்ன விதத்தில் அனைவரும் சிரித்தனர்.

 

டேய், நெஜமாத்தான் கேக்குறேன், இத்தனை வருஷமா உன் கூட இருக்கேன் ஆனா நீ இன்னும் ஒரு பொண்ண கூட ஏறெடுத்து பார்க்க மாற்றியே அது ஏண்டா….” என்றவாறு தன் சந்தேகத்தை கேட்க,

 

நீ சொல்ற பொண்ணுங்களாம் என்னோட அழகுக்காகவும், என் பணத்துக்காகவும், ஏன் சில பேரு என்மேல ஈர்ப்புனால கூட பேச ட்ரை பண்ணி இருக்காங்க…. ஆனா எனக்கு அவங்கள பார்த்தா எதுமே தோனலடா

 

ஒரு பொண்ண பாத்ததும் இவ நமக்காக பொறந்துருக்காண்ணு தோணனும்… அவளுக்காக எதையும் தாங்கிக்கலாம்னு மனசு சொல்லும்… அவ கூடவே இருக்கணும்னு உள்ளம் குதியாட்டம் போடணும்… அந்த மாதிரி ஒரு பெண்ணுக்காக தான் இத்தனை நாள் நான் காத்துட்டே இருக்கேன் ஹ்ம்ம் வருவா….. எங்க போய்ட போறா….என்றவன் மனம் அவனின் கண்ணம்மாவை தேட,

ஆனா தோ இப்டி என் பின்னாடி வந்து என்ன கரெக்ட் பண்ண ட்ரை பன்றாங்களே எனக்கு இவங்கள பார்த்தா எப்படி டா அந்த மாதிரி தோணும்  ” என்று கேட்க

 

ஓஹ், அப்போ உன்ன ஒரு பொண்ணு லவ் பண்றனு சொல்லி வந்தா, நீ என்ன பண்ணுவ?” என்று ஒரு நண்பன் விளையாட்டாய் கேட்க

அவன் அவனை முறைத்தானே ஒழிய எதுவும் பேசாமல் அந்த இடத்தை விட்டு செல்ல பார்க்க,

தூணின் மறைவிலிருந்து எப்போதும் போல அவனை பின் தொடர்ந்தவள் அவனின் இந்த பேச்சில் மனம் கலங்கி செல்ல பார்க்க

 

அவளை பிடித்து இழுத்த ஒருவன் அர்ஜுனின் முன் நிற்க வைத்து

இதோ இந்த மாதிரி ஒருத்தி வந்து உன்ன லவ் பண்றன்னு சொன்னா என்னடா பண்ணுவ।என்று கேட்க

 

அவன் இழுத்ததில் அதிர்ந்து நின்றவள் அவன் கேள்வியில் இதயம் துடிக்க அவனின் பதிலுக்காக காத்திருக்க ….

அவனோ அவளின் தோற்றத்தை கூட காண பிடிக்காதவனாய் ஒரு முகச்சுழிப்புடன் அங்கிருந்து சென்றான்.

 

அவன் ஏதாவது சொன்னால் கூட மனம் தேறி இருப்பாள், ஆனால் அவனின் இந்த ஒரு பார்வை காதல் கொண்ட மனதை பலமாய் தாக்க அதன் வலியை தாங்க முடியாதவள் கலங்கிய கண்களுடன் அங்கிருந்து நகர்ந்தாள்…

 

—————————-

 

நினைவிலிருந்து மீண்டவள் அவனின் அன்றைய பார்வைக்கும் இன்றைய பார்வைக்கும் ஒப்பிட்டு பார்க்க, என்ன தடுத்தும் அவள் மனம் சிறகடிப்பதை தடுக்க முடியவில்லை।

இவ்வாறு சென்று கொண்டிருக்க

 

மறுநாள் ஒரு முக்கியமான கோப்பை அர்ஜுனனிடம் காட்ட வந்தவள் அவனிடம் அதனை நீட்ட, அதனை வாங்கி பார்த்தவன் அதில் கையெழுத்திட்டு அவளிடம் நீட்டி,

 

நானும் உன்ன காலேஜ்ல இருந்து பார்த்துட்டு தான் வரேன் ரொம்ப அமைதியா இருப்பேன்னு நெனச்சேன், ஆனா நேத்து நீ பேசுன பேச்சுல தான் தெரிஞ்சிது…. நீ எவ்ளோ தைரியமான பொண்ணுன்னு கீப் இட் அப்என்று தன் கம்பீர குரலில் முடித்தவன் தன் கையை நீட்ட, அவனுக்கு கையை நீட்ட கூட மறந்து சிலையாகி போனாள்.

 

அவளுக்கு அவன் பேசியதே பெரிய விஷயமாய் இருக்க, அவனோ அவளின் தைரியத்தை பாராட்ட அவளுக்கு மயக்கம் வராத குறை தான்,

 

சிறிது நேரம் கழித்தும் அவளிடம் இருந்து அசைவை உணராத அர்ஜுன் அவள் கண் முன் சொடக்கிட்டு அழைக்க, திடீரென்று கனவில் இருந்து எழுந்தவள் போல் மலங்க மலங்க விழிக்க

அவனோஎன்ன நின்னுட்டே கனவு கான்ர போலஎன்று சகஜமாய் பேச அவனின் முன் தான் நின்ற நிலை ஞாபகம் வர தன் சிவந்த முகத்தை மறைக்கும் பொருட்டு

சாரி  சார்என்றவள் அவனிடம் கையை நீட்ட இருவரும் ஒருமுறை குலுக்கி அதனை விடுவிக்கும் தருணம்

 

அர்ஜுனிற்கு தன் கண்ணம்மாவின் நினைவு திடீரென வந்தது  ஏன் என்ன என்று யோசிக்கும் முன்னே அவனை விட்டு சிறு சிரிப்புடன் அவள் செல்ல அவள் சென்ற திசையையே சில கணங்கள் வெறித்தவன் திரும்பி செல்ல பார்க்க அந்த நேரம்

 

டேய், இன்னும் என்னடா பண்ணிட்டு இருக்க, வந்து சீக்கிரமா இந்த வேலைய பாருடாஎன்று தன் நண்பன் தன்னை போனில் அவசரமாய் அழைக்க, அந்த வேலையின் முக்கியத்துவம் உணர்ந்தவன் சிரிப்புடன்

டேய் எதுக்கு டா இப்டி கத்துற இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க இருப்பேன்என்றவன் வேலையை அவசர அவசரமாக முடித்து விட்டு கிளம்பினான் தன் திருமணத்தின் அழைப்பிதழை தேர்ந்தெடுக்க

 

அவசர அவசரமாக காரை செலுத்தியவன் ஒரு வளைவு பாதையில் வேகமாய் திருப்ப,  திடீரென ஒரு பெண் அந்த வழியை வருவாள் என எதிர்பார்க்காதவன் வண்டியை ஒடித்து திருப்ப…… அது நேரே மரத்தின் மீது மோதி நின்றது என்ன முயன்றும் அந்த விபத்தை அவனால் தடுக்க முடியவில்லை.

கார் திசைமாற்றியில் (steering ) இடித்து மயங்கி விழ அந்த வண்டியில் வந்து விழுந்தவள் அவனின் நிலையை அறிய தலை தூக்க, அது முடியாமல் மயங்கி விழுந்தாள்….கண்ணாஎன்ற அழைப்புடன்….

 

கண்ணன் வருவான்…

 

Advertisement