Advertisement

எல்லையற்ற பேரழகே!!!

பாரதி கண்ணம்மா…

அத்தியாயம் 2 :

 

அனைவரின் வாழ்த்தையும் பெற்ற நந்தினி சிறு கர்வத்துடன் அந்த இடத்தை விட்டு அர்ஜுனனின் தோள் மேல் சாய்ந்தவாறு செல்ல, அங்கே இருக்கையில் இருந்து எழுந்தவாறு முகத்தில் கவலையுடன் இருந்த கண்மதியை சிறு நக்கலுடன் பார்த்தவள்,

 

ஹே, டார்லிங்!!, இது நம்ம காலேஜ்ல படிச்ச ஜூனியர் பொண்ணுதானே….ஆமா இங்க என்ன பண்ணிட்டு இருக்கா?….

என்றவாறு அவள் அருகினில் செல்ல…

அவள் வலது பக்க கன்னத்தை பார்த்தவள் அருவருப்புடன் இரண்டடி தள்ளி நின்று

 

ஓஹ் காட்….நா பயந்தே போய்ட்டேன் அர்ஜுன்…..இந்த மாதிரி இருக்குறவளை எதுக்கு வேளைக்கு வெச்சி இருக்கீங்க….இன்னிக்கு நான் பயந்தா மாதிரி நாளைக்கு நம்ம கிளைண்ட்ஸும் இவளை பாத்து பயந்தா, அப்புறம் நம்ம தொழில் என்னத்துக்கு ஆகுறது…..என்றவாறு பேசியவள் மேலும்

 

அர்ஜுனின் கண்களில் கனல் கூடுவதை கண்டு….அதனை சமாளிக்கும் பொருட்டு

 

எனக்கு உங்க நல்ல மனசு புரியுது அர்ஜுன்… பாவம் இந்த மாதிரி இருந்தா யாருதா இவளை வேலைக்கு சேத்துக்குவா….. நீயா இருக்கவோ பாவம் பாத்து அதுவும் ஒரே காலேஜ்ன்றதால இவளுக்கு வேலையும் போட்டு குடுத்துருக்க, சூப்பருங்க நீங்க…என்று கொஞ்சல் குரலில் கூற

 

அதைக் கேட்ட கண்மதிக்கு கோபம் வந்ததோ இல்லையோ அர்ஜுனிற்கு நொடி நேரத்தில் வந்துவிட்டது……

 

அதே கோபத்துடன்

 

இங்க பாரு நந்தினி…..இது என்னோட ஸ்டாப்…..அவங்கள பத்தி என் முன்னாடியே இப்படி பேசுறது உனக்கு நல்லது இல்ல….முக்கியமா அவங்க தோற்றத்தை பத்தி….ஏன்னா, இந்த வேல கெடச்சது அவங்க தோற்றதுனாலயோ இல்ல அவங்க மேல இருக்குற அனுதாபத்துனாலயோ இல்ல அவங்களோட திறமையினால…..இதுக்கே மேல , இதை பத்தி பேசுறது உனக்கு…. இல்லல்ல நம்ம உறவுக்கு நல்லது இல்ல…..என்றவன் வேகமாக அந்த இடத்தை விட்டு செல்ல…..

 

இவளை ஒரு அற்ப பார்வை பார்த்தவள் அவன் பின்னே ஓடினாள்….

 

கண்மதிக்கோ…….. அங்கு நடந்த ஏதுமே பார்வையில் படவில்லை…. அவளுக்கு அவள் கண்ணன் கூறிய வார்த்தையே மனதில் ஓடிக்கொண்டிருந்தது…..

 

ஊரே அவள் தோற்றத்தை பார்த்து கேலி செய்தாலும் அவன் இதுவரை அவளை அந்தமாதிரி ஒரு அனுதாப பார்வையோ இல்லை இரக்க பார்வையோ பார்த்ததில்லை….

இன்று அவன் நந்தினி கூறிய வார்த்தையை கேட்டதும் அவள் மேல் கோவப்பட்டு பேசியதுமே காதில் ஓடிக்கொண்டிருந்தது….

மனதினுள்

 

இந்த ஜென்மத்துல எனக்கு இது ஒன்னு போதும் கண்ணா!!! சந்தோஷமா என் வாழ்க்கையை வாழுவேன் உன் நினைவோடு….என்றவள் எப்போதும் போல் உதட்டில் நிறைந்த மென் சிரிப்புடன் சென்றாள்…..

 

———————————

 

வாடா அர்ஜுன்!!! பிரெஷ் ஆயிட்டு வா டா….அம்மா சாப்பாடு எடுத்து வெக்குறேன்….என்று சொன்ன தன அன்னையை பார்த்தவன் ஒரு சிறு தலை அசைப்புடன் மாடி ஏறி தன் அறைக்கு சென்றவன் சிறுது நேரத்தில் கீழே வந்தான்….

எப்போதும் துரு துறுவென இருப்பவன், இந்நேரம் கீழே வந்ததும் தன் அன்னையை  வம்பிழுப்பவன் இன்று எதுவும் சொல்லாமல் அமைதியாய் உண்டது அனைவர்க்கும் ஆச்சர்யமே…..

 

ஆனால் இப்போது எந்த மூடில் இருந்தாலும் எது கேட்டாலும் அவன் வாயிலிருந்து பதில் வராது என்பதை உணர்ந்து அனைவரும் அமைதி காக்க…

 

இருந்தும் மனம் கேளாமல் அர்ஜுனனின் அம்மா…..

என்னடா என்ன ஆச்சு?….என்று அவன் தலையை ஆதுரமாய் தடவி கேட்க…

அவரிடத்தில்

ஒன்னும்  இல்லம்மா, ஆஃபீஸ் டென்ஷன்…என்றவன் அதன் பின் ஏதும் பேசாமல் தன் அறைக்கு சென்று விட்டான்…..

 

அறைக்கு போய் முடங்கியவன் மனதினில் இன்று அலுவகத்தில் நந்தினி கண்மதியிடம் பேசியதே ஓடியது…

மனமோ அவள் படும் வேதனையை கண்டு தானும் வேதனைக்கொள்ள….

 

திடீர் என்று படபடப்புடன் எழுந்து அமர்ந்தான்….

 

ஏனெனில் கண்மதியை நினைக்கும் போது அவள் கண்களில் இருந்து வந்த கண்ணீர் அவன் மனதை பிசைய அதை துடைத்து தன் தோல் வளைவில் சாய்த்து அவளுக்கு ஆறுதல் அளிக்க அவன் மனம் ஏங்குவதை கண்டு விதிர்விதிர்த்து எழுந்தவன்

ஏதோ தோன்ற

 

தன் அலமாரியில் இருந்த ஒரு டைரியை எடுத்து அதன் முதல் பக்கத்தை படித்தான்…..

 

அதில்…..

 

“என் கண்ணா!!

 

உன்னை காண துடிக்கும் நாளுக்காக காத்திருக்கிறேன்।

என்னவனே எனக்காக வருவாயா!!!

 

என்றும் உனக்காக ,

உன் கண்ணம்மா!!!”

 

என்ற வார்த்தையை படித்தவன் தன் மனதோடு அதை இறுக்கி அணைத்தவாறு இருந்தவன் அப்படியே உறங்கினான்….

 

கண்ணன் வருவான்!!!

Advertisement