வலித்தது தான், ஒருவார நிமிடங்கள் அணைத்தும் வந்து போனது அவள் மனதில், நேரில் கண்டு பயந்தவதை, படுக்கையில் கண்ட சித்திரவதைகள், அழுகைகள், வலி நிறைந்த சிரிப்புகள்…
ஆனால் நினைவின் முடிவில் மகிழனே நின்றான்… நினைக்க வைத்தான் என்பதே சரியான சொல்லாகும்…
அவள் கை தளரும் வேலையில் முரடணாகவும், தன்னை ஆறுதலாக பற்றும் வேலையில் மிருதுவாகவும் கையாண்டவனை தியாவாள் ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாமல் போக, அவனிடம் சரணடைந்தாள் வேக மூச்செடுத்து…
வேர்வையில் சோர்ந்த முகத்துடன் தரையில் கலைந்து கிடந்தவளின் கூந்தலை ஒதுக்கியவன்,
“ஓகே யா டி…?” என்று கேட்கவும், திரும்பி அவன் நெஞ்சில் தலைசாய்த்து கொண்டவளை புன்னகையுடன் அணைத்து கொண்டவன் அசதியில் உறங்கி போனான் மனைவியை அணைத்தபடி…
‘இத்தனை காதலுக்கு நான் தகுதி ஆனவளா…? இவன் முரடனா அல்ல மென்மையானவனா…?’ என்ற ஆராய்ச்சியில் படுத்திருந்தவனையே பார்வையால் அளந்தவள் அவன் அசைவை கண்டு அவசரமாக எழுந்து குளியலறைக்குள் புகுந்து கொண்டாள் தியா…
அன்றைய பொழுதின் ஆரம்பம் அவளுக்கு கணவனை பற்றிய ஆராய்ச்சியில் தொடர்ந்தது… இது அன்று மட்டும் அல்லாது தினந்தோரும் நடக்கும் தொடர் கதையானது பெண்ணவளுக்கு…
சில மாதங்களுக்கு பிறகு,
“அத்தை இந்தாங்க… போதுமா இல்ல இன்னும் வேண்ணுமா…” என்று தாம்பாள தட்டை நீட்ட,
அதை வாங்கி கொண்ட லஷ்மி, “இதுவே போதும் மா… நீ போய் ஸ்வேதாவை கூட்டிட்டு வா… நேமராச்சு பாரு…” என்று துரிதபடுத்த,
“சரி அத்தை…” என்று சென்றவள், சில நிமிடங்களில் கையில் அம்முவுடன் முன்னே வர,
ஸ்வேதா சிரித்தபடி அவள் பின்னே வந்தவள் திரும்பி கணவனை பார்க்க அவனோ முன்னே செல்லும் தியாவை முடிந்த மட்டும் முறைத்துவிட்டு மகிழனிடம் சென்றான் கோபமாக…
“என்னாச்சு டா…?” என்ற தம்பிக்கு,
“நீ எல்லாம் எதுக்கு கல்யாணம் பண்ணிக்கிட்ட…?” தமிழ்செல்வனுக்கு கோபம் வருவது அரிது… நிதானம் இளக்காதவன்…
ஆனால் தியா இந்த வீட்டிற்கு வந்த பின் நிதானம் பலநேரம் காணமல் போக தொடங்கியது…
“ம்பச்ச்… இப்ப தியா என்ன பண்ணா…?” சலிப்புடன் மனைவியை பற்றி கேட்க,
“எப்ப பாரு என் ரூட்ல கிராஸ் பண்ணுறதே வேலையா வச்சுகிட்டு இருக்கா… இது கொஞ்சம் கூட நல்லா இல்ல சொல்லிட்டேன்…” என்று பல்லை கடிக்க,
“என்ன அண்ணா நல்லா இல்ல…?” என்று அப்பாவியாக கேட்ட தியாவின் குரலில் திரும்பி பார்த்த தமிழ்செல்வன்,
“நீ என்ன தான் மா செய்யாம இருக்க…? நான் என் பொண்டாட்டிக்கிட்ட பேசணும்னா கூட உன்கிட்ட தான் பர்மிஷன் வாங்கணும் போல…” என்று முறைக்கவும்,
சௌந்தர்யா, “தியா…” என்றழைக்கவும் சரியாக இருக்க,
“உங்க பஞ்சாயத்தை அப்புறம் வச்சுக்கலாம் அண்ணா… இப்ப வாங்க அத்தை கூப்பிட்டாங்க நேரமாச்சு…” என்று முன்னே சென்றுவிடவும்,
திரும்பி தம்பியை பார்த்து முறைத்து வைத்தான் பல்லை கடித்தபடி, அவனோ சமாளிப்பாக ” சரி… சரி… போ… பார்த்துக்கலாம்…” என்று தோளை தட்டி அழைத்து செல்ல,
“எல்லாம் என் நேரம்…” என்ற புலம்பலோடு நடக்கவும், மகிழனின் முகத்தில் கேலி புன்னகை மட்டுமே…
அன்று தம்ழிசெல்வன் ஸ்வேதாவின் மகள் அம்முவிற்கு மொட்டை அடித்து காது குத்தும் விழா கோவிலில் நடக்க, ஸ்வேதாவின் குடும்பமும் சௌந்தர்யாவின் சொந்தமும் அங்கு கூடியிருந்ததனர் ஒன்றாக…
ஸ்வேதாவின் சொந்ததில் வந்த அண்ணன் முறையில் ஒருவரை அமர்த்தி அம்முவிற்கு மொட்டை அடித்து காது குத்தி இருக்க, அருகில் இருந்த மண்டபத்தில் விருந்து நடைபெற்றது அனைவருக்கும்…
சடங்குகள் விருந்து அனைத்தும் முடிந்து சொந்தங்கள் அனைவரும் ஆங்காங்கே அமர்ந்து பேசிக்கொண்டிருக்க,
தமிழ்செல்வன் மெல்லிய குரலில், “டேய்…ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே…?” என்று தியாவை பார்த்தபடி கேட்க,
மகிழனுக்கு அவனது கேள்வி தியாவை பற்றிதான் என புரிந்தது, “ம்ம்ம்… அது உன் கேள்வியை பொறுத்து…” என்றவன் அண்ணனின் பார்வையில்
“சரி கேளு…” என்றிட,
“தியா வோட உண்மையான பேரு திவ்யதர்ஷினி… ஆனா ஏன் இன்னும் தியான்னே கூப்பிடுற…” என்று கேட்கவும் ஒரு பெருமூச்சை விட்டவன்,
“தியாவுக்கு அது பிடிக்கலைன்னு சொன்னா… அது அவங்க அப்பா வச்ச பேரு… அது எனக்கு வேண்டாம்… தியாங்குற பேருல நானே செதுக்குன வாழ்க்கை இது… அதுனால இப்படியே கூப்பிட்டா போதும்னு சொல்லிட்டா… சரின்னு நானும் விட்டுட்டேன்…” என்றபடி பார்வையால் மனைவியை தொடர்ந்தான் மகிழன்…
“ம்ம்ம்… ஆமா அவளோட அப்பா கிட்ட எப்படி போய் சேர்ந்தா…? இவ மிஸ்டர்.சாஸ்திரி கிட்ட தானே இருந்தா…?” என்று சந்தேகம் கேட்கவும்,
முறைத்து பார்த்தவன், “ஏன் டா … இதை எல்லாம் கேட்குற நேரமா இது…?” என்று கேட்டதும்,
“இல்ல டா… ரொம்ப நாளாவே கேட்கனும்னு நினைச்சுட்டு இருந்தது தான்… இப்ப ஏதோ ஒரு ப்ளோல கேட்டுட்டேன்….” என்றதும்,
“ம்ம்ம்… இவ ஏதோ வேலை விஷயமா ஏர்போர்ட் போனப்ப, மன்சூரை பார்த்தாளாம்… ஏதோ டென்ஷனா பரபரப்பா இருந்து இருக்கான்… பக்கத்துல போய் கவனிச்சதுல போலீஸ்க்கு பயந்து எஸ்கேப் ஆக பார்த்துட்டு இருந்து இருக்கான்… இவ அதுக்கு ஹெல்ப் பண்ணி இருக்கா… அந்த நன்றி உணர்வுல தான் இவளுக்கு ஹாயா கம்பெனி வச்சு குடுத்து இருக்கான் அந்த மன்சூர்… அதுல ஸ்மக்லிங் ஐடியா குடுத்து இன்னும் கிளோஸாகி இருக்கா…” என்றவனை பார்த்து விளி விரித்தவன்,
“ம்ம்ம்…” என்று ஆமோதித்த தமிழ்செல்வன் நினைவு வந்தவனாக,
“ஆமா அந்த ஆசிப்…?” என்று முடிக்கும் முன்,
“செத்துட்டான்…” என்றதில் அதிர்ந்து,
“வாட்…?” என்று குரல் உயர்த்தி கேட்டிட, அது சற்று விலகி இருந்த தியாவிற்கும் கேட்டதில் திரும்பி பார்த்தவள் என்னவென்று புருவம் உயர்த்தி கேட்க,
‘ஒன்னுமில்லை…’ ஒன்று தோளை உழுக்கினான் மகிழன்…
அவன் பதிலில் சந்தேகம் இருக்கதான் செய்தது தியாவிற்கு காரணம் தமிழ்செல்வனின் முகத்தில் இருந்த அதிர்ச்சி…
ஆனால் எதுவும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் திரும்பி கொண்டாள் ஸ்வேதாவின் புறம்…
“ஏன்டா கத்துற…?” என்று அண்ணனை கடிந்து கொண்டவன்,
“அவன் ஹாஸ்பிடல்ல வச்சு ஸுசைடு பண்ணிக்கிட்டான்… கில்டி ஃபீல்…” என்றவனுக்கு அவன் கடைசியாக மகிழனிடம் பேசியது நினைவில் வந்தது…
“கண் முழிச்சதுல இருந்து உங்களை தான் பார்க்கணும்னு சொல்லுறாங்க சார்…” என்ற மருத்தவருக்கு, சரியென்று தலையை ஆட்டியவன், அவர் காட்டிய அறைக்குள் நுழைந்தான் வேகமாக…
உள்ளே நுழைந்த வேகத்திலேயே அவன் கோபத்தின் அளவு தெரிய, படுக்கையில் எங்கோ வெரித்தபடி படுத்திருந்த ஆசிப் கண்களை மட்டும் திருப்பி பார்த்தான் அமைதியாக…
“நான் உங்க கிட்ட தனியா பேசணும்…” அத்தனை பொறுமை அவன் குரலில்,
ஆனால் அதே பொறுமை எதிரில் இருப்பவனிடம் இருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்…
ஆசிப் வார்த்தையில் மருத்தவர் வெளியே சென்றுவிட, கைகளை கட்டியபடி ஆசிப்பை கூர்ந்து பார்த்தவனுக்கு உள்ளுக்குள் கோபம் வெடித்தது….
அவர் சென்றதும், “உங்க கண்ணை பார்த்தாலே தெரியுது என்னை கொன்னு போடுற அளவுக்கு கோபம் உள்ளுக்குள் இருக்குன்னு…” என்று சொல்லி விரக்தியாக ஒரு புன்னகை சிந்தியவன்,
“ஏன் எனக்கே கூட என்னை நினைச்சா வெறி வரது… ஏன்னா பண்ணி இருக்குற காரியம் அப்படி… திவ்யா இப்படி பண்ணது தப்பே இல்லை… ஒரு அண்ணன்…” வார்த்தை வர மறத்தது, இருந்தும் தொண்டையை செருமி
“தங்கச்சி கிட்ட இப்படி நடந்து இருந்திருக்க கூடாது… என்ன பண்ண அறிவை இழந்துட்டேன்… அவ கோவத்துல தப்பே இல்ல… சின்ன வயசுல அம்மா இருந்தப்ப அவளை பெருசா நான் கண்டுக்கல தான்… அந்த வயசுல எனக்கு மத்தது தான் பெருசா தெரிஞ்சுதும் கூட… ஆனா அம்மா போன பின்னாடி எல்லாம் மாறிபோச்சு… வீட்டுக்கு வந்தா அம்மா இல்லாத குறையா நான் திவ்யாவைதான் பார்த்தேன்…”என்றவனின் கண்களில் கண்ணீர் வந்தது…
பார்வை எங்கோ நிலை குத்தி இருக்க, மேலே பேச்சை தொடர்ந்தான், “ஆமா திவ்யாவை அம்மாவா தான் பார்த்தேன் அப்ப… ஸ்கூல்ல இருந்து வந்தா வீட்டுல அம்மா மாதிரி திவ்யா இருந்தா… என் பசிக்கு சாப்பாடு போட்டா… என்னை அவ பார்த்துக்கிட்டா… அதுனால அவ ஸ்கூலுக்கு போகாதது எனக்கு பெருசா தெரியல…”
“அப்புறம் பாம்பே போன பின்னாடி… ஒருநாள் எல்லாரும் வெளியே போன சமயம் அவளை காணம்னு அப்பா வந்து சொன்னப்ப, அப்படியொரு கோபம் வந்தது… ரெண்டு நாள் எங்க என்னனு தெரியாமலேயே நாய் மாதிரி தெரிஞ்சேன் எல்லா இடத்துலையும் தேடினேன்… ஆனா கிடைக்கல…” என்று வலியோடு அழுகையையும் எச்சில் கூட்டி மூழுங்கியவன், பார்வையை மகிழன் மீது பதித்து,
“இதை நீங்க நம்புவீங்களான்னு தெரியாது… ஆனா இதுதான் உண்மை… எனக்கு திரும்பவும் நான் என் அம்மாவை தொலைச்சுட்டேன்னு புரிஞ்சுது… ஆனா வேற வழியில்லாம அப்பா கிட்ட இருந்தேன் திவ்யாவோட நினைப்புல…” என்று மீண்டும் பார்வையை திருப்பி கொண்டவன்,
“அப்ப தான் அப்பா யாரோ கடன் குடுத்தாங்கன்னு பணத்தோடு வந்தாங்க… அதை வச்சு ஒரு டீ கடை போட்டாங்க… அப்ப ரௌடி பிரச்சினை பண்ணவும் கோபத்துல அவனை அடிக்கவும், கொஞ்சம் பெரிய ஆளுமாதிரி பாவனை ஆச்சு… எல்லாரோட பார்வையும் மாறுச்சு… அப்புறம் அதுவே தொடர் கதையா மாற, கொஞ்ச வருஷத்துல ஒரு டான் ரேன்ஜுக்கு மாறிட்டாரு… “
“எனக்கும் கால போக்குல எல்லாம் பழையமாதிரி மாறுச்சு… நிறைய காசு… கேட்க ஆள் இல்லாத சுதந்திரம்… டானோட பையன்னு பயம் மரியாதை எல்லாம்… எல்லாம் என்னை மொத்தமா மாத்தி மூளை இல்லாதவனா ஆக்கி சொந்த தங்கச்சியை அடையாளம் பார்க்க முடியாத அளவுக்கு மாத்திருச்சு…” என்றவன் விளிகிளில் கண்ணீர் வழிந்தோடியது சட்டென…
“ஒருவேலை நான் ஒழுங்கா இருந்திருந்தா, என்கிட்ட உண்மையை சொல்லி வந்திருப்பாளோ என்னவோ ஆனா எல்லாம் மாறி போச்சு…” என்றவன் இப்பொழுது மகிழனை பார்த்து,
“இதை எல்லாம் நீங்க நம்புவீங்களா மாட்டிங்களான்னு தெரியாது… நம்பணும்னு அவசியமும் இல்ல… ஆனா குத்துது இங்க…” என்று நெஞ்சை தொட்டு காட்டியவன்,
“ரொம்ப குத்துது…என்னை நினைச்சா எனக்கே அசிங்கமா இருக்கு… எவ்வளவு கேவலமான வேலையை செஞ்சு இருக்கேன்… சே…” என்று கண்ணீர் வடித்தவன்,
நிமிர்ந்து, “நான் இப்ப பேசுன எதையும் திவ்யாவுக்கு சொல்ல வேண்டாம்… அவளை பொருத்தவரை நான் எப்பவும் பார்க்குற அதே கெட்டவன் ஆசிப் தான்… மன்னிப்பை கேட்க கூட தகுதி இல்லாத கேவலமான பிறவி நான்… வேண்டாம் அவளுக்கு எதுவும் தெரிய வேண்டாம்…” என்றதோடு,
“அப்புறம் எதுக்கு கூப்பிட்டு இதை எல்லாம் சொல்லுறேன்னு பார்க்குறீங்களா…?” தன்னையே கூர்ந்து பார்க்கும் மகிழனை பார்த்து கேட்க,
கைகளை கட்டி வெரப்பாக நின்றவனிடம் எந்த பதிலும் இல்லை ஆனால் பார்வையின் கூர்மை மட்டும் குறையவில்லை…
“மனசு கேட்கல… ஒரு`மாதிரி பாரமா இருந்துச்சு… நீங்க அன்னைக்கு திவ்யாவை பார்த்த விதம், பேசிய விதம் எனக்கு போலீஸை தாண்டிய வேறவொரு உறவை காட்டுச்சு… புரிஞ்சுது… நீங்க திவ்யாவை பத்திரமா பார்த்துப்பீங்கன்னு தெரியும்… சொல்ல தகுதி இல்லை தான் இருந்தாலும் மனசு கேட்கலை… அந்த ஐடி கம்பெனி திவ்யா பெயருக்கே மாத்திரேன்… அது முழுக்க முழுக்க அவளோட உழைப்பு… அது அவகிட்டையே இருக்கட்டும்… மத்த கம்பெனி சொத்து எல்லாம் டிரஸ்ட்க்கு எழுதிரேன்… அது பாவத்துல சம்பாதிச்சது புனியத்துக்கு போகட்டும்… அந்த ஸ்மக்லிங் விஷயம் நானே பொருப்பெடுத்துக்குறேன்…” என்றதோடு தயங்கியவன்,
“திவ்யாவை பார்த்துக்கோங்க…” என்றதோடு நிறுத்தியவனை பார்த்து மூச்சை இழுத்துவிட்ட மகிழன்,
‘அவ்வளவு தானே…’ என்பது போல் ஓர் பார்வை பார்த்துவிட்டு சட்டென வெளியேறி விட, மீண்டும் எங்கோ இலக்கில்லாமல் பார்வையை பதித்தான் அமைதியாக… ஆனால் உள்ளதின் கொதிப்பு அடங்கவில்லை… அன்றே மகிழனிடம் சொல்லியது போல் அனைத்தையும் மாற்றி எழுதினான்…
மகிழனுக்கு ஆசிப் பேசியது உண்மை என்பதை அவன் கண்களிலேயே அறிந்துக்கொண்டான்… இருந்தும் தியாவின் வலி வேதனைக்கு முன்பு ஆசிப்பின் குற்றவுணர்வும் கஷ்டமும் பெரிதாக தெரியவில்லை…
அவனது வார்த்தையை அதன் பின் யோசிக்கவில்லை என்றாலும் மறுநாள் ஆசிப் தற்கொலை செய்து கொண்டான் என்ற செய்தி அவன் மனதின் ரணத்தை காட்டியது… “தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை, போதை மருந்தை கடத்தும் வேலை முழுவதும் தன் யோசனை என்றும்… வெளி வந்தால் தொழில் எதிரிகளே தன்னை ஏதேனும் செய்துவிட கூடும் அதனால் இந்த முடிவு….” என்று எழுதி வைத்திருக்க, அவன் தன்னிடம் பேசியது மரண வாக்குமூலம் என்றும் புரிந்து கொண்டான்…
அனைத்தையும் நினைத்தபடி தியாவை பார்க்க அவளோ ஸ்வேதா மற்றும் அவளது உறவினர்களுடன் ஏதோ சிரித்து பேசியபடி இருந்தாள்…
தமிழ்செல்வன், ஏதோ நினைவு வந்தவனாக, “ஆமா இது எப்ப நடந்துச்சு…?” என்று கேட்க,
“ம்ம்ம்… எங்க கல்யாணம் முடிஞ்சு ஒரு மாசத்துல…”
“தியாக்கு இது தெரியுமா…?” என்ற கேள்வியில் அவளை திரும்பி பார்த்தவன்,
‘இல்லை…’ என்பது போல் தலையை ஆட்டியவன்,
“நான் எதுவும் அவகிட்ட சொல்லல… ஆனா அவளுக்கு இது கண்டிப்பா தெரிஞ்சு இருக்கும்…” என்ற வார்த்தை உண்மையே…
தியா அவனை ஏதேனும் செய்தாக வேண்டும் என்று காத்திருக்கையில் அவனே தன்னை மாயித்துக்கொண்டான் என்ற செய்தி தர, அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை அவள்..
மகிழனுடனா வாழ்க்கையை அவள் பெரிதும் நேசித்தாள் என்பதை விட நேசிக்க வைத்தான் என்பதே உண்மை…
“என்ன ஸ்வேதா…? உன் புருஷன் உர்ருனனு சுத்திட்டு இருந்தாரு… என்ன விஷயம்…?” என்று ஒருத்தர் கேட்க,
தியா, “அதுவா சித்தி… அண்ணாக்கு எப்ப பாரு ஓபன்ல ரொமன்ஸ் பண்ணுறதே வேலையா இருக்கு… அது என்னவோ எல்லா நேரமும் அது என் கண்ணுல படுது… சரி ஸ்வேதா பாவமே பச்சை உடம்புகாரின்னு நான் காப்பாதி விட்டுறேன்…. அதான் சார் கோபமா சுத்துராரு… நல்லது பண்ண கூட இப்ப எல்லாம் தப்பாதான் இருக்கு என்ன பண்ணுறது…?” என்று உச்சுகொட்டி பாவமாக கேட்க,
“அடகடவுளே…” என்று வாயில் கை வைத்தவரை பார்த்து வாய்விட்டு சிரித்தவளை கன்னம் வளித்து திருஷ்டி களித்த சௌந்தர்யா,
“இப்படி சிரிக்கும் போது எவ்வளவு அழகா இருக்க டா…” என்று சொல்லவும், திரும்பி கணவனை பார்த்தவளின் விளிகளில் அத்தனை காதல்…
சில நிமிடங்களில் அவ்விடத்தை விட்டு எழுந்தவள் தனியே செல்ல, அவளையே பார்வையால் தொடர்ந்தவனும் அவள் பின்னே சென்றவன்,
“என்ன டி பார்வை எல்லாம் பலமா இருக்கு… என்ன விஷயம்…?” என்று வேட்டியை மடித்து கட்டியபடி கேட்க,
நடப்பதை நிறுத்தி திரும்பி பார்த்தவள், “இந்த பார்வை, இந்த சிரிப்பு, இந்த சொந்தம், இந்த சந்தோஷம் எல்லாத்துக்கும் நீதேன் காரணம்… நீ இல்லைன்னா நான் என்னவாகி இருப்பேன்னு தெரியலை… அதுக்கு ரொம்ப தேங்க்ஸ்…” என்று அவன் அருகில் நெருங்கியபடி நின்று கையை கோர்த்து கொள்ள,
“என்னடி எல்லாம் ஒரு தினுசா இருக்கு… நீயா பக்கம் வர, இப்ப கையை பிடிக்குற… என்ன பாயை விரிச்சுறலாமா இன்னைக்கு நைட்…?” என்று மீசையை முறுக்கியபடி கேட்டு கண்ணடிக்க,
“ம்ஹூம்…” என்று தலையை ஆட்டியவளை புருவம் சுருக்கி கேள்வியாக பார்த்து வைத்தான் புரியாது,
படுக்கை தியாவிற்கு பழையதை நினைவுபடுத்தும் என்பதாலே தரையில் பாயை விரித்து படுத்துவர அதுவும் தியாவை அவன் பால் இழுத்தது காதலாக…
“பாய் வேண்டாம்… இனி பெட்டே போதும்…” என்று அவள் தோள் இடிக்க, அப்பட்டமான அதிர்ச்சி கணவனிடம்…
அதை பார்த்தவள், “என்னை முழுசா மாத்திட்ட நீ… என் பார்வை, பேச்சு, சிரிப்பு, என் கெட்டது, என்னோட விதின்னு எல்லாத்தையும் மாத்திட…” என்றவள்,
“உன்கூட சந்தோஷமா வாழணும் மகிழன்… நிறைய வருஷம் உன் கூட வாழணும்…” என்று கண்கள் கழங்கியவளை சிறு புன்னகையுடன் தோளோடு சேர்த்தணைத்தவன்,
“கண்டிப்பா… உன் முகத்துல இருக்குற இந்த சிரிப்பு எப்பவுமே வாடாம நான் பார்த்துப்பேன்…” என்று அவள் நெற்றி முட்ட, இருவர் உள்ளமும் அத்தனை நிறைந்திருந்தது காதலால்…
அச்சமயம் தொலைவில் குழந்தைகள் ஃபோனை நோண்டிக்கொண்டிருக்க, அதில்
யாரும் காணாத…
இன்பம் எல்லாமே…
கையில் வந்தே விழுமா…
நீயின்றி இனி என்னால்…
இருந்திட முடிந்திடுமா…
என்ற பாடல் வரிகள் ஒளிக்க, இருவரும் புன்னகைத்து கொண்டனர் காதலால்…
இனி வரும் காலம் அவர்களுக்கு வசந்தங்களால் நிறைந்திருக்க வாழ்த்தி விடைபெறுவோமாக…