என்ன பேசுவது என்று புரியாது மேஜையில் கை ஊன்றி தலையில் மற்றொரு கைவைத்தபடி அம்ர்ந்திருந்தவளை எதிர் இருக்கையில் அமர்ந்து காஃபியை பருகியபடி ரசித்து கொண்டிருந்தவன் கண்களில் அத்தனை ரசனை…
சில நிமிடங்கள் கழிய, மெல்ல நிமிர்ந்தவள், “நான் உங்களை பேச கூப்பிட்டது…” என்று ஆரம்பிக்கும் முன்,
“நான் பேச வந்தது நான் கட்டிக்க போற பொண்ண தான்… பொண்ணை பத்தி தான்…” என்று முடித்துக் கொள்ள, தியா கண்களை இறுக முடி திறந்தவள், தன் பொறுமையை இழுத்து பிடித்து,
“லுக் மிஸ்டர்… எனக்கு இந்த ரிலேஷன்சிப்ல எந்த இன்டிரஸ்டும் கிடையாது… தேவையில்லாம என்னை டிஸ்டர்ப் பண்ணாம, பேச வந்ததை பேசலாம்…” என்று சொன்னவளை ஆழ்ந்து பார்த்தவன்,
“தியா…” வார்த்தையில் மென்மையா…? பெண்ணவளுக்கு உள்ளுக்குள் சற்று அதிர்ச்சியாக இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் கல்லாக அமர்ந்திருந்தாள் கண்களில் கோவத்தை காட்டி,
“நீ எப்படின்னு முழுசா தெரியாது தான்… ஆனா இனி தெரிஞ்சுப்பேன்… தெரிஞ்சுக்காம விட மாட்டேன்… நீதான் என் வௌய்ப்ன்னு நான் முடிவு பண்ணியாச்சு இனி அதை யாராலும் மாத்த முடியாது… நீ வேண்ணும்னா உன் இன்டிரெஸ்டை மாத்திக்கோயேன்…?” என்று அவளுக்கு ஏதோ வாயிப்பளிப்பது போல் பேச,
“ஹே… நீ என்ன லூசா…? விருப்பம் இல்லைன்னு சொல்லுறேன் புரிஞ்சுக்காம பேசுற… என்னை பத்தி என்ன தெரியும் உனக்கு…? பேசாம போயிரு என் விஷயம் டிரஸ்ட் விசயம்னு எதுலையும் தலையிடாம போயிரு அதுதான் உனக்கு நல்லது…” என்று கோபத்தில் விரல்நீட்டி எச்சரிக்க,
உதட்டை மடக்கி டேபிளை லேசாக தட்டியவன், கண்களை சுருக்கி “நான் இப்பதான் சொன்னேன் தியா… இனி உன்னை பத்தி தெரிஞ்சுப்பேன்னு… அந்த டிரஸ்ட் விஷயம் அதுக்கு என்னால எந்த பிரச்சனையும் வராது… ஆனா தெரிஞ்சுப்பேன்… எல்லாத்தையும் தெரிஞ்சுப்பேன்…நான் பிஃஸ் பண்ணிட்டேன்… நீதான்னு… நீ மாத்திக்கோ… மாத்த வைப்பேன்… வரட்டா… காஃபிக்கு பில் பே பண்ணிரு…” என்றதோடு எழுந்து சென்றவனை,
“ஹே… நில்லு மேன்… இன்னும் நான் பேசி முடிக்கலை… நில்லு…” என்று கத்தியவளை சுற்றி இருந்தவர்கள் திரும்பி பார்த்தார்களே தவிர பார்க்க வேண்டியவன் பார்க்காது வெளியேறி விட்டான் கடையை விட்டு…
இது புதிது… முற்றிலும் புதிது… உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி பழகியவள் இன்று பொது இடத்தில் தன் அதிர்ச்சியை கோவத்தை காட்டி இருப்பது புதிது… உணர்ச்சிகளை கட்டுபடுத்தி பழகியவளுக்கு மகிழனிடம் தன்வசம் இழப்பது புதிது…
இதோடு மூன்று காஃபியை அருத்தியவள், முகம் முழுவதும் யோசனையில் இருந்தது… அடுத்த அரைமணி நேர எண்ணத்தின் அலசலில்,
‘இவன் பிரச்சினையா தான் வருவான்… வேற யாராச்சும்னா பரவாயில்ல ஏமாத்திறலாம், இல்லைனா சமாளிக்கலாம்… ஆனா இவன் போலீஸ்… இப்பவரை அவன் என்னை கண்டுபிடிச்சதே ஆபாத்து தான்…. இன்னும் தெரிஞ்சுக்க வந்தா நிச்சயம் நாம நினைக்குறது நடக்காது… முதல்ல பண்ண வேண்டியதை பண்ணுவோம்… மாட்டாம பண்ணணும்னு நினைச்சோம்… இப்படியே விட்டா கடைசி ஒன்னுமே நடக்காது போயிரும்… அப்புறம் இத்தனை வருஷம் காத்திருந்ததுக்கு அர்த்தம் இல்லாம போயிரும்… மகிழன்…’ என்று அவன் பெயரை எண்ணி பார்த்தவள்,
‘எட்டி நிக்கணும்…என்னை அவன் எட்டிபிடிக்குறதுக்கு முன்னாடி நாம மொத்தமா விலகி போயிறணும்…’ என்று எண்ணி கொண்டவள் எழுந்து அலுவலகம் நோக்கி சென்றவளுக்கு அடுத்த அதிர்ச்சியை தயார் செய்திருந்திருந்தான் மகிழன்…
“என்னடா சீக்கிரம் வந்துட்ட…?” என்ற அன்னையின் கேள்வியில்,
“என்ன தான் பிரச்சினை உங்களுக்கு…? சீக்கிரம் வந்தா ஏன் சீக்கிரம் வந்தன்னு கேட்குறீங்க… லேட்டா வந்தா ஏன் திருடன் மாதிரி வரன்னு கேட்குறீங்க… இப்ப நான் என்ன பண்ணட்டும் எப்ப வீட்டுக்கு வரட்டும்…?” என்று கேட்டபடி சோபாவில் கால்நீட்டி அமர,
“ம்ம்ம்…. அப்படியே சொல்லி நீ கேட்டுட்டாலும்… ” என்றவர் எதிர் இருக்கையில் அமர்ந்து மல்லிகை பூவை கட்டி கொண்டிருந்தார் மகனை நக்கல் அடித்தபடி…
“அதுவும் சரிதான்… இன்னைக்கு வெளி வேலையா போயிருந்தேன்… அதான் சீக்கிரம் வந்துட்டேன்…” என்றவன் டீவியை ஆன் செய்ய,
“வெளி வேலையா…? கேஸ் விஷயமா…?” என்று கேட்டவருக்கு,
லேசாக புன்னகைத்தவன், “ஆமா ஆனா இல்ல…” என்ற பதிலில் நிமிர்ந்து மகனை பார்த்தவர், அவன் முகத்தில் இருந்த சந்தோஷத்தை கண்டு புருவம் சுருக்கி ஆராயும் போது, அங்கு வந்த தமிழ்ச்செல்வன்
“என்னடா விஷயம்… முகத்துல பல்ப் எரியுது…?” என்று மகிழனின் தோள் தட்டி கேட்க,
“ம்ம்ம்… நானும் உன்னை மாதிரி கடலை போட ஒரு ஆளை பிக்ஸ் பண்ணி விஷயத்தை சொல்லிட்டு வந்து இருக்கேன்…” என்று சாதாரணம் போல் சொல்ல, எதிரில் அமர்ந்திருந்த இருவரும் அதிர்ச்சியில் வாய்பிளந்து பார்த்திருந்தனர்…
முதலில் தெளிந்த தமிழ்ச்செல்வன், “ஒரு பொண்ணுகிட்ட லவ்வை சொல்லிட்டு வந்ததை இப்படியா சொல்லுவ…?” என்று கேட்டவனை திரும்பி பார்த்தவன், ஒற்றை கண்ணை சிமிட்டி சிரிக்க, அவன் அன்னையோ
“இதை தான் கேஸ்’ன்னு சொன்னியா…?” என்று கண்டிக்கும் குரலில் கேட்கவும், தமிழ்ச்செல்வன் நெற்றியில் அறைந்து கொள்ள, வேகமாக அவர்கள் புறம் திரும்பி அமர்ந்த மகிழன்
“உண்மையா கேஸ் பத்தி விசாரிக்க தான் போனேன் ஆனா அது இப்படி முடிஞ்சுருச்சு….” சுவாரஸ்யமாக சொல்ல வந்து ஆசையாக குரலின் தன்மையை மாற்றி சொன்னவனை பார்த்து அன்னை அண்ணன்ய என்ன இருவரும் சிரிக்க,
“ம்பச்ச்… கிண்டல் பண்ணுறீங்களா…?” என்று புருவம் சுருக்கி கேட்டவனை,
“இல்ல டா…” என்ற தமிழ்ச்செல்வன் சொல்லி முடிக்கும் முன்,
அவன் அன்னை, “யாரு டா அந்த பொண்ணு…? பேரு என்ன…?” என்று விசாரிக்கவும், வெட்கம் போல் நகத்தை லேசாக கடித்தவன்,
“தியா… அவ மட்டும் தான்… அம்மா அப்பா இல்ல… ஆசிரமத்துல வளர்ந்தா… அதோடு ஐட்டி…” என்னும் போது வீட்டின் வாசலில் பிரவீண்,
“சார்….” என்று அழைக்கவும் மூவரது கவனமும் அவன் புறம் திரும்பியது…
அவனது அன்னை, “கரெக்டா கரடி மாதிரி வந்து நிக்குற… வா… வா…” என்று அழைக்க, பிரவீணுக்கு ஒன்றும் புரியவில்லை…
உள்ளே நுழைந்தபடி திரும்பி பார்த்தவனின் கண்களில், மகிழன் சிரித்துக்கொண்டிருப்பதும், தமிழ்ச்செல்வன் முகம் யோசனையில் இருப்பதும் விழுந்தது…
“என்னாச்சு சார்…? ராங் டைம்ல என்ட்ரி ஆயிட்டேனா….?” என்று கேட்டதற்கு,
“ஆமா… ஒரு பதினைஞ்சு நிமிசம் கழிச்சு வந்திருக்கலாம்…” என்று லஷ்மி நொடிந்து கொள்ளவும்,
“ஓஓஓ… சாரி மேடம்… ஒரு முக்கியமான விஷயம் பேசணும் அதான் வீட்டுக்கே வந்துட்டேன்… சார் இன்னைக்கு ஆஃபீஸுக்கும் வரலை… எனக்கும் வேற வழியில்லை… கொஞ்ச நேரத்துல கிளம்பிறேன் மேடம்….” என்று பவ்யமாக பேச,
“கரடி மாறி வந்துட்டன்னு சொல்லுறேன்… ராங் டைம் என்ட்ரின்னும் சொல்லிட்டேன்… அப்ப கூட போக மாட்டீங்கிற… ” என்று போலியாக சிடுசிடுக்க, பிரவீணுக்கு அது போலி கோபம் என்று புரியாமல் உண்மை என்று நம்பி என்ன செய்வதென்று தெரியவில்லை…
பேச வந்த விஷயம் முக்கியம் அதை பேசி தெளிவுபடுத்தி கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் திருதிருவென முழித்தபடி நின்றிருந்தான் அதே இடத்தில்…
அவன் நிலை புரிந்து, மகிழன் சிரித்தபடி “ம்மா… போதும்… ” என்றதும் நொடிந்து கொண்டவர் அவ்விடம் விட்டு எழுந்து செல்ல, பிரவீணுக்கு அப்பாடா என்றானது…
“சொல்லுங்க பிரவீண்… அப்படி என்ன முக்கியமான விஷயம்…?” என்று கேட்கவும் திரும்பி தமிழ்செல்வனை பார்க்க, அவனும் சூழ்நிலை புரிந்து அவ்விடம் விட்டு அகன்றான் யோசனையுடனே…
‘இருக்குமோ… ‘ என்று யோசித்தவனுக்கு,’இருக்க கூடாது… ஆனா இவன் சொன்னதையும் சொல்ல வந்ததையும் பார்த்தா அப்படிதான் போல இருந்துச்சு… வேண்டாம் நாமளா ஏதும் யோசிக்க வேண்டாம் அவன் தெளிவா சொல்லி முடிக்கட்டும்… அப்புறம் பேசிக்கலாம்…’ என்ற முடிவில் அமைதியாக தன்னறைக்கு சென்று விட்டான் தன் நினைப்பு என்னவாகும் என்று அறியாமல்…
“இப்ப சொல்லுங்க பிரவீண்…” என்று மீண்டும் கேட்கவும்,
தன் கையில் இருந்த பைலை மகிழனிடம் நீட்டியபடி, “நீங்க சொன்ன மாதிரி பேஷன்ஜர்ஸ் லிஸ்ட் சார்…” என்றவன்,
“தனி தனியா பிரிச்சு வச்சு இருக்கேன்… சிலது விசாரிச்சு தெரிஞ்சுக்கிட்டேன் சார்… அதோட டீலைல்டு லிஸ்ட்…” என்று அவன் கூறவும் சௌந்தர்யா காஃபியுடன் வரவும் சரியாக இருந்தது…
அதை வாங்கி கொண்டவன், பேச வாய் திறக்கும் முன், “வெளியே போய் பேசலாமா பிரவீண்…?” சொல்லியபடி எழுந்து நிற்க,
அவனது அன்னை, “வீட்டுக்கு வந்தவங்களுக்கு காஃபி தண்ணீ குடுக்குறது தப்பா டா… உடனே எந்திரிச்சு வெளிய போற…?” என்று முகத்தை சுருக்க,
“இல்ல ம்மா… ஆனா நாங்க பேசுற விஷயம் அப்படி… அதுவும் இல்லாம ஃபிரியா காத்தோட்டமா இருக்குமேன்னு நினைச்சேன் அவ்வளவு தான்…” என்றதற்கு முகத்தை தோள்பட்டையில் இடித்துக்கொண்டு திரும்பி சென்றவரை பார்த்து பிரவீண் சிரித்து வைக்கவும்,
மகிழனிடம் அந்த இலகு தன்னை இல்லாமல் இருக்க, “வெளியே போலாம்…” என்றதோடு பேச்சை நிறுத்தி கொண்டான், கோப்பையை பார்வையிட்டபடியே வெளியேறியும் விட்டான்…
அவனது மனநிலையை புரிந்து கொண்ட பிரவீண், வேகமாக சௌந்தர்யா தந்த காஃபியை உள்ளே தள்ளிவிட்டு ஓட்டமும் நடையுமாக வெளியே விரைந்தான் மகிழனை தேடி…
வெளியே இருந்த தோட்டத்து கல் பென்சில் அமர்ந்திருந்த மகிழனின் அருகில் சென்று நின்றவனை,
“சிட்…” என்று மட்டும் தலையை உயர்த்தாது சொல்லியவன் பார்வை முழுவதும் கோப்பையில் இருக்க, அடுத்த மூன்று நிமிடங்கள் அங்கு அமைதி மட்டுமே…
“பிரவீண்…” அவனது வார்த்தைகாக காத்திருந்தவன் போல,
“எஸ் சார்….” என்க,
“இந்த லிஸ்டுல இருக்குறவங்களை என்ன வேலை பார்க்குறாங்கன்னு தனி தனியா பிரிச்சுடுங்க…” என்றதும்,
“சார் எல்லாரையும்னா… கொஞ்சம் கஷ்டம் சார்…”என்று தயங்க,
“எஸ்… கொஞ்சம் சவாலான வேலை தான்… ஆனா நமக்கு வேற ஆப்ஷன் இல்ல பிரவீண்… டிபார்ட்மெண்ட்ல நம்பிகையா இருக்குற சிலரை வச்சு வேலையை முடிங்க…” என்றிட,
“சார்… ” என்று புரியாமல் இழுக்க,
“வேலைன்னு பொய் சொல்லிட்டு டிராவல் பண்ண வாய்ப்பிருக்கு…” என்ற பிரவீணை திரும்பி பார்த்த மகிழன்,
“கரெக்ட்… இதுவும் நமக்கு ஒரு ஹெல்ப்புல்லா இருக்கும்… பார்க்கலாம்.. இது எவ்வளவு துரம் போகுதுன்னு…”
“ஓகே சார்… இன்னும் டூ டேஸ்ல உங்க டேளில்ல இருக்கும்… “என்றவனிடம் கோப்பையை மூடி கொடுக்கவும் பெற்று கொண்டவன், சொல்லி கொண்டு விடைபெற்றான் ஒரு சலியூட்டுடன்…
அமைதியாக வானத்தை பார்த்து அமர்ந்திருந்தவன் மனதில் இப்பொழுது முழுவதும் தியா மட்டுமே நிறைந்திருந்தாள்…
“என்ன பண்ணிட்டு இருப்பா…?” என்று முனுமுனுத்த அதே நேரம்,
“என்னை பத்தி என்ன தெரியும்னு வந்து பேசுறான்… இடியட்… ” என்று பல்லை கடித்தவளை கலைப்பது போல் வந்தது ஃபோன் கால்…
பால்கனியில் நின்று வானத்தை வெறித்தபடி நின்றிருந்தவள், காதிற்கு ஃபோனை கொடுத்த அடுத்த நொடி,
“யார் என்ன வந்து கேட்டாலும் எல்லாத்தையும் ஒப்பிச்சு வைப்பீங்களா… ?” என்று கத்த,
எதிர்முனையில், “மேடம் வந்தது போலீஸ்…” என்று தயங்க,
“அதுனால என்ன இப்ப…?” என்று பல்லை கடித்தவளை,
“மேடம் அவரை பார்த்தா பிரச்சினை பண்ணுற ஆளு மாதிரி தெரியல…” ஏன்னென்று தெரியாத ஒரு உறுதி அவர் குரலில்…
“உங்களுக்கு ஜோசியம் பார்க்க கூட தெரியுமா…?” என்று பல்லை கடித்தவளுக்கு தானே தெரியும் அவன் எவ்வகை பிரச்சினையை இழுத்துள்ளான் என்று…
“இல்ல மேடம்… அவங்க டிரஸ்ட் பத்தி மட்டும் விசாரிச்சுட்டு போயிட்டாங்க… அதான் அப்படி சொன்னேன்…” என்றவருக்கு சுல்லென்று கோபம் வந்தது ஆனால் எப்பொழுதும் போல் அதை உள்ளுக்குள் அடக்கியவள்,
“சரி குழந்தை என்ன பண்ணுறா… ?”
“தூங்கிட்டா மேடம்… சின்ன குழந்தை இடத்துக்கு பழக கொஞ்சம் கஷ்ட படுறா… போக போக பழகிருவா… ” என்றதற்கு,
“ம்ம்ம்… பத்திரம்… வேற யாராச்சும் வந்தா சொல்லுங்க…” என்றபடி அழைப்பை துண்டித்தவளுக்கு எங்கோ மனம் உறுத்தி கொண்டே இருந்தது…
டிரஸ்டிற்க்கு மகிழன் வந்ததும் விஷயம் தியாவின் காதிற்க்கு சென்றது சில நொடிக்களில்… விஷயம் அறிந்ததும் சுதாரித்தவள் நேரிடையாக அவனிடமே பேசி அனைத்தையும் நன்முறையில் தெளிவு படுத்தி கொள்ள வேண்டும் என்றே எண்ணினாள்…
ஆனால் மகிழனோ அவளை பேச விடாது, தன் எண்ணத்தை மட்டும் காட்டி பெண்ணவளின் கோவத்தை ஏற்றி விட்டு சென்று விட்டான் வெகு குஷியாக..
நடந்த நிகழ்வு அணைத்தையும் யோசித்தவள் சீக்கிரம் தன் வேலையை செயல் படுத்த எண்ணி, ஃபோனை எடுத்து, “விஜய் நான் சொன்னது என்னாச்சு…?” என்று கேட்டவளுக்கு,
“மேடம் கொஞ்சம் டைம் குடுங்க… நீங்க கேட்குறது அதிக பவர் உள்ளது… டைம் எடுக்கும்… அதுவும் இல்லாம யாருக்கும் தெரியாம பண்ணணும் வேற… ஹைளி ரிஸ்க்… அவசர பட்டா எல்லாம் சொதப்பும்…” என்றதற்கு, தியா
“இது எவ்வளவு ரிஸ்க்குன்னு எனக்கு நல்லாவே தெரியும்… நீ அதை சொல்லணும்னு அவசியம் இல்ல… நான் கேட்டதை மட்டும் செஞ்சு குடு போதும்… டைம் கம்மியா இருக்கு… மேக் இட் கிவிக்….” என்று சற்றே குரலை உயர்த்த, எதிர் முனையில் இருப்பவனுக்கு,
“ஓகே மேடம்…” என்று மட்டுமே அவளிடம் சொல்ல முடிந்தது…
அழைப்பை துண்டித்ததும், விஜய் “இந்த விஷயம் வெளிய வந்தா நானும் தான் மாட்டுவேன்… இவளை மட்டும் யோசிக்குறா… சை…” என்று முனுமுனுத்தபடி தன் ஆராய்ச்சியை தொடர்ந்தான்….
இங்கு தியாவிற்கு மனம் முரண்டிக் கொண்டே இருந்தது, தன்னை இவன் விடமாட்டான் என்னும் எண்ணம்…
‘இவன் வேண்ணும்னு பண்ணுறானா இல்ல உண்மையா லவ்னு சொல்லுறானா தெரியலையே… எதுவா இருந்தாலும் அது எனக்கு ஆபத்து தான்… நாம சிக்குறதுகுள்ள வேலையை முடிக்கணும், இல்லாட்டி இத்தனை வருஷம் வெய்ட் பண்ணதுக்கு அர்த்தம் இல்லாம போயிரும்…’ என்று எண்ணியவளுக்கு பழையதும் பழிவாங்கும் எண்ணமும் மீண்டும் மீண்டும் நினைவிற்கு வந்து அவ்விரவு தூங்கா இரவாகி போனது…
“கிளம்பிட்டானா….?” என்ற அன்னையின் கேள்விக்கு,
“ஆமா ம்மா…” என்றபடி சப்பாத்தியை வாயில் அடைக்க,
“சரி மேல சொல்லு…” என்றபடி அருகில் இருக்கையை போட்டு அமர்ந்து கொள்ள, தமிழ்செல்வன் மெலிதாக புன்னகைத்து கொண்டான் அன்னையை பார்த்து…
“மேலையா…?” என்றபடி தலையை தூக்கி மேலே பார்க்க,
அவனது செயலில் பொய்யாக முறைத்து வைக்க, தமிழ்ச்செல்வனோ, “நீ லவ் பண்ணுற பொண்ணை பத்தி சொல்ல சொல்லுறாங்க…” என்றபடி உணவை உண்டவனை பார்த்து,
“ஓஓஓஓ… ஆமால… நான் யாருன்னே சொல்லல…” வாயில் உணவை வைத்தபடி அன்னையின் புறம் திரும்பியவன்,
“ம்மோ… உன் சின்ன மருமக பேரு… தியா… ஹாயா ஐட்டி கம்பெனியை மேச்சுட்டு இருக்கா…” என்ற வார்த்தையில் அன்னை யோசனையாக பார்க்க, தமிழ்ச்செல்வனுக்கு அதிர்ச்சியாக இருந்தது…
இருவரையும் பார்த்தவனுக்கு அவர்களது மனநிலையை நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது… கடைசி வாயை வேகமாக உண்டவன், எழுந்து சென்று கையை கழுவிட்டு வர,
சௌந்தர்யா, “ஐட்டி கம்பெனியா…?” என்று மெலிதாக இழுக்க,
“ஏன் ம்மா…? உங்களுக்கு பிடிக்கலையா…?” என்று கேட்டதுமே,
“ச்சே… ச்சே… அப்படி சொல்லல டா… பார்த்து பேசிடாத பொண்ணை பத்தி எதுவும் சொல்லல… ஆனா வேலை தான்… ” என்று இழுக்க,
“வேலைக்கு என்ன ம்மா…? நம்ம அண்ணனை மாதிரி அவ… ரெண்டு கம்பெனி ஓனர் நம்ம வீட்டுல… இதுல என்ன இருக்கு…?” என்று கேட்டவனை பார்த்து மிருதுவான முக பாவனையில் புன்னகைத்தவர்,
“நீ நேரம் காலம் பார்க்காம வேலை பார்த்துட்டு வீட்டுக்கு வருவ… அப்ப உன்னை பார்த்துக்க உன் பொண்டாட்டி இருக்கணும்னு நினைச்சேன்… அந்த பொண்ணும் நேரம்காலம் பார்க்கமா வேலை பார்க்குற மாதிரியான டைப்பா இருந்தா நீங்க எப்படி சேர்ந்து நேரம் செலவழிக்க முடியும்…? அவளே டையர்டா வருவா… இதுல உன்னை எப்படி பார்த்துப்பா…?” என்ற கேள்வியில் சிரித்தவன்,
“அக்மார்க் மம்மியா இருக்கீங்க இப்பதான்…” என்றபடி அவர் கண்ணத்தை கிள்ளி வைக்க,
அவன் கையை தட்டி விட்டவர், பொய்யாக முறைத்தபடி மூத்தவன் புறம் திரும்பி, “ஏன் டா செல்வா நான் சொன்னதுல ஏதாச்சும் தப்பிருக்கா… நீயே சொல்லு…?” என்று நியாயம் கேட்க,
அவன் சொன்ன பதிலில் இருவரும் அதிர்ந்து பார்த்தனர் தமிழ்ச்செல்வனை…