நிற்க முடியாமல் ஒருவித அவஸ்தையுடன் அவ்விடத்தில் நின்றிருந்தாள் தியா… அனைவரது பார்வையும் தன்மேல் தான் இருக்கிறது என்று புரிந்தவளுக்கு உள்ளுக்குள் குடைந்தாலும் வெளியே எதையும் காட்டாது அமைதியாக நின்றிருந்தவளை பார்க்கும் யாருக்கும் அவள் உள்ளத்தில் ஓடும் அவஸ்தை தெரிய வாயிப்பில்லை எப்பொழுலும் போல்…
சற்று நேரம் பொறுத்தவள் தன் கையில் இருக்கும் கடிகாரத்தை பார்த்துவிட்டு திரும்பி மகிழனை பார்க்க, அவனோ பாக்கெட்டில் கை நுழைத்தபடி தீவிரமான முகத்தோடு தமிழ்செல்வனோடு பேசிக்கொண்டிருக்க,
இவளது பார்வை உணர்ந்து திரும்பி பார்த்தவன் அண்ணனிடம் சொல்லிவிட்டு தியாவின் அருகில் வந்தவன்,
“என்ன…?” என்று கேட்க,
“என்னது என்ன…?” புரியாமல் பார்த்தவளை,
“ஏதாச்சும் சொல்லணுமா…? என்னை பார்த்து சைட் அடிச்சுட்டு இருந்தியே…” தியாவிற்கு உள்ளுக்குள் இதமான உணர்வு, ஒற்றை பார்வை உணர்ந்து என்னவென்று கேட்க பிடித்திருந்தது உள்ளுக்குள்…
“ம்ம்ம்…” ஒருபெருமூச்சு விட,
“என்ன மேடம் பெருமூச்சு எல்லாம் பலமா இருக்கு…?” என்று கைகளை கட்டி கொண்டு மீசையை நீவியபடி கேட்க,
அவளையும் அறியாது அவன் செய்கைகளை எல்லாம் தியாவின் உள்ளம் ரசிக்க தொடங்கியது மெல்ல…
“இல்ல எதுக்கு என்னை இங்க கூட்டிட்டு வந்து ஷோ காட்டிட்டு இருக்க…?” இழுத்து பிடித்து கோபம் போல் கேட்க,
“இது உனக்கு செட் ஆகல…” என்றவன் அவளை குறும்பாக பார்த்து வைத்தவன்,
“நான் கண்டுபிடிச்சுட்டேன்… போலீஸ்காரனை ஏமாத்த முடியாது டி…” என்றதில் முகம் சிவந்தவள் அவனுக்கு மறுபுறம் முகத்தை திருப்பி கொள்ள,
“ஏன் கூட்டிட்டு வந்தேன்னு கேட்குற…? தெரிஞ்சுப்ப இன்னும் கொஞ்ச நேரத்துல…” என்றவன் நிமிர்ந்து சுற்றி இருப்பவர்களை ஒரு பார்வை பார்க்க, அதுவரை பேசிக்கொண்டிருந்த தங்களையே பார்த்துக்கொண்டிருந்தவர்கள் சட்டென பார்வையை மாற்றிக்கொண்டனர்…
ஆனால் மகிழன் எதையும் பெரிது படுத்தவுமில்லை, ஏன்னென்று கேட்டுக்கொள்ளவும் இல்லை… மேலும் பத்து நிமிடம் கழிந்த நிலையில்,
கையில் குழந்தையுடன் வெளி வந்த நர்ஸை பார்த்து அனைவரும் அருகில் வர, தியா மட்டும் நின்ற இடத்திலேயே நின்றிருந்தாள் ஒருவித படபடப்போடு…
தமிழ்செல்வனுக்கு பெண் குழ்ந்தை பிறந்திருக்க, அனைவரும் பார்த்து பூரித்திருந்தனர் அதன் அழகில், தியாவிற்கும் ஆசையாக இருந்தது தான் ஆனால் ஒருவித சங்கடம் அவளிடம்…
மகிழன் கூட குழந்தையை கண்டதும் நகர்ந்துவிட, சௌந்தர்யாவோ குழந்தையை கையில் வாங்கி கொண்டார்…
அதன்பின் சற்று நேரத்தில் ஸ்வேதாவையும் குழந்தையையும் தனி அறைக்கு மாற்றிவிட,
ஸ்வேதாவின் உறவினர்கள், தமிழ்செல்வன் சௌந்தர்யா மகிழன் என அனைவரும் உள்ளே சென்று விட தியாவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை…
‘இப்படி கூட்டிட்டு வந்து நிக்க வச்சுட்டு போயிட்டான் லூசு… இப்ப உள்ள போறதா வேண்டாமா…?’ என்று யோசிக்கும் பொழுது வெளியே வந்த மகிழன்,
“ஏன் இங்கையே நிக்குற…? என்னாச்சு….? வா குழந்தையை பாரு…” என்று கையை பிடித்து உள்ளே அழைத்து செல்ல, திருவிழாவில் தொலைந்த குழந்தையை போல் முழித்தபடி அவன் இழுத்த இழுப்பிற்க்கு பின் சென்றாள் அமைதியாக…
சோர்வுடன் படுத்திருந்த ஸ்வேதா தியாவை கண்டு, “ஹே தியா… வா… வா… ஏன் அங்கேயே நிக்குற…?” என அழைத்தவளை பார்த்து மெலிதாக சிரித்தவளுக்கு உள்ளுக்குள் குழப்பம்…
“கன்கிராஸ்… இப்ப ஓகே யா…?” என்ன பேசுவது எப்படி பேசுவது என்று புரியாமல் தயங்க,
“தேங்க்ஸ்…ம்ம்ம்… வலி தெரியுது தான்… பட் ஓகே…” சோர்வான புன்னகையும் தாண்டி முகம் மலர்ந்திருப்பதை அவளால் உணர முடிந்தது… அது தாய்மைக்கான உணர்வு என்று புரிந்துகொள்ள முடிந்தது தியாவாள்…
“தியா….” மகிழன் குழந்தையுடன் அருகில் நின்றிருக்க,
தன்னை போல் கையை நீட்டி குழந்தையை பயத்தோடு வாங்கி கொண்டவளின் முகம் அத்தனை பிரகாசமாக இருந்தது அதன் அழகில்…
மகிழன், “அம்மு… இங்க பாருங்க… யார் கிட்ட இருக்கீங்கன்னு பாருங்க… சித்தி டா அம்மு… உன் சித்தியை பாரு…” என்று குழந்தையிடம் கொஞ்ச,
ஸ்வேதா அதிர்ச்சியாக நிமிர்ந்து தமிழ்செல்வனை பார்க்க, கணவனும் ஆம் என்பது போல் தலையை ஆட்டி வைக்க அத்தனை மகிழ்ச்சி ஸ்வேதாவிடம்….
“ஹே தியா… சூப்பர்… உனக்கும் கன்கிராஸ்…” என்று மனதார வாழ்த்த,
தியாவிற்கும் மகிழனின் இந்த திடீர் அறிவிப்பும் அதை அவன் சொன்ன விதமும் உள்ளுக்குள் குறுகுறுவென்று இருந்தது.. அதில் முகம் சிவந்தவள்,
“தேங்க்ஸ்…” என்று குழ்ந்தையை கொஞ்சுவது போல் குனிந்துக்கொள்ள, சுற்றி இருந்தோர்க்கு விஷயம் புரிந்து அமைதியாகி போயினர்…
காரணம் மகிழன், வீட்டினுள் அவன் காட்டும் முகமும், வெளியே அவன் காட்டும் முகமும் வேறுவேறு… அது உறவினர்களிடமும் அதே கம்பீரதோடு வலம் வந்தான்…
பின் சற்று நேரம் இருந்து குழந்தையை கொஞ்சி மற்ற விஷயங்கள் பேசி கிளம்புகையில் சௌந்தர்யா தியாவிடம்,
“பத்திரம் மா… ஜாக்கிரதையா இருந்துக்கோ…” என்க,
“சரி ஆன்ட்டி…” என்று மெல்லிய புன்னைமுகத்துடன் திரும்பி ஸ்வேதாவிடம்,
“உடம்பை பார்த்துக்கோ… குழ்ந்தை பத்திரம்…” என்று விடைபெற,
“ம்ம்ம்… நாளைக்கும் வா…” என்றதில் சற்று தயங்கியவள்,
“டிரை பண்ணுறேன்… நாளைக்கு ஆஃபீஸ் போகலாம்னு இருக்கேன்…” ஒருவித தயக்கம் அவள் பேச்சில்,
“சரிதான்… கொஞ்ச நாள் ஆச்சுல ஆஃபீஸ் போய்…”என்ற மகிழனுக்கு ஆம் என்பது போல் தலையை ஆட்டியவள்,
மற்றவர்களை பார்த்து, தலையசைத்து விடைபெற்று, வெளியேறவும் மகிழன் தன் அன்னையிடம்,
“நான் போய் விட்டுட்டு வரேன் ம்மா…” என்றவன்,
“ஏதாச்சும்ன்னா கால் பண்ணுங்க…” என்றதோடு கிளம்ப இருந்தவனை சௌந்தர்யா,
“சாப்பிட ஏதாச்சும் வாங்கி குடு டா…” என்றவருக்கு சரியென்று தலையை ஆட்டியவன் வேகமாக தியாவை தேடி வெளியே வந்தான் ஓட்டமும் நடையுமாக…
மாலை மங்கி இரவு கவிழ்ந்திருந்த போதும் தியாவின் உள்ளம் பிரகாசமாக தான் மின்னி கொண்டிருந்தது…
“வரும் போது கூட வந்துட்டோம்… இப்ப கேப் தவிர வேற வழியில்ல போல…” என்று முனுமுனுத்தவள் ஆட்டோவை எதிர்பார்த்து விழிகளை அழையவிட்டபடி தன் ஃபோனை நோண்டியவளின் பின்னே,
“என்னால கூட டிராப் பண்ண முடியும்…” என்ற குரலில் திரும்பி பார்த்தவள்,
“இல்ல… நானே போயிக்குறேன்…” வாய் மறுத்தாலும் உள்ளம் அவன் அருகாமையை தேடியதை உணர்ந்தவளுக்கு,
‘சே… ரொம்ப மோசமா மாறிட்டோம்…’ என்று தோன்ற உதட்டை பற்களால் கடித்து கொண்டவள் வேகமாக தன் ஃபோனில் கால் டேக்ஸிக்கு புக் செய்ய, வெடுக்கென்று பிடுங்கி கொண்டான் தன் கூலரை அணிந்தபடி…
“ஹே…என்ன பண்ணுறிங்க…?” என்று எகிறியவளை பார்த்து நிதானமாக,
“உன் வாய் ஒன்னு சொல்லுது ஆனா அதுக்கு நேர் எதிரா உன் கண்ணு ஒன்னு சொல்லுது… இதுல எது மேடம் உண்மை…?” குரலில் அத்தனை கேலி இருந்ததோ…?
“ரெண்டும் ஒரே பதிலைதான் சொல்லுது… நீங்க தேவையில்லாம யோசிச்சா அதுக்கு நான் என்ன பண்ண முடியும்…” என்றபடி தன் ஃபோனை அவனிடம் இருந்து வாங்க முயல…
அவனோ அதை அசால்ட்டாக தன் பேண்ட் பாக்கெட்டில் வைத்தபடி, “வேண்ணும்னா இப்ப எடுத்துக்கோ…” என்று கையை கட்டிக்கொண்டு நிற்க, இப்பொழுது கோபம் வந்தது தியாவிற்கு…
“என்ன திமிரா…? கொஞ்சம் நார்மலா பேசவும் அட்வான்டேஜ் எடுத்துக்க பார்க்குறீங்களா…?” என்றபடி அருகில் வந்தவள் பாக்கெட்டில் இருந்து தன் ஃபோனை எடுக்க போக,
“ஸ்டாப்… ஸ்டாப்… நானே தரேன்…” என்றவன் ஃபோனை வெளியே எடுத்தவன்,
“ஓவர் கான்பிடன்ஸ் உடம்புக்கு ஆகாது மேடம்… நான் எப்பவும் இப்படி பொறுமையா அடக்கமா இருக்க மாட்டேன்… பத்திரம்…” என்று கையில் திணித்து விட்டு,
‘ரொம்பதான்… இல்லாட்டி மட்டும் என்ன பண்ணிடுவாராம் சார்…?’ என்று எண்ணியவள் மேற்கொண்டு எதையும் யோசிக்கவும் இல்லை மகிழனிடம் பேசவும் இல்லை…
வண்டி ஒரு ஹோட்டல் முன்பு நிற்கவும், கேள்வியாக திரும்பி பார்க்க, “காலைல பதினோரு மணி போல சாப்பிட்டது… வேற எதுவும் இன்னும் சாப்பிடலை… அதான்… இறங்கு…” என்றதோடு இறங்கி கொண்டவன் திரும்பி தியாவை பார்க்க அவளோ யோசனையுடனே இறங்கினாள் மகிழனை பார்த்து…
“என்ன சொல்லணும்னு நினைக்குற…?”
பத்து நிமிடமாக ஏதோ பேச முயற்சிப்பதும் பின் யோசித்து அமைதியாவதுமாக இருக்கும் தியாவை கண்டு கொண்டு கேட்டவனை நிமிர்ந்து பார்த்தவள், சற்று தயங்கிபடி
“இந்த ரிலேஷன்சிப் இதோடு போதுமே…” என்று தயங்கி இழுக்க,
“எந்த ரிலேஷன்சிப்…?” நிமிரவில்லை உணவில் மட்டுமே அவன் கவனம் முழுவதும்…
“ம்ம்ம்…” என்று முறைத்தவள்,
“நான் எதை சொல்லுறேன்னு தெரியாதா…?” உணவை விடுத்து அவனை மட்டும் பார்த்து பேச,
“முதல்ல சாப்பிடு … அப்பறம் பேசலாம்…” என்றதில் பல்லை கடித்தவள் அவனை முறைத்தபடி வேகமாக சாப்பிட்டு முடித்து கையை கழுவிவிட்டு வந்து,
“இப்ப பேசலாமா சார்…?” என்று குத்தலாக கேட்கவும்,
“ம்ம்ம்… தாராளமா…” என்று தோளை உழுக்க,
“திமிர்…திமிர்…” என்று முனுமுனுத்தவள்,
“நீங்க நினைக்குற எதுவும் நடக்காது….” அத்தனை உறுதி அவளிடம்,
“ஏன் நடக்காது…?” பார்வையும் வார்த்தையும் கூர்மையாக வந்து விழுந்தது…
“ஏன்னா… என்… எனக்கு இதுல விருப்பம் இல்ல…”
“ஏன் விருப்பம் இல்ல…?”
“ம்பச்ச்… என்னால ஒரு பேமிலிக்குள்ள இருக்க முடியாது… ஒரு மனைவியா… என்ன…” அடுத்து பேச முடியவில்லை தியாவாள், அதில் கோபம் கொண்டவள்,
“முடியாது… விருப்பம் இல்லைன்னா விட வேண்டியது தானே… ஏன் ஃபோர்ஸ் பண்ணுறீங்க…?” என்று கத்திவிட, அவளை ஆழ்ந்து பார்த்தவன்,
சில நொடிகளில், “போகலாம்…” என்று கிளம்பிவிட, தியாவிற்கு தலை வலி வந்தது தான் மிச்சம்…
வண்டியில் ஏறியதும் தியாவின் வீட்டை நோக்கி கார் சீரிபாய, பெண்ணவளுக்கு மகிழனின் கோபம் அவனது வேகத்திலேயே தெரிந்தது…
அடுத்து பேசவே முடியவில்லை தியாவிற்கு வெளியே பார்ப்பதும், திரும்பி மகிழனை பார்ப்பதுமாக வந்தவளுக்கு தவிப்பு கூடியது…
வீட்டில் வந்து வண்டியை நிறுத்தி இறங்கியவன், “பத்திரம்…” என்றதோடு கிளம்ப பார்க்க, அவனை தடுத்தவள்
“நான் சொன்னது புரிஞ்சுதா இல்லையா…? நீங்க பாட்டுக்கு போனா என்ன அர்த்தம்…?” அப்பட்டமான எரிச்சல் அவள் குரலில்…
“நல்லாவே புரிஞ்சுது… இனி நான் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்…” என்றதோடு கிளம்பிவிட, அதிர்ந்து நின்றாள் பெண்ணவள்…
அவ்வளவு தானா… ஆனால் இதை தானே அவளும் கேட்டது… ஏனோ அவனது ஒப்புதல் மனதிற்கு ஏற்று கொள்ளும்படி இல்லை… அவன் விலகி சென்றதும் உள்ளுக்குள் உடைந்து போனது உண்மையே…
நான்கு மாதம் எவ்வாறு கடந்தது என்றே தெரியவில்லை… ஆனால் ரெக்கை கட்டி பறந்திருந்தது… ஜன்னல் கம்பியின் வலியாக இரவின் இருளில் எதை தேடினாளோ தெரியவில்லை…
முகம் அத்தனை அமைதியை தாங்கி இருந்தது… எல்லாம் மாறி போயிருக்க எதுவும் செய்திட முடியாத நிலையில் நின்றிருந்தாள் தியா… தாம் நிற்பது தன் அறையில் தான் என்றாலும் ஏதோ நெருப்பின் மேல் நிற்பது போன்ற உணர்வு… ஏதேதோ நினைவுகளில் உள்ளம் கசங்கியவள் பிடித்திருந்த கம்பியின் பிடியை இறுக்கினாள் மெதுவாக…
இந்த நான்கு மாதத்தில், அனைத்துமே மாறி இருந்தது அவள் வாழ்க்கையிலும் சரி அவளை சுற்றி இருந்த சூழ்நிலையிலும் சரி….
தமிழ்செல்வன் தன் திறமையை காட்டி இருக்க, அவனுக்கு வர இருந்த பிரச்சனையை தவிர்த்துவிட்டான் புது திட்டங்களை கொண்டு வந்து…. அதோடு அவனது கம்பெனியும் தியாவின் கம்பெனியும் ஒன்றாக இணைந்து செயல்பட தொடங்கியது நட்புணர்வில்…
ஸ்வேதாவின் குழந்தையை அவ்வபோது சென்று பார்த்து வந்த தியா எந்த சந்தர்பத்திலும் மகிழனை சந்திக்கவுமில்லை, அவன் வீட்டிற்கும் செல்லவில்லை… அவ்வாறு சந்திக்கும்படி அவன் சூழ்நிலையை உண்டாக்கவும் இல்லை… உள்மனம் தேடினாலும் வெளியே எதையும் காட்டிகொள்ளவில்லை பெண்ணவள்…
விஜய், மன்சூரின் போதை மருந்தை உருமாற்றம் செய்யும் லேப்லில் வேலை செய்த போது தான் தியாவிற்கு அவனை கொல்ல மருந்தை தயாரித்து கொடுத்தது… அது வெளியே தெரிந்தால் பெரும் பிரச்சனை என்று வெளிநாடு செல்ல பார்த்த சமயம் தான் ஷிவானியின் பொறுப்பு அவனிடம் வந்து சேர்ந்தது….
ஸ்மக்லிங் செய்த வழக்கில் கைது செய்ய வேண்டிய மன்சூர் வலிப்பு வந்து இறந்து விட்டதாக மகிழன் ஆவணங்களை கோர்ட்டில் சமர்பிக்க… அந்த கேஸில் இருந்து ஷிவானி விடுபட்டிருந்த அதே சமையம் கொலைக்கு பின்னிருந்த தியாவும் விடுபட்டிருந்தாள் யாரும் அறியாமல்…
தியா சொன்னது போல் விஜய் ஷிவானியை அழைத்து கொண்டு வெளிநாடு சென்று விட, இங்கு தியாவிற்கு அனைத்தும் குறுந்தகவலாகவே வந்து சேர்ந்தது அணைத்து விசயங்களும் அதுவும் ஷிவானி மற்றும் விஜய் சொன்னது மட்டுமே…
இந்த நான்கு மாதத்தில் நடந்த அனைத்தையும் நினைத்து பார்த்தபடி நின்றிருந்தவளுக்கு அத்தனை ஆயாசமாக இருந்தது, வெறும் நூற்றி இருபத்திரண்டு நாட்களில் தன்னுடைய வாழ்க்கை முறை அனைத்தையும் புரட்டி போட்டிருந்த மகிழன் நினைக்க நினைக்க கோபம் ஏறியது உள்ளுக்குள்…
அவனை நினைத்த அதேநேரம், எதிரில் வந்து மகிழன் நிற்கவும் சரியாக இருந்தது அந்த அறையில்…
ஆயிற்று இதோடு நான்கு மாதம் அகிய நிலையில் இன்று தான் பார்க்கிறாள் மகிழனை அதே திமிரான தோரணையில் எதிரே கைகளை கட்டியபடி கூர்மையான பார்வையில் தன்னை அழந்து பார்த்தபடி நின்றிருந்தவனை காண கோபம் தலைகேறியது மெதுவாக…