நிசப்தங்களின் நேர்காணலில் நெருப்பாகிப் போனதேனோ கேள்விகள்… நெஞ்சத்தின் பாவமன்னிப்பு நெடுங்கூற்றில் ஊமையானதென் பிழையோ… கூடு திரும்பும் பறவையின் சிறகில் கொள்ளை அழகை வைத்தவன் எவனோ…. முட்கள் கொண்டு அதனை புனைந்தவனும் அவனே….
அழகாய் காதலை வச்சான் அதை விட அழகான என் பொண்டாட்டியை இப்ப என் பக்கத்திலேயே வச்சிட்டு என்னைய மட்டும் எழுந்திரிக்க முடியாம பண்ணீட்டியேடா பாவி… இல்லைன்னு சொல்றாங்க , இருந்தா நல்லாயிருக்கும்னு சொல்றாங்க, ஆனா இந்த மாதிரி நேரத்துல என் கூடவே இருந்து, இப்படி வச்சு செய்யுறியே… கடவுளே….
அவனை திட்டி என்ன பண்றது, அபிசேகம் ஆராதனைன்னு பிஸியா இருக்குறவரு… நாமதான நம்ம கதைய பாக்கணும்… ரெண்டு நாளா தூங்க வச்சிட்டாங்க, கேட்டா எப்ப பார்த்தாலும் என்னால டென்ஷன்னு ஒரே புலம்பல்…
சரி அவர் அரியர் வச்ச பாடத்துல வந்த ப்ராக்டிகல் கேள்வி நானு, அவருந்தான் என்ன பண்ணுவாரு… டாக்டரை பாத்தா வயசான மாதிரிதான் தெரியுது, இவ்வளவு நாளாவா கிளியர் பண்ணல… சோ சேட் சோ சேட்(sad)… பாவம் அவரு நம்ம ரேஞ்சுக்கு யோசிக்க மாட்டாரு…
அவுட் ஆப் ஸிலபஸ்னு நம்மளா கிரேஸ் மார்க்குல பாஸாகுறவங்க… இருந்தாலும் டாக்டர் சார்… நீங்க இந்த இன்ஜினியரிங் பசங்க கிட்ட M3 எப்படி கிளியர் பண்ணுறாங்க டிப்ஸ் கேளுங்களேன்…
”கேட்டுக்குறேன் இளமாறன், நீங்களே அந்த ஜீனியஸ் யார்கிட்டயாவது இன்ரோ குடுங்களேன்”
“என்ன மிஸ்டர் இளமாறன் விட்டா அகரமுதல் எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவீன்னு சரஸ்வது சபதம் சிவாஜி சார் மாதிரி பாடுவீங்க போல…. நோ நோ பேசாம படுங்க”
“ஹீ ஹீ ஹீ டாக்டர் நான் நல்லா ஆயிட்டேனா எனக்கு ஒண்ணுமில்லையே”
“யூ ஆர் பர்பெக்ட்லி ஆல் ரைட் யங் மேன்”
“யா…………………..ஹு……………………..”
“என்ன மிஸ்டர் மாறன் சைனீஸ் லாங்குவேஜ் கூட தெரியுமா உங்களுக்கு”
“ஒரே உற்சாகம் டாக்டர் அதான்… ஹா ஹா ஹா”
“அதுக்காக பெட் மேல ஏறி குதிக்க கூடாது… டேக் ரெஸ்ட் ஈவினிங் வந்து எப்ப டிஸ்சார்ஜ் பண்ணலாம்னு சொல்றேன்… தென் பை தி பை ஒன் மோர் திங்க்”
“எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் டாக்டர்”
“ஆமா அந்த அட்ரஸ் சொன்ன பையன் தான் இளமாறனா”
“என்னது……..”
“அதான்பா சக்திகிட்ட வழி சொல்லி சுத்தவிட்டானே அந்த பையன் தானே இளமாறன்….”
“டாக்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்…. இது எப்படி,,, உங்களுக்கு….”
“ஸ்கேன் பண்ணும் போது…”
“தலைய ஸ்கேன் பண்ணுனா இதெல்லாமா தெரியுது ஓ மை காட்… வாட் எ மெடிகல் மிராக்கல்”
“அய்யோ இந்தா பாருப்பா ஸ்கேன் எடுக்க போகும் போது மட்டுமில்ல, உனக்கு தூக்க மருந்து குடுத்து கூட நீ எதோ பேசிகிட்டே இருந்த மொதல்ல எதோ போதையில உளர்றன்னு பாத்தா, என்ன செஞ்சும் உன் வாயை அடைக்க முடியல… அப்புறம் அந்த கதைய கேக்கவே ஆரம்பிச்சுட்டோம்… கடைசியா ஸ்கேன் பண்ண போகும் போது இதோட நிப்பாட்டுன அதுக்கப்புறம் என்னாச்சுன்னு ஒரே டென்ஷனா போயிடுச்சி… அதான் வீட்டுக்கு கூட போகாம இங்கயே வெயிட் பண்ணிகிட்டு இருக்கேன்……..
“அடக்கடவுளே…..”
“அட சொல்லுப்பா….”
“அது வந்து டாக்டர்”
“நீ மைண்ட் வாய்ஸுன்னு நெனச்சு எல்லாத்தையும் வெளியில சொன்னதை உன் வைப் சக்தியும் கேட்டுகிட்டு தான் இருக்கா… அதோ அங்க பாரு”
“அடப்பாவி மனுசா…. தலையில ரெண்டு போட்டாவது வாய மூடுன்னு சொல்லியிருக்கக் கூடாது, ஏற்கனவே இருந்ததை சரிபண்ணலாம்னு கிளம்புனா, வெடிச்ச இடத்துலயே குண்டு வச்சு…. எங்குடும்பத்துலயே வந்து கும்மி அடிக்கிறீங்களே, உங்களை….”
“அடுத்து என்னாச்சுன்னு தெரியுறவரைக்கும் இந்த பேஸண்ட டிஸ்சார்ஜ் பண்ண முடியாது…. வேணும்னா ரெண்டு குளுக்கோஸ போட்டு விடுங்க….”
“சக்தி தான், உங்களால ஹாஸ்பிட்டல் பூராவும் நீங்க தான் சக்தியா சக்தியான்னு கேக்குறாங்க”
“ஹே ஹே பல்லை கடிக்காத டி என் ஆசை பொண்டாட்டி…. மாமன் மயக்கத்துல இருந்தாலும் உன்னையே நெனச்சுகிட்டு இருந்தேனா , அதான் இப்படி….”
“உக்கும் நீங்களா அதுவும் என்னைய நெனச்சிகிட்டே இருந்தீங்களாக்கு…. நம்பீட்டேன்…..”
“நம்பு டி மாமனை நம்பாம யாரை நம்பப் போற….” நான் சொல்ல சொல்ல என்னைய பாக்காம திரும்பியே உக்காந்திருக்கா, இன்னும் அவ என்னை என் கண்ணோடு கண்ணு பாக்கவே இல்லை…
“இத்தணை நாளா என்னைய பாக்க வராம எப்படி இருந்த… ஏன் டி பாக்க வரலைன்னு” கேட்டுகிட்டே எழுந்து அவ கன்னத்துல கடிச்சிட்டேன்…
ரொம்பவே வித்தியாசமான பூட்டு போட்டிருக்கா கண்ணுக்கு, சாவி என்கிட்ட இருந்தது எனக்கே தெரியாம போயிடுச்சு…. திறந்த அவளோட கண்ணுக்குள்ள என்னை நான் பார்த்தேன்… எதிர்பாக்கவே இல்லை அப்போ அவ எனக்கு முத்தம் கொடுப்பான்னு, நெத்தியில வச்ச அந்த ஒத்தை முத்தத்துல என்னோட மொத்த உலகமே அவளுக்குள்ள போயிடுச்சு…
உலகத்தோட நானும் அவளுக்குள்ள புதைஞ்சுகிட்டேன்… அவ்வளவு இறுக்கமான அணைப்பு, எங்க நான் திரும்பி போயிடுவேனோன்னு பயந்த அவளோட அந்த பரிதவிப்பையும் எனக்கு கொண்டு வந்து சேர்த்திட்டா….
நிக்காம வந்த கண்ணீரை துடைக்க என் கை போனாலும் அவளோட தோள்ல என்னோட கண்ணீர்த் துளிகள் விழுகுறதை என்னால தடுக்க முடியலை… எவ்வளவு நேரம் இப்படியே போனுச்சுன்னு தெரியலை… ஜென்ம ஜென்மமா கண்டுபிடிக்க முடியாத தேடல் இப்ப கையில கிடைச்ச மாதிரி மனசுல வந்த பூரிப்பை அளக்க வார்த்தைகளோ ஏன் உணர்வுகளோ கூட இல்லை….
ஒத்தையா கொடுக்க என் பொண்டாட்டி என்ன ஒத்த ரோசாவா…? கத்தையா கொடுப்பேன் மொத்தமா கொடுப்பேன் மொத்தத்தையும் குடுப்பேன் முத்தமா….
”சார் இது ஹாஸ்பிட்டல்”
“இருக்கட்டும் சிஸ்டர் நான் மட்டும் என்ன இரயில்வே ஸ்டேசன்னா சொன்னேன்”
அப்பயும் என் பொண்டாட்டிய விடவே இல்லையே…
”அய்யோ வந்து சேருதுங்க பாரு, நம்மள டென்ஷன் பண்றதுக்குன்னே… தலையிலயே அடிச்சுகிட்டு போகுற சிஸ்டர பாத்தா சிரிப்பாதான் வருது, வீட்டுக்கு போறப்போ கடலைமிட்டாய வாங்கி குடுத்து இனிமேலாவது காதலர்களை அதுவும் இளமாறன் சக்தி மாதிரியான அழகான தம்பதிகளை பிரிக்காதீங்கனு சொல்லீட்டு போகணும்… எவ்வளவு பொறாமை… வீட்டுக்கு போனதும் அம்மாவை சுத்தி போடச்சொல்லுவோம் என்ன…”
“இப்ப வாச்சும் ஞாபகம் வந்துச்சே”
“அடுத்து யாரு….”
”ஏன் டா கேக்க மாட்ட, பெத்த அம்மாவை பாத்தே இப்படி ஒரு கேள்வியை கேட்டவன் நீயா தான் டா இருப்ப… பூரிச்சு போச்சுடா பெத்த வயிறு… பாவிப்பயலே,,,, “
“ஹி ஹி அம்மா அம்மா…. நீ சுமந்த பிள்ளை சிறகொடிந்த கிள்ளை….”
“இது தான் மா… நல்ல புள்ளையா இருந்தாலே இப்படித்தான் யாராச்சும் நம்மளை பத்தி அவதூறு பரப்பிகிட்டே இருக்காங்க… நல்லவங்களுக்கு காலமே இல்லையா,…. அடங்கப்பா எங்கப்பா,…. ஏன் டா ப்பா இப்படி பண்ணுறீங்க….”
“அடி ராஸ்கல் அப்பாவ டா போட்டா கூப்புடுற, இந்தா வராரு… அப்பா மேல கொஞ்சம் கூட பயமே இல்லாம போயிடுச்சி….”
“என்ன இங்க சத்தம் என்ன இங்க சத்தம்…. யாருடா அவன் என் பொண்டாட்டிகிட்ட வம்பு வளக்குறது….”
“அதானே பாத்தேன் என்னடா இன்னும் எண்ட்ரி குடுக்கலையேன்னு வாங்கள் டாடி வாங்கள்…. எங்க கோவை சரளா தான் நர்ஸ் வேசம் போட்டுகிட்டு வந்துட்டாங்களோன்னு நெனச்சேன்…”
“ஏன் டா நினைக்க மாட்ட… கொஞ்சமாச்சும் வாய் குறையுதா பாரேன்”
“தலையில ஆப்ரேசன் பண்ணுனா வாய் எப்படிப்பா குறையும்…. வடிவேல் சொல்ற மாதிரி சின்னபுள்ள தனமாவுள்ள இருக்கு….”
”ஆக்சிடெண்ட் ஆகி, உடம்பு முடியாம, ஆப்ரேசன் பண்ணி ஒரு மாசம் கிடந்தவன் மாதிரியா இருக்க… பேச்சைக்குறை டா மவனே….”
“ஆகட்டும் அப்பனே”
“விடுங்க அவன் பேசட்டும் இத்தணை நாளா இவன் எப்ப பேசப்போறான்னு காத்து கிடந்தது மறந்து போயிடுச்சா,… இப்ப தான் எனக்கு உசிரே வந்துருக்கு…. எங்க இந்த புள்ளையையும் தொலைச்சிடுவேனோன்னு நான் வேண்டாத கடவுளே இல்லை… உங்களுக்கு தெரியாதா….”
“பூரணீணீ…. என்ன இது “
“அப்பா எதுக்கு அம்மாவை அடக்குறீங்க எனக்கு தெரியக்கூடாதுன்னு தானே… எனக்குத் தான் தெரியுமே ப்பா…. இரண்டு பேரா பிறந்து கண்ணு முன்னாடியே ஒருத்தனை தொலைச்சிட்டு என்னையும் மறந்துட்டு தானே இத்தணை நாளா இருந்திருக்கேன்…”
“மாறா… இல்லைப்பா அதெல்லாம் ஒண்ணுமில்லை நீ ரெஸ்ட் எடு… பூரணி கிளம்பு…”
“அப்பா என்ன தான் நீங்க மறைச்சாலும் தெரிய வேண்டியது ஒரு நாள் தெரிஞ்சி தானே ப்பா ஆகணும், இருங்கப்பா…. இனிமேலும் மனசுக்குள்ளயே போட்டு அழுத்திகிட்டு இருக்காம ஃப்ரீயா இருங்கப்பா… “
“நல்லா சொல்லுடா அவருகிட்ட… இத்தணை வருசமா அவர் பட்ட வேதனை போதும்… இனியாச்சும் சந்தோசமா இருங்க…. நம்ம புள்ளையே சொல்லுறான் ல”
“நீ நீ ரெஸ்ட் எடுப்பா நானும் அம்மாவும் போய் ஒரு காபி குடிச்சிட்டு வரோம்… அம்மாடி பார்த்துக்க மா”
வலுகட்டாயமா அம்மாவையும் இழுத்துகிட்டு போனவரு கண்ணுல வந்த தண்ணி எனக்கு தெரியாம இல்லை… அப்பா…. எல்லா பாரத்தையும் இழுத்து போட்டுகிட்டு வெளிய எதையும் காட்டிக்காம இருக்குற ஜீவன்… அவர் தொலைச்ச சந்தோசங்களை எனக்கு குடுத்திடனும்னு அவர் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சம் இல்லை…
சைக்கிள் ஓட்ட சொல்லி தந்தவரு ஓட்டுற புள்ளையோட வேகத்து ஓட முடியாம மூச்சு வாங்கி நின்னாலும், புள்ளை சைக்கிள சரியா ஓட்டிடுவான்னு தன் புத்தி சொன்னாலும், மனசு கேக்காம பின்னாடியே ஓடி வருவாரு பாருங்க… அப்படித்தான் இன்னிக்கும் என் கண்ணுக்கு எங்கப்பா தெரியுறாரு…
இங்க வாழ்க்கைங்குற சைக்கிள ஓட்ட சொல்லித் தந்த அவரு, அது சொல்லித்தர்ற பாடங்களை நான் சரியா எடுத்துக்கணுமேன்னு பின்னாடியே ஓடி வராரு… மூச்சு வாங்குற தருணங்களை பிள்ளை பார்த்தா கஷ்டப்படுவானேன்னு, இப்ப எங்கம்மாவ கூட்டிகிட்டு வெளிய போறாரு….
ஒவ்வொரு கட்டத்துலயும் ஒவ்வொரு ரோல் எடுத்து நம்ம கூடயே இருப்பாங்க, ஒவ்வொரு புள்ளைக்கு அப்பா தான் முதல் ஹீரோ…. எனக்கும் அப்படித்தான்….
எந்த சூழ்நிலையிலையும் நம்ம கண்ணுல தண்ணி வந்தா தாங்காத ரெண்டு ஜீவன்கள், அவங்களை தவிர, அவங்கள விட வேற யாரும் நமக்கு நல்லது பண்ணிடமாட்டாங்க….
இப்படி ஒரு எமோஷனல் சீன் கிரியேட் ஆகக்கூடாதுன்னு தான் எவ்வளவோ கண்ட்ரோல் பண்ணுனாங்க, ஆனா அது சாத்தியமே இல்லைன்னு முடிவாகிடுச்சு….
அடுத்த சீன் ஆரம்பிக்கிறதுகுள்ள பக்கத்துல இருக்க என் பொண்டாட்டி ஆசையா வாங்குன ஐஸ்கீரீம் கீழ விழுந்த மாதிரி உக்காந்திருக்கா, இப்படியெல்லாம் அமைதியா இருக்கக்கூடாதே… அமைதின்னா மாறனுக்கு அலர்ஜின்னு அவளுக்கு தெரியவேணாமோ…
என்ன மானே தேனே பொன்மானே…. என்ன யோசனை பண்ற…? மாமனை பத்தியா… மாமன் தான் உன் கூடயே இருக்கேனே அப்புறம் என்ன,….
என் டைரி எப்படி உங்களுக்கு கிடைச்சுதுன்னு தான்…
”அதுவா டி ஆசை பொண்டாட்டி…. நீ அன்னிக்கு ஊருக்கு அம்மாவை பாக்க வர்ற அவசரத்துல அதை அப்படியே போட்டுட்டு போயிட்டியா, ஆனா மாமா அதை பாக்கவே இல்லை, இப்ப ஊருக்கு கிளம்புறதுக்கு முன்னாடி நாள் தான் பாத்தேன்… அப்பயும் உடனே எடுத்துப்படிக்கலை… அதுல என்னோட போட்டோ மாதிரியே இருந்துச்சா…. அதான் பாத்தேன்… லைட்டா நாலே பக்கம் தான் பாத்தேன் உடனே வச்சுட்டேன்”
“யாரு நீங்க நாலே நாலு பக்கம் பார்த்துட்டு வச்சுட்டீங்களா…. பாவி பாவி வாயத்திறந்தாலே பொய் தான், உங்களை……”
“ஹே ஹே ஏன் டி அடிக்கிற ஆ ஆ வலிக்குது டீ… டாக்டர் டாக்டர் கொல்றா கொல்றா….”
“அய்யோ வாய மூடுங்க, நான் அடிக்கவே இல்லை கைய தான் ஓங்குனேன், அய்யோ நிறுத்துங்க யாராச்சும் வரப்போறாங்க… கடவுளே….. “
நான் போட்ட சத்தத்துல எங்க ஹாஸ்பிட்டாலே கூடிடும்ங்குற பயத்துல பயபுள்ள அவ கையால என் வாய அடைச்சிட்டா….
விடுவேனா…. அடிச்சேன் பாருங்க நச்சு நச்சுன்னு அவ உள்ளங்கையே சிவந்துபோச்சு….
”அய்யோ என்னங்கன்னு” சிணுங்குனா சத்தியமா அப்ப தான் அவ முதல் முறையா வெட்கப்பட்டு பாத்தேன்….
எதுக்கு பயந்து என் வாய அடைச்சாளோ அது அமோகமா நடந்துச்சு… எனக்கு ட்ரீட்மெண்ட் பார்த்த டாக்டர் நர்ஸ் எல்லாம் வந்துட்டாங்க….
ஒரு வழியா பேசி அவங்க எல்லாரையும் அனுப்பீட்டு, திரும்ப வந்தவளோட முதல் கேள்வி…
“டைரி எங்க மாறா…”
“அடிப்பாவி மாமனை பேர் சொல்லி மாறான்னு கூப்புடுறியே….”
“மண்ணாங்கட்டி…. என்னோட டைரி எங்கன்னு கேட்டேன்”
“அது அது வந்து நான் ஊருக்கு வர்ற பேக்குல எடுத்துட்டு வந்தேன்… இந்த அமளி துமளில பேக் காணலை, கண்ணு திறந்தாலே நீ தாண்டி நிக்குற, பேக்கை பத்தி இப்ப நீ கேக்கவும் தான் ஞாபகமே வருது….”
“அது இந்த பேக் தானா பாருங்க….”
“ஆமா டி என் ஆசை பொண்டாட்டி….எப்படி கிடைச்சுது….”
“இது மட்டும் கிடைக்கலைன்னா, உங்கள தொலைச்சிருப்பேன்…”
“ஹே என்ன சொல்ற…”
“ஆமா உங்க கிட்ட இருந்து ரெண்டு நாள் போனும் வரலை மெசேஜும் வரலை, நான் ட்ரை பண்ணா நாட்ரீச்சபிள்னு வந்துச்சு, என்னனு புரியாம உங்க ஆபீஸ் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட கேட்டா நீங்க ரெண்டு நாள் முன்னாடியே லீவ் போட்டுட்டு கிளம்பீட்டதா சொன்னாங்க, என்ன ஏதுன்னு புரியாம எங்க தேடுறதுன்னு தெரியாம முழிச்சுகிட்டு இருக்கும் போது, ஒரு போன் வந்துச்சு… விழுப்புரம் தாண்டி பைபாஸ்ல உங்க பேக் கிடக்குறதா யாரோ போன் பண்ணுனாங்க, அதுல உங்க அட்ரஸ் போன் நம்பர் எல்லாம் இருந்துச்சு, கொரியர்ல பேக்க அனுப்பி வச்சாங்க…. பேக் வீட்டுக்கு அடுத்த நாள் வந்ததும் எங்க கிடைச்சதுன்னு அந்த போன் பண்ணுணவங்க சொன்னதை வச்சி போலீஸ் ல சொல்லி விசாரிச்சோம்….
அங்க ஒரு ஆக்சிடெண்ட் நடந்ததாகவும் அந்த பேஸண்ட்ஸ அந்த ஏரியா ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணியிருக்குறதாகவும் சொன்னாங்க, அடிச்சி பிடிச்சி ஓடி வந்தோம்.”
“ஹே சக்தி அழுகாத மா, இங்க பாரு நான் நல்லாயிருக்கேன் இங்க பாரு…”
என் நெஞ்சுல சாய்ச்சுகிட்டேன் அவள தேம்பிகிட்டே மீதிய சொன்னா…
“அப்போ நீங்க ஐசியூல இருந்தீங்க, தலையில பலமா அடிபட்டிருக்குறதா சொன்னாங்க, ஆப்ரேசன் பண்ணி உங்கள் நார்மல் வார்டுக்கு மாத்தியும் நீங்க கண்ணு முழிக்கல, ஆனா எதோ உளற ஆரம்பிச்சீங்க… எவ்வளவு மருந்து குடுத்தும் ஆழ்ந்த தூக்கத்துக்கு நீங்க போகலை, நீங்க நல்லா தூங்கி எழுந்தா தான் கண்ணு முழிப்பீங்கன்னு டாக்டர் சொன்னாங்க,
ஆனா நீங்க டைரில நான் எழுதி வச்சிருந்த எல்லாத்தையும் படிச்சீட்டிங்கன்னு எனக்கு நீங்க பேசுறதை கேட்டுதான் புரிஞ்சுது…. ஒரு மாசம் எப்படி ஓடுனுச்சுன்னே தெரியலை.
நான் அன்னிக்கு இளா இளான்னு சத்தம் போட்டு நினைவுகளை தடுக்க பாத்தேன் முடியலை, ஆனா உங்க மூளை நான் வந்தத உணர்ந்து தூங்க ஆரம்பிச்சிட்டதாக டாக்டர்ஸ் சொன்னாங்க …”
இப்படி பொசுக்குன்னு எண்ட்ரி குடுத்துட்டியே நான் பாதியில விட்டதை எப்படி கண்டினியூ பண்றதாம்…
“அடப்பாவி பேசவும் சொல்லவும் எவ்வளவு இருக்கு, ஆனாலும் உங்களுக்கு அந்த டைரியிலயே தான் கண்ணு, ஏற்கனவே ஊரெல்லாம் தண்டோரா போட்டுட்டீங்க… இனிமே உங்க கிட்ட என் டைரியை குடுத்தா புக்காவே பப்ளீஸ் பண்ணிடுவீங்க,”
“அப்படியெல்லாம் இல்லை டி ஆசை பொண்டாட்டி கேள்வி இது பதில் இதுன்னு சொன்னாலும் எப்படி வந்துச்சுன்னு கேக்குற மக்களுக்கு எப்படி பதில் சொல்லுவேன்…”
“என்னமோ இது வரைக்கும் டைரியை பார்த்து நியூஸ் வாசிச்ச மாதிரி சொல்லுறீங்க, நீங்க படிச்சதை தானே சொன்னீங்க, அதே மாதிரி சொல்லுங்க…. அன்னைக்கு காலேஜ்ல என்னாச்சுன்னு கேட்டு அந்த டாக்டர் அங்கிள் என்னையை தொலச்சி எடுத்திட்டார்… நான் அவர்கிட்டயே கேட்டுக்கோங்கன்னு சொல்லீட்டேன்…”